”சுகுணா மேடம் வந்துட்டாங்களா?”
”இன்னும் வர்ல சார்!”
”அவங்க வந்ததும் முதல்ல என்ன வந்து
பார்க்கச்சொல்லணும் புரியுதா,” என்று
கோபமாக சொல்லிவிட்டு சென்றார் மேனேஜர்.
அரக்கப்பரக்க ஓடிவந்தார் சுகுணா.
உடன் ப்யூன் வந்து,” மேடம்! உங்களை
மேனேஜர் சார் வரச்சொன்னாரு,” என்று
சொல்லிவிட்டு சென்றான்.
”இதோ போய் பாக்கிறேன்” என்றவாறே
மேனேஜர் அறைக்கதவை தட்டி
“உள்ளே வரலாமா?” என்றாள் சுகுணா.
“ம்ம் வாங்க” என்ற குரலுக்கு கதவை
தள்ளி உள்ளே சென்றவளை பார்த்து
கத்தத்துவங்கினார் மேனேஜர்.
“என்ன சுகுணா மேடம்! பண்டிகைக்கு
ஆபிஸ் கொடுத்த லீவைத் தவிர
நீங்க வேற ரெண்டுநாள் லீவு எடுத்திருக்கீங்க.
அடிக்கடி பெர்மிசன் போட்டுட்டு போறீங்க!
வாங்கற சம்பளத்துக்கு ஆபிஸுக்கு
ஒழுங்கா வந்து வேலை செய்யணும்னு
இல்லாட்டி பேசாம வீட்டுலயே இருக்கலாமே!”
என்றார்.
“சார்! தீபாவளி அன்னையிலேர்ந்து
குழந்தைக்கு ஜுரம். அதனாலத்தான்
லீவு எடுக்க வேண்டியதாச்சு” என்றவளைப்
பார்த்து.
"என் பையனுக்கும் தான் உடம்பு சரியில்லை!
நான் ஆபிஸுக்கு வரலை?
நான் லீவு எடுத்துக்கிட்டு
வீட்டிலயா உட்கார்ந்திருக்கேன். "
”உடம்பு சரியில்லாத குழந்தையை
தனியா விட்டுட்டா சார் வந்தீங்க?”
“இல்ல. வீட்டுல என் மனைவி
இருந்து குழந்தையை பாத்துகிட்டாங்க”
என்று சொல்ல,
"எங்க வீட்டுல நாந்தான் மனைவி.
அதனால நான் தான் லீவெடுத்து
பாத்துக்கணும் சார்," என்று சுகுணா சொல்ல
மேனேஜருக்கு வார்த்தையே வரவில்லை
***********************************
என்ன தலைப்பு வைக்கலாம்னு சொல்லிட்டு
போங்க. மிக்க நன்றி.
14 comments:
'திரும்பி வந்த அம்பு'
அதை விட இது பொருத்தமோ:
'திறன் அறிந்து சொல்லுக சொல்லை'
வாங்க ராமலக்ஷ்மி,
ஆரம்பமே அசத்தலா இருக்கே.
பேசு...யோசிச்சுட்டு !
தலைப்பு நல்லா இருக்கு.
இன்னும் என்னனென்ன வருதுன்னு பார்ப்போம்.
மனைவி...
வீடும் வேலையும்...
வேலையும் வீடும்...
கணவன்...
ராமலக்ஷ்மியின் “திரும்பி வந்த அம்பு” தலைப்பே நல்லா இருக்கு.
அதையே இந்தக் கதையின் தலைப்பா வச்சுக்கலாம்.
//ராமலக்ஷ்மியின் “திரும்பி வந்த அம்பு” தலைப்பே நல்லா இருக்கு.
அதையே இந்தக் கதையின் தலைப்பா வச்சுக்கலாம்.//
நானும் ஒரு தலைப்பு சொல்லலாம் என்று ஆசைய ஓடிவந்தா இப்படியாகிப் போச்சு!
நானும் ஒரு தலைப்பு சொல்லலாம் என்று ஆசைய ஓடிவந்தா இப்படியாகிப் போச்சு!//
24 mani neram thandiduche ini yaru vara porangannu ninachen.
neengalum sollunga.
"ஸ்ஸப்பாஆஆ கண்ணை கட்டுதே"
இன்னும் ஒரு 24 மணி நேரம் முடிந்தது.
திரும்பி வரவில்லை
இறக்குவானை நிர்ஷன்.
அப்போ என்னுடைய
'திரும்பி வந்த அம்பு'தானே
தலைப்பு?
திரும்பி வந்த அம்பு'தானே
தலைப்பு?//
ithil enna santhegam.
Post a Comment