எங்களை அழைத்துக்கொண்டு சென்று
FASHION BUG (colombo) துணிக்கடையின் முன்
நி்றுத்தினார் அயித்தான்.
இப்ப கிட்டத்துல பண்டிகைகூட கிடையாதே!
துணி எடுக்க எதுக்கு கூட்டிகிட்டு வந்திருக்காருன்னு?
யோசிச்சு கிட்டே போனோம்.
பசங்களுக்கு ஸ்விம் சூட் வாங்கினார்.
"லேடிஷ் செக்ஷன்ல உனக்கு ஸ்விம் ஸ்வீட்
பாத்துகிட்டு இரு, ஆஷிஷ் போட்டு பாத்ததும்
அங்கே வந்து செல்க்ட் செய்யறேன்னாரு!!!"
"என்னது ஸ்விம் சூட்டா? அட போங்கப்பா.
நீச்சல் அடிக்கணும்னு ஆசை இருந்தாலும்
அந்த ட்ரெஸ்ஸைப் பாத்து அடங்கிகிடக்க
வேண்டியதுதான். பசங்களுக்கு எடுத்தீங்கள்ல
சரி. போதும் உங்களுக்கு எடுத்துட்டு வாங்கன்னு"
சொன்னேன்.
"அட! ஸ்விம் சூட்னா கவர்ச்சியாதான் இருக்கணும்னு
சட்டமில்லை. கை வெச்சதும் இருக்கு.கால் முழுவது
மூடுற மாதிரி டைட்ஸ் போட்டு அதுக்கு மேல
ஸ்விம் சூட் கைவெச்சது போட்டுக்கோ" அப்படின்னு
சொல்லி கட்டாயமா வாங்கிக் கொடுத்த்தாரு.
எங்க வீட்டுக்கு கொஞ்சம் கிட்டத்துல இருக்கற
ராயல்காலேஜில் இருந்த ஸ்விம்மிங் பூலில்
மெம்பர்ஷிப் வாங்கிருந்தாரு. தினமும் பசங்களோட
அங்கே போய் நீச்சல் கத்துகலாம்னு திட்டம்.
அயித்தான் ஓரளவுக்கு நல்லாவே நீச்சலடிப்பாரு. பசங்களுக்கு
பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுத்தாலும்
மேலதிக பயிற்சி + பயம் போக நாமும் கூட
இருந்தா நல்லதுன்னு இந்தத் திட்டம்.
தீர்த்தக்கரை பாவி மாதிரி உக்காந்திருக்கக்கூடாதுன்னு
என்னியையும் தண்ணில இறக்கிவிடுறாரோன்னு
நினைச்சேன்.
விடலியே! பசங்களுக்கு கோச் சொல்லிகொடுக்க
எனக்கு அயித்தானே கோச் ஆயிட்டாரு.
(இதுதான் அந்த ராயல் காலேஜ் நீச்சல் குளம்)
முதல் நாள் மூச்சை தம்பிடிச்சு உடலை மிதக்க
வைக்கக்கூட என்னால் முடியவில்லை. பயம்!
தரையில் விழுந்தால் பரவாயில்லை. தண்ணீருக்குள்
விழுந்தால்??!!
(இலங்கைக்கு போன புதுசு)28
வயசுல இதெல்லாம் தேவையா? அப்படின்னு
யோசிக்கும்போது அங்கே நீச்சல் பழக வருபவர்களை
பாக்கும்போது நாமளும் கத்துகிட்டா என்ன?ன்னு
தோணுச்சு.
ஒரு முறை பெண்களுக்கே உரித்தான்
பிரச்சனைக்காக கைனகாலஜிஸ்டை
பார்க்கவேண்டியிருந்தது. வயிற்றுவலி,
இடுப்புவலிக்கு நீச்சல் செஞ்சா நல்லதுன்னு
சொல்ல, விடக்கூடாதுன்னு கத்துகிட்டேன்.
தினமும் அயித்தான் சொல்லிக் கொடுத்தாங்க.
"பாருங்க அம்மாவும் செய்யறாங்கன்னு!"
பசங்களுக்கும் சொல்ல அவங்களும் கத்துக்க
ஆரம்பிச்சாங்க.
தண்ணீரில் இறங்க பயந்து கொண்டிருந்த நான்
Floating, Dolphin stroke எல்லாம் அடிக்க
ஆரம்பிச்சேன். :))) சின்ன அளவுல டைவ்
அடிக்கவும் கத்துகிட்டேன்.
ஆனந்தமா நீந்தும் போது யோகா செஞ்ச மாதிரி
உடம்பும் மனசும் லேசாகிடுது. ஆஷிஷும்
நானும் போட்டி போட்டுக்கொண்டு நீந்துவோம்.
ட்யூ்ப் ரிங்கில் இருந்த படி அம்ருதாவும்,
அயித்தானும் நீந்து வார்கள்.
சில நேரம் நீச்சல், சி்ல் நேரம் விளையாட்டுன்னு
அந்த ஒரு மணி நேரமும் இனிமையா இருக்கும்.
பலவந்தமா தண்ணியில இறக்கி எனக்கு நீச்சல்
கத்து கொடுத்த என் குரு இப்போ இடம் பெயர்ந்து
(குருப்பெயர்ச்சியின் தாக்கமாக இருக்குமோ!!)
வண்டி ஓட்டச் சொல்லித் தரப்போறாரு என்பதை
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொடுக்க
வேண்டும். :)))))))))))))
(இரண்டும் அவரோட விருப்பமான உணவு)
17 comments:
வாழ்த்துக்கள் தென்றல்...
ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக்கு அயித்தானும் காரணம்ன்னு அழகா சொல்றீங்க. :)
உங்க ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.
அதே சமயம், இந்த ட்ரைவிங் மட்டும் ஒரு ட்யூட்டர் கிட்டே கத்துக்கிட்டீங்கன்னா நல்லது.
அனுபவம் பேசுது:-)
புதுசு புதுசா கத்துகிட்டு கலக்குங்க.. வாழ்த்துக்கள். ரொம்ப நல்ல விஷயம் இது. புதுசு புதுசா கற்றூக் கொள்வது நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும்
நன்றி முத்துலெட்சுமி,
ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக்கு அயித்தானும் காரணம்//
ஆமாங்க.
சுடர் விளக்குக்கூட தூண்டுகோள் வேணும். அயித்தான் கொடுக்கற ஊக்கம் எனக்கு கத்துக்கணும்னு ஆசையை அதிகப்படுத்த்து.
சமையலே அப்படி கத்துகிட்டதுதான். :))
அனுபவம் பேசுது:-)//
வாங்க டீச்சர்,
உங்க அனுபவத்தையும் மனசுல வெச்சுக்கறேன்.
கொஞ்ச நாளைக்கு இவர் சொன்னபடி பாப்போம், இல்லாட்டி டிரைவிங் ஸ்கூல் இருக்கே!!
ரொம்ப நல்ல விஷயம் இது. புதுசு புதுசா கற்றூக் கொள்வது நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும்//
அதுதாங்க நம்ம பாலிசி.
எம்புட்டு கத்துகிட்டாலும் கற்றது கைம்மண் அளவுத்தான்னு சொல்வாங்க.
அதனால இன்னுமும் கத்துக்கணும்னு ஆசை.
கலக்கலோ கலக்கல்
எல்லாம் கத்துக்குங்க
அய்த்தானுக்கு நன்றி
சொல்லுங்கள்
கற்பதற்கு வயதே இல்லை
// இல்லாட்டி டிரைவிங் ஸ்கூல் இருக்கே!!//
அங்க குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி... தப்பு பண்ணவே கூடாதுனு சொல்லி தருவாங்க...
தப்பு பண்ணினா தான் திருத்திக் கொள்ள முடியும். இது என் அனுபவம்.டிரைவிங் ஸ்கூல் போனது இல்லை. :))
தமிழ்நாட்டுக்கு கவுண்டமணி எப்படி ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வோ..
அதுபோல நீங்க இந்த பதிவுலகத்துக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி னு முத்துலெட்சுமி சொல்லுறாங்க...
வாழ்க வாழ்க...
சீக்கிரமே ஒரு பேரவை தொடக்கப்படும்..
அக்கா, வாழ்த்துக்கள்.
கார் ஓட்டக் கத்துக்க போறீங்கன்னா, நம்ப ஊர்ல சொல்லிக்கொடுக்குற நிறைய பேரு செருப்பக் கழட்டிட்டு பழக சொல்லுவாங்க. நீங்க அத மட்டும் செய்யாதீங்க. ஹீில்ஸ் இல்லாத தட்டையான செருப்பு போட்டுக்கிட்டே ஒட்டப்பழகுங்க.
கலக்கலாக கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.
எல்லாம் கத்துக்குங்க//
நன்றி மோகன்புவன் அம்மா.
அதுபோல நீங்க இந்த பதிவுலகத்துக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி னு //
அட நீங்க வேற. நிறைய பேரு இருக்காங்க.
நானானி பதிவுகளை படிச்சுப் பாருங்க.
நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.
கார் ஓட்டக் கத்துக்க போறீங்கன்னா, //
இல்லீங்க. முதல்ல டூ வீலர் தான்
அப்புறம் கார்
நீங்க சொன்னதையும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.
//குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொடுக்க
வேண்டும். :)))))))))))))
//
நோ..நோ...நமக்கு நல்ல காரியம் பண்ணுனவங்களுக்கு நம்ப தண்டனையெல்லாம் குடுக்கக்கூடாது :))
நோ..நோ...நமக்கு நல்ல காரியம் பண்ணுனவங்களுக்கு நம்ப தண்டனையெல்லாம் குடுக்கக்கூடாது :))//
|:(((((
// பிஸிபேளாபாத்/வாங்கிபாத் //
எதோ சொல்ல வந்தேன் :-)
அப்துல்லா அண்ணன் சொல்லிட்டாரு :-)
எதோ சொல்ல வந்தேன் :-)
அப்துல்லா அண்ணன் சொல்லிட்டாரு :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment