Wednesday, November 26, 2008

இப்படியும் சிலர்!!!??!!

எழுந்ததும் கணிணியை ஆன்செய்து பார்க்கிறான்
சங்கர்.அப்பா ஆன்லைனில் இருக்கிறார். சந்தோஷமானான்.
“வில் கம் இன் 10 மினிட்ஸ்” என்று டைப்
அடித்து வைத்துவிட்டு போய் பல்துலக்கி
வருகையில் மனைவி மது காபி கொடுக்க
வாங்கிக்கொண்டு கணிணி முன் அமர்கிறான்.


அமெரிக்காவில் இருக்கும் தங்கையின் வீட்டிற்கு
சென்றிருக்கிறார்கள் சங்கரின் பெற்றோர்.
“நல்லாயிருக்கீங்களா! சொல்லுங்கப்பா!”

நல்லா இருக்கேன். இங்க குளிர் கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கு”

”மது எப்படி இருக்கான்னு கேளுங்க”இது அவனின்
அம்மா.

சரி அப்பாவும் அம்மாவும் சொல்வார்கள்
என்று ஆவலுடன் காத்திருக்கிறான்.


மது காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு தயார்
செய்துகொண்டிருந்தாள். நடுவில்
போன் வர பேசிவிட்டு கணவனிடம்
கொடுத்தாள்.

சங்கர் அப்பா, அம்மாவுடன் சாட்டிக்
கொண்டிருந்தான்.

சங்கரின் அப்பா,” அந்த எல்.ஐ.சி பணம்
ட்யூ டேட் வந்திடுச்சு. அதை கட்டிடு”

”சரி! உங்க டெலிபோன் பில் வந்திருக்கு
அதையும் கட்டிடறேன்”

இப்பவாவது அப்பா சொல்வார் என்று
எதிர் பார்த்தான்.

வேற ஏதேதோ பேசினார்கள். ஆனால்
சொல்லவில்லை.

ஊரில் இருக்கும் சித்தி வீட்டு கல்யாணப்
பத்திரிகை வந்ததா?

”குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?”

எல்லாம் கேட்டு் முடித்து
சரி சங்கர்! மது காலையில் பிசியா
இருப்பா! விசாரிச்சதா சொல்லு. சாயந்திரம்
அவளோட சாட்டிக்கறோம்!!”

”டேக் கேர் பை!” சாட்டிங் முடிந்துவிட்டது.

சங்கருக்கு ஏமாற்றம். அப்பா, அம்மா இருவரும்
சொல்லாமலே இருந்துவிட்டார்களே!

கணிணியை ஆஃப் செய்துவிட்டு
அலுவலகத்திற்கு தயாரிக்கொண்டிருந்த போது
போன் அடித்தது!!!

”சங்கர் நான் தான் அப்பா பேசறேன்”

முகம் மலர்ந்தது சங்கருக்கு.
“ம் சொல்லுங்கப்பா!”

“ஒண்ணுமில்லை! ஸ்டேட் பேங்க்
அக்கவுண்டிலிருந்து கொஞ்சம் பணம்
சிட்டி பேங்க் அக்கவுண்டுக்கு மாத்திடு.
வேணுங்கற போது எடுத்துக்க முடியும்!”

சங்கருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு
வந்தது. தன்னை அடக்கிக்கொண்டான்.

“என்னடா! பதிலே இல்லை?”

“எல்லாம் செய்யறேன். போனை வைங்க
என்று சொல்லிவிட்டு டொக்கென வைத்துவிட்டான்.

ஏமாற்றத்தினால் வந்த எரிச்சல் அது.

சங்கரின் ஏமாற்றத்திற்கு காரணம் என்ன?
சங்கர் தன் அப்பா,அம்மா என்ன சொல்வார்கள்
என்று எதிர் பார்த்திருந்தான்?

என்ன தொடரும் போட்டு அடுத்த பதிவில் சொல்வேன்னு
நினைச்சீங்களா? இல்லை :)

விடையைச் சொல்லப் போவது நீங்கள்தான்.

விடையை பின்னூட்டமா தட்டிவிடுங்க.

(இது ஒரு உண்மைச் சம்பவம்)

19 comments:

தமிழ் பிரியன் said...

அமெரிக்காவில் இருந்து எப்ப வருவாங்க என்ற தகவலை எதிர்பார்த்தானோ?

சின்ன அம்மிணி said...

நீ எப்படி இருக்கேன்னு சங்கரை அவங்க கேக்கவேயில்லையே.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பிறந்தநாள் வாழ்த்து..

விஜய் ஆனந்த் said...

Birthday wishes???

smile said...

சங்கருக்கு பிறந்த நாள் சரியா அக்கா

poonguzhali said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லலையா ?

அனுஜன்யா said...

சங்கர், மது அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு பிறந்த நாளாயிருக்கலாம். அல்லது அவர்கள் மணநாளாக இருந்திருக்கலாம். வாழ்த்து சொல்லவில்லை என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்?

அனுஜன்யா

பாசகி said...

happy b'day!

புதுகைத் தென்றல் said...

வாங்க தமிழ்ப்ரியன்,

பொதுவா வெளிநாட்டுப்பயணம் திட்டமிட்டுத்தான் இருக்கும். மாறுதல் இருந்தா சொல்லிட்டுத்தானே வருவங்க.
ஏர்போர்டுக்கு ஆள் போகணும்ல.

புதுகைத் தென்றல் said...

வாங்க சின்ன அம்மிணி,

அது் கூட பரவாயில்லை.

புதுகைத் தென்றல் said...

ஏதோ ஒரு வாழ்த்துன்னு யோசிச்ச முத்துலெட்சுமி, விஜய ஆனந்த், ஸ்மைல் ஆகி்யோருக்கு பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

பூங்குழலி அனுஜன்யா இருவரு்க்கும் கூட என் பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

ஏதோ ஒரு வாழ்த்து அதைச் சொல்லவில்லை என்ற ஏமாற்றம் தான்
என்பது சரியான விடை.

புதுகைத் தென்றல் said...

இதைப் பத்தின விரிவான ஒரு பதிவு போடுறேன்.

அதிரை ஜமால் said...

நீங்கள் மாமா ஆகிவிட்ட செய்தியா?

அறிவன்#11802717200764379909 said...

இது பலருக்கும் நடக்கும் ஒன்றுதான்.

இதற்கு அமெரிக்கா செல்ல வேண்டியது இல்லை.

இங்கிருக்கும் போதே அப்பாவோ அம்மாவோ மறந்து விட வாய்ப்பிருக்கிறது.காரணம் அவர்களுக்கு இயல்பிலேயே கூடிவிடும் மறதி..

இதற்கெல்லாம் கோபப்பட்டு நம்முடைய மனநிலையை வருத்திக் கொள்ளக் கூடாது.

smile said...

வாழ்த்துக்களை / ஆசிகளை பெற்றோர்களிடம்
நேரடியாக கேட்டு பெறுவதில் என்ன தயக்கம்??

புதுகைத் தென்றல் said...

வாங்க அறிவன்,

இங்கிருக்கும் போதே அப்பாவோ அம்மாவோ மறந்து விட வாய்ப்பிருக்கிறது.காரணம் அவர்களுக்கு இயல்பிலேயே கூடிவிடும் மறதி..//

ஆமாங்க. இல்லைன்னு சொல்லலை.

இது ஒரு உதாரணம் தான் இன்னும் பல வர இருக்கிறது.

இதற்கெல்லாம் கோபப்பட்டு நம்முடைய மனநிலையை வருத்திக் கொள்ளக் கூடாது.//


அன்று பேசும்பொழுதும் தன் பிறந்த நாள்/மணநாள் வாழ்த்து கூறவில்லையே என்று மனது வருத்தப்படக்கூடாதா?

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்களை / ஆசிகளை பெற்றோர்களிடம்
நேரடியாக கேட்டு பெறுவதில் என்ன தயக்கம்??//

தப்பே இல்லீங்க.

கேட்டுப் பெறுவதும் சுகம். கேளாமல் ஞாபகம் வைத்து கொடுப்பது பரமானந்தம் அல்லவா?