Thursday, November 27, 2008
வடா பாவ்
மும்பையில் நான் மிகவும் விரும்பும் உணவு
இது. 2 ரூபாய்க்கு வடாபாவ், 3 ரூபாய்க்கு லஸ்ஸி
(நான் சொல்வது 15 வருடங்களுக்கு முன்பு)
வசாய் போகும் ட்ரெயி்னில் ஏறும் முன் இதை
சாப்பிட்டால் வீடு போகும் வரை தாங்கும். :)))
பிரட்டி்ன் நடுவில் உருளைக்கிழங்கை வைத்து செய்யப்பட்ட
போண்டாவை வைத்து சாப்பிடும் ஒரு உணவு இது.
வடா பாவ் விற்கும் பிசினஸ் அங்கே படு பிரபலம்.
கிட்டத்தட்ட 2000 கோடி பணம் புரளும் பிசினஸாம்.
ஒரு நாளில் 1 லட்சம் வடா பாவ்கள் மும்பை நகரில்
மட்டும் விற்கப்படுகிறதாம்!!!!
ஜம்போ கிங் ரெஸ்டாரண்ட் 10,000 வடா பாவ்களை
விற்கிறார்களாம்!!
1966 ல் தாதர் ரயில்வே ஷ்டேஷனில் ஒருவர்
விற்க ஆரம்பித்ததாம் இந்த வடாபாவ்.
நவம்பர் 24-08லிருந்து இந்த வடாபாவிற்கு சப்போர்டு
கொடுத்திருக்கிறது சிவ சேனா அமைப்பு.
மஹாரஷ்டியர்களின் ப்ரத்யேக உணவாகவும், சிவ
சேனாவின் ப்ரண்ட் உணவாகவும் வடாபாவ் ஆகியிருக்கிறது.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா காங்கிரஸ்.
வடா பாவில் உருளை, கடலை மாவு உடலுக்கு கேடு
என்று சொல்லி “கந்தா போஹா” வெங்காய அவல் உப்புமாவை
தனது கட்சி ப்ராண்ட் உணவாக அறிவிக்க இருக்கிறதாம்.
இதில் இன்னும் ஜோக் என்னெ வென்றால்,
“வடாபாவில் இருக்கும் உருளை, கடலை மாவு
ஆகியவை வட இந்தியாவில் இருந்து வருகிறது.
அதை தயாரிப்பவர்களும் வட இந்தியர்களே என்று
கூறியிருக்கிறார் காங்கிரஸைச் சேர்ந்த சமீர் தேசாய்.
சாப்பாட்டிலுமா அரசியல்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
After Sena's 'Vada pav', Cong to promote 'kanda poha'
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஒரு நண்பர் வீட்டில டின்னர் போனப்ப starterனு இதை குடுத்தாங்க. வயிறு நிறைஞ்சு போச்சு. அப்பறம் சாப்பாடே சாப்பிட முடியலை.
கஷ்டம் தான்...
மீ த பர்ஸ்ட்டா? பசி நேரத்தில நல்ல பதிவுடா சாமி..
போண்டாவின் கடலை மாவை விட்டு விட்டால் கிட்டத்தட்ட இது கட்லெட்டை உள்ளே கொண்ட பர்கர் போலத்தான் இல்லையா?
18 வருடங்களுக்கு முன்னால நான் மும்பை[பக்கம் தானே]யில் இருக்கையில் சாப்பிடவேயில்லையே
:(?
என்ன போச்சு? போண்டா போட்டு பாவ் வாங்கி அதன் உள்ளே வச்சு உள்ள தள்ள வேண்டியதுதானே:))?
ஸ்டார்டரா. அது சரி.
இது ஒண்ணு சாப்பிட்டாலே போதுமே!
வாங்க ஆதவன்,
ரெம்ப கஷ்டம்.
இனி தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் எந்தந்த உணவுவகைகளுக்கு சப்போர்ட் செய்யப்போறாங்களோ!!!
மீ த தர்டுனு சொல்லுங்க தாமிரா.
பசி நேரத்தில நல்ல பதிவுடா சாமி..//
:)))))))
இது கட்லெட்டை உள்ளே கொண்ட பர்கர் போலத்தான் இல்லையா?//
ஆமாம் ராமலக்ஷ்மி,
அதனால்தான் சிவசேனாவினர் பர்கருக்கு நிகராக வடாபாவை உலகப் புகழ் பெறச் செய்யப்போறாங்களாம்.
18 வருடங்களுக்கு முன்னால நான் மும்பை[பக்கம் தானே]யில் இருக்கையில் சாப்பிடவேயில்லையே
:(?//
நான் மும்பையில் இருந்த 3 வருடமும் வடா பாவ்தான், பேல்பூரிதான் :)))
என்ன போச்சு? போண்டா போட்டு பாவ் வாங்கி அதன் உள்ளே வச்சு உள்ள தள்ள வேண்டியதுதானே:))?//
அதே.
கூட கொஞ்ச கிரீன் சட்னி, சாட் மசாலா தூவி சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க.
ஹைதையில் சில இடங்களில் வடாபாவ் கிடைக்கிறது.
:))
// மும்பையில் நான் மிகவும் விரும்பும் உணவு
இது. 2 ரூபாய்க்கு வடாபாவ், 3 ரூபாய்க்கு லஸ்ஸி
(நான் சொல்வது 15 வருடங்களுக்கு முன்பு) //
இப்பவும் பெரிய மாற்றங்கள் இல்ல...3 இல்ல 4 ரூபாய்க்கு வடாபாவ் கெடக்குது...
மும்பையில இருக்கறவரைக்கும் எனக்கு பெரும்பாலான நாட்கள்ல காலை உணவே வடாபாவ் மட்டும்தான்...
ஹம்ம்ம்ம்...எப்படி இருந்த ஊரு...இப்படி அல்லோகலப்பட்டுக்கிட்டு இருக்கு...:-(((...
மும்பையில இருக்கறவரைக்கும் எனக்கு பெரும்பாலான நாட்கள்ல காலை உணவே வடாபாவ் மட்டும்தான்...//
ம்ம்ம்.
ஹம்ம்ம்ம்...எப்படி இருந்த ஊரு...இப்படி அல்லோகலப்பட்டுக்கிட்டு இருக்கு...:-(((...//
எனக்கு மிகவும் பிடித்த ஊர் மும்பைதான்.
:(((((((((((((((
Post a Comment