Tuesday, October 28, 2008

அண்ணண்

அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ!

நான்தான் வீட்டில் முதல். எனக்கு அடுத்து ஒரே ஒரு தம்பி.
மனதின் ஒரு மூலையில் மட்டும் எப்போதும் ஒரு ஏக்கம் இருக்கும்.

தம்பி எனும் உறவு மகனைப்போல. தம்பி கார்த்திதான் எனது
மூத்த மகன் (இதில் அயித்தானுக்கு மாற்று கருத்தே இல்லை)
தம்பி பிறந்த உடன் அம்மாவிற்கு வேலை கிடைத்ததால்
10 வயதிலேயே அவனுக்கு தாயாகிப்போனேன்.

நான் ஊட்டினால் தான் சரியாக சாப்பிடுவான்.
அம்மாவிடம் அடம்பிடிப்பவன் நான் எண்ணெய் தேய்த்து
குளிப்பாட்டினால் ஒன்றும் பேசவே மாட்டான்.

சைக்கிளை ஓட்டிச் சென்று காலில் பயங்கர ரத்தக் காயத்தோடு
வந்தவனுக்கு மருந்து போட்டால் ஊரையே கூட்டுவான்.
அவனைத்திட்டி காயத்தில் பஞ்சினால் டிஞ்சரை 10 நாள்
நாந்தான் வைத்தேன். காயம் பட்டாக ஆறிப்போகிவிட்டது.

அண்ணனின் உறவு அப்பாவைப் போன்றது. அந்தக்
கதகதப்பு தரும் சுகமே சுகம். எனக்கு உறவில் கூட
யாரும் அண்ணன் முறைக் கிடையாது.

சின்ன மாமாவுக்கும் எனக்கும் 5 வயதுதான் வித்தியாசம்.
அம்மா என்னை அடிக்கும்’போதெல்லாம் வந்து
சண்டை போடுவது, வீதியில் பசங்க கிண்டல் செய்தால்
தன் கூட்டத்தோடு போய் ”விசாரிப்பது” என்று மாமா
எனக்கு ஒரு அண்ணணாக தான் தெரிந்தார்.

ஆனால் மனதில் எப்போதும் ஒரு தேடல். எனக்கென
ஒரு அண்ணன் இல்லையே என்பதுதான் அது.

”எனக்கு மட்டும் ஏன் அம்மா அண்ணன் இல்லை?”
இந்தக் கேள்வியை பலமுறை அம்மாவிடம்
கேட்டு திட்டு வாங்கிக்கொள்வேன். :(

கூடப் படிக்கும் பிள்ளைகளுக்கு அண்ணன் இருந்தால்
பெருமூச்சு விட்டுக்கொள்வேன். “நீங்க கொடுத்துவைத்தவங்க!
அதனால் தான் அண்ணன் கிடைச்சிருக்காங்க!” என்று
நான் சொன்னால் உடன் அவர்கள்,”அடப்போப்பா!
எங்களுக்கெல்லாம் ஏண்டா அண்ணன் இருக்காங்கன்னு
இருக்கு,” என்பார்கள். அடக்கொடுமையே என்று
நினைத்துக்கொள்வேன்.


எதுவும் இருக்கும்போது அதன் அருமை நமக்குத்தெரியாது.
இல்லாதவளுக்குத்தான் ஏக்கம்.

மும்பையில் வேலை பார்த்தபோது கல்யாண் அண்ணன்
கிடைத்தபோது மிக்க சந்தோஷமாக இருந்தது.
அவனின் தொடர்பும் இழந்து போனது இன்றுவரை
என் மனதில் ஒரு சோகம் தான்.

வலையுலகில் கூட எனக்கு பாசமிகு தம்பிகள்தான் அதிகம்.
மங்களூர் சிவா, அப்துல்லா, நிஜமாநல்லவன்
இப்படி பெரிய லிஸ்ட். (ஆயில்யன் இப்ப தம்பியண்ணா ஆகிட்டாரு)
ஒரே ஒரு அண்ணன் கிடைச்சாரு.
என்னவோ எங்க ரெண்டு பேருக்கும் ஒத்தே வர்றது
இல்லை. அதனால பேசறதையே நிறுத்திவிட்டேன்.

சிறுவயதில் எனக்குள் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும்.
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். ஹாஸ்டலில்
தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறான். கண்டிப்பாய்
வருவான் என்பதுதான் அது.

என் கனவு வீண்போகவில்லை. ஆமாம்
என் அண்ணன் வந்துவிட்டான். (கல்யாண் அண்ணன்
இல்லை) 6 வருடங்களுக்கு முன் என்
அண்ணன் கிடைத்துவிட்டது எனக்கு மிக்க
மகிழ்ச்சி.







யார் அந்த அண்ணன்?

அதுதான் அடுத்த பதிவு

58 comments:

நாமக்கல் சிபி said...

அக்கா!

மனசைத் தொட்டு விட்டது இந்தப் பதிவு!

நாமக்கல் சிபி said...

//யார் அந்த அண்ணன்?

அதுதான் அடுத்த பதிவு//

நம்ம அண்ணனைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்!

நாமக்கல் சிபி said...

அண்ணன் வந்தான் தாய் வீடு!

சூப்பரான பாட்டுங்க!

நாமக்கல் சிபி said...

நான் வீட்டுல கடைக்குட்டி என்பதால் எனக்கும் தங்கச்சி செண்டிமெண்ட் ரொம்பவே!

:) எனிவே நல்ல அண்ணன் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

அதர் ஆப்சன் இருந்திருந்தா 'பாசமலர்' சிவாஜி, கவுசல்யாவோட அண்ணன் வடிவேலு, 'என் தங்கை கல்யாணி', விஜய.டீ.ஆரெல்லாம் வந்திருப்பாக்களே இந்த போஸ்டைப் பார்த்துட்டு!

நாமக்கல் சிபி said...

"பூமழை தூவு புது வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது"

- எம்.ஜி.ஆர்

நாமக்கல் சிபி said...

"மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள், அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்"

- சிவாஜி

நாமக்கல் சிபி said...

"தங்கச்சி தங்கச்சி தங்கமான தங்கச்சி..."

- வடிவேலு

நாமக்கல் சிபி said...

"கண்ணே நான் உன் அண்ணன் அல்ல! உன்னை ஈன்ற அன்னை நானே!"

- ரஜினிகாந்த்

pudugaithendral said...

வாங்க நாமக்கல் சிபி.

அண்ணனை பார்க்க ஆவலா இருக்கீங்களா? 6 மணிக்கு பதிவு வந்திடும்.

நாமக்கல் சிபி said...

"தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடு பட்டேன் நானும்"

- விஜய டீ.ஆர்

pudugaithendral said...

நீங்க சொல்லியிருக்கும் படப் பாடல்கள் எல்லாம் அண்ணன் உடன் வாழும் தங்கைகளின் மீது அண்ணன் பாடும் பாடல்கள்.

நாமக்கல் சிபி said...

"தென் பாண்டித் தமிழே! என் சிங்காரக் குயிலே! இசை பாடும் ஒரு காவியம்! இது ரவிவர்மாவின் ஓவியம்! பாசம் என்னும் ஆலயம்! உனைப் பாட வேண்டும் ஆயிரம்!"

- சிவகுமார்

pudugaithendral said...

அண்ணன் கிடைத்த சந்தோசத்திற்கு “தாய்வீடு” பாடல்தான்
சிச்சுவேஷனுக்கு தகுந்த சாங்க.

:))))))))))))))

நாமக்கல் சிபி said...

//நீங்க சொல்லியிருக்கும் படப் பாடல்கள் எல்லாம் அண்ணன் உடன் வாழும் தங்கைகளின் மீது அண்ணன் பாடும் பாடல்கள்.
//

அண்ணான்னு நீங்க சொல்லாங்க்ட்டி நம்ம மனசு பேஜாராச்சும்மா! அதான் அம்புட்டு பாட்டும் எடுத்து விட்டுக்கினுகிறேன்!

- மகராசன் கமல்!

pudugaithendral said...

ஆஹா அண்ணன் பாட்டா தொகுத்துட்டீங்களே சிபி.

வாழ்த்துக்கள். (நீங்களும் என்னிய மாதிரி ரேடியோ அதிகம் கேப்பிங்களோ)

நாமக்கல் சிபி said...

//அண்ணன் கிடைத்த சந்தோசத்திற்கு “தாய்வீடு” பாடல்தான்
சிச்சுவேஷனுக்கு தகுந்த சாங்க.

:))))))))))))))

//

அது உண்மைதான்! நானும் என்னோட ஒரு போஸ்ட்லே இந்த பாட்டை லிரிக்ஸோட போட்டிருக்கேன்!

நாமக்கல் சிபி said...

//வாழ்த்துக்கள். (நீங்களும் என்னிய மாதிரி ரேடியோ அதிகம் கேப்பிங்களோ)
//

அண்ணன் தங்க்சை செண்டிமெண்ட் பாட்டுன்னா எங்கே கேட்டாலும் மனசுல நின்னுக்கும்!
:)

நிஜமா நல்லவன் said...

அக்கா யாருக்கா அந்த அண்ணன்? நானும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்..!

நிஜமா நல்லவன் said...

அட இது உங்க ப்ளாக் தானா?

நிஜமா நல்லவன் said...

மாடரேஷன் எல்லாம் காணும்???

நிஜமா நல்லவன் said...

சிபி அண்ணா எப்படி இருக்கீங்க??

நிஜமா நல்லவன் said...

/ நாமக்கல் சிபி said...

எனக்கும் தங்கச்சி செண்டிமெண்ட் ரொம்பவே!

:) எனிவே நல்ல அண்ணன் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்!/


ரிப்பீட்டேய்...!

pudugaithendral said...

வாங்கத் தம்பி வாங்க.

ஏன் அம்புட்டு ஆசசரியம்?!!!

கமெண்ட் மாடரேஷன் செய்ய நேரமில்லத்தனால தற்காலிகமா மாடரேஷன் எடுத்திருக்கேன்.

ஆயில்யன் said...

//(ஆயில்யன் இப்ப தம்பியண்ணா ஆகிட்டாரு)//


புரொமோஷன்!

புரொமோஷன்!

:))

ஆயில்யன் said...

தங்கச்சி!

மனசைத் தொட்டு அப்படியே உக்காந்துக்கிச்சு!இந்தப் பதிவு!

புகழன் said...

//புதுகைத் தென்றல் said...

அண்ணனை பார்க்க ஆவலா இருக்கீங்களா? 6 மணிக்கு பதிவு வந்திடும்.

//

6 மணிக்காக வெயிட்டிங்

ஆயில்யன் said...

//இதில் அயித்தானுக்கு மாற்று கருத்தே இல்லை//

அதிருக்கட்டும்!

அண்ணன் தம்பிக்ங்க பேரை சொல்லி ஸ்வீட்டெல்லாம் பங்கு பிரிச்சு வைச்சுக்கிட்டு, மாறி மாறி தங்கச்சியும் அயித்தான் சாப்பிட்டதுல எங்களுக்கு ஏகப்பட்ட மாற்று கருத்துக்கள் இருக்கு :((

ஆயில்யன் said...

//புதுகைத் தென்றல் said...
வாங்கத் தம்பி வாங்க.

ஏன் அம்புட்டு ஆசசரியம்?!!!

கமெண்ட் மாடரேஷன் செய்ய நேரமில்லத்தனால தற்காலிகமா மாடரேஷன் எடுத்திருக்கேன்.
//


தங்கச்சி இன்னுமா நீ ஸ்வீட் சாப்பிடறத நிப்பாட்டல அவ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

நானே முப்பது :)

pudugaithendral said...

வாங்க தம்பியண்ணா வாங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னதிது?

:((((((((((((((((((

pudugaithendral said...

வாங்க புகழன்,

நீங்களும் வெயிடீஸா

சரி காத்திருங்கள். பதிவு கண்டிப்பாய் வரும்.

pudugaithendral said...

ஹலோ தம்பியண்ணா,

நானே கணிணிக்கு உடம்பு சரியாம கிடக்கு. (ஹார்ட் டிஸ்க் காலி) அதனால் அயித்தான் மடிக்கணிணி கிடைக்கும் போது பதிவு போடுவதனால் கமெண்ட் மாடரேஷன் எடுத்திருக்கேன்.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராமலக்ஷ்மி said...

அண்ணன் தம்பி உறவு பற்றி எல்லா அக்கா தங்கைகளின் மனதிலும் இருப்பதை அழகாச் சொன்னதுக்கு நன்றி தென்றல்.

உங்களின் "தம்பியண்ணா"வும் ஆயில்யனின் "தங்கச்சியக்கா"வும்தான் எனக்குப் புரியவேயில்லை:(!

ரெண்டு பேரும் இன்னிக்கு விளக்கம் கொடுத்தால்தான் ஆச்சு, ஆமா:)!

நாமக்கல் சிபி said...

//அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ!//

அக்கா! என்னக்கா இப்படிச் சொல்லிட்டீங்க! கோவில், தீபம் எல்லாம் சொன்ன நீயி பூசாரி யாருன்னு சொல்லாம விட்டுட்டியேக்கா! நான் என்ன பண்ணுவேன்!

- சண்முகசுந்தரம்! (கரகாட்டக்காரனில் கனகாவின் அப்பா)

நாமக்கல் சிபி said...

//உங்களின் "தம்பியண்ணா"வும் ஆயில்யனின் "தங்கச்சியக்கா"வும்தான் எனக்குப் புரியவேயில்லை:(!

ரெண்டு பேரும் இன்னிக்கு விளக்கம் கொடுத்தால்தான் ஆச்சு, ஆமா:)!
//

இதை நான் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

4.45 ஆச்சி! இன்னும் 1.15 மணி நேரம் பாக்கி!

எங்க அண்ணனுக்காக தாரை, தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட் அவுட் சகிதம் காத்துக் கிடக்கிறோம்!

- பாசமிகு தம்பிகள் சங்கம்!

நாமக்கல் சிபி said...

பேண்டு வாத்தியத்தோடு நாங்களும் காத்திருக்கிறோம்!

- பேண்டு மாஸ்டர் சரத்குமார்

நாமக்கல் சிபி said...

ஏன் நாங்களெல்லாம் பாட்டுப் பாடி ஆரத்தி எடுக்க மாட்டமா எங்க அண்ணனை வரவேற்க!

மதுரை வீரந்தானே! எங்கண்ணன்...!

- பரவை முனியம்மா!

நாமக்கல் சிபி said...

//சிபி அண்ணா எப்படி இருக்கீங்க??//

நல்லவன் தம்பி! நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்!

நாமக்கல் சிபி said...

நாங்க கொலவை போட்டு எங்க அண்ணனை வரவேற்போம்!

இந்த வருஷத்துல 4 வது முறையா எங்க அண்ணனுக்காக இந்த இன்ஸ்ட்ரமெண்ட யூசு பண்ணுறேன்!

- கொல்லங்குடி கருப்பாயி!

வெண்பூ said...

உங்கள் ஏக்கங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் தென்றல். கடைசியில ஒரு சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்க.. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

வெண்பூ said...

ஆஹா.. சிபி ஃபுல் ஸ்விங்க்ல இறங்கிட்டாரு.. அடுத்த பதிவு போடுற வரைக்கும் பின்னூட்டம் போடுவாரு போல.. :)))

நாமக்கல் சிபி said...

வெண்பூ கூட எனக்கு ஒண்ணுவிட்ட அண்ணன் முறைதான்!

- கொல்லங்குடி கருப்பயி!

நாமக்கல் சிபி said...

//ஆஹா.. சிபி ஃபுல் ஸ்விங்க்ல இறங்கிட்டாரு//

அப்போ ஆஃப் ஸ்விங், குவார்ட்டர் ஸ்விங்கெல்லாம் இருக்கான்னு குசும்பன் கேக்குறாரு!

நாமக்கல் சிபி said...

//கடைசியில ஒரு சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்க.. //

இதிலென்னங்க சஸ்பென்ஸ்! அதான் பேரையே பதிவுல சொல்லி இருக்காங்களே!

நாமக்கல் சிபி said...

//அடுத்த பதிவு போடுற வரைக்கும் பின்னூட்டம் போடுவாரு போல//

பின்னே! இன்னும் ஒன் அவர் இருக்கே!

இன்னிக்கு கேம்ப் இங்கதான்!

நாமக்கல் சிபி said...

48

நாமக்கல் சிபி said...

49ம் நான் தான் அடிப்பேன்

நாமக்கல் சிபி said...

50 நான்தான் அடிப்பேன்!

(50 என்பது மில்லி அல்ல)

pudugaithendral said...

ராமலக்ஷ்மி

உங்க கேள்விக்கு பதில் இதுதான்.

ஆயில்யனுக்கு அனைவரும் தங்கச்சியாம். அதனால் அவர் என்னை தங்கச்சி+அக்கா(நிஜத்தில் நான் தான் அவருக்கு அக்கா என்பதில்(அதாவது வயது வித்தியாசத்தில்) என்பதை தங்கச்சியக்கா என்பார்.
நானும் அவர் பாணியில் தம்பியண்ணா என்பேன்.

அம்புட்டுதான்.

pudugaithendral said...

இங்கேயே குடியிருந்து கும்மி அடித்துக்கொண்டிருக்கும் தம்பி சிபி அடுத்த பதிவு போட்டாசு.

(அரைசதம் பின்னூட்டம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்)

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

தங்களின் வருகைக்கு மிக்க் நன்றி.

ஆயில்யன் said...

// ராமலக்ஷ்மி said...
அண்ணன் தம்பி உறவு பற்றி எல்லா அக்கா தங்கைகளின் மனதிலும் இருப்பதை அழகாச் சொன்னதுக்கு நன்றி தென்றல்.

உங்களின் "தம்பியண்ணா"வும் ஆயில்யனின் "தங்கச்சியக்கா"வும்தான் எனக்குப் புரியவேயில்லை:(!

ரெண்டு பேரும் இன்னிக்கு விளக்கம் கொடுத்தால்தான் ஆச்சு, ஆமா:)!//

அக்கான்னு சொன்னா அவுங்க ஒத்துக்க மாட்டிக்கிறாங்க (இத்தினிக்கும் குடும்பம் குட்டிக்களோட மெட்ரோ பாலிடன் சிட்டியெல்லாம் ஒரு ரவுண்டு வந்துக்கிட்டிருக்காங்க!)

அண்ணன் சொன்னா நான் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டேன் ஏன்னா நான் எம்புட்டு சின்ன பையன் என்னிய பார்த்தாலே டக்குன்னு தெரிஞ்சுக்கிடலாம்!

அதான் வன்முறையில இறங்கவேணாம்ன்னு ஒரு தற்காலிக ஏற்பாடாக தம்பியண்ணா & தங்கச்சியக்கா

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் (சோடா கொடு தங்கச்சியக்கா - கேட்ட ராமலெஷ்மியக்காவுக்கு! & சிபியண்ணாவுக்கும் )

ஆயில்யன் said...

//நாமக்கல் சிபி said...
50 நான்தான் அடிப்பேன்!

(50 என்பது மில்லி அல்ல)
//

நீங்களே அடித்துக்கொள்ளுங்கள் அண்ணா!
(மில்லியாக இருந்தாலும் கூட கில்லி மாதிரி ! )

:)))

pudugaithendral said...

நானே முப்பது :)

(வயசை சொன்னீங்களோன்னு நினைச்சேன்)

pudugaithendral said...

// ராமலக்ஷ்மி said...
அண்ணன் தம்பி உறவு பற்றி எல்லா அக்கா தங்கைகளின் மனதிலும் இருப்பதை அழகாச் சொன்னதுக்கு நன்றி தென்றல்.

உங்களின் "தம்பியண்ணா"வும் ஆயில்யனின் "தங்கச்சியக்கா"வும்தான் எனக்குப் புரியவேயில்லை:(!

ஆயில்யன் என்னதிது??!!!

அக்கான்னு சொன்னா அவுங்க ஒத்துக்க மாட்டிக்கிறாங்க//
எப்பச்சொன்னேன். ஆன்லைனில் பாக்கும்போதெல்லாம் அக்கான்னு தானே சாட்டுவீங்க. (கானா பிரபாவோட கூட்டு சேரும்போதே நினைச்சேன்):)

(இத்தினிக்கும் குடும்பம் குட்டிக்களோட மெட்ரோ பாலிடன் சிட்டியெல்லாம் ஒரு ரவுண்டு வந்துக்கிட்டிருக்காங்க!)

இதெல்லாம் ஓவரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குடுகுடுப்பை said...

அண்ணன் வருகிறார்.வரவேற்கிறோம்