Monday, December 08, 2008
அப்பா பிள்ளை!!
பசங்க எப்பவும் அம்மா பிள்ளையாத்தான் இருப்பாங்கன்னு
சொல்வாங்க. இதுக்கு நேர்எதிர் ஆஷிஷ்.
அப்பா பிள்ளைதான்.(இரண்டு பேருக்குமே
அப்பா தான் ஷ்பெஷல்)
“நாநா” என்றுதான் அழைப்பான்.
குட்டியாக இருந்த பொழுது
அதைத் தவிர வேறெந்த வார்த்தையும்
வராது.
அவன் கண்ணெதிரில் அயித்தான் ஆபிஸுக்கு
கிளம்பிவிடமுடியாது.
வெளியே பைக் சத்தம் கேட்டால்(இவரின்
பைக் சத்தம் கரெக்டாக தெரிந்து வைத்திருப்பான்)
முகம் பிரசன்னமாகிவிடும்!!
வீட்டில் இருக்கும் நேரமெல்லாமல்
அவரின் நிழல்போல ஒட்டிக்கொண்டே
இருப்பான்.
மாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை
இவருக்கு. இவர் டூர் கிளம்பினால் என்
பாடு திண்டாட்டம்தான்.
அவரின் பேண்ட், ச்ர்ட் துவைத்து
காயப்போட்டிருந்தால் அதைக் காட்டி
அழுவான்!
போட்டோ, பைக் சத்தம் எல்லாவற்றிற்கும்
உப்பி உப்பி அழுவான்!!
அப்பா வரும்வரை உணவு ஒழுங்காக உள்ளே
செல்லாது. சில நாட்கள் வெறும் திரவ ஆகாரம்தான்.
அவர் வந்து அவரது கையால் ஊட்டினால் தான் சாப்பிட
ஆரம்பிப்பான். :(
2 வயது ஆன பொழுது ஆபிஸிற்கு கூட போகவிடமாட்டான்.
மழை பெய்தால் போதும்,”அப்பா! உங்களுக்கு குளிரும்,
வாங்க நாம போத்திகிட்டு தூங்கலாம். அம்மா சூடா
பஜ்ஜி போட்டுகிட்டு வருவாங்க” என்பான். :)
ஆபீஸுக்கு கிளம்பினால் போதும் கண்ணில்
தண்ணீர் முட்டும். அப்பாவை விட்டு நிமிட
நேரம் பிரிவது அவனால் இயலாத காரியம்.
இப்படி இருந்த ஆஷிஷ் திடுமென்று ஒருநாள்
டீவியைக் காட்டி,”ஹை நாநா!”என்று
காட்ட, இவர் எங்கே டீவியில் வந்தார்?!!
என்று நாங்கள் இருவரும் ஓடி வந்து பார்த்தால்
அங்கே ஒரு நடிகர்! :)))
ஆஹா! நல்லா ஐடியா என்று அந்த நடிகரின்
வீடியோ சீடி ஒன்றை வாங்கி வந்து
அதைப் போட்டுவிட்டால் நாநா! பாக்கறேன்”!
என்று அந்த சீடி இவர் வரும் வரை ஓடிக்கொண்டிருக்கும்!!!!!
போஸ்டரில், டீவியில் அந்த நடிகரின் முகம்
பார்க்கும்போதெல்லாம் “நாநா!பாத்தியா?!!
என்று பெருமையாக முகம் முழுதும் சந்தோஷமாக
சொல்வான்.(இந்த விஷயம் தெரிந்தால்
தனக்கு இப்படி ஒரு குட்டி ரசிகன் இருக்கிறான்
என்று அந்த நடிகர் சந்தோஷப் பட்டிருப்பார்!!
அவர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த
நட்சத்திரம்)
ஆஷிஷ் தனது அப்பாவின் மேல் பயங்கர பொசசிவ்
என்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும்
நானும் இவரும் அடிக்கடி நினைவு கூறும் ஒரு
சம்பவம் இதுதான்.
புதுகைக்கு நாங்கள் போயிருந்த பொழுது
என் சின்ன மாமாவும் வந்திருந்தார்.
அவர் ஒரு முறை வெளியே செல்ல
அயித்தானின் செருப்பை போட்டுக்கொண்டு
போய்விட்டார்!!!!
என் மாமா திரும்பி வரும்வரை அழுதுகொண்டே
இருந்தவன், சரியாக பேச வராத அந்த வயதிலும்
“நாநா! செப்பல்! நாநா செப்பல்!!” என்று
மட்டும் சொல்லி ஏன் போட்டுக்கொண்டு போனாய்?
என்பது போல் சண்டை போட்டு விட்டு
மாமா காலில் விழுந்து வணங்கி
“நாநா செப்பல் வேண்டாம். ப்ளீஸ்”
என்று கெஞ்சி மாமாவை செருப்பை
கழட்ட வைத்து ஒரே களேபரம்தான்.
இன்றும் இவர் டூருக்கு போனால்
இருவரும் சார்ஜ் போன செல்
மாதிரிதான் இருப்பார்கள்.
அம்ருதா பிறந்த பிறகு அவளும் அப்பாகோண்டுவாக
அழுதுகொண்டிருந்தவள்தான், அவளும் இந்த சீடி
உபயத்தில் அப்பாவை பார்த்துக்கொண்டிருந்தாள்!!
(அப்போது இவர் வெளிநாட்டில் இருந்தார்)
ஆஷிஷ் அண்ணா,”அம்ருதா! அது நாநா இல்லை.
...... அங்கிள்,” என்று சொல்லும்போது எனக்குச்
சிரிப்பாய் வரும்.
1 வயது அம்ருதாவிற்கு அண்ணன் புரிய வைக்க
முயற்சி செய்வார். “நானும் அது நாநான்னுதான்
நினைச்சே! அது நாநா இல்ல அம்ருதா” என்று
சொல்லிவிட்டு, என்னிடம்,” பாருங்கம்மா பாப்பாவுக்கு
தெரியவே இல்லை, அந்த அங்கிளைப் போய்
நாநான்னு சொல்றா” என்று சிரித்ததுதான் ஹைலைட்.
:))))))))))))))))))))
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
first?
என்ன இன்னைக்கு குடும்ப பதிவா இருக்கு?
ஆஷிஷ் அம்மு ரெண்டு பேரையும் நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..!
வாங்க நிஜமா நல்லவன்,
எப்பவும் ஹஸ்பண்டாலஜி மட்டும்தான் எழுதறமாதிரி திட்டறீங்களே எல்லோரும் அதான்!!!!
யார் அந்த நடிகர்ன்னு சொல்லாம நீங்க விட்டாலும் எனக்கு தெரியுமே...:)
யார் அந்த நடிகர்ன்னு சொல்லாம நீங்க விட்டாலும் எனக்கு தெரியுமே...//
:))))))))))))))
/எப்பவும் ஹஸ்பண்டாலஜி மட்டும்தான் எழுதறமாதிரி திட்டறீங்களே எல்லோரும் அதான்!!!!/
அய்யய்யோ...உங்களை யாருக்கா திட்டினாங்க....அதெல்லாம் சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாங்க...:)
செமத்தியா எளிதியிரிக்கிக!
.அதெல்லாம் சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாங்க...//
:))))))))))
வாங்க தேவான்மையம்,
வருகைக்கு மிக்க நன்றி
சுவையான நிகழ்வை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள்!!
வாங்க நானானி உங்க வருகைக்கும்,
பாராட்டிற்கும் மிக்க நன்றி
அழகான நினைவுகள். தொடருங்கள்.
அழகான நினைவுகள். //
நன்றி ராமலக்ஷ்மி
ஹஹா பதிவை ரொம்ப ரசிச்சேன். லேசா பொறாமை கலந்து எழுதின மாதிரி இருக்கே? (சும்மா லுலுவாயிக்கு). :))
என் பையன் (ஆறு மாசம் ஆவுது)அம்மா புள்ளையா இருக்கான். ம்ஹும், பாக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை! :)
அந்த நடிகர் யாரு?ன்னு எனக்கும் தெரியுமே! :p
லேசா பொறாமை கலந்து எழுதின மாதிரி இருக்கே? //
நாநா எங்களுக்குத்தான் முழுசான்னு சொல்லிட்டாங்க வீட்டுப் பெரியவங்க.
:)))
இதுல நம்ம பொறாமைப் பட்டு என்ன ஆவப்போகுது.
ஒரு தாயாக ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
என் பையன் (ஆறு மாசம் ஆவுது)அம்மா புள்ளையா இருக்கான். ம்ஹும், பாக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை! :)//
பொதுவாவே பசங்க அம்மாபிள்ளைதான்.
எங்க வீட்டுல என்னவோ விதி விலக்கு.
நம்பிக்கை தான் வாழ்க்கை. பார்ப்போம்.
அந்த நடிகர் யாரு?ன்னு எனக்கும் தெரியுமே! //
:)
நல்ல நினைவு பதிவு.
Post a Comment