Monday, October 13, 2008

சாலட்

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிவாரத்திட்டம்:5ற்காக எனது பதிவு.

பழங்கள் சாலட் செய்தால் எனக்கு மிகவும்
பிடிக்கும். ஆனால் இந்த கஸ்டர் பவுடரை
கரைத்து சேர்ப்பது எனக்கு பிடிக்காது. :(




நான் செய்யும் சாலடிற்கான ரெசிப்பி இதுதான்.

உங்களுக்கு விருப்பமான பழங்கள்
(ஆப்பிள்-2, வாழைப்பழம் 2, பப்பாளி-1 ,
அன்னாசி -1, திராட்சை-100கி.ம் போன்றவை)
இவைகளில் திராட்சை தவிர மற்ற
பழங்களை கழுவி சதுரமாக நறுக்கி
வைத்துக்கொள்ளுங்கள்.

அதை ஒரு கிண்ணத்தில் போட்டு
1 ஸ்பூன் சர்க்கரை, 1/2 டம்பளர்
காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி
கொஞ்சம் (விரும்பினால்) சேர்த்து
நன்றாக கலக்கவும். 1 மணிநேரம்
கழித்து கிண்ணங்களில் போட்டு சாப்பிட
சாலட் ரெடி.




பால் சர்க்கரைக்கு பதில் 3ஸ்பூன் மில்க் மெய்ட்
சேர்க்கலாம்.

பிள்ளைகளுக்காக இந்த சாலட்டின் மேல்
வெந்நிலா ஐஸ்கிரிம் போட்டு கொடுக்கலாம்.

10 comments:

ராமலக்ஷ்மி said...

கஸ்டர்ட் சேர்த்துதான் இதுவரை செய்திருக்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பது எளிதாகவும் இருக்கிறது:)! கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் தென்றல்!

pudugaithendral said...

செய்து பார்த்து சொல்லுங்க ராமலக்ஷ்மி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ எனக்கு கஸ்டர்ட் சேர்த்து சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.. பையன் பிறந்தப்போ தினம் சாயங்காலம் அம்மா செய்துத்தருவாங்க.. நீங்க சொன்னமுறையிலும் செய்து பார்க்கிறேன்..

சந்தனமுல்லை said...

எங்க வீட்டுல இது எப்பவும் இருக்கும், அந்தந்த சீஸன் பழங்களோட!! அது மட்டும் இல்லாம சம்மர்ல பலாபழம் தேனில் ஊற வைத்து, நுங்கு பாலில் ஊற வைத்து..ஆனா, எனக்கு இந்த மஸ்க் மெலன் மட்டும் அலர்ஜி..அந்த ஸ்மெல்லே பிடிக்காது!! ம்ம்..இந்த மாதிரி யாராவது கட் பண்ணி தந்தா நல்லாதான் இருக்கும்..;-)!! இயற்கையா கிடைக்கிற பழங்களை அப்படியே சாப்பிடறதுதான் நல்லதுன்னு தோணுது!!

அமுதா said...

கஸ்டர்ட் சேர்த்து செய்வது என் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. மில்க் மெய்ட் அவர்களுக்குப் பிடிக்கும். எனவே செய்து பார்க்கிறேன்

pudugaithendral said...

அது மட்டும் இல்லாம சம்மர்ல பலாபழம் தேனில் ஊற வைத்து, நுங்கு பாலில் ஊற வைத்து//

தேனில் ஊறிய பலா...ம்ம்ம் சூப்பர். எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

pudugaithendral said...

வாங்க அமுதா,

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.

Anonymous said...

thamilbest இல் லிங்க் கொடுத்துள்ளேன்

மங்களூர் சிவா said...

//
திராட்சை தவிர மற்ற
பழங்களை கழுவி
//
திராட்சைய கழுவ தேவையில்லையா??
என்ன கொடுமை அம்ருதா இது!!
:))))))

மங்களூர் சிவா said...

10