Monday, October 20, 2008

தீபாவளி நினைவுகள் -2

தீபாவளி நினைவுகள் பார்ட் - 1
தீபாவளிக்கு எங்க தெருவில் மொதோ வெடி யாரு வீட்டுல
என்பது பெரிய கவுரப்ப்ரச்சனை.

வடக்கு 4 ஆம் வீதி வீட்டிற்கு வந்த பிறகு ராத்திரி
தூங்காமல் முதல் வெடியை போட்டுவிட்டு தூங்கப்போனதும்
உண்டு.

தீபாவளிக்கு டிரெஸ் என்ன என்பது யோசிக்கவே தேவையில்லை.

அது அப்பாவின் சாய்ஸ்தான். ஒரே கடைதான். சுவாமி அன் கோ.

சுரேந்திரன் மாமா (அப்பாவின் அலுவலக நண்பர்) அவர்களின்
அப்பா வைத்திருக்கும் கடை என்பதாலும் அங்கே வாங்கினால்தான்
நல்லது என்ற அப்பாவின் செண்டிமெண்டினாலும் அங்கேதான்
வாங்குவார். நவராத்திரிக்கு முன்பே அப்பாவும், அம்மாவும்
சென்று வாங்கி வருவார்கள்.

நவராத்திர்க்கு டிரெஸ் தைக்க கொடுக்கும்போதே, தீபாவளி
டிரெஸும் தைத்து வைத்து விடுவோம். அதனால் தீபாவளியின்
போது டிரெஸ் பற்றிய டென்சன் கிடையாது. முன் ஜாக்கிரதை
முத்தண்ணாவாச்சே!

வாழமரத்து ஜவுளிக்கதை, லதா சில்க்ஸ் என்று பல கடைகள்
வந்தாலும் அப்பா அங்கேதான் வாங்குவார். (இப்போ மாத்திப்புட்டோம்ல)

எனக்கு டிரெஸ் எடுப்பதில் அப்பாவுக்கு சிக்கலே கிடையாது.
பேஷன் என்று சொல்லி வரும் சீசன் டிரெஸ்கள் எனக்கு அலர்ஜி.
எல்லோரும் ஒரே மாதிரி ட்ரெஸ் செய்து கொண்டால் நாம்
தனியாக தெரிய மாட்டோமே. அதான்.

ஜரிப்பாவடை என்று அப்பா ஒரு பாவாடை தாவணி செட்
வாங்கிவந்தார். சிமிண்ட் கலரில் சிகப்பு பார்டர் வைத்த
பாவாடை, பளவுஸ், சிகப்பு நிற தாவணி.

தைக்க கொடுத்து பண்டிகை அன்று போட்டுக்கொண்டேன்.
அடுத்த நாள் பள்ளியில் “சீசன் ட்ரெஸ் போடமாட்டேன்னு
சொல்வ, நேத்து நீ போட்டுகிட்டிருந்தது நதியா பாவடை
என்று தோழிகள் சொல்ல கோபம் வந்தது.

வீட்டிற்கு வந்து சரியாக கேளாமல் கொண்டுவந்ததற்கு
அம்மாவிற்கு அர்ச்சனை செய்துவிட்டு முதல் வேலையாக
அந்த ட்ரெஸில் இருந்த ஜரிகைகளை பிரித்துவிட்டேன்.

இப்போது இது என் பாவாடை சட்டை,” என்று
பள்ளிக்கு போட்டுக்கொண்டேன். முதல் முறையாக
அப்பா என்னிடம் மன்னிப்பு கேட்டது இந்த நிகழ்ச்சிக்குத்தான்.

அழகாக இருந்தது என்பதால்தான் கொண்டுவந்தேன் என்றார்.
காஸ்ட்லி ட்ரெஸ்ஸில் ஜரிகை பிரித்தது வருத்தமாக இருந்தாலும்
என் கொள்கை தெரிந்ததால் மன்னிப்பு கேட்டார்.


அதனால் அப்பா தனியாக துணி எடுத்து கொடுத்துவிடுவார்.
கலர் எல்லாம் அப்பா சொல்வதுதான். ஒரு முறை
ஆரஞ்ச் கலரில் பூ போட்ட பாவாடையும், அதற்கு
மெருன் கலர் சட்டையும் போட்ட ட்ரெஸ் எடுத்து
வந்திருந்தார். பார்த்து அதிர்ந்தேன்.

சென்றவருட ட்ரெஸும் அதே காம்பினேஷந்தான்
எவ்வளவோ சொல்லியும் அப்பா மாற்ற முடியாது
என்று சொல்லிவிட்டார். :(

சிவகாசியிலிருந்து பட்டாசு வரவழைப்பதால்,
தீபாவளிக்கு முதல் நாள்தான் பட்டாசு வரும்.

எல்லோரும் அது வாங்கி இருக்கோம்! இது
வாங்கி இருக்கோம்னு சொல்லிகிட்டு இருப்பாங்க.

நல்லா வெடிக்க வேண்டும் என்பதற்காக
வெயிலில் வைத்து எடுப்பாங்க.

அப்பா கொண்டு வரும் பட்டாசு நமுத்திருக்கா?
வெடிக்குமா? என்று டென்சனாகவே இருக்கும்.

ஒரு தீபாவளியின் போது பொறுத்து பொறுத்து பார்த்த தம்பி
பாட்டியிடம் வந்து,” பாட்டி, 2 ரூபாய்
கொடுங்களேன்! என்று கேட்டான்.
வாசலில் வேறு யாரோ நின்று கொண்டிருந்தார்?

தம்பி எதுக்கு காசு கேட்டாப்ல!!!


(தொடரும்)

10 comments:

புதுகை.அப்துல்லா said...

அது அப்பாவின் சாய்ஸ்தான். ஒரே கடைதான். சுவாமி அன் கோ.
//

அக்கா சுவாமி&கோ பெரியவரின் மகனும் அவர் மனைவி குழந்தைகளும் திருச்சியில் இருந்து 2 வருடம் முன்பு மாருதி காரில் வரும் போது விபத்தில் இறந்து போயினர். இப்பவும் அந்த பெரியவர் மட்டும் கடையில் அமர்ந்து இருப்பதைப் பார்க்கும் போது மனது கனத்து போகிறது.

Thiyagarajan said...

Nice post.

//தீபாவளிக்கு எங்க தெருவில் மொதோ வெடி யாரு வீட்டுல
என்பது பெரிய கவுரப்ப்ரச்சனை.//
pattasu vedicha kuppai is the judging factor in our street. :)

For us its valamarthu javalikadai and NK or selection tailors.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

தீபாவளி பற்றிய எனது ஏக்கங்களை அதிகப் படுத்திவிட்டது இந்த பதிவு!

இந்த முறையும் ஊருக்கு போகமுடியாது!

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

சுரேந்திரன் மாமாவின் அண்ணாதான் அவர். விபத்து குறித்து அப்பா சொல்லியிருக்கிறார்.

சென்றமுறை புதுகை வந்தபோது தாத்தா மட்டும் தனியே இருந்தது பார்த்து எனக்கும் மனது வலித்தது.

புதுகைத் தென்றல் said...

வாங்க தியாகராஜன்.

எங்க வீட்டு வாசலில் இருந்து பட்டாசு குப்பையைக் கொண்டு போய் போட்டுகிட்டு நாந்தான் நிறைய வெடிச்சேன்னு சொல்லிக்கிட்டவங்களைப் பாத்திருக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வாங்க சுடர்மணி,

உங்களுக்கும் கொசுவத்தி சுத்தி விட்டுட்டேனே!

கவலைப்படாதீங்க பொங்கலுக்கு இந்தியா வந்து சூப்பரா பொங்கலைக் கொண்டாடுங்க.

மங்களூர் சிவா said...

ஹா ஹா
சேம் பிளட்

ராமலக்ஷ்மி said...

அந்த வயதிலும் கொண்ட கொள்கை மேல் நீங்கள் கொண்டிருந்த மன உறுதி பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. பிடித்திருந்தாலும் ஜரியைப் பிரித்ததைச் சொல்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

சேம் ப்ள்ட்//

வாங்க தம்பி வாங்க.

தலைதீபாவளி கொண்டாட்டங்கள் எம்புட்டு தூரத்துல இருக்கு.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

என்னவோ அப்பத்திலிருந்து சீசன் ட்ரெஸுக்கு நோ என்பது கொள்கையாகவே ஆயிடுச்சு.

என்ன ஒண்ணு நம்ம கொள்கையினால அப்ப அப்பா பர்ஸுக்கும் இப்ப அயித்தான் பர்ஸுக்கும் வேட்டு வெக்காகம இருக்கேன் என்பதில் சந்தோஷம்.