Monday, September 29, 2008

கோதாவரியில் ஒரு படகுப் பயணம் - 2



இதுக்கு முன்னாடி போட்ட பதிவைப் படிச்சீங்களா?
இல்லைன்னா இங்க போய் படிக்கலாம்.


10 மணிக்கு புறப்பட்ட படகை 11.15 மணிக்கு ஒரிடத்தில்
நிப்பாட்டினாங்க. அதுதான் ”பாப்பி கொண்ட” (papi konda- மலை)
ஆரம்பமாகு இடமாம்.

”வண்டி 1/2 மணி நேரம் நிக்கும். போய் பாத்துட்டு வாங்க”,
அப்படின்னு சொன்னவரை மடக்கி இங்க என்னதான் இருக்குன்னு
சொல்லுங்க. முடிஞ்சா போய் பாக்கறோம்னு கேட்டோம்.

1/2 மணின்னு சொன்னாத்தான் 1 மணி நேரத்துல வருவாங்க.
அதான் அப்படி சொன்னேன். நீங்க போய் பாருங்க. மேலே
அருவியும், சிவன் கோவிலும் இருக்குன்னு சொன்னாரு.

படகிலிருந்து இறங்கி கொஞ்சம் மேடான இடத்தில் ஏறி
மேலெ நடந்து போனோம்.
சல சல சலன்னு அருவி சத்தம். இடத்தையே சில்லுன்னு
ஆக்கிருச்சு. சின்ன சின்னதா வரும் ஓடையில் கால் வைத்தால்
உடம்பே சில்லுன்னு ஆயிடுச்சு.. எனக்கே காலை எடுக்க
மனசு வரலை. ஆஷிசையும், அம்ருதாவையும் அந்த
இடத்திலேர்ந்து கிட்டத்தட்ட தள்ளிகிட்டு வரவேண்டியதா
போச்சு.

”நான் போய் முதல்ல சாமி பார்த்துட்டு வருவேன்!
அதுவரைக்கு நீ தண்ணியில நில்லு , நீ சாமி
பாத்து முடிக்கற வரைக்கும் நான் நிப்பேன்னு”, ஒப்பந்தம்
போட்டுகிட்டாங்க தங்கச்சியும், அண்ணனும். சரின்னு
ஆஷிஷைக் கூட்டிகிட்டு நானும் என் தங்கச்சியும் சாமி
கும்பிட போனோம்.

வாசலிலேயே மணி வெச்சிருக்காங்க. ஒரு முறை
மட்டும் தான் மணியடிக்கலாம். எல்லோரும் நலனுக்காக
வேண்டிகிட்டு மணி அடிச்சேன். உள்ளே போனால்
மேலே ஆவுடையில் சொட்டு சொட்டாக நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது.
கீழே சிவலிங்கம். (சிவன் தான் அபிஷேகப் ப்ரியர் ஆச்சே!)
சிறிய இடம் தூய்மையாக இருந்தது. மனமுருக பிரார்த்தித்துக்
கொண்டு வெளியே வந்தேன். ராமகிருஷ்ணா ஆச்ரமத்தினரால்
நிர்வகிக்கப்படும் கோவில் அது.

அங்கே சோலார் சக்தியைக் கொண்டு மின்சார சக்தி
பெற்றுக்கொண்டிருந்தார்கள். (சிறிய அளவில் தான்
இருந்தது. புகைப்படம் எடுக்கக்கூடாது என்று
கூறிவிட்டார்கள்) கோயிலுக்கு பின்புறம் சலசலத்துக்
கொண்டிருந்தது அருவி. நாங்கள் ஓடையின்
அருகே வந்து நிற்க அம்ருதாவும், அயித்தானும்
சாமி பார்க்க போனார்கள்.

உடன் வந்திருந்த மாணவர்கள் மேலே ஏறி போய்
பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் வருவதற்கு முன்
நாம் போய் உட்கார்ந்துவிடலாம் என்று நாங்கள்
வந்து படகின் உள்ளே வந்து உட்கார்ந்தோம்.

நாங்கள் நினைத்தது போலவே மேலே வெயில்
இருக்கிறது என்று மாணவிகளும் ஆசிரியைகளும்
உள்ளே வந்து அமர்ந்தார்கள். சில மாணவர்களும்,
மாணவிகளும் மட்டும் படகின் ஓரங்களில் நின்று
வந்து கொண்டிருந்தனர்.

அனைவரும் ஏறினார்களா என்று டீச்சர்
சந்தேகப் பட்டு" 1,2,3 செப்பண்டி அம்மா", என்றார்கள்.
மாணவிகளும் சொல்ல ஆரம்பிக்க ஆர்வ கோளாறில்
ஆஷிஷும் அம்ருதாவும் நம்பர் சொல்லிவிட
போகிறார்கள் என்று அவர்களுக்கு சைகை
காட்டினேன். பிள்ளைகள் சிரித்தார்கள்.
(நாங்கள் வேறு நடுவில்
அமர்ந்திருந்தோம்)

டீச்சரின் சந்தேகம் சரியாக இருந்தது. வாட்ச்
தொலைந்தது என்று 3 பெண்கள் தேடப் போயிருந்தார்கள்.
அவர்களும் வந்து சேர்ந்ததும் படகு புறப்பட்டது.



அடடே! படகு கிளம்பிடிச்சே! எங்க போகுது?
என்ன செய்யப்போறோம்! அடுத்த பதிவுல
அதுதானே சொல்லப் போறேன்.

13 comments:

ராமலக்ஷ்மி said...

//ஆர்வ கோளாறில்
ஆஷிஷும் அம்ருதாவும் நம்பர் சொல்லிவிட
போகிறார்கள் என்று அவர்களுக்கு சைகை
காட்டினேன். பிள்ளைகள் சிரித்தார்கள்.//

நாங்களும்தான்.

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

வருகைக்கு நன்றி. :)

நிஜமா நல்லவன் said...

:)

சுரேகா.. said...

அப்புறம் என்ன?
அப்புறம் என்ன?


சொல்லுங்க சொல்லுங்க!
நல்லா விறு விறுன்னு இருக்கு!

சுரேகா.. said...

நிஜமா...இல்லை நிஜாமா?

ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு ஓடினா
வுட்ருவோமா?

இந்தப்பதிவுல சிரிக்க என்ன இருக்குங்கறேன்!

நீங்களே சொல்லுங்க புதுகைத்தென்றல்!

pudugaithendral said...

அப்புறம் என்ன?
அப்புறம் என்ன?


சொல்லுங்க சொல்லுங்க!
நல்லா விறு விறுன்னு இருக்கு!//

தொடரும் போடறவரே இப்படி சொல்லிட்டா எப்படி குரு!!?

அடுத்த போஸ்ட் 7 மணிக்கு வரும்

pudugaithendral said...

இந்தப்பதிவுல சிரிக்க என்ன இருக்குங்கறேன்!

நீங்களே சொல்லுங்க புதுகைத்தென்றல்!//

என்னத்த சொல்லி என்னத்த செஞ்சு. இன்னும் 2 மாசத்துக்கு இதான் நெலமை. :(

ஆயில்யன் said...

// புதுகைத் தென்றல் said...
இந்தப்பதிவுல சிரிக்க என்ன இருக்குங்கறேன்!

நீங்களே சொல்லுங்க புதுகைத்தென்றல்!//

என்னத்த சொல்லி என்னத்த செஞ்சு. இன்னும் 2 மாசத்துக்கு இதான் நெலமை. :(
//

அப்பன்னா நல்லவரு சிரிப்பா சிரிக்கிறாருன்னு அர்த்தமாக்கா????? (பெருத்த சந்தேகத்துடன்...!)

அமுதா said...

/*எங்க போகுது?
என்ன செய்யப்போறோம்! */
எங்கே போனீங்க? என்ன செஞ்சிங்க?

pudugaithendral said...

எங்கே போனீங்க? என்ன செஞ்சிங்க?


hello pathivula link iruku athai cliki parunga

புதுகை.அப்துல்லா said...

//ஆர்வ கோளாறில்
ஆஷிஷும் அம்ருதாவும் நம்பர் சொல்லிவிட
போகிறார்கள் என்று அவர்களுக்கு சைகை
காட்டினேன். பிள்ளைகள் சிரித்தார்கள்.//


தாயப் போலத்தான பிள்ளைங்களும் இருக்கும் :)))))))

pudugaithendral said...

தாயப் போலத்தான பிள்ளைங்களும் இருக்கும் .


:)))))))

மங்களூர் சிவா said...

//
அனைவரும் ஏறினார்களா என்று டீச்சர்
சந்தேகப் பட்டு" 1,2,3 செப்பண்டி அம்மா", என்றார்கள்.
மாணவிகளும் சொல்ல ஆரம்பிக்க ஆர்வ கோளாறில்
ஆஷிஷும் அம்ருதாவும் நம்பர் சொல்லிவிட
போகிறார்கள் என்று அவர்களுக்கு சைகை
காட்டினேன்.
//

அடடா நல்ல த்ரில்லர தடுத்துட்டீங்களே!!
:))))