Monday, October 06, 2008

BAWARCHI

BAWARCHI- சமையற்காரன். இது 1972 ஆம் ஆண்டு
ஹிரிஷிகேஷ் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில்
வெளியானத் திரைப்படம்.

நல்ல நடிகர்கள், அருமையான கதை,
மிகச் சிறந்த கதாபாத்திரங்கள் இவை
ஒன்றாக சரிவிகிதத்தில் சேர்ந்தால் நல்ல
திரைப்படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாவர்ச்சி- இப்படிப்பட்ட திரைப்படம் தான்.

படம் பார்ப்பது பொழுது போக்காக மட்டுமல்லாமல்
அதிலுருந்து நாம் நல்லதாக ஏதேனும் கற்றுக்கொள்ள
வேண்டும் என நினைப்பவள் நான். என் பெரியமாமா
தான் இந்தத் திரைப்படத்தை எனக்கு அறிமுகம்
செய்து வைத்தார். (படம் வந்த போது நான்
பிறக்கவே இல்லையே :) )

படத்தின் ஆரம்பமே வித்தியாசமாக இருக்கும்.
டைட்டில் கார்ட் காட்டாமல் அமிதாப் பச்சன்
அவர்களின் குரலில் அறிமுகம்.

ஆனந்த பவனம்- அந்த வீட்டின் பெயராக
இருந்தாலும் உண்மையில் அது ஒரு யுத்த பவனம்
தான்.

வயதான் தந்தை சிவனாத் சர்மா, அவரின் 2 மகன்கள்
ராம்நாத் சர்மா * காசிநாத் சர்மாஅவர்களின்
மனைவி மற்றும் பிள்ளைகள், திருமணமாகாத பப்லு(அஸ்ரானி)
இசையமைப்பாளர் ஆக விரும்பும் 3 ஆவது மகன்,
இறந்து விட்ட இன்னொரு மகனின் மகள்
கிருஷ்ணா (ஜெயா பாதுரி)
இவர்கள் இந்த பவனத்தில் வசிக்கிறார்கள்.


வீட்டிற்கு வரும் சமையற்காரர்கள் அதிக நாள்
நீடிப்பதில்லை. இதனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும்
பிரச்சனையாகிறது. கடைசியில் சமையற்காரனாக
வருகிறார் ரகு (ராஜேஷ் கண்ணா)( தனது மேனரிசமான
தலை சாய்ப்பை விட்டு விட்டு நடித்திருக்கிறார்)

இன்முகத்தோடு, தனது சுவையான சமையலினால்
அனைவரின் நம்பிக்கைக்கும் சீக்கிரமே பாத்திரமாகிறார்
பாவர்ச்சி.தான் சந்திக்கும் மனிதர்களிடமிருந்தும், தான்
தங்கியிருந்த வீடுகளிலிருந்து பல கலைகளை கற்று
வைத்திருக்கிறார். சமஸ்கிருதம், அல்ஜீப்ரா, இசை
என கற்று வைத்திருக்கு லிஸ்டே பெரிது.

ராஜேஷ் கண்ணாவின் ”டட்டடாய்” என்று சொல்லிக்கொள்ளும்
மேனரிசம் அதிவிரைவில் குடும்பத்தினருக்கும்
தொற்றிக்கொள்கிறது.
வீட்டில் நிம்மதி இருந்தால் அதன் பிரதிபலிப்பு ஒவ்வொருவரிடமும்
காணலாம். நேரத்தில் உணவு, மற்ற வேலைகளும் முறையாக
நடப்பதால் பெரியவர் ராம்நாத்திற்கு பதவி உயர்வு கிடைக்கிறதுஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டு யுத்த பவனமாக இருந்த
இடம் பெயருக்கு ஏற்றார்போல சாந்தி பவனமாகிறது.

அண்ணன் தம்பிக்கு இடையே இருந்த காழ்புணர்ச்சி நீங்க
காரணமாக இருக்கிறார் பாவர்ச்சி ரகு.

தங்களுக்குள் இருந்த இடைவெளி நீங்கி சந்தோஷமாக
இருக்கிறார்கள் ஓர்ப்படிகள்.

(நம் வேலையை நாம் செய்து கொள்வதனால் ஏற்படும்
சந்தோஷத்தை விட அடுத்தவருக்கு நாம் உதவுவதனால்
ஏற்படும் சந்தோஷத்தை அளவிட முடியாது- என்று
ராஜேஷ் கண்ணா கூறும் இடங்கள் நம்மையும்
நிச்சயம் மாற்றி விடும்.
ஒருவரை ஒருவர் பார்க்கும்போதெல்லாம் கோபத்தை
மட்டுமே வெளிபடுத்திக்கொண்ட குடும்பத்தினர்
சேர்ந்து அமர்ந்து டீ குடிப்பது, பாடுவது என
மாறி அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில்
மாறிவிடுகின்றனர். வெறும் சமையற்காரனாக
மட்டுமல்லாமல் இந்த வேலையைக் கச்சிதமாக
செய்கிறார் ரகு.


கதையின் கிளைமாக்ஸும் விசித்திரமாக இருக்கிறது.
கிருஷ்ணா தன் காதலனுடன் சேர்ந்தாளா? சேர்த்துவைத்தது
யார்? எங்கனம்? என்பதுதான் கிளைமாக்ஸ்.

தன்னை விட்டு போகவேண்டாம் என்று கேட்கும்
கிருஷ்ணாவிற்கு ரகு சொல்லும் பதில் மிக அருமை.
“தங்கையே! எப்போதோ கிடைக்கும் பெரிய பெரிய
சந்தோஷத்திற்காக நமக்கு அன்றாடம் கிடைக்கும்
சின்னச்சின்ன சந்தோஷத்தை இழந்து விடுகிறோம்.

பெரிய பெரிய சந்தோஷங்கள் 10 அல்லது 12 தான்
கிடைக்கும். ஆனால் வாழ் முழுதும் கிடைக்கும்
சின்னச்சின்ன சந்தோஷங்கள் 10,0000ற்கும் மேலே.
இதை நாம் உணர்ந்தால் அனைவரின் வாழ்வும்
என்றும் சந்தோஷமானதவே இருக்கு.

இந்த செய்தியை அனைவரிடமும் பரப்பத்தான்
எனது பேராசிரியர் வேலையை துறந்து விட்டு
சமையற்காரனாக வேண்டியவர்களுக்கு சேவை
செய்கிறேன். எனது சேவை பலருக்கு தேவையாக
இருக்கிறது. அங்கெல்லாம் சென்று உன்னைப்
போன்ற தங்கைகளுக்கு உதவ நான் சென்றுதான்
ஆக வேண்டும்”, என்பார்.

சத்தியாமான வார்த்தை சின்னச்சின்ன சந்தோஷங்கள்
கொட்டி கிடந்தாலும் அவைகளை நாம் அனுபவிப்பதே
இல்லை. இதுதானே நமக்கு பிரச்சனையாகி
நம் வாழ்வே வெறுமையாக இருப்பது போல்
தோன்றுகிறது.

அதிகாலை ராகத்தை கொண்டாடும் விதமாக
அமைந்துள்ள இப்பாடலை பாருங்கள்.சின்னச்சின்ன சந்தோஷங்களுக்கு விலையே
இல்லை. நம்மை சுற்றி கொட்டி கிடக்கும்
அவைகளை ஒன்று விடாமல் அனுபவித்து
ஆனந்தமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்ற செய்தியை நமக்கெல்லாம் வழங்கிய
அற்புதமானத் திரைப்படம் “பாவர்ச்சி”.

10 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்லா சொன்னீங்க புதுகைத்தென்றல்.. இது ரொம்ப நல்ல படமாச்சே...

புதுகைத் தென்றல் said...

இது ரொம்ப நல்ல படமாச்சே...

ஆமாம் கயல்விழி.

ambi said...

ரொம்ப அருமையா படத்தை விமர்சனம் பண்ணி இருக்கீங்க. அப்ப வந்த ஹிந்தி படங்களை தூர்தர்ஷன் புண்யத்துல பாக்கவே ஆசையா இருக்கும். இப்ப ஒரே மசாலா மயமா தான் இருக்கு. :))


சந்தடி சாக்குல நீங்களும் யூத்ன்னு(not 1972 born) சொன்ன உங்கள் நுண்ணரசியல் சூப்பர். :p

வெண்பூ said...

அட உங்களுக்கும் பாவார்ச்சி புடிக்குமா? எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. என்ன அங்க குடுக்குற பிரியாணியில கொஞ்சம் எண்ணைய் அதிகமா இருக்கும்.. அதுதான் திகட்டும்.. சாரி.. நீங்க சினிமாவை சொன்னீங்களா.. நான் ஹைதராபாத்ல இருக்குற பிரியாணி கடையை சொன்னீங்கன்னு நெனச்சேன்.. :))))

புதுகைத் தென்றல் said...

ரொம்ப அருமையா படத்தை விமர்சனம் பண்ணி இருக்கீங்க.//

நன்றி அம்பி.

புதுகைத் தென்றல் said...

அப்ப வந்த ஹிந்தி படங்களை தூர்தர்ஷன் புண்யத்துல பாக்கவே ஆசையா இருக்கும். இப்ப ஒரே மசாலா மயமா தான் இருக்கு//


ஆமாம். அம்பி. சத்தியமான உண்மை

புதுகைத் தென்றல் said...

சந்தடி சாக்குல நீங்களும் யூத்ன்னு(not 1972 born) சொன்ன உங்கள் நுண்ணரசியல் சூப்பர்.


:))))))))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

எனக்கும் பாவர்ச்சி பிடிக்கும் வெண்பூ,

ஆனா நீங்க சொல்ற பாவர்ச்சி பத்தி கேள்விபட்டிருக்கேன். இப்ப வரைக்கும் போனதில்ல...

:(
போயிட்டு வந்து போட்டோவோட பதிவு போடறேன்.

:)))))))))))))

புதுகை.அப்துல்லா said...

யக்கா நீங்க மட்டும் தான் போட்ல போவீங்களா? நானும் போய்ட்டு வந்துட்டேனே!!!!!! குமரகத்திற்கு !!!!
:)))))

புதுகைத் தென்றல் said...

ஆஹா சூப்பர் அப்துல்லா,

ஆளையே காணோமேன்னு பார்த்தேன்.