ஆணியம் பெண்ணீய சண்டை பூவுலகில் மட்டுமல்லாமல்
தேவருலகிலும் இருந்தால் எப்படி இருக்கும்? அது தான்
இந்தப் பாடல். தெலுங்கு பாடல்.
பாடலில் விளக்கம் இது தான்.
கலக நாரதர் விஷ்ணு லோகம் சென்று
லட்சுமி தேவியிடம்,” விஷ்ணு எப்போதும்
உடல்நிலை சரியில்லாதது போல் கால் நீட்டி
படுத்திருக்கிறார். நீ என்னவோ?
கால் பிடித்து விட்டுக்கொண்டிருக்கிறாயா?
அவர் என்ன அப்படி கஷ்டப்பட்டார்?
அவர் பெரியவர்? நீ சின்னவளா?
என்ன விஷ்ணு மாயம்?
இதயத்தில் இடம் கொடுத்தேன் என்கிறார்?
ஆனால் காலடியில் அல்லவா உட்கார்ந்திருக்கிறாய்?
உன்னையும் மாயையில் வைத்திருக்கிறார்.
என்று போட்டு கொடுக்கிறார்.
ஏன் ஐயா? கணவன் மனைவி இடையில்
கலகமூட்டுகிறாய் என்று கேட்க,
நாரதர்” பூலோகத்தில் தங்கள் பக்தர்கள்
எல்லாம் உங்கள் இருவரின் படத்தைக் காட்டி
பெண்களையே எல்லா வேலையையும்
செய்யச்சொல்கிறார்கள்.
சேவை செய்து கொள்வது நாங்கள், செய்யவேண்டியது
நீங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
செய்யச் சொல்கிறார்கள்,என்று லட்சுமிக்கு
எடுத்துக்கொடுத்து, விஷ்ணுவிற்கு ஆப்புவைக்கிறார்.
14 லோகத்தை பாதுகாக்கிறேன் என்றார் விஷ்ணூ.
நான் அவற்றை போஷிக்கிறேன் என்கிறாள் லட்சும்.
நான் இல்லாவிட்டால் நீங்கள் சும்மா,
வெங்கடேச கல்யாணம் நினைவிருக்கிறதா?
திருமணத்திற்காக என்னிடம் கடன் பட்டு
வட்டி கட்டிக்கொண்டிருக்கிறாரே
என்று வினவுகிறாள் மஹாலக்ஷ்மி.
மலையின் மீது நானிருக்கிறேன்.
மலையின் கீழ் இருப்பது யாரோ?
என்று கேட்கிறார் விஷ்ணு
பார்க்கவேண்டுமென்று இறங்கி
வருவது யாரோ? என்று போட்டுத்தாக்குகிறாள்
லஷ்மி.
நான் த்ரேதாயுகத்தில் ராமன் என்று
கர்வமாக சொல்கிறார் விஷ்ணு,
ஆனாலும் சீதாபதி என்றே அழைக்கிறார்கள்
என்று ஒரு இட்டு வைக்கிறார் லஷ்மி. :)
நரகாசுரனை அழித்த கிருஷ்ணன் நான்
என்றாலும், அங்கு கைகளில் வில்லெடுத்து
சத்யபாமாவாக நான் அங்கும் இருந்தேன்
என்கிறால். பாவம் விஷ்ணு.
துலாபாரத்தில் என்னை தானமிட்டாயே
என்று கேட்க, ஐயாவின் எடை
துளசிதள சமானம் என்று முடிக்கிறாள்.
இந்தப் பாட்டில் ஹைலைட்டான விடயம்
அப்லோட் ஆகாமல் இருக்கிறது. :(
விசயம் இதுதான். கடைசியில்
நாரதர் சொல்லிக்கொடுத்து
லக்ஷ்மி, சுவாமி. நாம் இருவரும்
இடம் மாறலாமா? என்று கேட்பாள்?
அதாவது கால் நீட்டி படுத்திருப்பது
லட்சும், காலை அமுக்கிவிடுவது
விஷ்ணு என்று நிலை மாறும் என்று.
அதிர்ச்சியுற்று ஒரு கணம் யோசித்து
விஷ்ணுவும் ததாஸ்து என்பார் சிரித்துக்கொண்டு.
இடம் மாறும். ஆனால் அப்போதும்
லட்சுமி கால் மாட்டில் தான் இருப்பார்.
விஷ்ணு நிலை மாற்றியது தன் வலப்பக்க
சயனத்தை விட்டு, இடப்பக்கத்திற்கு மட்டுமே!
அன்னை அந்தப் பக்கத்திற்கு பதில் இந்தப்பக்கம்
உட்கார்ந்து பழையபடி கால் அமுக்குவாள்.
எல்லாம் விஷ்ணு மாயம். :))))))))))))))
ஹாப்பி வீக் எண்ட்.
22 comments:
மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டு படிச்சி முடிச்சிட்டேனே!இப்ப யாரு பர்ஸ்ட்டுன்னு தெரியலையே:)
நல்லாயிருக்கு
ஆனாலும் எனக்கு ஒன்னும் புரியலை.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.
ஆணாதிக்கம் என்பது எல்லா இடங்களிலும் உள்ளது.
பெண்களே சிலர் அதற்கு ஆதரவளிக்கும் போது இது மாறப்போவதில்லை.
மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டு படிச்சி முடிச்சிட்டேனே!இப்ப யாரு பர்ஸ்ட்டுன்னு தெரியலையே:)
//
அந்தப் பெருமை எப்பவும் உங்களுக்குத்தான்ணே :))
மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டு படிச்சி முடிச்சிட்டேனே!இப்ப யாரு பர்ஸ்ட்டுன்னு தெரியலையே:)
//
சந்தேகம் வேறயா? வழ்க்கம் போல நீங்கதான்ணே
நல்லாயிருக்கு
ஆனாலும் எனக்கு ஒன்னும் புரியலை.
:( கவுண்டரின் ஜோக் தான் ஞாபகம் வருது.
நலம் நலமறிய ஆவல்னு சொல்லிட்டு
வீட்டுல இருக்கற அம்புட்டு பேருக்கும் இருக்கும் நோய்களை கடிதம் எழுதுவார் ஒருத்தர் அது மாதிரி.
இந்த கதையில நீங்க சொல்லவர்ற மாரல் ஆப் தி ஸ்டோரி இன்னான்னா
"எப்பத்திக்குமே பொம்ளைங்கள விட ஆம்ளைங்களுக்கு அறிவு கொஞ்சம் ஜாஸ்தி" அதுதானே?
புகழன்
இந்தப் பாட்டில் சொல்லப்பட்டிருப்பது ஒன்று தான்.
என்னதான் லட்சுமி விஷ்ணுவிற்கே பணம் கொடுத்து, நரகாசுரனை வதம் புரிந்து என்று சக்திமிக்கவளாக திகழ்ந்தாலும், கடைசியில் அவள்தான் கால் அமுக்கி கொண்டிருப்பாள்.
பெண் எத்தனை பெரிய நிலமையில் இருந்தாலும் நிலமை மாறாது.
இதில் தேவலோக லட்சுமியும், பூலோக லட்சுமியும் ஒன்றுதான்
எப்பத்திக்குமே பொம்ளைங்கள விட ஆம்ளைங்களுக்கு அறிவு கொஞ்சம் ஜாஸ்தி" யா இருந்தாலும் அடக்கி வைக்கப்படுகிறாள்.
:(
//இடம் மாறும். ஆனால் அப்போதும்
லட்சுமி கால் மாட்டில் தான் இருப்பார்//
பெண்ணுக்கு பெண் தான் எதிரி-ன்னு சும்மாவா சொன்னாங்க? நான் பதிவு போட்டவங்களைச் சொல்லலப்பா!
ஹா ஹா ஹா!
சூப்பர் பதிவுக்கா! :)
//உட்கார்ந்து பழையபடி கால் அமுக்குவாள்.
எல்லாம் விஷ்ணு மாயம். :))))))))))))))//
விஷ்ணு மாயம் இல்லீக்கா!
சினிமா மாயம்! :)
ரொம்ப நேரம் ஒருத்தருக்கு கால் அமுக்கிப் பாருங்க!
கை வலிக்குதோ இல்லையோ, அவங்க கால் போயிரும்!
கால் அமுக்கப் போயி, அவங்க கால் அமுங்கிப் போயிரும்! :)))
கால் அமுக்குதல் எல்லாம் சினிமாவில் தான்!
இலட்சுமி, இறைவனின் திருவடிகளுக்கு அருகில் அமர்ந்து இருப்பது, கால் அமுக்கி விட அல்ல!
நாடி வரும் பக்தர்கள், வேறு எதிலும் மயங்கி விடாது, "இதோ திருவடிகள்" என்று காட்டிக் கொடுக்கத் தான்! :))
அப்பாவின் மணிபர்ஸ் இங்கப்பா என்று அம்மா காட்டுவது போல! :))))
அன்றும் இன்றும் என்றும் பெண்ணே நிலைத்த இன்பத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்! இது தான் விஷ்ணு மாயம்!
பெண்ணுக்கு பெண் தான் எதிரி-ன்னு சும்மாவா சொன்னாங்க?
பாட்டை பார்த்தும் இப்படி சொல்வது நியாயமா?
நான் பதிவு போட்டவங்களைச் சொல்லலப்பா!
ஹா ஹா ஹா!
சூப்பர் பதிவுக்கா! :)
என்ன ஒரு வில்லத்தனம் :)
//உட்கார்ந்து பழையபடி கால் அமுக்குவாள்.
எல்லாம் விஷ்ணு மாயம். :))))))))))))))//
விஷ்ணு மாயம் இல்லீக்கா!
சினிமா மாயம்! :)
கால் அமுக்குதல் எல்லாம் சினிமாவில் தான்!
ஐயோ பாவம்! நிஜமாவா? அப்புறம்?
:)
இலட்சுமி, இறைவனின் திருவடிகளுக்கு அருகில் அமர்ந்து இருப்பது, கால் அமுக்கி விட அல்ல!
நாடி வரும் பக்தர்கள், வேறு எதிலும் மயங்கி விடாது, "இதோ திருவடிகள்" என்று காட்டிக் கொடுக்கத் தான்! :))
ஏன் இல்லாட்டி பக்தனுக்கு கால் எங்கே இருக்குன்னு தெரியாதா!
என்ன சமாளிபிகேஷன் ஐயா.
(பகவானை கும்பிடும் போது முதலில் பாதத்தில் சரணடைந்து பிறகுதான்
முகத்தை பார்க்கவேண்டும். அதனால்
பாதம் எங்க இருக்குன்னு யாரும் காட்ட வேண்டாம். அப்படி காட்டியாகனும்னா வேற யாராவது அப்பாயிண் செஞ்சுக்கலாம்ல் :)
அப்பாவின் மணிபர்ஸ் இங்கப்பா என்று அம்மா காட்டுவது போல! :))))
அம்மா காட்டத் தேவையே இல்லையே சார்.
அம்மாவுக்கு பசங்கதான் பர்ஸ் இருக்கும் இடத்தைக் காட்டணும். :))
அன்றும் இன்றும் என்றும் பெண்ணே நிலைத்த இன்பத்தைக் காட்டிக் கொடுக்கிறாள்! இது தான் விஷ்ணு மாயம்!
அதுதான் தெரியுமே!........................................... இதற்கு மேல் கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக்கோங்க.
(அப்புறம் சிவா வந்து ஹஸ்பண்டாலஜி முடிஞ்சிடுச்சுக்கான்னு சொல்வார்)
பதிவிற்க்கு :)
பின்னூட்டங்களுக்கு :))
/
ஹாப்பி வீக் எண்ட்.
/
நன்றி
/
நிஜமா நல்லவன் said...
மீ த பர்ஸ்ட் போட மறந்துட்டு படிச்சி முடிச்சிட்டேனே!
/
ஓ படிச்சியா???
/
நிஜமா நல்லவன் said...
இப்ப யாரு பர்ஸ்ட்டுன்னு தெரியலையே:)
/
போட்டியில்லாம நீதான் ஃபர்ஸ்ட்டு
வந்துட்டேன்
/
/
புதுகைத் தென்றல் said...
(அப்புறம் சிவா வந்து ஹஸ்பண்டாலஜி முடிஞ்சிடுச்சுக்கான்னு சொல்வார்)
/
/
தெரியுதுல்ல
:))))))))))))
அப்புறம் ஏன் இந்த கொலவெறி பதிவு???
அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.
புதுகைச் சாரல்
Post a Comment