Friday, November 07, 2008
M.Sc.HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) வகுப்புக்கள் ஆரம்பம்
தாரை, தப்பட்டை மற்றும் டிரம்ஸ் மணி அவர்களின்
"அதிரடி" தாள சப்தங்களுடன், சகல மானவர்களுக்கும்
அரிய தருவது என்ன வென்றால் " M.Sc.Husbandology (முதுகலை இல்லறவியல்" வகுப்புகள் வரும் திங்கள் முதல் (10.11.2008)
துவங்க இருக்கின்றன.
வகுப்புகள் தங்கமணி/ரங்கமணி இருவருக்கும் தான்.
மிக முக்யமாக "கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல்"
இருக்கும் புது மனைவியர்,
பொறுத்தது போதும் என் பொங்கி எழ காத்திருக்கும்
கழக கண்மனி மன்னிக்கவும் தங்கமணிகள், மற்றும்
கன்னி இளம் பெண்களுக்கும் (பின்னாடி உதவுமுங்கோ)
ரங்கமணிகளை புரிந்து கொள்வதற்காக அல்ல,
தற்காப்பு கலை போல் ரங்கமணிகளை எதிர்கொள்வது
எப்படி என்பதை தங்கமணிகள் புரிந்து கொள்ளவதே
இப்பாட திட்டத்தின் குறிக்கோள்.
பின்னூட்டம் இட்டாலே வகுப்புகளுக்கு
பதிவு செய்து விடுவோம்.
விசிட்டிங் பொரஃப்ஸர்களாக அனுவம்
மிக்க தங்கமணிகள் வர விரும்பினால்
இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்
மிக முக்யமான விஷயம்:
இந்த வகுப்பில் வீட்டு பாடம் கிடையாது.
தரப்பட்டுள்ள தியரிகளை புரிந்து கொண்டு,
அவற்றை செயற்படுத்தி பார்ப்பதே வீட்டுப்பாடம்
ஒவ்வொரு திங்களும் பாடங்கள் வெளியாகும்.
(சென்ற வருடம் பயி்ன்ற மாணவர்களும் இந்த
புதிய வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்
என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்)
ரெடி! ஸடார்ட்! தி பேண்ட்,
டிஸ்கி: போன்வருசம் உதார் விட்ட பல கிட்டுமணிகள்
இப்போ ரங்கமணிகள் ஆகியிருக்காங்க. அவர்களின்
தற்போதைய நிலமையை நினைவில் வெச்சு
அடங்கி வாசிக்கறாங்களா இல்ல அடி வாங்கிக்
கட்டிக்கறாஙளா? என்பதை பரிசிலீத்துப் பார்ப்போம்
வாருங்கள் :))
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
:-))..
நானும் வகுப்பிற்கு வருகின்றேன்.
எதிர்காலத்தில் உதவும்.. :)
:-))..//
ஸ்மைலிக்கெல்லாம் அட்மிசன் கிடையாது. (நான் சும்மா வந்தேன்னு நாளைக்கு சொல்லிப்பிட்டா :) )
எனக்கு இன்னும் கல்யாணமாகலைங்கோ... அப்ப எங்களுக்கு இந்த வகுப்பு தடையா?
அப்ப எங்களுக்கு இந்த வகுப்பு தடையா?//
தடை ஏதும் இல்லை விக்னேஸ்வரன்.
இந்த வகுப்புக்கு கல்யாணம் ஆனவங்க/ ஆகாதவங்கன்னு பாரபட்சமே கிடையாது.
எல்லோருக்கும் பொது.
அப்படியென்றால் விக்கியும் வகுப்புக்கு வருகிறான்...
பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)
உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி இல்லையா:)?
நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்:))))!
விக்கியும் வகுப்புக்கு வருகிறான்...//
இன்னொரு அட்மிஷன் போட்டாசு.
பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)//
ஆஹா வாங்க முத்துலெட்சுமி வாங்க.
அட்மிஷன் கிராண்டட். (விசிட்டிங் ஃப்ரொபஸரா கூட வர்றலாம்)
என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் கிளப் தான் சரியான இடம். நாங்க எல்லாம் அங்க போயிக்கிறோம்.
உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி இல்லையா:)?
ஆமாம் ராமலக்ஷ்மி,
விக்கி நம் வலையுலக பாஷையில் கிட்டுமணி (விக்கி கோபிச்சுக்காதீங்க. கிட்டுமணி கல்யாணமாகாதவர்)
நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்//
ஆகா, மனமாற வரவேற்கிறேன்.
என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் கிளப் தான் சரியான இடம்//
பேரண்ட்ஸ் கிளப் பெற்றோர்களுக்கு ஜோசப். :)))
அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டு கவுண்டர் அட்டாக் பண்ணத்தான்.
அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டு கவுண்டர் அட்டாக் பண்ணத்தான்.//
சரி நடத்துங்க.
நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்:))))!
//
ராமலெஷ்மி அக்கா... உங்க ரேஞ்சுக்கு நீங்க பிரின்சிபாலாவே இருக்கலாம் :)
"அகில உலக ரங்கமணிகள் நல சங்கத்தின் தலைவர்" தாமிராண்ணே சீக்கிரம் வாங்க... நல்லாசிரியர் அவார்டு வாங்குன ஃபேமிலிலேந்து வந்த அக்கா கிளாஸ் எடுக்க போறாங்க :)
நல்லாசிரியர் அவார்டு வாங்குன ஃபேமிலிலேந்து வந்த அக்கா கிளாஸ் எடுக்க போறாங்க ///
தாத்தா நல்லாசிரியர் விருது வாங்கினது பொதுவான பாடத்துக்கு.
ஹஸ்பண்டாலஜிக்கு யாரும் போட்டி போட முடியாது.
சென்ற வருடம் ஃபைபாலஜிக்கு போட்டிப் பதிவாகத்தான் நான் ஹஸ்பண்டாலஜி எழுத ஆரம்பித்தது.:)
இந்த வருடம் ஹஸ்பண்டாலஜிக்கு போட்டிப்பதிவாக ஃபைபாலஜி வருமா?
(ரங்கமணிகல் எல்லோரும் கேட்க வேண்டியது சென்ற வருட ஃபைபாலஜி பேராசிரியர் பினாத்தல் சுரேஷ் அவர்களை )
ஹஸ்பண்டாலஜியில் சென்ற வருட சிலபஸ்ஸே இந்த வருடம் இருக்காது.
சிலபஸ்ஸில் சில பாடங்கள் புதிதாக வரும்.
(ராமலக்ஷ்மி இங்க நீங்க விசிட்டிங் ஃப்ரொபஸரா வரணும் :) )
ப்ரெசெண்ட் மேம்...
வாங்க அமுதா,
அட்மிஷன் போட்டாச்சு.
Post a Comment