Wednesday, December 10, 2008

கொசுவத்தி பாகம் - 2

ஆனா! மேனேஜர்தான் செம டென்ஷனில்
இருந்தார்!!!! அவங்க கூட இருந்தவங்க
அதைவிட டென்ஷனில்!!!!!!!!!

என்னாச்சு????

(அடுத்த பதிவுல சொல்றேன்) அப்படின்னு போன
பதிவில் சொல்லியிருந்தேன். அந்த சஸ்பென்சை
உடைச்சிடறேன்.

அன்னைக்கு சாயந்திரம் நடக்க விருந்த மீட்டிங்ல்
சமர்பிக்க வேண்டிய ப்ரசண்டேஷன்ஸ், முக்கியமான
டாக்குமெண்ட்ஸ் இருந்த மேனேஜரோ பெட்டியை
அந்தக் காரிலேயே விட்டுட்டாங்க. அம்மாம் பெரிய
மும்பையில் அந்தக் காரை எப்படி கண்டு பிடிக்கறதுன்னு
ஒரே டென்ஷன்.

உடனே நான் அயித்தான் கிட்ட அந்தக் காரோட
நம்பரை சொல்லி டாக்ஸி ஸ்டாண்டுல போய்
பார்க்கச் சொல்லலாமேன்னு கேட்க, அவரும்
மேனேஜர் கிட்ட சொன்னதும் அவர் உடனே
ஆளை அனுப்பி பாத்தா வண்டி அங்க இருந்து
அந்த பொட்டியும் கிடைச்சது. :)))

ஒரே பாராட்டு மழைதான். சரி என்னை
ஏன் வரச்சொன்னாரு? அதுதான் இந்தக்
கொசுவத்தி போட முக்கிய காரணம்.

அயித்தான் அப்ப வேலை பார்த்துகிட்டு இருந்தது
ஹிந்துஸ்தான் லீவரில். அங்கே ஒரு பாலிசி
உண்டு.

உங்க குடும்பம் சந்தோஷமா இருந்தாத்தான்
நீங்க நல்லா வேலை பார்க்க முடியும் என்று
அங்க வேலை பார்க்கறவங்களுக்கு அடிக்கடி
சொல்வாங்க. கணவர் டார்கெட் அச்சீவ் செய்தால்
FAMILY MEET ஏதாவதொரு சுற்றுலா தலத்தில்
குடும்பத்தினருடன், BEST PERFOMANCE விருது
வென்றால் அந்த நபரின் குடும்பத்தின்ருடன்
மட்டும் ப்ரத்யேகமாக BUSINESS MANAGER
அவர்களுடன் 5 நட்சத்திர ஹோட்டலில்
விருந்து என குடும்பத்தை முன்னிருத்துவார்கள்.

(தங்க்மணியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால் அலுவலகத்தில்
ஒழுங்காக வேலைசெய்ய முடியாது, அதனால்
டார்கெட் அச்சீவ் ஆகாது இது நிர்வாகத்தை
பாதிக்குமே!!)

அப்போது கணவரின் வேலையால்
தங்க்ஸிற்கு இருக்கும் பிரச்சனைகள்
ஏதும் இருக்கா என்று அதிகாரி கேட்டு
அறிந்துக்கொள்வார். இதனால் வீட்டிலும்
நிம்மதி அதனால் வேலையும் நிம்மதியாக
நடக்கும்.

என்னை அங்கே அழைத்ததும் இது போன்றதொரு
சந்திப்பிற்காகத்தான். அன்று அந்த மேனேஜர்
எனக்கு சொல்லிக்கொடுத்த பல நல்லவிடயங்கள்,
அயித்தான் 5 முறை BEST PERFOMANCE விருது,
சார்க் நாடுகளிலேயே BEST PERFOMANCE விருது
1 முறை, ஒவ்வொரு வருடமும் டார்கெட்டிற்கு
மேல் விற்பனை என்று அசத்த காரணம் என்று
இன்றளவும் அயித்தான் சொல்வார்.



திருமணமுடிந்து ஹைதைக்கு வந்த உடன்
தன் வேலை(Nature of job)எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.
Year end pressure
monthly target pressure,
இப்படி பல எனக்கு புரிந்தது. நான் கொடுக்க
வேண்டிய ஒத்துழைப்பும் தெரிந்ததும். நானும்
வேலைக்கு சென்றிருந்ததால் வேலையில் இருக்கும்
கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததும் உதவியாய் இருந்தது.

சரி இதெல்லாம் இங்கே எதற்கு? வலையுலக
நண்பர்களுக்கு என் வேண்டுகோ்ள் இது.

திருமணம் நிச்சயம் ஆகும்பொழுதும் சரி
அதற்கு பிறகும் சரி மாப்பிள்ளை என்ன வேலை
பார்க்கிறார் என்று தெரிந்தாலும் அந்த வேலையின்்
தன்மை, கஷ்ட நஷ்டங்கள் தெரிவதில்லை. நீங்கள்
உங்கள் தங்கமணியிடம் இதை அவர்கள் புரியும்
விதத்தில் சொல்லி ஒரு புரிந்துகொள்ளும் தன்மையை
ஏன் வளர்க்கக்கூடாது? தங்கமணியின் கஷ்டங்கள்
ரங்கமணிக்கும், ரங்கமணியின் கஷ்டங்கள் தங்கமணிக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கையில் ப்ரச்சனை ஏது?

பொட்டி தட்டும் வேலைன்னு நாம சொல்றோம். 8 மணிநேரம்
தொடர்ந்து அந்தக் க்யூபிளில் ரங்கமணி படும் கஷ்டம்
சொல்லாவிட்டால் எப்படி தெரியும்?

தங்கமணியும் தனது கஷ்டத்தைச் சொன்னாத்தான்
ரங்கமணிக்கு புரியும்.

யோசிச்சு பாருங்க. நான் சொல்வது சரின்னா
செய்லபடுத்தி பாருங்க.

ஆங்கிலத்தில் ஒரு வசனம் ஞாபகம் வருது:

BEING ABLE TO SURVIVE IT DOES'T MEAN
THAT IT WAS EVER OK!!


************************************
ராமசாமி( அந்த மானேஜர்) சாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
இன்றளவும் நீங்கள் சொல்லிக்கொடுத்ததை விடாமல்
கடைபிடிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்.
தொடர்கிறது இந்த பந்தம்.

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\(தங்க்மணியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால் அலுவலகத்தில்
ஒழுங்காக வேலைசெய்ய முடியாது, அதனால்
டார்கெட் அச்சீவ் ஆகாது இது நிர்வாகத்தை
பாதிக்குமே!!)\\

மிகப்பெரிய உண்மை

இதை கண்டுகொண்டால் அது அருமையான நிற்வாகம்.

நட்புடன் ஜமால் said...

\\உங்கள் தங்கமணியிடம் இதை அவர்கள் புரியும்
விதத்தில் சொல்லி ஒரு புரிந்துகொள்ளும் தன்மையை
ஏன் வளர்க்கக்கூடாது? \\

ஏன் கூடாது.

நல்ல விஷ்யம் தானே எல்லோரும் செய்யலாம்.

pudugaithendral said...

இதை கண்டுகொண்டால் அது அருமையான நிற்வாகம்.//

ஆமாம் ஜமால்

pudugaithendral said...

நல்ல விஷ்யம் தானே எல்லோரும் செய்யலாம்.//

ஆஹா சந்தோஷம்

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போல கற்றதை அக்கறையுடன் மற்றவருக்கும் சொல்லும் பதிவு. வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

)))

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்திற்கு மிக்க நன்றி

pudugaithendral said...

)))//

???????????? என்னதிதிது சிவா?

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு..அனுபவ பகிர்வு!

மங்களூர் சிவா said...

\\(தங்க்மணியின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்,
வீட்டில் நிம்மதி இல்லாவிட்டால் அலுவலகத்தில்
ஒழுங்காக வேலைசெய்ய முடியாது, அதனால்
டார்கெட் அச்சீவ் ஆகாது இது நிர்வாகத்தை
பாதிக்குமே!!)\\

கண்டிப்பாக.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அயித்தான் கிட்ட அந்தக் காரோட
நம்பரை சொல்லி டாக்ஸி ஸ்டாண்டுல போய்
..............
அந்த பொட்டியும் கிடைச்சது. :)))





எல்லா இடங்களிலும் அயித்தானை நம்பித்தான் ஆக வேண்டும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அயித்தான் 5 முறை BEST PERFOMANCE விருது,
சார்க் நாடுகளிலேயே BEST PERFOMANCE விருது
1 முறை, ஒவ்வொரு வருடமும் டார்கெட்டிற்கு
மேல் விற்பனை என்று அசத்த காரணம்




ம். அசத்துங்க

pudugaithendral said...

நல்ல பதிவு..அனுபவ பகிர்வு!//

நன்றி சந்தனமுல்லை

pudugaithendral said...

கண்டிப்பாக.//

மொதோ முறையா ஒத்துகிட்டீங்களே சிவா.

நன்றி

pudugaithendral said...

எல்லா இடங்களிலும் அயித்தானை நம்பித்தான் ஆக வேண்டும்//

ஹா ஹா,

அவருக்கு எதிர்ல நாமளா சொன்னா நல்லா இருக்காது அப்படின்னுதான் அயித்தான் கிட்ட சொ்ன்னேன்.

pudugaithendral said...

ம். அசத்துங்க//

நன்றிங்க. மேனேஜர் சொல்லிக்கொடுத்தாலும் அதைக் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை, மனதை எனக்குக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றிகள்.