Friday, November 07, 2008

இ - சேவை

போன் பில், எலக்ட்ரிக் பில், எல்லாம் க்யூவில் நின்று
கட்டுவது மகா கொடுமை. நிறைய்ய்....ய
பொறுமையும் வேணும். வங்கிகளில் கட்டலாம்,
நமது வங்கிக்கணக்கிலிருந்து கட்டலாம் என்றாலும்
அதற்கு 10 ரூபாயாவது வசூலிப்பார்கள்.


வெயிலில் நின்று வதங்காமல் நமது முறை வரும்
வரை நாற்காலியில் அமர்ந்திருக்க, தலைக்கு மேல்
மின் விசறி..... ஹலோ . நான் கனவெல்லாம்
காணவில்லை. இப்படித்தான் நான் ஒவ்வொரு
மாதமும் சொகமாக பில் கட்டுகிறேன்.

எப்பிடி என்கிறீர்களா? அதுதான் E-SEVA.


அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய எந்த ஒரு
பணத்தையும் இங்கேயே செலுத்தலாம்.
இந்த சேவையால் அரசாங்கத்திற்கும் சரி
பொதுமக்களுக்கும் சரி நல்லதுதான்.

பிறப்பு இறப்பு பதிவு, சான்றிதழ்கள்
எல்லாம் வரிசையில் நிற்காமல், இடைத்தரகர்களுக்கு
லஞ்சம் கொடுக்காமல் அழகாக கிடைத்துவிடும்.

வரி செலுத்துவதும் மிக சுலபமாக இருக்கிறது.
ஹைதராபாத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரபிரதேசம்
முழுவதும் இந்தச் சேவை இருக்கிறது.
தலைநகர் ஹைதராபாதில் மட்டும் 40ற்கும்
மேற்பட்ட இ-சேவை மையங்கள் இருக்கின்றன.

கணிணியின் உபயோகத்தை மக்களும் அறிய
வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கவர்ண்மெண்ட் டெண்டர்கள், ஆர்டர்கள் எல்லாம்
தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இங்கே எந்த சேவைக்கு சேவை கட்டணம் வசூலிக்கபடுவதில்லை.

காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை
இந்த மையங்கள் இயங்குவதால் அலுவலக
வேலை முடிந்தபிறகு நிம்மதியாக கட்டலாம்.

ஆன்லைனில் பதிந்துவிட்டால் வீட்டில் அமர்ந்தே
ஆன்லைனில் பணம் செலுத்திவிடலாம்.

இ-ஆன்லைன் சேவையின் நோக்கம் இதுதானாம்.

" To provide Citizen Services
To provide Information Citizen Services
To educate the citizen on Andhra Pradesh Government "

9 comments:

மங்களூர் சிவா said...

ம் குடுத்து வெச்ச ஆந்திரா வாலாக்கள்!

என்ன செய்ய பெருமூச்சுதான் விடமுடியும்
:))

மங்களூர் சிவா said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க
மீ தி பர்ஷ்ட்டு

ராமலக்ஷ்மி said...

இதே சேவை 'Bangalore One' என்ற பெயரில் பல கிளைகளாக இயங்கி வருகிறது இங்கு. பெங்களூர் தாண்டி கர்நாடகா முழுதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

சில வங்கிகளில் பில் கட்டுவது இப்போது இலவசமே. வங்கிகள் மூலம் வசதியா என் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்தபடிதான் பில்களைக் கட்டுகிறேன்:))!

நல்ல பதிவுக்கு நன்றி.

ஜுர்கேன் க்ருகேர் said...

இந்தியா முழுதும் விரிவு படுத்தினால் நல்ல இருக்கும்.
இன்டர்நெட் இல்லாவிட்டால் கூட கிராமங்களில் போன் வசதி உண்டு.
அதனால் "போன் பேங்கிங்" மாதிரி "போன் பில்லிங்" மாதிரியான முறை வரும் காலத்தில் நல்ல வரவேற்பை பெரும்.

VIKNESHWARAN said...

வைரஸ் ஹெக்கர்ஸ் என சொல்லப்படும் பிரச்சனைகளால் நமது கணக்குகள் நாசமாக போட்டாதா?

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

தமிழ் நாட்டில் இந்த சேவை இருக்கான்னு தெரியாம நண்பர் ஒருவரைக் கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில்,

“ஆமாம் அப்படியே இருந்திட்டாலும் இயக்க மின்சாரத்துக்கு எங்க போக?!!”

புதுகைத் தென்றல் said...

சில வங்கிகளில் பில் கட்டுவது இப்போது இலவசமே. //

இந்த சில தான் பிரச்சனை ராமலக்ஷ்மி.

இந்த மாதிரி ஒரு சேவை இருந்தா பில் கட்டுவது மட்டுமல்ல அரசு சம்பந்தமான அத்தனை வேலையையும் அழகா செஞ்சுக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

இந்தியா முழுதும் விரிவு படுத்தினால் நல்ல இருக்கும்.//

விரிவு படுத்தினால்தானே பிரச்சனை.
நம்ம ஆளுங்க இதுக்கெல்லாம் போட்டாபோட்டி போட மாட்டாங்க.

புதுகைத் தென்றல் said...

வைரஸ் ஹெக்கர்ஸ் என சொல்லப்படும் பிரச்சனைகளால் நமது கணக்குகள் நாசமாக போட்டாதா?//

:((((