அம்மா ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தாள். அம்மா அழுகிறாள்
என்றால் அன்று அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே
சண்டை என்று அர்த்தம்.
அப்பா உள்ளே அறையில் மொளனமாக
உட்கார்ந்தபடி விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவை தேற்றி தேற்றி ஓய்ந்து விட்டேன்.
இந்த முறை அப்பாவை சும்மா விடக் கூடாது.
இவர் பாட்டுக்கு வாயில் வரும் வார்த்தைகளால்
அம்மாவை காயப்படுத்தி விடுகிறார்.
கோபத்தில் அவர் சொல்லும் அந்த ஒரு
வார்த்தை அம்மாவை அப்படியே
உலுக்கி விடும்.
அதனால் அப்பாவிடம் சென்றேன்.
“என்னப்பா! திரும்ப அம்மா கூட சண்டையா?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி”?
என்னை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்ப
விட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்.
”அப்படி கேளுடா மனோகர்!
இந்த மனுஷனுக்காக மாடா உழைச்சு,
ஓடா தேயுறேன். ஆனாலும் வாயில்
விஷத்தை வெச்சுகிட்டு தேள் மாதிரி
கொட்டிகிட்டே இருக்காரு. இவருக்கு
முன்னாடி நான் போகணும்,
அப்பத் தெரியும் என்னோட அருமை".
என்று சொல்லிவிட்டு திரும்ப அழத்தொடங்கினாள்
அம்மா.
எந்தப் பெண்ணும் தான் சுமங்கலியாக
சாவைதைத் தான் இறைவனிடம்
பிரார்த்திப்பாள். அம்மா மட்டும்
இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால்
அப்பா கோபத்தில் சொல்லும் வார்த்தை
அமங்கலமானது. அது அம்மாவுக்கு
இன்னும் கோபத்தை உண்டாக்கி 4 நாளானாலும்
அம்மா சாப்பிட மாட்டார். அப்பாவும்
வெறும் காபி மட்டும் தான் சாப்பிடுவார்.
“ஏன் அப்பா? அம்மா உங்க மேல எம்புட்டு பாசம்
வெச்சிருக்காங்க! சும்மா அம்மாவுக்கு பிடிக்காதுன்னு
தெரிஞ்சும் அந்த வார்த்தையைச் சொல்லி
திட்டறீங்க” என்று கேட்டதுதான் தாமதம்,
”ஆமாம்! என் மேல பாசம் பொங்கி வழியுது.
உண்மையா பாசமிருந்தா தான் முன்னாடி
போகணும்னு சொல்வாளாடா?” என்றவறை
புரியாமல் பார்த்தேன்.
“எனக்கு எது வேணுமோ அதை பாத்து பாத்து
செய்யறது உங்கம்மா தானே! ஒரு நாள் உங்கம்மா
ஊருக்கு போனாளோ நான் அம்புட்டுதான்.
பச்ச புள்ளை மாதிரி எனக்கு எல்லாம் பார்த்து
பார்த்து செஞ்சு என்னைய சுத்தமான சோம்பேறியா
ஆக்கிட்டா. அவ இல்லாட்டி எனக்கு என்ன
செய்யணும்னு கூடத்தெரியாது. ஒரு அம்மா
மாதிரி என்னிய பார்த்துகிறா?
எனக்கு முன்னாடி அவ சுமங்கலியா போய்
சேர்ந்துடணும்னு விரதம் இருக்கா, சாமி
கும்பிடறா! இவ போயிட்டா என்னிய
யாரு பாத்துக்குவா? புருஷன் செத்தாலும்
பெண்ணால் தைரியமா தனியா வாழ் முடியும்டா
மனோகர்! ஆண்களுக்கு தனியா வாழ்த் தெரியாது.
நானும் அந்த மாதிரி தான்.
அவ இல்லாட்டி எனக்கு
வாழ்க்கையே இல்லைடா! இதை உங்கம்மா
என்னிக்கு புரிஞ்ச்கப்போறாளோ” என்று
சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி
அழத்துவங்கினார்.
இத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த
அம்மா ஓடி வந்து அப்பாவை தாங்கி
சமாதானம் செய்யத் துவங்கியதை
மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
28 comments:
நல்லா இருக்கு கதை!
//எனக்கு முன்னாடி அவ சுமங்கலியா போய்
சேர்ந்துடணும்னு விரதம் இருக்கா, சாமி
கும்பிடறா! இவ போயிட்டா என்னிய
யாரு பாத்துக்குவா? புருஷன் செத்தாலும்
பெண்ணால் தைரியமா தனியா வாழ் முடியும்டா
மனோகர்! ஆண்களுக்கு தனியா வாழ்த் தெரியாது.
நானும் அந்த மாதிரி தான்.
அவ இல்லாட்டி எனக்கு
வாழ்க்கையே இல்லைடா! இதை உங்கம்மா
என்னிக்கு புரிஞ்ச்கப்போறாளோ” என்று
சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி
அழத்துவங்கினார்.///
ரொம்ப பிடிச்சிருக்கு!
வயதான காலத்தில் இந்த எண்ணங்களே இன்னும் கூட இனிமையான வாழ்க்கை வாழ காரணமாக அமையும் :)
வாங்க ஆயில்யன்,
வருகைக்கு மிக்க நன்றி.
ரொம்ப பிடிச்சிருக்கு!
மிக்க மகிழ்ச்சி
வயதான காலத்தில் இந்த எண்ணங்களே இன்னும் கூட இனிமையான வாழ்க்கை வாழ காரணமாக அமையும் :)//
சரியா சொன்னீங்க ஆயில்யன்
நல்லாருக்கு கதை!!
நல்ல செண்டிமென்ட்ஸ்!!!
நல்லா இருக்கு
அட இது எனைக்குத் தெரிஞ்ச ஓரு உண்மைக்கதை மாதிரி இருக்கு.
அப்புறம் எங்கக்கா நம்ப வீட்டுப்பக்கம் உங்கள காணோம்
நல்லாருக்கு கதை!!
நன்றி சந்தனமுல்லை
வாங்க விக்னேஸ்வரன்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
இது ஒரு உண்மை கதைதான் அப்துல்லா.
உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனா பின்னூட்டம் போடலை. இதோ இப்ப வர்றேன்.
நெகிழ வைத்து விட்டது கதை.
நெகிழ வைத்து விட்டது கதை.//
நன்றி ராமலக்ஷ்மி,
உதார் விட்டாலும் உள்ளத்தில் ஆண்கள் குழந்தைகளே என்பதை நான் தெரிந்து கொண்ட ஓர் உண்மைச்
சம்பவமே இக்கதை
நல்லா இருக்கு அக்கா!
வாரே வாஹ்.. அக்கா சூப்பர் கதை.. ரொம்ப ரொமாண்டிக்காவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு.. கலக்கல்.. :)
//ஆண்களுக்கு தனியா வாழத் தெரியாது.//
அதுக்காக இதை எல்லாம் ஏத்துக்க முடுயாது.. :)
செம டச்சிங் அக்கா ;)
அருமை!
நெகிழ்ச்சியாய் இருக்கிறது கதை!
நிஜமா நல்லவன் said...
நல்லா இருக்கு அக்கா//
நன்றி தம்பி. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
வாரே வாஹ்.. அக்கா சூப்பர் கதை.. ரொம்ப ரொமாண்டிக்காவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு.. கலக்கல்.. :)
நன்றி சஞ்சய்
//ஆண்களுக்கு தனியா வாழத் தெரியாது.//
அதுக்காக இதை எல்லாம் ஏத்துக்க முடுயாது.. :)//
வயசானா தானாத் தெரியப்போகுது.:)))
கோபிநாத் said...
செம டச்சிங் அக்கா ;)//
வாங்க கோபிநாத்,
மிக்க நன்றி.
வாங்க பரிசல்காரன்
அருமை!
நெகிழ்ச்சியாய் இருக்கிறது கதை!
பாராட்டிற்கு மிக்க நன்றி.
அடுத்த தொடர்கதை போட்டாச்சு.
உண்மையான உணர்வுகளைக் காட்டிய நல்ல கதை.
உண்மையான உணர்வுகளைக் காட்டிய நல்ல கதை.//
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அமுதா.
சூப்பர்!!
யார பாவப்படறதுன்னு தெரியலை. பாவம். ஒத்த தம்பதிகள்.
நன்றி சிவா
நன்றி ஃபண்டூ
Post a Comment