Monday, December 08, 2008

அம்மாவும்! நானும்!

தலைக்குளித்து முடியை காயப்போட்டால்
ஓடி வந்து முடிக்கொள் கையைவிட்டு
அளைந்து கொண்டே இருப்பாள்.

தலைகோதும் விரல்களில் தாய்மை தெரிகிறது.

”ஏன்மா என்னை அம்மான்னு கூப்பிடறீங்கன்னு!!” கேட்டாலும்

அம்மா என்றழைத்தால் முகத்தில் அம்புட்டு பெருமை.

உடனே ஓடிவந்து கட்டிக்கொண்டாகவேண்டும். :)



”நான் என்ன எங்க அம்மாவீட்டுக்கு போறேனா”?
நீதான் அம்மாமாதிரி என்னிய பாத்துக்கணும்”

”நான் அம்மா! சரி!” அப்ப அண்ணா?

ம்ம் அண்ணா, அன்னபைய்யா! (annabayya)
(அப்படித்தான் அண்ணனை அழைப்பாள்)




சரி! அம்மா எனக்கு என்னென்ன செய்வீங்க?

நீங்க என்னைப் பாத்துக்கற மாதிரி?
நல்லா பாத்துப்பேன், நெய் தோசை செஞ்சு
கொடுப்பேன்!..... இப்படி பெரிதாக
போனது லிஸ்ட்.






பேசிக்கொண்டிருக்கும்போதே யோசனை வந்து
“ஆமா! இதெல்லாம் செய்யணும். ஆனா,
நான் ஸ்கூலுக்கு போயிடுவேனே!” அப்புறம்
எப்படி அம்மாவா இருந்து பாத்துக்கறது??!!

”ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து பாத்துக்கலாமே!”இது
annabayya.




ஸ்கூல் விட்டு வந்து டயர்டா இருக்கும்ணா,
ஹோம்வொர்க் கொடுத்தாங்கன்னா முடியாது.

ம்ம். இப்படி செய்வோம்! எனக்கு எப்பல்லாம்
லீவு வருதோ அப்பெல்லாம் நான் அம்மா!

அப்ப நான் நல்லா பாத்துக்க முடியும் பாருங்க!
என்ன சொல்ற annabayya? (கூட்டுக்கு ஆள்
வேறு :) )

வார இறுதிகளிலும், விடுமுறைகளிலும்
அம்மாவாக இருப்பதாக ஒப்பந்தம் போடப் பட்டது.




ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுது
குட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து
பக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.


தூங்கும்பொழுது பக்கத்தில் வந்து
கட்டிக்கொண்டு(அம்மா கட்டிபிடிச்சுக்கறாங்களாம்!!!!)
தான் தூங்கிப்போவாள்!!!


தனக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில்
நான் இப்ப அம்மா!” என்று சொல்லிக்கொள்வாள்.


மழலையர் பள்ளியில் படிக்கும்போது
ஒப்பந்தம் போட்டாள் மகள்.

இன்று 4ஆவது படிக்கிறாள்.

நேற்று அம்மாவின் தலைக்கு
வெந்தயம்,ஆம்லா,செம்பருத்தி பேக்
போட்டுக்கொண்டே மகனிடம் கேட்டேன்,
“ஏன் அன்னபையா! யாரோ
வீக் எண்ட் மற்றும் லீவின் போது தான்
தான் அம்மாவா இருக்கபோறதா? சொன்னாங்களே!
அது என்னாச்சு”?

சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்
கேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்
சொல்லுங்க” என்றான்.


”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி! என்று சொல்லிவிட்டு
அப்பாவிடம் ஓடிவிட்டாள். :((





இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!


வலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து
வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க.
முடிஞ்சப்ப போய் பாருங்க.

அம்மாக்களின் வலைப்பூக்கள்:

16 comments:

நிஜமா நல்லவன் said...

me the first?

மங்களூர் சிவா said...

/
”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி!
/

அதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க!!

மங்களூர் சிவா said...

/

ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுது
குட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து
பக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.


தூங்கும்பொழுது பக்கத்தில் வந்து
கட்டிக்கொண்டு(அம்மா கட்டிபிடிச்சுக்கறாங்களாம்!!!!)
தான் தூங்கிப்போவாள்!!!
/

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.

ஆயில்யன் said...

//சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்
கேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்
சொல்லுங்க” என்றான்.


”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி! என்று சொல்லிவிட்டு
அப்பாவிடம் ஓடிவிட்டாள். :((///


:))

நிஜமா நல்லவன் said...

/இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!


வலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து
வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க.
முடிஞ்சப்ப போய் பாருங்க.

அம்மாக்களின் வலைப்பூக்கள்:/

அட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா????? ஆனா படிக்க ரொம்ப நல்லாவே இருந்துச்சி...:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

க்யூட் :)

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

ரொம்ப நாளைக்கப்புறம் நீங்கதான்

me the first :)

pudugaithendral said...

அதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க!!//

நீங்கவேற அம்மா ஃப்ரீயா இருந்தாலும்
நான் பிசின்னுதான் சொல்லிப்பாங்க.

:)))

pudugaithendral said...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.//

நன்றி. ஆண்டவனுக்கும்.

pudugaithendral said...

வாங்க ஆயில்யன்,

வருகைக்கு மிக்க நன்றி.

pudugaithendral said...

அட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா????? //

எங்கம்மாவைப் பத்தி் எழுதணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். அப்படியே அம்மாக்களின் வலைப்பூவிர்கும் ஒரு அறிமுகமா இருக்கட்டுமேன்னு சேத்தேன்.

pudugaithendral said...

வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

அன்பு அம்மா பொண்ணாகி
குட்டிப் பொண்ணு அம்மாவாகி
அம்மம்மா..
பாசம் பார்த்து நெகிழ்ந்தது மனசு.

pudugaithendral said...

முத்துலெட்சுமி தன்னோட பதிவுல சொல்லியிருக்கற மாதிரி தங்களின் பின்னூட்டமும் ஒரு கவிதை ராமலக்ஷ்மி,

வருகைக்கும் மினி கவிதைக்கும் மிக்க நன்றி.

cheena (சீனா) said...

aakaa அருமை அருமை - பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்

மழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமே

pudugaithendral said...

பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்

மழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமே//

ஆமாம், சீனா சார்.