சென்ற பதி்வைப் படிக்க.
பெற்றோரின் பிறந்த நாள், மணநாளை மறந்து போகும்
பிள்ளைகளும் உண்டு.
தன்னை வாழ்த்தவேண்டும் என்று ஒவ்வொருவரும்
நினைப்பார்கள். சிறியவர் பெரியவர் வித்தியாசமில்லாமல்,
அனைவரையும் வாழ்த்துவதனால் என்ன நன்மை?
அந்த நாளில் அவரை வாழ்த்துவது நம் அன்பை குறிக்கிறது.
நாம் அவரை, அவரது பிறந்த/மணநாளை மனதில்
வைத்திருக்கிறோம் என்று அவருக்கு உணர்த்த.
இதனால் வாழ்த்தைப் பெறும் அவருக்கும் மகிழ்ச்சி.
வாழ்த்துச் சொன்ன நமக்கும் மகிழ்ச்சி.
வலையுலகத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களுக்காக
பதிவு போட்டாவது வாழ்த்திவிடுவோம்.
இந்த நண்பரின் பிறந்தநாள்/மணநாள் என்று அறிந்திருந்தால்
ஒரு போன், எஸ்.எம்.எஸ் என மகிழ்ச்சி
கடலில் திக்குமுக்காட்டிவிடுவோம்.
இதே மகிழ்ச்சியை நம் உற்றார் உறவினருக்கும்,
மற்றைய நண்பர்களுக்கும் கொடுக்கலாமே!
தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற நாட்களில்
மறக்காமல் எஸ்.எம்.எஸ் அனுப்பும்
நண்பர்களை பார்த்திருப்பீர்கள்.
சிலர் ”அவன் அனுப்பினால் நாம் அனுப்பலாம்”
என்று இருப்பார்கள். இப்படி அடுத்தவரும்
நினைத்தால்?
இலங்கையில் ஒரு் மொபைல் சர்வீஸ்
ப்ரொவைடர் கம்பெனியின் பெயர் KIT.
(நம் ஏர்டெல் போல் ஒரு கம்பெனி.)
KEEP IN TOUCH.
இதுதான் அதன் விரிவாக்கம். ஆம் நாம்
தொடர்பில் இருக்க வேண்டும். அதுதான்
அன்பை, உறவை பலப்படுத்தும்.
இந்த வாழ்த்துக்கள் நம்மை தொடர்பில்
வைத்திருக்கும்.
வாழ்த்துச் சொல்லுங்கள், வாழச்சொல்லுங்கள்.
*********************************************
எனக்கிருக்கும் பெரிய கெட்டபழக்கம் அனைவருக்கும்
தவறாமல் வாழ்த்துச் சொல்லிவிடுவது. :)
அப்படி ஒருமுறை என் உறவில் ஒரு பெண்ணின்
கணவருக்கு பிறந்த நாள். வாழ்த்துச் சொல்ல
போன் செய்தேன். அந்தப் பெண்ணே எடுத்தாள்.
“ம். இன்னைக்கு என்ன ப்ளான்?
“வீக் எண்ட். இன்னும் ஏதும் ப்ளான் செய்யவில்லை!!??”
“அட உன் கணவரின் பிறந்த நாள் வீக் எண்டில்
வந்திருக்கிறது. நன்றாக கொண்டாடலாம்” என்றேன்.
“ஐயோ! இன்று அவரின் பிறந்த நாளா? (அவளின்
கணவர் அருகிலேயே இருந்தார்) எல்லாரின் பி்றந்த நாள்,
திருமண நாள் உனக்கு மட்டும்
எப்படி ஞாபகம் இருக்கிறதோ?” என்று சொல்லிவிட்டு
அவளின் கணவரிடம் போனைக் கொடுத்தாள்.
அவருக்கு வாழ்த்துச் சொன்னேன்.” எனக்கும் ஞாபகம்
இல்லை, இவளுக்கும் ஞாபகமில்லை. உங்கள் வாழ்த்துத்தான்
முதல் வாழ்த்து மிக்க நன்றி ,” என்றார்.
இப்படியும் இருக்காங்க.
அந்த உறவினரின் பிறந்த நாளுக்கு அடு்த்த நாள்தான்
என் பிறந்த நாள். ஆனால் எனக்கு போன் வராது.
அதற்காக வருத்தப் பட மாட்டேன்.
(அவங்க பர்த்டேவே ஞாபகம் இல்லையே!)
கொடுப்பதிலும் சந்தோஷம் உண்டு என்பதனால்
இன்றளவும் நான் என்னால் இயன்ற சந்தோஷ்த்தை
கொடுத்துக்கொண்டிருக்கிறேன். :))))
இதை நான் இங்கு சொல்லக் காரணம்!
இழைகள் இறுக்கமாக பின்னப்பட்டால் தான்
உறுதியான ஆடை கிடைக்கும்.
அன்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு
இழையாக்கி இறுக்கி உறவை பலப்படுத்தலாமே!
இது என் தாழ்மையான கருத்து.
14 comments:
/*இதனால் வாழ்த்தைப் பெறும் அவருக்கும் மகிழ்ச்சி.
வாழ்த்துச் சொன்ன நமக்கும் மகிழ்ச்சி.*/
உண்மைதான், அதுவும் இப்பொழுது எல்லாம் தேதிகளை நினைவுறுத்த நமக்கு பல வழிகள் இருக்கும் பொழுது, நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு முறை கொஞ்சம் நேரம் செலவழித்து டேட்டா போட்டு வைத்தால் போதும்.
/*இந்த வாழ்த்துக்கள் நம்மை தொடர்பில்
வைத்திருக்கும்.*/
நல்ல விஷயம் தான்.. அனைவரும் பின்பற்றலாம்!
கொடுப்பதிலும் சந்தோஷம் உண்டு என்பதனால்
இன்றளவும் நான் என்னால் இயன்ற சந்தோஷ்த்தை
கொடுத்துக்கொண்டிருக்கிறேன். :))))
:)-
ஒரு முறை கொஞ்சம் நேரம் செலவழித்து டேட்டா போட்டு வைத்தால் போதும். //
நான்லாம் இன்னும் டயரியில் எழுதி வெச்சு பாத்துக்கற ஆளுங்க.
அந்த டேட்டா எப்படி போடுவதுன்னு சொல்லிக்கொடுத்தீங்கன்னா உதவியாய் இருக்கும்.
வாங்க தமிழ்ப்ரியன்
அனைவரும் பின்பற்றலாம்.//
ம்ம்ம். வருகைக்கு மிக்க நன்றி.
\\இழைகள் இறுக்கமாக பின்னப்பட்டால் தான்
உறுதியான ஆடை கிடைக்கும்.
அன்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு
இழையாக்கி இறுக்கி உறவை பலப்படுத்தலாமே!
இது என் தாழ்மையான கருத்து.\\
அருமையான கருத்து
வாங்க அம்ரிதவர்ஷி்ணி அம்மா,
வருகைக்கும் ஸ்மைலிக்கும் மிக்க நன்றி
வாங்க ஜமால்,
வருகைக்கு மிக்க நன்றி
மிக நல்ல கருத்து தென்றல். பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள், அனே கமாக விரைவில் பதிவாகவே போடவும் வாய்ப்பிருக்கிறது அந்த அனுபவங்களை. சுமார் 18 வயதில் (நண்பர்கள், உறவினர்கள் என சுமார் 100 பேருக்கு வருடத்திற்கு நான்கு முறைகள்) ஆரம்பித்த கிரீட்டிங்ஸ் அனுப்பும் வழக்கத்தை 28 வயது வரை விடாது தொடர்ந்தேன். பின்னர் அது குறைந்து இப்போது சுத்தமாக இல்லை. குறைந்த பட்சம் SMS ஆவது அனுப்பலாம் என்பது நியாயமான விஷயமே.
எனது திருமணநாளுக்கு வந்த வாழ்த்துகள் மொத்தம் மூன்றே.. ஒன்று சம்பிரதாயமாக ஆபீஸிலிருந்து. இன்னொன்று நான் எதிரே பார்த்திராத அளவில் எப்போதோ பழகிய கிட்டத்தட்ட மறந்தே போன ஒரு தோழியிடமிருந்து. மூன்றாவது உலகமே அழிந்தாலும் என்னை வந்தடையும் வாழ்த்துகளை அனுப்புக்கொண்டேயிருக்கும் என் அருமை மாமனிடமிருந்து. அவ்வளவேதான்..
வாங்க தாமிரா,
நானும் இன்றுவரை வாழ்த்துக்கள் சொல்வதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறேன்.
சேம் பளட்.
இது எதுக்குன்னு கேக்கறீங்களா?
என் பிறந்த நாளுக்கு அயித்தான்,
குழந்தைகள், என் பெற்றோர், தம்பி இவர்கள் மட்டும் தான் வாழ்த்து கூறுவார்கள். என் தோழி இருவர்.
எங்கள் திருமண நாளுக்கும் இதே அளவுதான் வாழ்த்து வரும்.
:((
வாழ்த்துமடல் மறக்காது அனுப்புவது என்னுடைய பழக்கம்..போன் நிச்சயம் உண்டு..:)
உங்கள் பிறந்த நாள் மற்றும் மண நாள் வாழ்த்துகளை இப்போதே சொல்கிறேன்.
மிக்க நன்றி பாலராஜன் கீதா.
இந்த விஷயத்தில் அப்படியே உங்களைப் போலவேதான் நானும். 13 வயதில் ஆரம்பித்த பழக்கம், தொடர்கிறது இன்று வரை.
Post a Comment