திருவிளையாடலில் ஒரு வசனம் சொல்வார் தருமி நாகேஷ்.
“ பாட்டெழுதி பேர் வாங்குபவர்கள் முதல்வகை, குற்றம்
சொல்லி பேர் வாங்குபவர்கள் இரண்டாம் வகை”
நம்ம வலையுலகிலும் இந்த இரண்டாம் வகைக்கு ஆட்கள்
சேர்ந்து ஒரு குருப்பா அலையுறாங்க போல இருக்கு.
குற்றமா இருந்தாலும் பரவாயில்லை. ஏதேனும்
கருத்து சொல்லியே ஆகணும்னு கருத்து கந்தசாமியா
கிளம்பியிருக்காங்க.
விக்ன நாசனா விநாயகா எனும் என் பதிவுக்கு
வானொலினு ஒருத்தர் இப்படி பின்னூட்டம்
போட்டிருந்தார்.
வானொலி said...
பக்தி பற்றியெல்லாம் எழுதுவது சரிதான்.. ஆனால் அதனை எத்தனை பேர் படிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிரீர்கள்-வானொலி
எழுதியிக்கறதுக்கு கருத்து சொல்லியே ஆகணும்னு
யாரும் சட்டம் போடலியே மிஸ்டர். வானொலி!!??
எழுதற பதிவுகளெல்லாம் படிக்கப்படணும்னு சட்டமும்
இல்லை. பதிவர்கள் எழுதுவது தங்களின் மனதை.
உங்களுக்கு ஒரு ஃப்ரொபைல் கூட இல்லை.
ஆனா இப்படி ஒரு கமெண்ட்.
வானொலி நிலையத்தாரிடமோ, டீவிக்காரங்க கிட்டயோ
போய் யாரு பாக்கறாங்கன்னு, கேக்கறாங்கன்னு
ப்ரொகிராம் தாயாரிக்கறீங்கன்னு கேக்கற அறிவு ஜீவி
போல நீங்க.
எந்த ஒரு நாளிதழோ, வார இதழோ எதிலும்
எதைப் பற்றி வேண்டுமானாலும் கட்டுரைகள்
வரும் அங்கே எல்லாம் கேள்வி கேட்க முடியாது
என்பதால் இங்கே வந்து கேள்வி கேட்கிறீர்களா?
காசு சம்பாதிப்பதற்காக பண்டிகை நாளை விடுமுறை
தினமா அறிவிச்சு சிறப்பு நிகழ்ச்சி போடறாங்க.
அவங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை.
கடவுள் இல்லைன்னு சொல்றவங்க
கூட மூடநம்பிக்கைகளுக்குத்தானுங்க எதிரி.
கடவுள் பக்திக்கு அல்ல. கடவுளே இல்லைன்னு
சொல்றவங்க வீட்டுல கோயிலுக்கு கெடா வெட்டுதான்,
அவங்க மனைவி கோயில் கோயில்னே கிடக்கறாங்க.
கடவுள் நம்பிக்கையில்லாம பொண்ணு வேணும்னா
இந்த மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணமே நடக்காது.
இந்த மாதிரி எடக்கு மடக்கா பின்னூட்டம் போடுற
வேலையெல்லாம் வேண்டாம். போட்டாலும்
பப்ளிஷ் செய்ய மாட்டேன்.
இந்த முறை போட்டது இப்படி ஆளுங்க அலையறாங்கன்னு
எங்க நண்பர்களுக்கு காட்டத்தான்.
உங்க கருத்தை உங்களோடு வெச்சுக்கோங்க.
என் கருத்தை நான் யார் மீதும் திணிக்க வில்லை.
என் வலைப்பூவில் என் கருத்தை நான் பதிக்கிறேன்.
கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக என்னவேண்டுமானாலும்
பின்னூட்டம் போடுவது கண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
23 comments:
//கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக என்னவேண்டுமானாலும்
பின்னூட்டம் போடுவது கண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.//
ரிப்பீட்டேய்
\\தென்றலாக வீசியது புதுகைத் தென்றல் at 12:49 //
புயலாக வீசியது புதுகைத் தென்றல் at 12:49 என்று போடுங்கள் சாரே!
;-)))))
வாங்க சின்ன அம்மிணி,
தங்களின் வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி.
வாங்க கரிகாலன்,
தென்றல் சில நேரங்களில் புயலாகி போவதற்கு காரணம் ஒரு விதமான அழுத்தம் தான். :))))))
ஏ அப்பா!
என்ன ஒரு கோபம்!
இதுதான் பாரதி சொன்ன ரௌத்ரம் பழகோ?
நினைச்சதை எழுதுங்க!
தூள் கிளப்புங்க!
வாழ்த்துக்கள்!
//கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக என்னவேண்டுமானாலும்
பின்னூட்டம் போடுவது கண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.//
ரிப்பீட்டேய்............
/Leave your comment
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று/
பொருத்தமான திருக்குறளை தான் போட்டு இருக்கீங்க. ஆனா கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி இதை எத்தனை பேரு படிப்பாங்கன்னு நினைக்குறீங்க?(இந்த கேள்வி நான் சும்மா விளையாட்டுக்கு கேக்கிறேன்....என் மேல கோவப்பட்டுடாதீங்க:)
சரியா சொன்னீங்க தென்றல். என்னத்த எழுதுனாலும் திட்டுறதுக்கு ஒரு அறிவுஜீவி இருக்குறாங்க, இந்த அறிவு ஜீவிங்க தொல்லை தாங்க முடியிலப்பா, பின்னூட்டம் போடுறவன், Pollல வோட்டிங் போடுறவன்லாம் அறிவுஜீவின்றானுங்கப்பா...
மிஸ்டர்.வானொலி என்னுடைய பதிவிற்கும் வந்து உன்னையெல்லாம் கவிஞர் என்று சொன்னது யாரோ என்று கமெண்ட்டைப் போட்டுப்போனார். நான் எந்த இடத்திலும் என் பெயரின் முன்னே கவிஞன் என்று ஓருபோதும் போட்டது இல்லை. ஓருமுறை பரிசல்காரன் என்னை கவிஞர் என்று குறிப்பிட்டபோதுகூட நானெல்லாம் கவிஞர் என்றால் அப்ப கண்ணதாசனெல்லாம் யாரு? என்று குறிப்பிட்டு என்னை கவிஞர் என்று அழைப்பதை மறுத்தேன்.
எதாவது கமெண்ட்ட போடனுமேன்னு எழுதுறவங்கள நாம என்ன செய்ய முடியும்? சீரியசா எடுத்துக்காம விட்டுத் தள்ளுவோம் :))
வாங்க சுரேகா,
இதுதான் பாரதி சொன்ன ரௌத்ரம் பழகோ?
ஆமாம், தாடிக்கார கவிஞர் சொன்னதை கொஞ்சம் பின்பற்றும் ஆள்தான் நான்.//
நினைச்சதை எழுதுங்க
கண்டிப்பா எழுதுவேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி இதை எத்தனை பேரு படிப்பாங்கன்னு நினைக்குறீங்க?//
நல்ல கேள்வி நிஜமா நல்லவன்,
அதை படிச்ச பிறகும் மட்டமாக பின்னூட்டம் வந்தால் நிராகரித்துவிடுவேன்.
அவங்க கருத்தைச் சொல்லும் உரிமை அவர்களுக்கு என்றால் அதை நிராகரிக்கும் உரிமை எனக்கு இருக்கிறதே.
:))))))))))))))))
வாங்க வெண்பூ,
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சீரியசா எடுத்துக்காம விட்டுத் தள்ளுவோம் //
விட்டுத்தள்ளிட்டா மத்தவங்களுக்கு எளக்காரமா ஆகிடும். நாம் கொஞ்சம் எதிர்க்கத்தான் வேணும். (இது என் பாலிசிதான்)
:))
cooooooooL coooooooooooooL
<==
விட்டுத்தள்ளிட்டா மத்தவங்களுக்கு எளக்காரமா ஆகிடும். நாம் கொஞ்சம் எதிர்க்கத்தான் வேணும். (இது என் பாலிசிதான்)
==>
அதானே. அடுத்த தடவ இந்தப்பக்கமே வரக்கூடாது. =)
<==
அவங்க கருத்தைச் சொல்லும் உரிமை அவர்களுக்கு என்றால் அதை நிராகரிக்கும் உரிமை எனக்கு இருக்கிறதே
==>
அதானே. இது உங்க ப்ளாக்காச்சே =))
<==
எந்த ஒரு நாளிதழோ, வார இதழோ எதிலும்
எதைப் பற்றி வேண்டுமானாலும் கட்டுரைகள்
வரும் அங்கே எல்லாம் கேள்வி கேட்க முடியாது ==>
==>
ஏன் முடியாது? அதப் பத்தி அவங்க(பத்திரிக்கை) கவலைப்படுறது கிடையாது அவ்வளவுதான்.
ஒரு ஐடியா
பேசாம உஙக ப்ளாக்குக்கு கமெண்ட் போடுறவங்க பாங்க் வெப்சைட்ல போடுற மாதிரி 'டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்' போட்டுடுங்க. "இன்னின்ன மாதிரிதான் கமெண்ட் போடுவேன். அல்லாங்காட்டி நீங்க குடுக்கற தண்டைக்கு உட்படுகிறேன்"ன்னு. இல்லனைன்னா, நீங்க அடிக்கடி டெஸ்ட் வையுங்க. அதுல பாஸ் பண்ணாத்தான் கமெண்ட் போட அனுமதின்னு.
வேற ஏதாவது ஐடியா வாசர்கள் சொன்னா பரிசீலிக்கலாம்.
<===
புதுகைத் தென்றல் said...
வாங்க கரிகாலன்,
தென்றல் சில நேரங்களில் புயலாகி போவதற்கு காரணம் ஒரு விதமான அழுத்தம் தான். :))))))
==>
இதுதான் ப்ராப்ளமே. இது சாதாரணமான அழுத்தம்னா ஓக்கே. இல்லைன்னா ஒரு டாக்டரத்தான் பார்க்கணும். இல்லையா?
[எனக்கு ஒரு தனிப்பதிவு உண்டுன்னு நினைக்கிரேன்.சரியா? =)]
அதானே. அடுத்த தடவ இந்தப்பக்கமே வரக்கூடாது. =)
<==
==>
அதானே. இது உங்க ப்ளாக்காச்சே =))//
உங்க பின்னூட்டத்திற்கெல்லாம் பதில் சொல்வதில்லைன்னு முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு.
ஆக, நீங்களா என்ன சொல்றீங்களோ அதை சொல்லிட்டு போய்கிட்டே இருங்க.
<==
புதுகைத் தென்றல் சைட்...
உங்க பின்னூட்டத்திற்கெல்லாம் பதில் சொல்வதில்லைன்னு முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு.
==>
அதுதான் எனக்குத்தெரியுமே .
ஆனா, பெரிய மனசு பண்ணி பதிலெல்லாம் போட்ருக்கீங்க.
உங்களை மாதிரியெல்லாம் நான் சீரியஸா எடுத்துக்க மாட்டென்.
நானும் சாதாரணமா உங்க பதிவுல கமெண்ட்டெல்லாம் போடுறது இல்லீங்கோ. இது ஏதோ நமக்குத்தெரிந்த பிரச்னை மாதிரி இருக்குன்னுதான் கமெண்ட்னேன்......
பதிவ படிச்சா கமெண்ட் போடனுங்கறது கஷ்டப்பட்டு பதிந்த பதிவருக்கு ஒரு மரியாதை. அதான்....
<==
ஆக, நீங்களா என்ன சொல்றீங்களோ அதை சொல்லிட்டு போய்கிட்டே இருங்க.
==>
அதத்தாங்க பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப நன்றி . உங்ககிட்ட பதிலெல்லாம் எதிர்ப்பார்க்கலே.
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கமெண்ட் மட்டுறுத்தலை எடுத்ததுக்கு ரொம்ப நன்றி.
//கரிகாலன் said...
\\தென்றலாக வீசியது புதுகைத் தென்றல் at 12:49 //
புயலாக வீசியது புதுகைத் தென்றல் at 12:49 என்று போடுங்கள் சாரே!
;-)))))//
சாரே-வா?
அதுசரி!
அக்கா.. கவனிங்க!
கோவப்படாதீங்க சிஸ்டரு. பிரபலமாவதன் விளைவுகள் இது!!!
:-))))))))))))
Post a Comment