Friday, November 21, 2008

இன்னிய பொழுதுக்கு உபயோகமா ஒரு வேலை.

3 நாளா எங்க வீட்டுகிட்ட ரோட்ல ஒரே தண்ணி.
24 மணிநேரமும் ஓடிகிட்டு இருந்துச்சு.
சாக்கடைத் தண்ணிங்கறாதால நாத்தம் வேற.

இந்தப் பக்கம் இதுன்னா. பக்காத்தாப்ல இருக்கற
பார்க்குக்கு போற வழியில நல்ல குடிக்கறத் தண்ணி
ரோடுல போய்கிட்டிருக்கு. இதனால சுத்தி ஒரு 4 வீதியில்
நடக்கவே முடியாம இருந்துச்சு.

பாலாறும் தேனாறும் நம்ம நாட்டுல ஓடுதோ
இல்லியோ! இந்த மாதிரி தண்ணிங்க ஓடும்.


சாக்காடத்தண்ணீரால சுகாதார கேடு.
நல்லத் தண்ணி இப்படி போவது(உபயம்
வீட்டுக்கு பக்கத்துல இருக்கற
ஹைதைக்கு மொத்தம் தண்ணீர் சப்ளை
செய்யும் தண்ணீர் தொட்டி)) குடி நீர்
தட்டுப்பாட்டை அதிகமாக்குமே!

ஏதாவது செய்யணும்னு தோணிச்சு.
வாட்டர் போர்டுக்கு போன் செஞ்சு,
கம்பளையண்ட் எழுதி கொடுத்து இதெல்லாம்
ஆவுற வேலை இல்லை.

தினமும் வாக்கிங் போகும்போது அங்கே
வரும் பலரில் ஒரு குரூப் ரோட்டரி
சங்கமோ அல்லது லயன்ஸ் குருப்பையோ
சேர்ந்தவங்க. அவங்க கிட்ட பேசலாம்னு
நினைச்சுகிட்டே வாக்கிங்
போயிகிட்டு இருக்கும் போது
வாக்கிங் போறவுங்கள வீடியோ எடுத்து
போட NDTV குரூப் அங்க இருந்துச்சு.

அதுல இருந்த ஒரு பொண்ணுகிட்ட
”வாக்கிங் போறவுங்கள போட்டோ பிடிக்கறீங்க
சரி. இந்த ஏரியாவுல குடி தண்ணீரும்,
சாக்கடைத் தண்ணீரும் ரோடுல ஓடுது.
எங்களுக்கு கஷ்டமா இருக்கு. ஏதாவது
செய்ய முடிஞ்சா செய்யுங்கன்னு சொல்லிட்டு”

நேரே வாக்கிங் முடிச்சிடு உக்காந்திருக்கும்
லயன்ஸ்/ரோட்டரி குரூப் அங்கிள்ஸ்
கிட்ட போய்( அவங்களை எனக்கு
அறிமுகம் கூட கிடையாது :) )
வணக்கமுங்க. போனவாரம் நீங்க
ஏதோ சங்கம் போஸ்டருக்கு முன்னாடி
நின்னு இங்க போட்டோ எடுத்துகிட்டீங்க.
ஒரு சின்ன உதவி செய்யுங்க. உங்க
இன்புளையன்ஸை பயன்படுத்தி
இப்படி போகும் தண்ணீரை நிப்பாட்ட
வழி செஞ்சு கொடுங்க. அந்த மீடியா
காரங்க கிட்ட கூட சொல்லியிருக்கேன்
அப்படின்னு சொன்னதும் அவங்களும்
ஆமாம். வீ வில் ட்ரைன்னாங்க. நன்றின்னு”
சொல்லிட்டு நானும் அயித்தானும் வந்திட்டோம்.

வரும் வழியிலேயே டீவி 9 அப்படீங்கற
சேனலுக்கு போன போட்டு,” மக்களுக்கு
நல்லது நிறையவே செய்யறீங்க. எங்க
ஏரியாவுல இந்த மாதிரி பிரச்ச்னை இருக்கு.
ஏதாவது செய்யுங்க ப்ளீஸ்”ன்னேன்.

சரி மேடம்! உடனே ஆள் அனுப்பறேன்னு
சொன்னாரு. இது நடக்குமான்னு ஒரே
யோசனையாவே இருந்தேன். 8 மணிக்கு
நான் போன் செஞ்சேன். 10 மணி வாக்கில்
வெளியே வந்து பாத்தா பாதாளச் சாக்கடைக்
காரங்க வண்டி வந்து சுத்தம் செஞ்சுகிட்டிருந்தாங்க.
அட! அப்படின்னு ஆச்சரிய பட்டுகிட்டே
மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்து பாத்தா,
நம்புங்க. சாக்கடை தண்ணி வர்றது நின்னு போயி
ரோடு காஞ்சும் போயிருந்தது. :))))))

குடி தண்ணீர் வர்ற பக்கமும் சீர் செஞ்சு
ரோட்ல தண்ணீர் இப்ப வீணாகலை.

“டண்டணக்கா! ஐ டணக்கு ணக்கான்னு”
மனசுக்குள்ள சின்னதா ஒரு டான்ஸ்
போட்டுகிட்டேன். :))))))))))))))))

அத்தானுக்கு போனப் போட்டு விவரத்தைச்
சொன்னேன். பாராட்டினார்.

யாரு சொல்லி இந்த வேலை நடந்துச்சோ!
இங்க அந்த வாக்கர்ஸ் கிளப் அங்கிள்ஸ்,
NDTV, TV9
இந்த 3 பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

40 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல காரியம் செய்திருக்கிறீகள். நாங்களும் பாராட்டுகிறோம்.

[ஒவ்வொருத்தர் பாராட்டுக்கும் ஒரு சின்ன டான்ஸ் போட்டுக்கோங்க. தப்பேயில்லே:))]

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்


பாஸ்


வாழ்த்துக்கள்!!!!

ஆயில்யன் said...

ஆயில்யன் தங்கச்சியக்கான்னா சும்மாவா?

என்னோடா ப்ரெயின் பவர்ல ஒரு 10% ஆச்சும் இருக்கும்ல :))))))))))))))

ஆயில்யன் said...

பாஸ் அப்ப நீங்க என் டி டி வியில வருவீங்களா பாஸ்?


எப்ப வருவீங்க பாஸ்?


சரியான டைம் தெரிஞ்சா சொல்லி அனுப்புங்க பாஸ்!

புதுகைத் தென்றல் said...

ஆஹா மீ த பர்ஸ்டு நீங்கதான் ராமலக்ஷ்மி.

பாரட்டுக்கு மிக்க நன்றி.

சின்ன டான்ஸ் என்ன? குத்தாட்டமே போட்டுக்கறேன். :))))))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க பாஸ் தம்பியண்ணா!!!
(இந்த பேரு பட்டியல் இன்னும் எம்புட்டு பெரிசாக போகுதோ :) )

வாழ்த்துக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

என்னோடா ப்ரெயின் பவர்ல ஒரு 10% ஆச்சும் இருக்கும்ல :))))))))))))))//

அது சரி.

புதுகைத் தென்றல் said...

என் டி டி வியில வருவீங்களா பாஸ்?//

சான்ஸே இல்லை. என்னிய அவுங்க என்ன பேட்டியா எடுத்தாங்க?

ஆயில்யன் said...

//புதுகைத் தென்றல் said...
ஆஹா மீ த பர்ஸ்டு நீங்கதான் ராமலக்ஷ்மி.

பாரட்டுக்கு மிக்க நன்றி.

சின்ன டான்ஸ் என்ன? குத்தாட்டமே போட்டுக்கறேன். :))))))))))
//


அப்பிடியெலலம் டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கபடாது!

பாவம் பசங்க + அயித்தான் பசியோட வருவாங்க கொஞ்சம் சாப்பாட்டு தண்டனையை ரெடி பண்ணி வைச்சிருங்க பாஸ்

சந்தனமுல்லை said...

சூப்பர்! வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

தலைவி புதுகைத்தென்றல் வாழ்க.. வாழ்க.. :)

புதுகைத் தென்றல் said...

அப்பிடியெலலம் டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கபடாது!

என்ன ஒரு வில்லத்தனம்!!

புதுகைத் தென்றல் said...

பாவம் பசங்க + அயித்தான் பசியோட வருவாங்க கொஞ்சம் சாப்பாட்டு தண்டனையை ரெடி பண்ணி வைச்சிருங்க பாஸ்//

ஹா ஹா!

சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துட்டு போயிட்டாங்க. இனி ராத்திரிக்குத் தான்
டிபன் செய்யணும்.

அதுவரைக்கும் டான்ஸ் தான்.

புதுகைத் தென்றல் said...

ஆஹா வாங்க சந்தனமுல்லை.

மிக்க நன்றி.

புதுகைத் தென்றல் said...

தலைவி புதுகைத்தென்றல் வாழ்க.. வாழ்க..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏன் இந்த மர்டர் வெறி முத்துலெட்சுமி?

நாமக்கல் சிபி said...

//தலைவி புதுகைத்தென்றல் வாழ்க.. வாழ்க.. :)

//

ம்ஹூம்!

தானைத் தலைவி புரட்சித்தென்றல் வாழ்க.. வாழ்க.. :)

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

(பெரிய லெவல்ல நம்மையும் கொஞ்சம் கண்டுக்குங்க! ஓ.பன்னீர்செல்வம் மாதிரி)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பார்த்துட்டு சும்மா போறவ்ங்க சாதரண குடிமகள்.. இனிஷியேட்டிவ் எடுக்க நினைப்பது தான் உண்மையான தலைமைக்கு தேவையான குணம்..

அப்பறம் அடிக்கடி உங்களுக்கு பட்டம் கொடுக்க ஒரு பல்கலைகழகம் வச்சிருக்கேன் நான்..

புதுகைத் தென்றல் said...

நீங்களுமா சிபி!!!

புதுகைத் தென்றல் said...

அப்பறம் அடிக்கடி உங்களுக்கு பட்டம் கொடுக்க ஒரு பல்கலைகழகம் வச்சிருக்கேன் நான்..//

தலைநகரில் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம் வெச்சிருக்கிற நீங்கதான்
தானைத் தலைவி.

VIKNESHWARAN said...

தமிழன் படத்துல வர விஜய் மாதிரி நல்ல காரியம் பண்ணிருக்கிங்க... வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN said...

தமிழன் படத்துல வர விஜய் மாதிரி நல்ல காரியம் பண்ணிருக்கிங்க... வாழ்த்துக்கள்...

நாமக்கல் சிபி said...

//நீங்களுமா சிபி!!!//

ஆமாம்!

நாமக்கல் சிபி said...

//அப்பறம் அடிக்கடி உங்களுக்கு பட்டம் கொடுக்க ஒரு பல்கலைகழகம் வச்சிருக்கேன் நான்..//

நாளந்தாவுக்கு அடுத்தபடியா நான் அங்கீகரித்த ஒரே பல்கலைக் கழகம் இதுதான்!

முத்துலட்சுமி அக்காவால் நிறுவப் பட்ட "பட்டமளிப்பு பல்கொலைக் கழகம்"

புதுகைத் தென்றல் said...

தமிழன் படத்துல வர விஜய் மாதிரி நல்ல காரியம் பண்ணிருக்கிங்க... வாழ்த்துக்கள்..//

வாங்க விக்கி,

விஜய் 2012ல் முதலமைச்சர் ஆகும் திட்டம் வெச்சிருக்காராம். நமக்கு அந்த மாதிரி திட்டமெல்லாம் ஏதும் இல்லீங்க.

எனிவேஸ் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

/நீங்களுமா சிபி!!!//

ஆமாம்!//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

முத்துலட்சுமி அக்காவால் நிறுவப் பட்ட "பட்டமளிப்பு பல்கொலைக் கழகம்"//


:))))))))))))))))

அதிரை ஜமால் said...

உடனே வேளை நடந்துச்சா ...

ஆச்சிர்யம் ஆனால் உண்மை ...

அட தேர்தல் வருது அம்மனி ...

நீங்க உங்க வட்டத்துல்ல நிக்கலாம்மே ...

இதோ வந்துவிட்டார் வந்தேவிட்டார்...

தமிழக அரசியலில் ஒரு புது புரட்சி ...

சாக்கடை சரி செய்த செம்மல் ...

வேற என்னா பட்டம்ங்க கொடுக்கலாம்

புதுகை.அப்துல்லா said...

en arasiyal valikaatti akkaa vaalga!vaalga!

:))

வெண்பூ said...

நல்ல வேலை செஞ்சிருக்கீங்க.. பாராட்டுக்கள்.. எம்.எல்.ஏ எலக்ஷன்ல நிக்கிற ப்ளான் எதுனா இருக்குதா?? :))))

புதுகைத் தென்றல் said...

தமிழக அரசியலில் ஒரு புது புரட்சி ...//

நான் நிம்மதியா இருக்கறது புடிக்கலியாங்க ஜமால்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புதுகைத் தென்றல் said...

எம்.எல்.ஏ எலக்ஷன்ல நிக்கிற ப்ளான் எதுனா இருக்குதா?? :))))//

சாதாரண பிரஜாயா இருந்தாலாவது நம்மளால ஏதாவது செய்ய முடியும் வெண்பூ,

அரசியல் நமக்கெதுக்கு.

புதுகைத் தென்றல் said...

en arasiyal valikaatti akkaa vaalga!vaalga!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன் அருணா said...

Wow!A good job done....பிடியுங்கள் பூங்கொத்தை...
அன்புடன் அருணா

அதிரை ஜமால் said...

\\ புதுகைத் தென்றல் said...
எம்.எல்.ஏ எலக்ஷன்ல நிக்கிற ப்ளான் எதுனா இருக்குதா?? :))))//

சாதாரண பிரஜாயா இருந்தாலாவது நம்மளால ஏதாவது செய்ய முடியும் வெண்பூ,

அரசியல் நமக்கெதுக்கு.\\

இப்படியே எல்லோரும் ஒதுங்கனா எப்படி.

வாங்க - வந்து எங்களுக்கு வழிக்காட்டுங்க.

புதுகைத் தென்றல் said...

பூங்கொத்திர்கு மிக்க நன்றி அருணா.

சின்ன அம்மிணி said...

ஏதாச்சும் செய்யணும் நினைக்கறதோட இல்லாம செஞ்சு காட்டியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
சின்ன அம்மிணி.

கிழஞ்செழியன் said...

என்ன ஒரு ஓட்டு விழுந்துருச்சா..? (அஞ்சு நட்சத்திர அந்தஸ்து குருத்துருக்கமில்ல...)

புதுகைத் தென்றல் said...

ஓட்டு போட்டதுக்கு மிக்க நன்றி கிழஞ்செழியன்.