Tuesday, December 09, 2008

புலம்புவதற்கு அழைத்திருந்த முத்துலெட்சுமிக்காக ஒரு புலம்பல்

முத்துலெட்சுமி
டேக் போட்டு புலம்ப சொல்லியிருந்தாங்க.


மும்பையில் நடந்த கோரம் இனி எங்கேயும் நடக்கக்கூடாது.

அதற்கு நம்மாளான பங்களிப்பு என்ன?

//சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.// இப்படி முத்துலெட்சுமி சொல்லியிருந்தாங்க.

ஆமாம். நமக்கு எல்லாமே கஷ்டம். நாட்டுக்காக் நாம்
ஏதுமே செய்ய மாட்டோம். ஆனா ஏதாவது நடந்தா மட்டும்
குத்தம் சொல்வோம் இதுதானே மிஸ்டர். பொதுஜனம்.

சோதனைகள் நமக்காகத்தான் என்பதை உணர்ந்து நாம்
பூரண் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சந்தேகிக்கும்படி
யாரேனும் இருந்தால், பெட்டிகள் அனாதையாக கண்டால்
தகவல் தரவேண்டும். இதெல்லாம் நம்ம நாட்டில்
செய்வோமா? நம்ம வீட்டுல அல்லது நம்ம உறவுக்காரங்களுக்கு
பாதிப்பு ஏற்படாத வரை நமக்கு நஷ்டம் ஏதும் இல்லையே!
என்ற நினைப்புத்தான்.

நாங்கள் இலங்கையில் இருந்திருக்கிறோம். அங்கு சாலையில்
ஒவ்வொரு அடிக்கும் ஆயுதமேந்திய ராணுவத்தினரை
கொழும்பு நகரில் பார்த்திருக்கிறோம். வீட்டை
விட்டு வெளியே வந்தால் சோதனை சாவடிகள்
இருக்கும் என்று தெரியும். கையில் பாஸ்போர்ட்
இல்லாமல் வெளியே போகவே முடியாது.

சோதனைக்கு ஆகும் நேரத்தை உணர்ந்து
1 மணி நேரம் முன்னதாகவே கிளம்புவோம்.
நள்ளிரவு நேரங்களில் ப்ராயணங்களை தவிர்த்தல்
நலம். இவை நமக்கு கஷ்டமாக இருந்தாலும்
நம் நல்லதற்குத்தான் என்று மக்கள் உணர்ந்து
நடந்து கொண்டார்கள்.

இஸ்ரேல் ஒரு குட்டி நாடு. ஆனால் அந்த
நாட்டில் இருக்கும் பாதுகாப்பு பற்றி அத்தனை
பத்திரிகைகளும் எழுதுகிறார்கள். நாம் அவற்றைப்
படித்து ஏக்கப் பெருமூச்சு விடத்தான் முடியும்.


நம் நாட்டில் மட்டும் இதெல்லாம் எதுவும்
சாத்தியமில்லாமல் போவதற்கு காரணம்?
DONT CARE ATTITUDE என்று சொன்னால்
தவறில்லை.

மிஸ்டர்.பொதுஜனம் தான் இப்படி என்றால்?
நமது அரசாங்கமும் சொதப்பாலகத்தான் இருக்கிறது.
பதவிக்கு அடித்துக்கொள்வதிலும், சொத்து
சேர்ப்பதிலும் மட்டும்தான் நம்மவர்கள் கவனம்
செலுத்துகிறார்கள்.

செக்கிங் என்ற பெயரில் இங்கே நடப்பது
எல்லாம் ஒரு கண் துடைப்புத்தான்.
ஹோட்டல்களிலும், மால்களிலும்
இனி விமானநிலையங்கள்
போல் ஸ்கேனிங் வரவேண்டும்.
விமானங்களில்
எடுத்துச் செல்லத் தடை
விதித்திருக்கும் பொருட்கள் போல ஹோட்டல்,
மற்றும் பொது இடங்களிலும் இவைகளை
எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்.

முறைப்படுத்தப் பட்ட சோதனை,
அனைத்து மக்களுக்கு முறையான ஐடி
கார்ட் எல்லாம் ஒழுங்காக தரப்படவேண்டும்.

மேலைநாடுகளில் பிறந்த குழந்தைக்கு உடன்
பாஸ்போர்ட் தந்து விடுகிறார்கள். நம் நாட்டில்
60 வயதானாலும் ஐடி கார்ட் இல்லாதவர்கள்
பலர்.

பாஸ்போர்ட், ஐடி கார்ட், ரேஷன் கார்ட்
வழங்குவதில் இவர்கள் வைத்திருக்கும்
ஃபார்மலிடீஸை தளர்த்தி இவைகளில்
ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மற்றவை
கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

கோவில்கள், மால்கள், திரையரங்குகள்,
ஹோட்டலகள், வங்கிகள் இப்படி மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்
படவேண்டும்.

//வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.//

சரியாச் சொன்னீங்க முத்துலெட்சுமி!!!
எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

வங்கிகளில் கயிறு கட்டி வெச்சிருந்தாலும்
நம்ம ஆளுங்க கேஷியர் டேபிளில் கவுந்து
நின்னு பணம் கட்டினாத்தான் சந்தோஷமே.

முறையா நடந்துக்கணும்னு எண்ணமில்லாத
மிஸ்டர்.பொதுஜனத்தை அரசாங்கம்
அடாவடி சட்டம் போட்டாத்தான்
திருத்த முடியும்.

பாதுகாப்பு சோதனை கட்டாயம் நடக்கும்,
இஷ்டம் இருந்தா வீட்டை விட்டு வெளியே
வாங்க, கஷ்டம்னா வீட்டுக்குள்ளேயே
சிறைவாசம் இருங்கன்னு அரசாங்கம்
சொல்லணும்.

அதுக்கு முன்னாடி நாம செய்ய வேண்டியது
ஒண்ணு இருக்கு. ஆளுக்கு காசுப் போட்டு
நமது நாட்டின் பாதுகாப்புத்துறை பெரிய
ஆளுங்களை இஸ்ரேலுக்கு அனுப்பு
1 மாசம் ட்ரெயினிங்கிற்கு அனுப்பனும்.

புலம்ப நான் அழைப்பது:

பரிசல்காரன்,
ஜோசப் பால்ராஜ்
தாமிரா
ச்சின்னப்பையன்.
ஹரி

18 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்ட் (டாஆஆ)!

புதுகைத் தென்றல் said...

மீ த ஃபர்ஸ்ட்ட் (டாஆஆ)!//

ஆமாம் நீங்களேதான்.

அதிரை ஜமால் said...

நல்லா சொல்லியிருக்கீங்க

ம்ம்ம் ... நல்லா புலம்பியிருக்கீங்க...

அமுதா said...

கலக்கலா எழுதி இருக்கீங்க. நல்ல பாயிண்ட்ஸ்

புதுகைத் தென்றல் said...

ம்ம்ம் ... நல்லா புலம்பியிருக்கீங்க...//

:)

புதுகைத் தென்றல் said...

நல்ல பாயிண்ட்ஸ்//

நன்றி அமுதா

சந்தனமுல்லை said...

//ஆமாம். நமக்கு எல்லாமே கஷ்டம். நாட்டுக்காக் நாம்
ஏதுமே செய்ய மாட்டோம். ஆனா ஏதாவது நடந்தா மட்டும்
குத்தம் சொல்வோம் இதுதானே மிஸ்டர். பொதுஜனம்.
//

:-)

ஆயில்யன் said...

நல்ல பாயிண்ட்ஸ்!

நல்லா புலம்பியிருக்கீங்க.!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி சந்தனமுல்லை

புதுகைத் தென்றல் said...

நல்ல பாயிண்ட்ஸ்!//

:)

Hari said...

தங்கள் அழைப்பிற்க்கு நன்றி. என்னுடைய கருத்துக்களை இங்கே பதிந்திருக்கிறேன்.

http://hariinvalaipoo.blogspot.com/2008/12/blog-post.html

நானானி said...

நம்ம பொதுஜனத்துக்கு விதிமுறைகளும் மிறீனால் தண்டனைகளும் அரபுநாடுகளைப் போல் கடுமையாக இருந்தால்தான் நாடு உருப்படும். நல்ல கடும் பதிவு...அல்ல புலம்பல்.
புலம்பலை நிறுத்தி கிளம்பு!!!!

நாகை சிவா said...

அருமையான பல விசயங்களை மிக அழகான சொல்லி இருக்கீங்க....

ஸ்ரீலங்காவையும், இஸ்ரேலையும் வைத்து நம் நாட்டை ஒப்பிடுவது சரியாக எனக்குப்பட வில்லை.

இருந்தாலும் நீங்க கூற வரும் செய்தி கவனிக்கபட வேண்டிய நடைமுறை படுத்த வேண்டிய செய்தி...

தலைப்பில் எனக்கு ஒத்து கருத்து இல்லை. :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றிப்பா..
மிஸ்டர் பொதுஜனம்
எப்படியாச்சும் திருந்தனும்.. :)
நாடு நல்லா இருக்கனும்..

புதுகைத் தென்றல் said...

நல்ல கடும் பதிவு...அல்ல புலம்பல்.//

நன்றி நானானி

புதுகைத் தென்றல் said...

ஸ்ரீலங்காவையும், இஸ்ரேலையும் வைத்து நம் நாட்டை ஒப்பிடுவது சரியாக எனக்குப்பட வில்லை. //

வாங்க புலி,

அவங்க சின்ன நாடு என்பது எனக்கும் தெரியும். நம்மநாட்டுல ஒவ்வொரு மாநிலம், அதற்குத் தனி தலைமை இருக்கும்பொழுது அவங்க மாதிரி நாமளும் பாதுகாப்பு கொடுக்க முடியும்.

இங்கே ஒப்பீடு என்பதை விட ஒரு உதாரணமாகன்னு வெச்சுக்கிட்டு பாருங்க.

புதுகைத் தென்றல் said...

தலைப்பில் எனக்கு ஒத்து கருத்து இல்லை.//

இது ஒரு டேக் பதிவு என்பதால் எனக்கு முன்னாடி எழுதினவங்க மும்பை பயங்கரத்தை பல பேருல எழுதிட்டாங்க.
அதான் இப்படி ஒரு தலைப்பு வெச்சேன்
:))

புதுகைத் தென்றல் said...

மிஸ்டர் பொதுஜனம்
எப்படியாச்சும் திருந்தனும்.. :)
நாடு நல்லா இருக்கனும்..//
ஆமாம். அதுதானே நம்ம பிரார்த்தனை