Friday, November 14, 2008

உடல் பருமன் கு்றைக்கும் கி்ளினிக்கில் ஒரு உரையாடல்

டாக்டர் சொன்னாங்களேன்னு அந்த வெயிட் ரிடக்‌ஷன்
கிளீன்க்குக்கு போனேன். அங்க நடந்த உரையாடலை
அப்படியே உங்களுக்கு கொடுக்கறேன்.

இதோ உரையாடல்.

யெஸ் மேடம்! மே ஐ ஹெல்ப் யூ - (ரிஷப்ஷனிஷ்ட்)

பீட்டர் எதுக்கு நான் தமிழிலேயே கொடுக்கறேன்.

“என் டாக்டர் சொல்லி இங்கே வந்திருக்கிறேன்”
எனக்கு உங்கள் முறையைப் பத்தி தெரியணும்” இது நான்.

5 நிமிஷம் மேடம்! எங்க கன்சல்டண்ட் வருவாங்க.
அதுக்குள்ள உங்க ஹைட், வெய்ட் செக் செஞ்சிடலாம்”.
சரி போனேன். உயரத்தை குறித்துக்கொண்டு,
டிஜிட்டல் வெயிட் மெஷினில் ஏறி நிக்கச் சொன்னாங்க.
என்னவோ நம்பர்கள் எல்லாம் போட்டாங்க.
டப்புன்னு பில் ஒன்ணு வந்துச்சு.

வாங்க மேடம்னு என்னிய ஒரு அறையில் உக்கார
வெச்சாங்க.அங்க ஒரு கன்சல்டெண்ட் வந்து
என்கிட்ட பேசினாங்க.

“உங்க ஹைட்டுக்கு நீங்க ஒரு 10 கிலோ எடை
அதிகமா இருக்கு. அதைக் குறைக்கணும்”.
அது எனக்குத் தெரியாதா?அதுக்குத்தானே
வந்திருக்கேன்னு நினைச்சுகிட்டேன்.:(

ஒரு பேக்கேஜ் இருக்கு மேடம். 10
வெயிட் ரிடக்‌ஷன் செஷனுக்கு 5 டம்மி
டக்(வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை
குறைக்க) இலவசம்.

என்ன சார்ஜ் செய்யறாங்கன்னு கேட்டேன்.
அவங்க சொன்ன பதிலில் தலை சுத்தலே
வந்திடுச்சு!
தண்ணியை கொடுங்கப்பா”ன்னு கேட்டு
வாங்கி குடிச்சிட்டு, “என் எடையை
குறைக்க என்ன செய்வீங்க”ன்னு கேட்டேன்.

க்ராஷ் டயட் ஏதும் இல்லை மேடம்னாங்க
அத யாரு கேட்டா? உங்க ட்ரீட்மெண்ட்
என்னன்னு கேட்டதுக்கு அவங்க சொன்னது
இது தான்.

டீவி்ல எல்லாம் சோனா பெல்ட்ன்னு விப்பாங்களே
அதில் பெரிய சைஸ் வயிறு, முதுகு, இடுப்பு,
தொடையில் கட்டுவாங்க. அதில் ஹீட்
கொடுத்து கொழுப்பைக் கறைப்பாங்களாம்.
1 மணி நேரம் செஷன். இதைக் கேட்டதும்
நான் கொஞ்சம் ஜெர்க் ஆனேன்.

என்னோடது பயங்கர சென்சிடிவ் தோல்.
ஒருமுறை செஞ்சு பார்ப்போமேன்னு சோனா
பெல்ட் போட்டதுக்கு தோலே சிவந்து போய்
ரொம்ப நாளைக்கு அவஸ்தைப் பட்டேன்.
அவங்க சொன்னதை நினைச்சு பார்த்து
பயந்துட்டேன். ஆனால் விசயம் தெரிஞ்சுக்கலாம்னு
சரின்னேன்.

நீங்க பணம் கட்டினதும் எங்க டயட்டீஷியனைப் பாருங்க.
அவங்க உங்களுக்கு டயட் சார்ட் கொடுப்பாங்க,”
அப்படின்னாங்க.

க்ராஷ் டய்ட் ஏதும் இல்லைன்னு சொன்னீங்களேன்னதுக்கு
நான் உங்களுக்கு ரஃபா ஒரு ஐடியா கொடுக்கறேன்னு
சொல்லிட்டு என்னிய ஒரு கேள்விகேட்டாங்க.

“வீட்டுல எக்சசைஸ் செய்வீங்களா”.

தினமும் யோகா செய்வேன்” என்றேன்.
அது உங்க உடம்பை உள்ளிருந்து ஃபிட்டா வைக்கங்க,
வாக்கிங், ஜாகிங், ஜிம் இந்த மாதிரி?

இல்லைன்னு சொன்னேன்.

நாளேலேர்ந்து நீங்க கண்டிப்பா வாக்கிங்
போகணும்,

எங்க டயட்டீஷயன் சொல்ற படிதான் சாப்பிடணும்.

இதில் எந்த ஒரு மாத்தமும் இருந்தா வெயிட்
குறையாது.

நாங்க கொடுக்கற ட்ரீட்மெண்ட் அப்பத்தான்
உபயோகமா இருக்கும்.
அப்படின்னாங்க.

இதுலேர்ந்து தெரியறது என்ன நாம கட்டுற
பணத்துக்கு இவங்க கொடுக்கற ட்ரீட்மெண்டால
வெயிட் குறைய்றதை விட நாம டயட்டும்,
உடற்பயிற்சியும் கட்டாயமா வெச்சுக்கணும்.

இதுக்கெதுக்கு அம்புட்டு பணம் செல்வழிக்கணும்??!!??உங்க எடை 300 கிராம் அதிகமா இருக்கறதனால
இன்னைகு செஷன் கிடையாது சார், வெயிட்டை
குறைச்சுட்டு வாங்க”ன்னு என் கண் முன்னாலேயே
ஒரு அண்ணாத்தேக்கு சொல்லிகிட்டு இருந்தாங்க.

நான் அப்புறமா வர்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

*************************************

உடற்பயிற்சி நம்ம செய்யலாம்.
பணம் கட்டாம டயடீஷயனைப் பார்க்க
விடமாட்டாங்க. என்ன செய்யலாம்னு
யோசிச்சுகிட்டு இருந்தப்போ
என் ப்ரெண்டோட ப்ரெண்டு. அவங்களுக்கு
ஒரு டயட்ஷீயனைத் தெரியும் (இந்த
மாதிரி கிளீனிக்குகளில் வேலை
பார்க்கறவங்கதான்) அப்படின்னாங்க.
அவங்களைப் பாத்து பேசினேன்.
அவங்க கொடுத்த டயட் சார்ட்
பாத்ததிலேயே எனக்கு 2 கிலோ
குறைஞ்சிடுச்சு.

:)))))))))))))))))))

அந்த டயட் சார்டை பத்தி இப்பவே
சொல்ல வேணாம். நாளைக்கு
லீவு அதான் சனிக்கிழமைங்கறதால
இன்னைக்கு மத்தியானம் சொல்றேன்.

11 comments:

துளசி கோபால் said...

ம்ம்ம்ம்ம்ம்


ஒரு காலத்துலே இப்படித்தான் ஒரு ஜிம்முக்குள்ளே நுழைஞ்சோம் நானும் என் தோழியும்.

என்னன்னு கேட்ட ரிசெப்ஷன் ஆள் கிட்டே...தயங்கித்தயங்கி, 'எங்களுக்குக் கொஞ்சம் குண்டாகனும்'னு சொன்னேன்.

(அப்ப லேடீஸுக்கு ப்ளவுஸ் அடியிலே ஒரு சின்ன டயர் இருக்கும் பாருங்க. அதுதான் என் கோல். அதுலே பாதி இருந்தாக்கூடப் போதுமே)

அந்த ஆள், " உள்ளே போய்ப் பாருங்க. ஒல்லியாக ஆகணுமுன்னு எத்தனைபேர் அழுதுக்கிட்டு இருக்காங்கன்னு. போய் ப்ரெட் வாங்கித் தின்னுங்க'ன்னார்.

அந்தக் கணக்குலே ப்ரெட் தின்னாம இருந்தால் உடல் இளைக்குமுன்னு இப்பெல்லாம் ப்ரெட் தின்றதே இல்லை:-)

புதுகைத் தென்றல் said...

நீங்க சொல்றது சரிதான் டீச்சர்.

ஆனான் நான் ப்ரெட்டும் விடறதில்லை.
வாரத்துக்கு 2 நாள் ப்ரெட் வெரைட்டியா செஞ்சு அசத்தி நானும் எஞ்சாய் செய்வேன்.

:)))))))))

Anonymous said...

ரொம்ப அநியாயமா இருக்கே இவங்க சொல்றதெல்லாம்..

எப்படியோ 2 கிலோ குறைந்ததே.

அடுத்த பதிவுக்கு நாளை வரை காத்திருக்கணுமா...

புதுகைத் தென்றல் said...

வாங்க தூயா,

இப்பத்தான் அடுத்த பதிவு போட்டேன்.

அமுதா said...

ம்... உங்க டயட் சார்ட் பார்க்க ஆவலாக இருக்கேன். (ஆனால் நான் ஒரு மாதிரி டயட் ஃபாலோ பண்ணி 10 கிலோ குறைச்சுட்டேன்). உங்க பதிவை பார்த்துட்டு நான் என் அனுபவத்தை போடறேன்....

ராமலக்ஷ்மி said...

சோனா பெல்ட் பற்றி பலரும் இப்படி மூக்கால் அழுது கேட்டிருக்கிறேன்.[அதுவும் இந்த எக்ஸிபிஷன்களில் இதுக்கென்னே ஒரு கடை போட்டுட்டு நிப்பாங்க. நம்பள கடைய க்ராஸ் பண்ணி போக விட மாட்டாங்க. வேண்டாம்னாலும் ஜஸ்ட் பாத்துட்டுப் போங்கன்னு கடுப்பேத்துவாங்க:-0] மேலும் இவற்றால் எல்லாம் என்னன்ன சைட் எஃபக்ட் வரும்னு யாருக்கும் தெரியாது. டயட்டும் நடை பயிற்சியும் ஹார்ம்லெஸ்.

அடுத்த பதிவு எத்தனை மணிக்கு?

புதுகைத் தென்றல் said...

அடுத்த பதிவு போட்டாச்சு அமுதா.

(நீங்களும் உங்க ஐடியாவை அனுபவத்தை போடுங்க. எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்)

புதுகைத் தென்றல் said...

அடுத்த பதிவு எத்தனை மணிக்கு?//

பத்து நிமிஷ்த்துக்கு முன்னாடிதான் பதிவு போட்டேன் ராமலக்ஷ்மி.

சந்தனமுல்லை said...

ம்ம்..பலருக்கும் உபயோகமாயிருக்கும்!நல்ல ஆரம்பம்!!

புதுகைத் தென்றல் said...

நன்றி சந்தனமுல்லை

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இந்த மாதிரி ட்ட்ரீமெண்டால எடை ஒண்ணும் குறையாது. அப்படியே குறயற மாதிரி தெரிந்தாலும் அவங்க சொல்ற டயட்ட நாம பின்பற்ற முடியாது.அதாவது,மீண்டும், நம்ம டயட்ட பின்பற்றும்போது நாம பழய வெயிட்டுக்கே போயிடுவோம். ஆனா, ஒரே ஒரு உபயோகம் - வியர்வை நல்லா வெளியேறுறதுனால புத்துணர்ச்சியோட இருப்போம்.