Tuesday, December 09, 2008

ஒரு கொசுவத்தி

எங்க அத்தை எனக்கு ஒரு ப்ரெண்டு
மாதிரி. அம்மாமாதிரி என்னியபாத்துக்குவாங்க.
நாத்தனார் பொண்ணுங்கற காண்டெல்லாம்
கிடையவே கிடையாது.


மாமா மனைவின்னாலும் அவங்க எங்கப்பாவுக்கு
தூரத்து உறவில் தங்கை. அப்பாவின் தங்கை அல்லது
அக்காவை பூவாஜி என்று ஹிந்தியில் கூப்பிடுவாங்க.
நானும் அவங்களை BUAJIன்னுதான் கூப்பிடுவேன்.
ரொம்ப பாசமானவங்க.

கையில சின்னதா கீறல் விழுந்திருந்தா
போதும், எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க!! :)
மாமா கூட பொறாமையில என் கூட
சண்டைக்கு வருவாங்க. :)))))

மாமாவும் அத்தையும் என்னை தன் சொந்த
மகளாதான் பாத்துகிட்டாங்க. (அவங்களுக்கு
ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க)

மாமா ஒரு அப்பா மாதிரி. ரொம்ப கண்டிப்பு
அதே சமயம் பாசமும் ஜாஸ்தி.


திருமணம் நிச்சயம் ஆனதும் இருவரும் சேர்ந்து
ஊரு சுத்துவதெல்லாம் இப்போது் சகஜம்.

எங்கவீட்டுல பயங்கர கட்டுப்பாடு. போன்
செஞ்சார்னா பேசக்கூடக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க
மாமா!!! (நான் அப்போ மும்பையில் இருந்தேன்)

இதுல இவர் ஒரு நாள் நான் வேலை பார்க்கும்
அலுவலகத்திற்கு போன் செஞ்சு,”இன்ன தேதியில்
எங்க கம்பெனி மீட்டிங் இருக்கு மும்பையில்,
எங்க மேனேஜர் உன்னைய பார்க்கணுமாம்!!!
தாதர் ரயில்வே ஷ்டேஷனுக்கு வந்திடு”
அப்படின்னு சொல்லிட்டாரு.

இதென்னடா கொடுமை? மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க பாப்பாங்க சரி,
அவங்க வேலை செய்யற கம்பெனி மேனேஜரும்
பாத்து ஓகே! சொல்லணுமா என்ன?
கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சே!
மாமா போகக்கூடாதுன்னு சொல்லிடுவாங்க,
நான் என்ன செய்யன்னு ஆயிரத்தெட்டு
யோசனையோடு குழம்பிக்கினு கிடந்தேன்!!!!


அம்மம்மா, தாத்தா, மாமா எல்லோரும்
பயங்கர ஸ்ட்ரிக்ட் இந்த விஷயத்தில்!!

வீட்டுல எதையும் மறைக்கும் பழக்கம்
எனக்குக் கிடையாது. யாராவது ஒருத்தருக்கு
நான் செய்யும் வேலை எல்லாம் தெரிஞ்சிருக்கும்.
இந்த மாதிரி போன் வந்ததும் பூவாஜிக்கிட்ட
சொன்னேன். ”என்ன செய்ய பூவா? போனா
மாமா கொன்னுடுவாரு. போகாட்டியும் தப்பு.
அவங்க மேனேஜர் பார்க்கணும்னு சொல்லியிருக்காரு!
என்ன செய்யட்டும்னு நீங்க சொல்லுங்க” அப்படின்னேன்.

அவங்களும் யோசிச்சிட்டு,”நீ பொய் சொல்லவில்லை!
என் கிட்ட உண்மையைச் சொல்லித்தானே போற!
போய்ட்டுவா!மாமாகிட்ட சொல்லவேண்டாம்.
அவங்க ஆபிசர் பாக்கணும்னு சொல்லியிருகார்னா
ஏதும் காரணம் இருக்கும். நீ போகாட்டி போனா
அவரைத் தப்பா நினைப்பாங்க”ன்னு சொல்லி
போகச் சொன்னாங்க.அந்தநாளும் வந்தது. தாதர் ரயில்வே ஷ்டேஷனில்
தேவுடு காத்துகிட்டு உக்காந்திருந்தேன்.
நம்ம நாட்டுல ட்ரெயின் சரியான நேரத்துல
வந்தா அது சரித்திரம். அன்றும் 2 மணி நேர
தாமதத்தில் ட்ரெயின் வந்தது.

அயித்தான் அவங்க மேனேஜர் மற்றும் அவங்க
தென்னிந்திய டீம்காரவுக எல்லோரும் வந்திருந்தாங்க.

“வாம்மா! உன்னை நாந்தான் பாக்கணும்னு
சொன்னேன். எங்க கூட வாஷி வரைக்கும் வா.
6 மணிக்கு எங்களுக்கு மீட்டிங் இருக்கு. அதுக்கு
முன்னாடி உன்னோட பேசிட்டு அனுப்பி வைக்கறேன்”
அப்படின்னு சொல்ல தலை சுத்தினுச்சு.

எனக்கு வெஸ்டர்ன் மும்பைதான் தெரியும். வாஷி
நி்யூ பாம்பேயில் இருக்கு. அங்கேர்ந்து நான்
எப்ப வீட்டுக்கு போய் சேர்றது!!!

பேசமுடியுமா? தாதரில் இருந்து கார் ஏற்பாடு
செய்திருந்தாங்க. நான்,அயித்தான், அவங்க
கூட வேலை பார்க்கிறவங்க 2 பேர் ஒரு காருல,
மத்தவங்க இன்னொரு காருல போனோம்.

என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், நாம்
ஏறுற வண்டி நம்பர் மொதல்ல பாத்து
வெச்சுக்குவேன். அன்னைக்கு
அந்த மேனேஜர் ஏறின வண்டி நம்பரும்
பாத்து வெச்சுகிட்டேன். (வழி தெரியாத
இடத்துல ஒழுங்கா இந்தக் கார்
அவங்களை ஃபாலோ செய்யுதான்னு
தெரிஞ்சுக்கலாமே!!)

நடுவுல திடும்னு அந்த வண்டியைக்
காணோம்!!! எனக்கு ஒரே டென்ஷன்.
கந்தா காப்பாத்துன்னு பயந்துகிட்டே
போனேன்.

ஆனா நான் போன கார் டிரைவர்
சரியா அவங்க கம்பெனி கஸ்ட் ஹவுஸில்
தான் வண்டியை கொண்டு போய்
நிப்பாட்டினார். எங்களுக்கு முன்னாடியே
மேனேஜர் வண்டியும் அங்கே இருந்துச்சு.
முகத்துல் கொஞ்சம் நிம்மதி வந்துச்சு
எனக்கு.

ஆனா! மேனேஜர்தான் செம டென்ஷனில்
இருந்தார்!!!! அவங்க கூட இருந்தவங்க
அதைவிட டென்ஷனில்!!!!!!!!!

என்னாச்சு????

(அடுத்த பதிவுல சொல்றேன்

12 comments:

சின்ன அம்மிணி said...

ஒருவேளை வழிதவறி வேற எங்காவது போயிட்டீங்களோ. ஸஸ்பென்ஸ் தாங்கலை.

அதிரை ஜமால் said...

\\எங்க அத்தை எனக்கு ஒரு ப்ரெண்டு
மாதிரி. அம்மாமாதிரி என்னியபாத்துக்குவாங்க.\\

ஆரோக்கியமான விஷயம்.

அதிரை ஜமால் said...

\\என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், நாம்
ஏறுற வண்டி நம்பர் மொதல்ல பாத்து
வெச்சுக்குவேன். அன்னைக்கு
அந்த மேனேஜர் ஏறின வண்டி நம்பரும்
பாத்து வெச்சுகிட்டேன்.\\

பெரிய டிடக்டீவா இருப்பிய போல

அதிரை ஜமால் said...

\\(அடுத்த பதிவுல சொல்றேன்)\\

ஏங்க - சீக்கிரம் சொல்லுங்கோ

புதுகைத் தென்றல் said...

ஸஸ்பென்ஸ் தாங்கலை.//

:)

புதுகைத் தென்றல் said...

பெரிய டிடக்டீவா இருப்பிய போல//

:)

புதுகைத் தென்றல் said...

ஏங்க - சீக்கிரம் சொல்லுங்கோ//

அடுத்த பதிவு வரும் காத்திருங்க.

ராமலக்ஷ்மி said...

//என்னாச்சு????//

எல்லோரையும் டென்ஷன்ல விட்டுட்டீங்களே:)?

நாகை சிவா said...

//நம்ம நாட்டுல ட்ரெயின் சரியான நேரத்துல
வந்தா அது சரித்திரம். அன்றும் 2 மணி நேர
தாமதத்தில் ட்ரெயின் வந்தது.//

அது எல்லாம் அந்த காலம்ங்க... இப்ப எல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுது..

என்னிக்காவது நாம் அவசரமான போனா அன்னிக்கு லேட்டா வரும்...

அத்தானை அயித்தான் னு இழுத்து தான் சொல்லுவீங்களோ ;)

புதுகைத் தென்றல் said...

எல்லோரையும் டென்ஷன்ல விட்டுட்டீங்களே:)?//

அச்சச்சோ, இதோ டென்ஷனை குறைச்சிடறேன்.

புதுகைத் தென்றல் said...

அது எல்லாம் அந்த காலம்ங்க...//

என் பதிவு 15 வருடத்துக்கு முந்திய நிகழ்வு பத்தியதுதாங்க.

ஆனாலும் இப்பவும் பெருசா நிலமை ஒண்ணும் மாறலை. சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு வரும்/போகும் ரயில்கள் தாமதமாகத்தான் வருது/போகுது.

:(

புதுகைத் தென்றல் said...

அத்தானை அயித்தான் னு இழுத்து தான் சொல்லுவீங்களோ //

:)))))))))))))))