Thursday, November 20, 2008

புரிந்து கொண்டாள் ஒரு மாது...

”நான் போறேன் எங்கம்மா வீட்டுக்கு”! என்று திருமணமாகி
6 மாதத்துக்குள் 20ஆவது தடவையாக பொட்டியைத் தூக்கிக்கொண்டு
போறவளை பாத்துகிட்டே இருந்தான் மதன்.

ச்சே!ன்னு எரிச்சலும் கோபமும் மண்டிச்சு. சின்னச்சின்ன
சண்டைக்கும் பொட்டியை தூக்கிக்கிட்டு போறதே
பொழப்பா போச்சு இவளுக்குன்னு நினைச்சுகிட்டு
மாமியாருக்கு போனப் போட்டான்.

மொபைலில் நம்பரைப் பாத்த்து மாமியார்
மல்லிகா,” சொல்லுங்க மாப்பிள்ளை! நல்லாயிருக்கீங்களா!” கேட்டாங்க.

“என்னத்த சொல்றது? உங்க பொண்ணு அடிக்கடி
பொட்டியைத் தூக்கிகிட்டு கிளம்பி வந்திடறா.
அப்புறம் நான் எங்க நல்லாயிருக்கறது? இப்பவும்
உங்க பொண்ணு அங்கதான் வந்துகிட்டிருக்கா!”

“என்ன ஆச்சு மாப்பிள்ளை?”
“உங்க பொண்ணுகிட்டையே கேட்டுக்கோங்க” போனை
படக்குன்னு வெச்சிட்டான் மதன்.

மல்லிகாவும் பெருமூச்சு விட்டுகிட்டாங்க.
மகளை கண்டிச்சு சொல்லவும் முடியாது. ”அவங்க
அப்பா செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி
வெச்சிருக்காரு. இவ கண்ணை கசக்கினா
என்னிய வதக்கி எடுத்திடுவாரு. அதனாலயே
நான் வாயக் கட்டிகிட்டு உக்காந்திருக்கேன்.

இப்ப அவரு ஊர்ல இல்ல. இந்த முறை
மக கிட்ட பேசி புரிய வைக்கணும்னு!”
நினைச்சு கிட்டே மகளுக்கு பிடிச்சதை சமைக்கப்
போனாங்க.

ஆட்டோ சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து பாத்தா,
மக இறங்கி வந்துகிட்டிருந்தா.
“வாம்மா”
“நான் வர்றதை உன் மாப்பிள்ளை போன் செஞ்சு
போட்டுகொடுத்திட்டாரான்னு? அப்பா எங்கன்னு?” கேட்டா.

“அப்பா ஊருக்கு போயிருக்காரு. நாளைன்னுக்கு
வந்திடுவாங்க”
அம்மா சொல்வதை அறைகுறையாவே
காதில் கேட்டுகிட்டு அப்பாவுக்கு போனை போட்டாள்.

போனை எடுத்த அப்பா,” என்னடா கண்ணா?
மீட்டிங்கல் இருக்கேன்மா!

உங்க மாப்பிள்ளை கூட சண்டை. நம்ம
வீட்டுக்கு வந்திருக்கேன்!”

”அப்படியா! சரி நான் வந்து பார்க்கறேன்.
நான் வர்றவரைக்கும் நம்ம வீட்டிலேயே இரு.”
அப்படின்னு சொல்லிட்டு வெச்சிட்டாரு.

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் மகளின்
முகத்தைப் பார்த்து மல்லிகாவுக்கு சிரிப்பு
வந்துச்சு.

புயலடிக்கும் கடலில் படகை செலுத்தினா
ஆபத்து. மக கிட்ட அப்புறம் பேசலாம்னு
“குளிச்சிட்டு சாப்பிடவாம்மா”ன்னாங்க.

எதைப் பத்தியும் கேக்காம மகளை
கூப்டுகிட்டு கோவிலுக்கு போயிட்டுவந்தாங்க
மல்லிகா. மகளுக்கு பிடிச்ச பூரியும், கிழங்கும்
செஞ்சு கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டு தூங்கிட்டா
மக.

அம்மாவுக்கு மட்டும் மனசுல வருத்தம் இருந்ததால
தூக்கம் வர்ல. யோசிச்சுகிட்டே இருந்தவங்க
எப்ப தூங்கினாங்கன்னு அவங்களுக்கே தெரியலை.

காலேல எந்திரிச்சு காபி போட்டு மகளுக்கு கொடுத்த
போது மக கேட்டா,” அம்மா! உங்களுக்கு அடுத்த
வாரம் பிறந்த நாள் வருதுல்ல. என்ன புடவை
வாங்கப் போறீங்க”

“போன மாசம் அப்பா விசாகப்பட்டினம் போனபோது
மங்களகிரி புடவை வாங்கிட்டு வந்தாரு.அதையே
கட்டிக்கலாம்னு இருக்கேன். இந்தாருக்கு பாரு”

கைல வாங்கின புடவையைப் பாத்து மக,”
ஐயே என்னமா காம்பினேஷன் இது. கிளிப்பச்சை
கலருக்கு ஆரஞ்ச் கலர் பார்டர். இதையா
கட்டிக்கபோறீங்க. இந்த ஆம்பிளைங்க செலக்‌ஷனே
இப்படித்தான்!” இந்தக் கலர் உங்களுக்கு
நல்லா இருக்காது. வேற வாங்குங்க,” அப்படின்னு
சொன்னவளைப் பாத்து சிரிச்சுகிட்டே

மல்லிகா சொன்னாங்க,” கலர்ல என்ன இருக்கு?
கலரோ! விலையோ! இங்கே முக்கியமில்லை
அவர் ஆசையா வாங்கிகிட்டு வந்திருக்கிறார்.
அது போதும்”.

”அதெப்படி அம்மா முடியும்? அவங்களா
ஒரு கலர் வாங்கிக்கொடுத்தா அதை நம்ம
கட்டணும்னு சட்டம் ஒண்ணும் இல்ல.
உன் மாப்பிள்ளையும் அப்படி்த்தான்.
ஜிங்குச்சா கலர்ல புடவை வாங்கிகிட்டு
வந்து சர்ப்பரைஸ்னு கொடுப்பாரு.
நேத்தும் அப்படித்தான் ஒரு புடவை
வாங்கிகிட்டு வந்தாரு. இந்தக் கலர்
எனக்கு பிடிக்கலைன்னு சொன்னதுக்குத்தான்
சண்டை! அதான் இங்க வந்திருக்கேன்.”

எப்பவுமே மாப்பிள்ளை தனக்கு பிடிச்ச
கலர்லதான் புடவை வாங்கி கொடுப்பாரா?
இல்லை உனக்கு பிடிச்சதும் வாங்குவாரா?

“புடவை வாங்கிக் கொடுக்கறேன்னு என்னிய
கடைக்கு கூட்டிகிட்டு போய் அந்தக் கலர்,
இந்தக் கலர்னு நாங்க சண்டை போட்டுகிட்டு
வருவோம். அவரு கூட இருந்தாலே எனக்கு
எந்தக் கலரும் பிடிக்காகம் போயிடுது. ச்சே!
ஏன் தான் இப்படி படுத்தறாங்களோ”

நம்ம பேசவேண்டிய நேரம் இதுதான்னு
மல்லிகா பேச ஆரம்பிச்சாங்க.
“சுதா! ஒரு உண்மையை பல பெண்கள்
புரிஞ்சுக்காம இருக்காங்க. அந்த அடிப்படை
ரகசியத்தை மட்டும் புரிஞ்சுகிட்டா புருஷன்
எதை வாங்கிக் கொடுத்தாலும் அவர்
இஷ்டப்படி அவர் வீட்டுல இருக்கற போது
மட்டுமாவது அந்த உடையை உடுத்துவாங்க
பெண்கள்.”

”என்ன பெரிய சிதம்பர ரகசியம் அது”ன்னு
முறைச்சுகிட்டே கேட்டவளைப் பார்த்து
சிரிப்பு வந்தாலும் அடக்கிகிட்டு சொன்னாங்க,
“அம்மாடி! ஆண்கள் உலகத்துல வர்ணங்கள்
குறைவு. ஆம்பிளைங்க ஆரஞ்சு கலர் பேண்ட்
சிகப்பு கலர் சட்டை போடறதெல்லாம் சினிமாவுல
தான்!. நிஜத்துல கலர் கலரா ட்ரெஸ் செய்யறது
அவங்களால முடியாத ஒண்ணு. அது அவங்க
மனசுல ஒரு ஏக்கமாவே இருக்கும்.

தனக்கு பிடிச்ச கலர்ல புடவை வாங்கி
பொண்டாட்டி கட்டிகிட்டு வந்தா அவங்களுக்கு
சந்தோஷம். பக்கத்து விட்டுக்காரங்க,
எதித்த வீட்டுக்காரங்களுக்கு பிடிக்காத
அந்தக் கலர் அவருக்கு பிடிச்சிருக்கலாம்.
அதனால் அதை வாங்கிக் கிட்டு வந்திருக்கலாம்.

அடுத்தவங்க கமெண்ட் அடிக்கறதை பார்க்காம
வீட்டுக்காரருக்கு பிடிச்ச புடவையை எப்பவாவது
கட்டிக்கறது தப்பில்லை. அந்தப் புடவையை
ஏன் வாங்கினீங்கன்னு சண்டை போடறது
தப்பில்லையாம்மா? உனக்கு பிடிச்ச புடவையும்
வாங்கிக் கொடுக்கறாருல்ல? அவருக்கு பிடிச்சு
வாங்கிக் கொடுக்கறதையும் சந்தோஷத்தோட
ஏத்துக்கடா! சின்னச் சின்ன சந்தோஷங்கள்
வாழ்க்கையில கொட்டிக் கிடக்கு. அதை
அனுபவிக்கறத விட்டுட்டு இப்படி
சும்மா சண்டை போட்டுகிட்டு கிளம்பி
வந்திடற.

நீ இங்க வர்றது தப்பில்லை. இது உன்
வீடு. வரும் உரிமை இருக்கு. புருஷனோட
வந்து சந்தோஷமா இரு. அவரு ஊருக்கு
போயிருந்தா வா. ஆனா இப்படி சண்டை
போட்டுகிட்டு வர்றாது நல்லா இல்லடா.
பொண்ணை எப்படி வளர்த்திருக்கா பாருன்னு
என்னியத்தான் குத்தம் சொல்வாங்க”னு
சொன்னதை பொறுமையா கேட்டுகிட்டு
இருந்தா. முகத்தில் மாற்றுதல் தெரிஞ்சது.

”நீங்க சொல்வது இப்பத்தான் புரிஞ்சதும்மா!
அவரு ஆபீச்லேர்ந்து வர்றதுக்குள்ள
வீட்டுக்கு போயிட்டு அவர் வாங்கிகிட்டு
வந்த புடவையை கட்டிகிட்டு அவருக்கு
பிடிச்ச முந்திரி பக்கோடோ செஞ்சு அவர
அசத்த போறேன்! நான் குளிச்சு ரெடியாகுறேன்”ன்னு
போனவள் திரும்ப வந்து
அம்மாவின் கண்ணத்தில் பச்செக்கென்று
முத்தத்தைப் பதித்து விட்டு “தேங்க்ஸ்ம்மா”
என்றாள்.

கண்கள் பனிக்க மருமகனுக்கு
போன் செய்யப் போனாள்.

20 comments:

துளசி கோபால் said...

ஆன்னா ஊன்னா ஒரு முந்திரி பக்கோடா செஞ்சுருவாங்களே......

சினேகிதி said...

நல்ல தலைப்பு...விசயமும் நல்ல விசயம்தான்.நான் இதுவரைக்கும் அப்பிடி யோசிச்சுப் பார்த்ததில்லை அப்பா தனக்குப் பிடிச்ச கலரில எங்களுக்கு உடுப்பு வாங்கிறது எங்க வீட்டிலயும் நடக்கிறது.

மங்களூர் சிவா said...

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்??

rapp said...

அப்டியே இவர் வாங்கிவந்துட்டாலும்:):):)

Hari said...

கதையை அதன் போக்கில் விட்டுவிடுங்கள். சம்பவத்தை அதன் போக்கில் எழுதுங்கள். ஒரு மூன்றாம் மனிதர் அடுத்தவர் வீட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்து கதை சொல்லும் பாணி பாட்டி காலத்தோடு சரி.

இன்னும் கொஞ்சம் விரிவாக சம்பவங்களை சொல்லியிருக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க டீச்சர்.

முந்திரி பக்கோடோ எப்படி செய்வதுன்னு ஒரு பதிவு போடுங்களேன்.

என்னமாதிரி தெரியாதவங்களுக்கு உதவியாய் இருக்கும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சினேகிதி.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க சிவா,

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?

அப்பாத்தானுங்க எல்லோரும் செய்யறாங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராப்,
:)))

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹரி,

என்னுடை 50ஆவது பதிவிற்கு வந்தீங்க. அதுக்கப்புறம் இப்பத்தான்
வந்திருக்கீங்க.

என்னை மேம்படுத்திக்க உங்கள் கருத்து உதவியாய் இருக்கும்.

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஜிக்குச்சா கலர் செலக்‌ஷனுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதற்கு அம்மா கொடுக்க்கிற விளக்கம் சுவாரஸ்யம்:)))!

SK said...

இது மாதிரி உதாரணம் சொல்லி கேக்கற புள்ளைங்க எல்லாம் இப்போ ரொம்ப கம்மி ஆகிட்டாங்கன்னு தான் தோணுது.

இருந்தாலும் கதை படிக்கும் பொது நல்ல இருக்கு. அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

இது மாதிரி உதாரணம் சொல்லி கேக்கற புள்ளைங்க எல்லாம் இப்போ ரொம்ப கம்மி ஆகிட்டாங்கன்னு தான் தோணுது.//

வாங்க எஸ்.கே.
சொன்னா சண்டைக்கு வருவாங்க.
காரணம் வளர்க்கும் முறைதான்.

புதுகைத் தென்றல் said...

இருந்தாலும் கதை படிக்கும் பொது நல்ல இருக்கு. அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

நாமக்கல் சிபி said...

நல்ல கதை! அருமையா இருக்கு!

ம்ஹூம்! எல்லாரும் இந்த மாதிரி புரிஞ்சிகிட்டா நல்லா இருக்கும்!

புதுகைத் தென்றல் said...

ம்ஹூம்! எல்லாரும் இந்த மாதிரி புரிஞ்சிகிட்டா நல்லா இருக்கும்!//

நல்லாத்தான் இருக்கும்.

சுரேகா.. said...

கலக்குங்க !

ஆனா...

அவங்களுக்குப்பிடிக்காத கலரில் சேலை எடுத்துக்கிட்டு வந்தவரை புரிஞ்சிக்கிட்டதுக்கு
எதுக்கு அவருக்குப்பிடிச்ச முந்திரி பக்கோடா?
அவருக்குப்பிடிக்காத ஏதோ ஒரு ஐட்டத்தை இல்ல செஞ்சு வச்சிக்கிட்டு உக்காரணும்...!
அதானே சரி! :))))

புதுகைத் தென்றல் said...

அவங்களுக்குப்பிடிக்காத கலரில் சேலை எடுத்துக்கிட்டு வந்தவரை புரிஞ்சிக்கிட்டதுக்கு
எதுக்கு அவருக்குப்பிடிச்ச முந்திரி பக்கோடா?//


வாங்க சுரேகா,

எப்பவுமே மனைவிக்கு பிடிச்ச கலரில் தான் புடவைவாங்கிக் கொடுக்கணும்னு இல்ல. சில சமயம் கணவன் தனக்கு பிடிச்சதை வாங்கிக்கொடுக்கும்போது சண்டை போடக்கூடாது. அன்பை புரிஞ்சுக்கணும் இதுதான் இந்த கதையின் தலைப்பு.

தான் தவறா சண்டை போட்டதனால புருஷன் மனசு கஷ்டமாகியிருக்குமேன்னு புரிஞ்சுகிட்டு அவருக்கு பிடிச்சதை செஞ்சு அசத்த பாக்குறா.

சந்தனமுல்லை said...

:-)