Tuesday, October 14, 2008

அவள் (ஒரு தொடர்கதை)

அம்மாவின் குரல் கேட்டு கண்விழித்தான் திவாகர். மணி 7.30.
பல் தேய்த்து வந்தவனுக்கு முனுமுனுப்புடன்
காபி தந்தாள் அம்மா.”என்னம்மா! காலங்காத்தால
ஆரம்பிச்சிருக்க? என்ன பிரச்சனை? நந்தினி எங்க?

“ ஏண்டா சொல்லமாட்ட! அந்த ரூம்ல படுத்திருக்கா
உம்பொண்டாட்டி.”

ஏன்? என்னாச்சு அவளுக்கு?”

”ஆமாம் எல்லா பொம்பளைகளுக்கும் மாசாமாசம்
வர்ற்துதான்!ஆனா இவதான் மாய்மாலம்
செஞ்சுகிட்டு படுத்திருக்கா! வயசான காலத்துல
ஓடியாடி என்னால செய்ய முடியலை” என்று
சொல்லிக்கொண்டே போனாள் அம்மா.


நந்தினி முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம்
எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கிறாள், கோபபபடுகிறாள்,
சண்டைதான். அதிலும் “அந்த” நாட்களில் ரொம்பவே
பிரச்சனையாக இருக்கிறது.

காபியை குடித்து முடித்துவிட்டு நந்தினி
படுத்திருக்கும் அறைக்குப் போனான்,
“என்னாச்சு! ஏன் இப்படி படுத்திருக்க?
என்று சலிப்புடன் கேட்டான் திவாகர்.

சிவந்த கண்களுடன் தலை நிமிர்த்தி பார்த்தவள்
பேசமுடியாமல் சொன்னாள்,”ரொம்ப பெயினா
இருக்குங்க! டாக்டர்கிட்ட போகணும், கொஞ்சம்
கூட துணைக்கு வர்றீங்களா?” என்றாள்

சாதரணாமாக இருந்தாள் மறுத்திருப்பான். அவளின்
நிலை என்னவோ செய்ய,” ரெடியாகு. நான் குளிச்சிட்டு
வர்றேன்” என்றான்.

“என்னாடிம்மா. அதிசயமால்ல இருக்கு!
இதுக்கெல்லாமா டாக்டர் கிட்ட போவாங்க!”
அனாவசிய செலவு செய்யாத திவாகர், வயித்துவலிக்கு
சீரக கசாயம் குடிச்சிட்டு படுக்கச் சொல்லு. வேலைக்கு
லீவு போட்டிருக்காதானே” என்று அம்மா சொல்வதில்
நியாயம் இருப்பதாக பட்டது திவாகருக்கு. ஆனாலும்
ஏதோ அவனை டாக்டரிடம் அழைத்து போக வைத்தது.“உள்ளே போங்க! என்று ரிசப்சனிஷ்ட் சொல்ல
எழுந்த போது திவாகரின் மொபைலில் மணி
அடித்தது.”நீ போய் டாக்டரைப் பாரு! நான்
போன் பேசிட்டு வர்றேன். நான் வந்து பேச
வேண்டியது ஒண்ணுமில்லை.” என்றான்.

வலியுடன் பேசமுடியாமல் உள்ளே சென்ற
நந்தினியை டாக்டர் பரிசோதனை செய்தார்.
அதிக ரத்தப்போக்கும், வயிற்றுவலியும்
நந்தினியை துன்புறுத்துவதை அறிந்தார்.

“நீங்க மட்டுமா வந்திருக்கீங்க, நந்தினி?”
”இல்ல, ஹஸ்பண்டும் கூட வந்திருக்காரு.
வெளியில போன் பேசிகிட்டு இருக்காரு, என்றாள்.

”நர்ஸ்” என்று அழைத்தார் டாக்டர்.

உள்ளே வந்த நர்ஸிடம்,”இவங்களை
உள்ளே அழைச்சுகிட்டு போய் பெயின் கில்லர்
இஞ்சக்‌ஷன் கொடுத்து 10 நிமிசம் படுக்க
வைங்க. அப்படியே வெளியே இவங்க
ஹஸ்பண்ட் மிஸ்டர்.திவாகர் போன்
பேசிகிட்டு இருப்பாரு! அவரை கொஞ்சம்
உள்ளே வரச்சொல்லிட்டு போங்க,” என்றார்.

அந்த நர்ஸ் நந்தினியை உள்ளே படுக்க வைத்துவிட்டு
திவாகரிடம் வந்து,”சார்!உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமாம்!
டாக்டரம்மா உள்ளே வரச்சொன்னாங்க!” என்று கூறிவிட்டு
சென்றார்.

நந்தினிக்கும் திவாகருக்கும் திருமணமாகி 8
வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகளுக்கு
பிறகு குடும்ப கட்டுப்பாடும் செய்தாயிற்று
நந்தினிக்கு. இந்த நிலையில் தன்னிடம்
”டாக்டர் என்ன சொல்லப்போகிறார்”!!??!!
என்று யோசித்துக்கொண்டே டாக்டரின்
அறைக்கதவைத்தட்டி
“மே ஐ கமின் மேடம்!” என்றான் திவாகர்.


திவாகரிடம் டாக்டர் என்ன பேசினார்?????

(மதியம் 2 மணிக்கு தொடரும் இந்தக் கதை)

16 comments:

சுரேகா.. said...

கலக்குங்க!

2 மணிக்கு இங்க கரெண்ட் இருக்காதே!!

புதுகைத் தென்றல் said...

வாங்கத் தலைவரே வாங்க!

நீங்கதான் பர்ஸ்டு. மீ த பர்ஸ்டு போடாம விட்டுடீங்களே!

புதுகைத் தென்றல் said...

கலக்குங்க!


கலக்கிடுவோம்.
2 மணிக்கு இங்க கரெண்ட் இருக்காதே!!//

அப்படியா? சரி 1 மணிக்கு போட்டுடறேன். தலைவருக்காக இது கூட செய்யாட்டி எப்படி?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மதியம் வரை தொடரும்.... வித்தியாசமாத்தான் இருக்கு.. :)
ஆமா என்ன ஆகி இருக்கும்..

ராமலக்ஷ்மி said...

'அவள்' அதே நாளில் தொடர்வாளா?
புதுகை என்றால் புதுமை.
ஒரு மணிக்கு வருகிறேன்.

சொல்ல மறப்பேனா? ஆரம்பம் அருமை.

புதுகைத் தென்றல் said...

மதியம் வரை தொடரும்.... வித்தியாசமாத்தான் இருக்கு.. //

நன்றி முத்துலட்சுமி

:)

புதுகைத் தென்றல் said...

ஆமா என்ன ஆகி இருக்கும்..//

யோசிச்சுகிட்டு இருங்க...

புதுகைத் தென்றல் said...

'அவள்' அதே நாளில் தொடர்வாளா?//

ஆமாம் ராமலக்ஷ்மி.

புதுகைத் தென்றல் said...

ஒரு மணிக்கு வருகிறேன்.//

வாங்க வாங்க

சொல்ல மறப்பேனா? ஆரம்பம் அருமை.


ஆஹா. மிக்க மகிழ்ச்சி

பரிசல்காரன் said...

ஆஹா.. சரியான இடத்துல தொடரும் போட்டிருக்கீங்களே...

கதையையும் தலைப்பையும் மிக ரசித்தேன்!

புதுகைத் தென்றல் said...

கதையையும் தலைப்பையும் மிக ரசித்தேன்!//

பாராட்டுக்கு மிக்க நன்றி பரிசல் தம்பி.

cheena (சீனா) said...

கதை நன்றாகச் சென்று தொடரும் போட வேண்டிய இடத்தில் சரியாகப் போடப்பட்டிருக்கிறது.

நல்வாழ்த்துகள்

புதுகைத் தென்றல் said...

கதை நன்றாகச் சென்று தொடரும் போட வேண்டிய இடத்தில் சரியாகப் போடப்பட்டிருக்கிறது//

aaha thangalidam paaratu petrathu en baagyam.

vaurugaiku mikka nandri

புதுகை.அப்துல்லா said...

நான் சொல்ல நினைத்தை பரிசல் சொல்லிவிட்டார் :)

புதுகைத் தென்றல் said...

புதுகை.அப்துல்லா said...
நான் சொல்ல நினைத்தை பரிசல் சொல்லிவிட்டார்//

ஆஹா, அந்த பின்னூட்டத்திற்கான பின்னூட்டத்தை இங்கே ரிப்பீட்டிக்கறேன்.:)

மங்களூர் சிவா said...

என்னமோ பெருசா சஸ்பென்ஸ் வைக்க போறீங்க புரியாத மெடிகல் டெர்ம் எதாவது சொல்லி
:))))))))))))))