போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி அந்த
டயட்டீஷியனைப் பாத்து பேசினேன்.
அவங்க கொடுத்தாங்க பாருங்க பெரிய லிஸ்ட்...
எதையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தான் அதுல
எழுதியிருந்தாங்க. இதை எழுதினதக்கப்புறம்
என்ன சாப்பிடுவது?
இவங்க கொ்டுத்த லிஸ்டில் கொஞ்சம் மட்டும்
உங்க பார்வைக்கு.
சோறு+ சப்பாத்தி காம்பினேஷ்ன் தவறு.
இரண்டில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடலாம்.
சோறுன்னா ஒரு கப், சப்பாத்தின்ன்னா 2
இட்லி 2 சாப்பிடலாம், தொட்டுக்க நோ
மிளகாய்ப்பொடி, நோ தேங்காய்ச் சட்னி.
(ஒன்லி வெங்காயச் சட்னி தான்)
காய்கறிகளில் உருளை, சேனை, சேப்பங்கிழங்குகளுக்குத்
தடா...
எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பெரிய தடா.
(அப்பளம், சிப்ஸ், பூரி, எதுவும் நோ தான்)
நெய் (எனக்கு பிடிக்காது) பட்டர், சீஸ், பன்னீர்
எதுவும் கூடாது. (பன்னீர் பட்டர் மசாலா இல்லாம
என்ன நார்த் இண்டியன் ரெஸ்டாரண்டில் சாப்பிட
முடியும் :( )
சமோசா ரகடா, பாவ் பாஜி, வகையறாக்களை
நினைச்சுக்கூட பார்க்கக்கூடாது.
ஸ்வீட்ட்டா???? அவங்க கேட்ட விதத்திலேயே
ஆஹான்னு ஆயிடுச்சு.
(நான் கொஞ்சம் ஹிந்தி படம் அபிமானில்
வரும் அஸ்ரானி மாதிரி.( கொஞ்சமாத்தான்) இனிப்புக்கப்புறம்
காரம், காரத்துக்கப்புறம் இனிப்பு சாப்பிடுவேன்)
லோ பீபினால வந்த பழக்கம் இது. :(
சப்பாத்தியில் நோ பராத்தா, நான், ருமாலி ரோட்டி
ஒன்லி புல்கா (எண்ணைய் இல்லாமல் சுட்டது)
சோறு: ஒன்லி பிளையின் சோறு வித் சாம்பார்,
ரசம், பருப்பு கூட்டு.
பொங்கல், புளியோத்ரை, தேங்காய் சாதம், எல்லா
வகைகளுக்கும் பெரிய நோஒ.....
ரவா உப்புமா, ரவா இட்லியா சான்சே இல்லை.
பழங்களிலும் மாம்பழம், சப்போட்டா, வாழைப்பழம்
(இது சாப்பிட்டா உடனே வெயிட் ஏறிடுமாம்)
அப்புறம் என்னதாங்க சாப்பிடறது
வெறுத்து போச்சு எனக்கு.
இதெல்லாம் பாத்துட்டு எனக்கும் அயித்தானுக்கும்
தோணியது “ஆணியே...... வேண்டாம்” :(
ஆனாலும் வெயிட்டை குறைக்கணும்னு முடிவு
செஞ்சாச்சு.
அவங்க கொடுத்திருக்கும் டயட்டை சாப்பிட்டா
உயிர் வாழவே முடியாது.
அப்படின்னு முடிவு செஞ்சு நாங்களே
அவங்க சொன்ன டய்ட் ப்ளானை பேசிக்கா
வெச்சு ஒரு டயட் ப்ளான் போட்டுகிட்டோம்.
தினமும் 30 நிமிடம் நடப்பதை கண்டிப்பா
செஞ்சோம்.
ஹை நாங்க 6 கிலோ குறைஞ்சிட்டோமே!
அதுவும் 4 மாசத்துல.
:)))))))))))))
என்ன உங்களுக்கும் அந்த பிளான்
வேணுமா? நமக்கு வேணுங்கற பட்டவங்க
ஆயிட்டீங்க. உங்களுக்கு சொல்லாமலா.
கண்டிப்பா அடுத்த பதிவுல போடறேன்.
18 comments:
கிகிகிகி எனக்கு இதில் இருக்கும் எது மேலும் நாட்டம் அத்தனை இல்லை. நான் சமாளிப்பேன். இதில் சொல்லியிருக்கும் பாதி உணவு வகைகள் தான் இங்கு கிடைப்பதே பெரும் பாடாயிற்றே..
ஒரே ஒரு பிரச்சனை அப்பளம் தான்... :(
இதே தாங்க எனக்கும். நானும் 5 மாசத்தில 10 கிலோ குறைஞ்சுட்டேன். இப்ப மெய்ண்டெய்ன் பண்ணனும். இப்படியே லைஃப் ஃபுல்லா சாப்பிட முடியாதில்ல.. மெய்ண்டெனன்ஸ் டிப்ஸ் இருந்தால் கொஞ்சம் கொடுங்க...
பாருங்க நடைப் பயிற்சி:) அதைத்தான் நானும் உங்க போன பதிவில சொல்லியிருந்தேன். அதான் பெஸ்ட். இங்கே பெங்களூர் வெதருக்கு வெளியில நடந்தா இரண்டே நாளிலே வந்திடுது ஜலதோஷம். ஆகையாலே டிரட்மில் இத்தியாதி என் வீட்லயே மினி ஜிம் செட் பண்ணியாச்சு. வெளியில் இதற்கு என கிளம்பி போக எங்கே நேரம் என்றெல்லாம் யோசிக்கிறவங்க வீட்ல ட்ரட்மில் வாங்குவது அத்தியாவசியம் என்றே சொல்வேன். இப்போதான் ஃபோல்டபிளா கிடைக்கிறதே.
அப்புறம் உங்க டாக்டர் சொன்ன டயட். ஹி.இம்பாஸிபிள். சரி உங்க அடுத்த பதிவில எங்களுக்கு ‘அதிர்ச்சி தராத டயட்’ சொல்வீங்கன்னு நம்புகிறேன்.
சொல்ல மறந்திட்டேன் பாருங்க. நல்ல பதிவு. நிச்சயமா நிறைய பேருக்கு உதவும்
நானும் அப்படித்தான் தூயா,
எனக்கு காய்கறிகள் மட்டும் இருந்தால் போதும்.
மெயிண்டெனன்ஸ் டிப்ஸா..
அடுத்த பதிவில் டயட் சார்ட் வரும். அதை ஃபாலோ செஞ்சா போதும்னு நினைக்கிறேன்.
ராமலக்ஷ்மி,
முக்கியமான விசயம் நானும் ட்ரெட்மில்தான் வாங்கப்போனேன். என் டாக்டர்தான் வாங்கக்கூடாது என்று தடா போட்டுவிட்டார்.
வீட்டுக்குள் வாக்கிங் போவதில் நம் ஸ்ட்ரெஸ் குறையாதாம். (திரும்ப அதே சுவரு, அதே மனிதர்கள் என்று அலுப்பாகி நாளடைவில் ட்ரெட்மில் தூங்கும் அபாயம் இருக்கிறதாம்.)
யூ ஹேவ் டு கெட் அவுட் ஆஃப் த ஹவுஸ் என்று சட்டம் போட்டுவிட்டார்.
இங்கும் குளிர்தான் அதானல் பொறுமையாக 7.30 மணிக்கு வாக்கிங் போவேன்.
சொல்ல மறந்திட்டேன் பாருங்க. நல்ல பதிவு. நிச்சயமா நிறைய பேருக்கு உதவும்//
நன்றி அமுதா,
பலருக்கும் உதவணும்னுதான் கொஞ்சம் பர்சனலா இருந்தாலும் இந்த விசயத்தை எழுத ஆரம்பிச்சேன்.
நானும் இந்த மாதிரி டயட்டிங் எல்லாம் பண்ணினேன். இப்ப வெறுத்துப்போய் விட்டுட்டேன். வாழறது ஒரு தடவை. நல்லா சாப்பிடுவோம்னு சாப்பிடறேன். கொஞ்ச நாளைக்குதான். திரும்பவும் டயட்டிங் ஆரம்பிச்சுடுவேன்னு நினைக்கறேன்.
சின்ன அம்மிணி said...
நானும் இந்த மாதிரி டயட்டிங் எல்லாம் பண்ணினேன். இப்ப வெறுத்துப்போய் விட்டுட்டேன். வாழறது ஒரு தடவை. நல்லா சாப்பிடுவோம்னு சாப்பிடறேன். கொஞ்ச நாளைக்குதான். திரும்பவும் டயட்டிங் ஆரம்பிச்சுடுவேன்னு நினைக்கறேன்.
//
நானும் உங்க கட்சிதான், 50 கிலோ இருந்த நான் இப்போ 80கிலோ, இதுதான் என் டயட்.நான் ரொம்ப சாப்பிடுரேனோ
என்ன.............
நெய் பிடிக்காதா?
எனக்கு நெய் சாப்பிடத் தயக்கம் இருந்தாலும் அதோட வாசனை ரொம்பப் பிடிக்கும்.
நெய் காய்ச்சி வச்சுருக்கும் பாத்திரத்தைத் திறந்து மணம் புடிச்சுக்குவேன் தினம் ஒருமுறையாவது. அதனால் கூட வெயிட் போட்டுருக்குமோன்னு ஒரு சந்தேகம்:-))))
இங்கத்துக் குளிரில் வெளியே நடை கொஞ்சம் கஷ்டம்தான். அதுக்குக்காக நடையே 'மால் வாக்'ன்னு ஆகி இருக்கு.
ட்ரெட்மில் ஒன்னு அட்டகாசமா வாங்கி வச்சுருக்கோம். கம்பீரமாக் கண்ணு முன்னே நிக்குது. அதைப் பார்த்தாலே இளைக்கலாம் என்ற (அவ) நம்பிக்கைதான்:-)
என்ன.............
நெய் பிடிக்காதா?//
ஒரு 20 வருஷமா வைராக்கியத்தில் நெய்யைத் தொடாமலே இருக்கிறேன்.
அதனால் பிடிக்காமலேயே ஆயிடிச்சு டீச்சர். :(
வாங்க சின்ன அம்மிணி,
வாழறது ஒருமுறை அதை அழகு +ஆரோக்கியத்துடன் வாழ்ந்திடலாமேன்னு நான் நினைக்கிறேன்.
ட்ரெட்மில் ஒன்னு அட்டகாசமா வாங்கி வச்சுருக்கோம். கம்பீரமாக் கண்ணு முன்னே நிக்குது. அதைப் பார்த்தாலே இளைக்கலாம் என்ற (அவ) நம்பிக்கைதான்:-)//
ம்ம்ம். இதுமாதிரி செய்வேன்னுதான் என் டாக்டர் ட்ரெட்மில் வாங்கக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காரு.
என் டாக்டருக்கு நன்றி சொ்ல்லணும்.
நானும் அயித்தானும் பேசிகிட்டே வாக்கிங் போறது.. அந்த 30 நிமிசம் காசுகொடுத்து வாங்கினாலும் கிடைக்காத சந்தோஷம். :))))))
நல்ல முயற்சி!! ஆயில்ஸ் மற்றும் கானாஸ் படித்தார்களா? இந்த மாதிரி நல்லதெல்லாம் பிடிக்காதே! ;-))
நல்ல முயற்சி!! //
பாராட்டிற்கு நன்றி சந்தனமுல்லை.
ஆயில்ஸ் மற்றும் கானாஸ் படித்தார்களா? இந்த மாதிரி நல்லதெல்லாம் பிடிக்காதே! ;-))//
நீங்களே பதில் சொல்லிட்டீ்ங்களே சந்தனமுல்லை.
:)))))))))))))))))0
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
இன்று வலைச்சரத்தில் இந்த இடுகையை பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.
Post a Comment