Thursday, October 02, 2008

பத்ராசலம், பர்ணசாலை புகைப்படங்கள்

இதோ பத்ராசலம் கோவிலின் நுழை வாயில் மற்றும்
கோபுரம்.
உள்ளே பிராகாரத்தில் இருக்கும் கோபுரம் புகைப்படம்
எடுக்க அனுமதி இல்லை. மூல விக்ரகம் இருக்கும்
அந்த இடத்தின் மேலிருக்கு கோபுரத்தில் சக்கரம்
வைக்கப்பட்டுள்ளது)





கோவிலினுள் ராமதாஸ் அவர்கள் செய்து தந்த
ஆபரணங்களின் கண்காட்சி, லட்சுமி கொவில்,
பத்ரசரணம்(ஸ்ரீராமன் வந்து நின்ற பாறையில்
அவரின் பதகமலங்கள், ஆஞ்சநேயர் கோவில்
ஆகியவை இருக்கின்றன.)


பக்தனுக்காக ஓடி வந்த பரந்தாமன் தன் துணைவியை
மடியில் இருத்தி, தம்பி லட்சுமணனுடன் காட்சி
அளிக்கிறார்.





அங்கிருந்து நேராக நாங்கள் சென்றது 35 கி.மீ
தூரத்தில் இருக்கும் பர்ணசாலைக்கு.

வனவாசம் வந்த ராமர் இங்குதான் கூடாரம்
அமைத்து இருந்தார். கூடாரம் இருந்த இடத்தில்
கோவில் கட்டியிருக்கிறார்கள்.






சூர்ப்பனகையின் மூக்கறுத்தது, மாயமானைத் தேடிச்
சென்றது, ராவணன் சீதையை கவர்ந்து
சென்றது, எல்லாம் இங்கேதான் நடந்தது.




பர்ணசாலைக்கு கொஞ்சம் அருகில் சீதை அம்மா குளித்து
புடவையைக் காயவைத்த இடம் இருக்கிறது.
(”அந்த 5 நாட்களை” தாயார் இங்குதான் கழித்தாராம்)




சூர்ப்பணகை இல்லாவிட்டால் ராமாயணமே இருந்திருக்காது.
ராமர் பட்ட கஷ்டம் நாம் படக்கூடாது என்பதற்காக
இடது கையால் 3 கல் எடுத்து வேண்டிக்கொண்டு
சூர்ப்பணகை மூக்கறுக்கப்பட்ட இடத்தில் வீசி அடித்த
கற்கள் சூர்ப்பணகை கோட்டையாக இருக்கிறது.



நேரமின்மையால் ஜடாயு ராவணனுடன் போரிட்டு
உயிர் நீத்த இடத்திற்கு செல்ல இயலவில்லை.

கோவில் ப்ரசாதம் இப்பப்பூ( ஒரு வகைப் பூ மரத்திலிருந்து
விழுவது. சித்தரத்தையை வெல்லத்துடன் சேர்த்து
உண்ணும் சுவையில் இருக்கிறது இப்பூ) லட்டு,
கல்கண்டு.


தெலுங்கு எழுத்துக்களில் ஸ்ரீராமா என்று எழுதப்பட்டு
அந்த வடிவத்தில் புல் வளர்த்திருக்கிறார்கள்.



ராமசந்திராய ஜனகா ராஜஜா மனோகராய்
கீத சித்ர வரப்ரதாய சர்வ மங்களம்

6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நாளா எனக்கும் பத்ராசலம், ஸ்ரீசைலம், விஜயவாடா துர்கை போன்றவற்றை பார்க்க ஆவல்.

இப்போ ஹைத்ராபாத் புது ஏர்போர்ட் போற வழில பத்ராசலம் 150 கி.மி அப்படின்னு போர்ட் பார்க்கையில் ரொம்பவே தோன்றுகிறது. பார்க்கலாம் என்று அருள் கிடைக்குதோ அன்று தரிசனம் கிடைக்கும்.

மங்களூர் சிவா said...

என்று அருள் கிடைக்குதோ அன்று தரிசனம் கிடைக்கும்.

இறக்குவானை நிர்ஷன் said...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி புதுகை.

//சூர்ப்பணகை மூக்கறுக்கப்பட்ட இடத்தில் வீசி அடித்த
கற்கள் சூர்ப்பணகை கோட்டையாக இருக்கிறது.
//

வெறும் கற்கள் மட்டும்தான் இருக்கின்றனவா?

pudugaithendral said...

vaanga mathurayambathi,

kandipa tharisanam kidaikum

pudugaithendral said...

unggalukum tharisanam kidiaka prarthikaren siva.

pudugaithendral said...

mathuraiyambathi,

shamshabad airportilierunthu srisailam 6 mani nera payanam, bus allathu caril than poga mudiyum