Wednesday, November 05, 2008

உடையால் வந்திருக்கும் பிரச்சனை.

பரிசல்காரனின் பதிவு அவர் யாரையும் அழைக்காமலேயே
தொடர் பதிவாகிவிடுகிறது.

பரிசல் அவர்களின் பதிவிற்கு தொடர் பதிவு போல்
(கருத்தில் கொஞ்சம் வித்தியாசமாக)
ஜோசப் பால்ராஜ் பதிவு போட்டிருக்கிறார்.


எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?

ஜோசப்பின் இந்தக் கேள்விக்கு என் பதில்கோவிலுக்கு செல்லும்போது பாரம்பரிய உடையில்
செல்வது நல்லது என்ற மனப்பான்மை நம்மவர்களுக்கு
இல்லாமல் போய்விட்டது,எதையும் வற்புறுத்தினால்தான்
ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை. முறையாக வளர்க்காத
பெற்றோர்கள் இவை முக்கிய காரணிகள்.


என் பெண்ணிற்கு பேண்ட் போட்டாத்தான் பிடிக்கும்
என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அம்மாக்கள்
இருக்கிறார்கள். பேண்டும் போடட்டும். கோவிலுக்கு
செல்லும்போது இப்படித்தான் இருக்கவேண்டும்
என்று சொல்லிக்கொடுக்கத்தவறியதனால்தானே
கோவில்கள் கண்டீஷன் போடுகிறார்கள்.கோவிலுக்கு சேலைதான் கட்டி வரவேண்டும் என்று
நாகரீக உடைகளுக்கு கோவில்கள் தடா போட்டு
வைத்திருக்கிறார்கள்.

இலங்கையில் கண்டி கோவிலில் ஸ்லீவ்லெஸ்
டாப் அணிந்து உள்ளே செல்லக்கூடாது. ஆண்கள்
பெர்மூடாஸ் அணிந்திருந்தால் அனுமதி மறுக்கப்படும்.
பெர்மூடாஸ் அணிந்திருப்பவர்கள் மேலே லுங்கி
கட்டிக்கொண்டு வருவார்கள்.சுடிதார் போட்டால் நல்லது. ஜோசப் பால்ராஜ் கூறியிருப்பது போல
பாதுகாப்பான, அருமையான உடையாக இருந்தாலும்
சில கோவில்கள் சுடிதாரை கோவில்கள் அனுமதிக்க
மறுப்பதிலும் சில காரணங்கள் இருக்கின்றன.

1.சுடிதாரில் ஸ்லீவ் லெஸ் போட்டு வருவார்கள்.
(நம்புங்கள் இங்கே இருக்கும் சிலுக்கூர் கோவிலுக்கு
ஸ்லீவ் லெஸ் அணிந்து வந்திருந்த பெண் அதன்
மேல் மெலிதான துப்பட்டாவை மூடிக்கொண்டு
கோவிலுக்கு வந்திருந்தார்).


2. ஜீன்ஸ்ற்கு மேல் முழங்கால் வரை சுடிதார்
அணிவது இப்போதை ட்ரெண்ட். இதை
சுடிதார் அணிந்திருக்கிறார் என்று சொல்வீர்களா?
அல்லது ஜீன்ஸ் அணிந்திருக்கிறார் என்று சொல்வீர்களா?

3. போட்டு தைத்தார்களா? தைத்து போட்டார்களா?
என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு
டைட்டாக உடையணிந்து வருகிறார்கள்.

கோவிலுக்கு போகிறோம் என்று தெரிந்தாலும்
அன்று ஒருநாள் சுடிதாரோ புடவையோ
அணிந்தால் இவர்களுக்கு என்ன குறைந்துவிடும்?
ஸ்லீவ்லெஸ், முழங்கால் தெரிய ஸ்கர்ட்
ஆகியவை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது
என்று சுயகட்டுப்பாடு இல்லையே இன்றைய
தலைமுறையினருக்கு. அனைவரும் இப்படியே
என்று சொல்லவில்லை.

அழகாக பாவடை, தாவணி அணிந்து தலை நிறைய
மல்லி்கை பூ வைத்து சாமி கும்பிட வந்தால்
அந்த அம்பிகையே நேரில் வந்தது போல் இருக்காது!

சேலை நம் பாரம்பரிய உடை. இந்திய பண்பாட்டுச்சின்னம்.
அதனால்தான் கோவில்கள், திருமணங்கள், பூ்ஜைகளின்
போது சேலை அணியவேண்டுமென்று வைத்தார்கள்.

சேலை அணிந்தால்தான் சாமி கும்பிட அனுமதிக்க
முடியும் என்று கோவில்களில் சொல்கிறார்கள்
என்றால் அவர்கள் எந்த அளவு நொந்து போயிருக்க வேண்டும்!

பரிசல் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது.
கேரளாவின் பெரும்பாலான கோயில்களில்
சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத்
தடையுண்டு. அப்ப, மனைவியை
கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால்,
சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச்
சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...சேலை மாற்றி - இதில் பிரச்சனை நிறைய.

பெர்மூடாஸ் அணிந்திருப்பவர்கள் மேலே லுங்கி
கட்டிக்கொண்டு வருவார்கள் என்று மேலே சொல்லியிருந்தேனே
அது மாதிரி சுடிதாரின் மேலே புடவை போல் சுற்றிக்
கொள்ள வேண்டியதுதான்.
ஸ்லீவ் லெஸ் சுடிதாரின் மேல் ஜார்ஜெட்
துப்பட்டா போட்டு மூடிக்கொண்டு வருகிறார்களே
அது மாதிரி.


//சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே
செய்யும் போது அதை தடுக்க வேண்டியது
அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.//

தவ்றுன்னு தெரிஞ்சு கவர்ச்சியா ட்ரெஸ் செஞ்சுகிட்டு
வர்றவங்க இருக்கும்போது கோவில்கள் சேலைதான்
அணியனும்னு சட்டம் போட்டதில் தப்பே இல்லை.

கோவி்லுக்கு செல்ல முறையான உடையா சுடிதாரை
நீதிமன்றம் அறிவிச்சு அந்த உடையையும் மக்கள்
முறையா
அணிந்து கோவிலுக்கு வரணும்னு சட்டம் போட்டாத்தான்
உண்டு.

//கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட
இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச்
செய்யணும் என வேண்டுகிறேன்//

மக்களும் மதத்தை மதித்து, ஆண்டவனுக்கு
மரியாதை கொடுத்து உடை அணியணும்னு
சட்டம் நீதிமன்றம் போடாட்டியும் தனக்குத்தானே
சட்டம் போட்டுகிட்டு கட்டாயம் அதை
கடைபி்டிச்சாங்கன்னா பிரச்சனை ஏது?

அது சரி. இந்தச் சட்டம் கேரளாவில
மட்டும்தான் இருக்கு்.(புடவை கட்டிக்கொண்டு
பைக்கில் பயணிக்க கூடாது என்கிற சட்டம்)
நம்ம ஊருக்கும் இந்தச் சட்டம் எப்ப வரும்???

கண்டிப்பா வரணும்னு ஆண்டவனை
பிரார்த்திக்கிறேன்.

*******************************************

இந்தப் பதிவை எழுதியிருப்பதால் நான்
ஏதோ சுடிதாருக்கு எதிரி என்று நினைக்க
வேண்டாம்.

உடுத்தும் உடையில் கண்ணியம் தேவை.
கோவிலுக்கு செல்லும்போது கண்ணியமான
உடை அணிந்து செல்லவேண்டும் என்பதே
என் தாழ்மையான கருத்து.

சுடிதாரோ, சேலையோ அதை கண்ணியமாக
உடுத்தினால் பிரச்சனை இல்லை.

சேலைதான் கட்டவேண்டும் என்று எந்த
சாமி சொன்னது என்று கேட்டதற்குத்தான்
பதிலே தவிர சேலைதான் கட்டவேண்டும்
என்றோ சுடிதார்தான் போட வேண்டுமென்றோ
கூறவில்லை.

32 comments:

ஜோசப் பால்ராஜ் said...

//அழகாக பாவடை, தாவணி அணிந்து தலை நிறைய
மல்லி்கை பூ வைத்து சாமி கும்பிட வந்தால்
அந்த அம்பிகையே நேரில் வந்தது போல் இருக்காது! //

அக்கா,
இப்படிச் சொல்லிக்கிட்டுதான் நிறையாப் பேரு அம்பாளப் பார்க்காம, பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க.

புதுகைத் தென்றல் said...

இப்படிச் சொல்லிக்கிட்டுதான் நிறையாப் பேரு அம்பாளப் பார்க்காம, பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க.//

அதுவும் உண்டு. இப்பன்னு இல்ல எப்பத்திலிருந்தோ இது நடந்துகிட்டேதான் இருக்கு.

ஜோசப் பால்ராஜ் said...

வேண்டுமாணால் கோயில்களில் நாகரீகமான ஸ்லீவ்லெஸ் அல்லாத நல்ல சுடிதார்களையும் அனுமதிக்கலாம். சேலையோடு, சுடிதாரையும் கோயில்களில் அனுமதிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

Jeeves said...

ஜோசப் அண்ணேன் மாதிரி பெரியாளுக சொன்னா சரியா இருக்கும்னு தோனுது. நீங்க சொல்றதும் சரின்னு தோனுது.


உடைக் கலாச்சாரம் இயல்பிலே இருந்திட்டா ( பெற்றோர்களே அப்படி இல்லாதப்ப குழந்தைகள் எப்படி வளரும் ?) இந்த பிரச்சினை இருக்காதுங்கறது சரிதான் போல

புதுகைத் தென்றல் said...

வேண்டுமாணால் கோயில்களில் நாகரீகமான ஸ்லீவ்லெஸ் அல்லாத நல்ல சுடிதார்களையும் அனுமதிக்கலாம். சேலையோடு, சுடிதாரையும் கோயில்களில் அனுமதிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.//

இடத்தைக்கொடுத்தா மடத்தை பிடுங்கினா மாதிரி ஆகிடக்கூடாது. பண்பாட்டை காப்பற்றனும்னு மக்களுக்கு தானவே வரணும்.

புதுகைத் தென்றல் said...

உடைக் கலாச்சாரம் இயல்பிலே இருந்திட்டா இந்த பிரச்சினை இருக்காதுங்கறது சரிதான் போல//

ஆமாம் ஜீவ்ஸ்.

பெத்தவங்க சரியில்லாட்டி என்ன செய்ய முடியும்.

புதுகைத் தென்றல் said...

பெற்றோர்களே அப்படி இல்லாதப்ப குழந்தைகள் எப்படி வளரும் ?)

நல்லா வெக்கம் வர கேட்டிருக்கீங்க ஜீவ்ஸ்.

ராமலக்ஷ்மி said...

தென்றல் நான் இன்னும் பரிசல்காரர், ஜோசப் பால்ராஜ் ஆகியோரின் பதிவுகளைப் படிக்கவில்லை. உங்கள் பதிவினைப் படித்ததில் இருந்து சொல்கிறேன். ஜோசப் அவர்களின் இரண்டாவது பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் சுடிதாரும் ஏறத்தாழ பாரம்பரிய உடையின் அந்தஸ்தைப் பெற்று விட்டது.சிட்டியில் மட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஹை ஸ்கூல் பள்ளி யூனிஃபார்ம் கூட பாவடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறி பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. பாரம்பரியம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் சரியே. எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சுடிதார் ஒத்துக் கொள்ளப் பட முடியாத ஒரு உடை இல்லை.

//சில கோவில்கள் சுடிதாரை கோவில்கள் அனுமதிக்க
மறுப்பதிலும் சில காரணங்கள் இருக்கின்றன.//

நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்களைப் பார்த்தேன். அப்படியெல்லாம் உடை அணிபவர்கள் சேலை அணியும் போது மட்டும் ஸ்லீவ்லெஸ் போட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மொத்தத்தில் சட்ட திட்டம் இதெல்லாம் தாண்டி கோவிலுக்காவது கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வருமேயானால் கோவில் நிர்வாகமும் இப்படியெல்லாம் வற்புறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாது.

புதுகைத் தென்றல் said...

ஆனால் சுடிதார் ஒத்துக் கொள்ளப் பட முடியாத ஒரு உடை இல்லை//

ஆமாம் ராமலக்ஷ்மி,
அதனால்தான் நம்ம ஊரில் சேலை அணிந்தால்தான் கோவிலுக்கு வரலாம்னு சட்டம் வரல.
கேரளாவில் மட்டும்தான் அந்த சட்டம் இருக்கு.

புதுகைத் தென்றல் said...

சேலை அணியும் போது மட்டும் ஸ்லீவ்லெஸ் போட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?//

எதுவும் நிச்சயமில்லை. சுயகட்டுப்பாடு ஒன்றுதான் நிச்சயம்.தேவையும்
அதுதான்.

புதுகைத் தென்றல் said...

மொத்தத்தில் சட்ட திட்டம் இதெல்லாம் தாண்டி கோவிலுக்காவது கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வருமேயானால் கோவில் நிர்வாகமும் இப்படியெல்லாம் வற்புறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாது.//

நான் சொன்னதும் இதேதான். :)))))))))))

சந்தனமுல்லை said...

உடை என்பது என்னை பொறுத்தவரை அடுத்தவர் கண்களை உறுத்தக் கூடாது. அதேசமயம் நமது இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக,அதாவது comfort-ஆக இருக்க வேண்டும். இதில் ஏன் நீ இதுதான் போட்டுகிட்டு வரணும்னு force செய்வது....:(

//அக்கா,
இப்படிச் சொல்லிக்கிட்டுதான் நிறையாப் பேரு அம்பாளப் பார்க்காம, பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க.//

:-))

ராமலக்ஷ்மி said...

//நான் சொன்னதும் இதேதான். :)))))))))))//

ஆமா எப்பவும் வேற வேற சொல்ற மாதிரி நினைத்துக் கொண்டு ஒரே கருத்தை சொல்வது நமக்குப் புதுசில்லையே::))))!

ராமலக்ஷ்மி said...

பதிவின் பிற்சேர்க்கைக்கு நன்றி. இப்போது உங்கள் கருத்து மேலும் தெளிவானது.

வெண்பூ said...

நல்ல கருத்துக்கள் தென்றல்.. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.. "திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது" என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..

மக்களாக பார்த்து உணராத வரை எத்தனை சட்டம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. சேலையையே எவ்வளவு கவர்ச்சியாக உடுத்துவதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. (ஸ்லீவ்லெஸ், லோ ஹிப், டிரான்ஸ்பரன்ட் இப்படி) :(

புருனோ Bruno said...

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்

டிஸ்கோதே, ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள டிரஸ் கோடை கேள்வி கேட்காமல் கடைபிடிப்பவர்கள், கோவில், கல்லூரிகளில் மட்டும் ”உடை விதி”யை எதிர்ப்பது ஏன்

--

//உடுத்தும் உடையில் கண்ணியம் தேவை. கோவிலுக்கு செல்லும்போது கண்ணியமான உடை அணிந்து செல்லவேண்டும் என்பதே
என் தாழ்மையான கருத்து.//

வழிமொழிகிறேன்

பரிசல்காரன் said...

//போட்டு தைத்தார்களா? தைத்து போட்டார்களா?
என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு //

கிரேட்!

har said...

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வலைப்பதிவுக்கு புதியவன் எனவே சிறியவன்,
நீங்கள் கலாச்சாரம் என்று கூறும் புடவை கட்டுதலை, ஏன் சில அல்ல பல பெண்கள் வெறுக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்களுடைய சமுகம் முறையாக கற்றுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம், நீங்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும், இன்று நீங்கள் மனநின்மதி, அமைதி தேடி ஆலயம் செல்ல்கையில் அங்கு மேனகை ரம்பைகளின் இடையூறு அது தங்க புடவை கட்டுறது பதிவு செய்தீர்கள், எமது தமிழ் கலாச்சார விழுமியங்களை (நான் மூடநம்பிக்கைகளை கூற விழையவில்லை )அரிச்சுவடி முதல், பட்டியல் இட்டு இவ்வாறு ஒரு சமூகம் வாழ்ந்தது என 2030 ஆம் ஆண்டு பித்திகதி இட்டு வரப்போகும் விழுமியங்களை பெரிதும் விரும்பாத சந்ததிக்கு தெரியப்படுத்த வலைப்பதிவு எழுதுங்கள் !!!!!!!!
தயவு செய்து ஒரு மணிநேரத்துக்கு 300ரூபா செலவழிச்சு இணையம் பயன்படுத்தும் எனது பதிவை நிச்சயம் பதிவு செய்யுங்கள்,ஏனெனில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

ஆயில்யன் said...

மீ த உள்ளேன் தங்கச்சி!


(அட்டெண்டன்ஸ் போட்டாச்சுப்பா!)


மீ த எஸ்கேப்பு தங்கச்சி!


:)))

புதுகைத் தென்றல் said...

ஏன் நீ இதுதான் போட்டுகிட்டு வரணும்னு force செய்வது//

வாங்க சந்தனமுல்லை,

தன்னொழுக்கம் இல்லாத சிலரால்தான்
இப்படி கட்டாய படுத்த வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

புதுகைத் தென்றல் said...

ஆமா எப்பவும் வேற வேற சொல்ற மாதிரி நினைத்துக் கொண்டு ஒரே கருத்தை சொல்வது நமக்குப் புதுசில்லையே:இதுக்கு டபிள் இல்ல இல்ல ட்ரிபிள் ரிப்பீட்டு சொல்லிக்கிறேன் ராமலக்ஷ்மி.

:))))!

புதுகைத் தென்றல் said...

இப்போது உங்கள் கருத்து மேலும் தெளிவானது.//

நன்றி

புதுகைத் தென்றல் said...

மக்களாக பார்த்து உணராத வரை எத்தனை சட்டம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.//

சரியா சொன்னீங்க வெண்பூ.

//சேலையையே எவ்வளவு கவர்ச்சியாக உடுத்துவதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. (ஸ்லீவ்லெஸ், லோ ஹிப், டிரான்ஸ்பரன்ட் இப்படி)//
:((((((((((((((

புதுகைத் தென்றல் said...

டிஸ்கோதே, ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள டிரஸ் கோடை கேள்வி கேட்காமல் கடைபிடிப்பவர்கள், கோவில், கல்லூரிகளில் மட்டும் ”உடை விதி”யை எதிர்ப்பது ஏன்//

யோசிக்க வேண்டிய விசயம் தான்.
;(

புதுகைத் தென்றல் said...

வாங்க பரிசல்,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

முதல் வருகைக்கு நன்றி ஹர்,

தாங்கள் கேட்ட பதிவு உடனடியாக போடக்கூடிய பதிவா??!! தங்களின் கூற்று பலரை யோசிக்க வைத்திருக்கும்.

அதைப் பதிவாகப் போடப்போனால் “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட “ கதையாகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் நண்பரே.

புதுகைத் தென்றல் said...

ஆஹா தம்பியண்ணா,

என்னதிது?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துளசி கோபால் said...

ஒரு மூணு வருசம் முந்தி இந்த உடை அலங்கார விசயத்தைப் பத்திப் போட்ட பதிவு

இங்கே பாருங்க


ஆமாம். இப்ப ப்ளவுஸ்கள் எல்லாம் பின்னாலே வெட்டவெளியா இருக்கும் ஃபேஷன்லே வருதே. அப்ப அவுங்க கோயிலுக்கு ஒரு பெரிய டவல் கையோடு கொண்டு போவாங்களா?

புதுகைத் தென்றல் said...

ஆமாம். இப்ப ப்ளவுஸ்கள் எல்லாம் பின்னாலே வெட்டவெளியா இருக்கும் ஃபேஷன்லே வருதே. அப்ப அவுங்க கோயிலுக்கு ஒரு பெரிய டவல் கையோடு கொண்டு போவாங்களா?//

குட் கொவிஸ்டின் டீச்சர்.

முரளிகண்ணன் said...

:-))))))))))

மங்களூர் சிவா said...

//
"உடையால் வந்திருக்கும் பிரச்சனை."
//

பிரச்சனைய எதுக்கு ஜாஸ்தி சுமக்கணும்னுதான் உடைய குறைச்சிக்கிறாங்களோ!?!?!?

:)))))))))

Known Stranger said...

This rule should not come into tamil nadu. If govt brings this rule it means govt is prohibiting the dravidar - parambariya saree. how can tamil arvalargal like the latest puesudo tamil patrons accept this . I am tamil cultural supporter and cant accept gals to wear chudithar which is not tamil dress. kudavay kudathu.

tamil udupu than uduthanum. ellati intha manthargal ellorum tamil nesipavar alla.... sellai katum penuku chudithar etharku puratchi tamizhan padirukaru.

Yentha oru vetru kalachara udaiyayum tamil pengal podavay kudathu .. athayum meer potangana nai mayniku sakadila urina pani mathiri nama ellorum arikai vitay / blog potu nama pathivaiyum karuthaiyum anitharama sollanum appo than nama tamil arvalargal ellati tamil manoda kalacharatha mathikatha traitors nam.