நானும் சினிமாவும் தொடர் பதிவில் என்னை
கோப்பதாகச் சொன்னபோது வேண்டாம் என
கெஞ்சினேன். புரிந்துக்கொண்ட நண்பர்களுக்கு
நன்றி. ஆனாலும் சினிமா பற்றிய என் நினைவுகள்
இந்தப் பதிவு.
நான் முதன் முதலில் பார்த்தத் திரைப்படம் என
என் நினைவுகளில் இருப்பது கல்யாண ராமன் தான்.
புதிதாக சினிமா வந்திருக்கிறது என்பது சுவரொட்டி
பார்த்து தெரிந்துக்கொள்வேன், அல்லது ரோட்டில்
மைக் கட்டி அறிவித்து செல்வார்கள் அதைப் பார்த்து
தெரிந்துக்கொள்வேன். உடன் அம்மாவிடம் போய்
நிற்பேன். அம்மாதான் சினிமாவுக்கு அழைத்துச்
செல்வார்.
அப்பாவுடன் சினிமா என்பதெல்லாம்
கனவில். (நானும் அப்பாவும் மட்டும் பார்த்த
திரைப்படம் என்றால் அது மகாகவி காளிதாஸும்,
சம்பூர்ண ராமாயணமும் தான். அப்போது எனக்கு
8 வயது(எப்படி ஞாபகம் இருக்குன்னு கேக்கறீங்களா!
முருங்கைக்கீரை அதிகமாக ஆய்ந்து கொடுத்ததற்காக
காளிதாஸ் படம் (செல்லம் டாக்கீஸில்) இரண்டாவது
குர் பானி படம் பார்க்கவேண்டும் என்று கேட்டதர்கு
முடியாதென அழைத்துச் சென்ற படம் ராமாயணம்)
பெரிய மாமாவிற்கு திருமணமான பிறகு
அத்தைக்காக கேளடி கண்மணி திரைப்படம் பார்க்க
அப்பாவும் உடன் வந்து சாந்தி தியேட்டரில் படம்
பார்த்தோம்.
மற்றபடி அப்பா சினிமாவுக்கெல்லாம் அழைத்துச்
சென்றதுமில்லை, உடன் வந்ததுமில்லை. :(
அம்மா வேலைக்குச் சென்றதால்
அவருக்கு அதிகம் வேலை இல்லாத பொழுதுதான்
சினிமா. அந்த ஒரு சினிமாவும் பார்த்தது பசுமரத்தாணி
போல் மனதில் பதியும் அதற்கு காரணங்கள்
அதிகம்.
நான் கேட்கும் எல்லா படத்திற்கும் அம்மா அழைத்துச்
செல்ல மாட்டார்! நல்ல படமா? எல்லாம் பார்த்து
தான் அழைத்துச் செல்வார். அது எப்படி?
முன்பெல்லாம் புதுகை பழநியப்பா தியேட்டர்,
வெஸ்ட் டாக்கிஸீல் வரும்
படங்கள் நல்ல படம் (100 நாள் ஓடும் படங்கள்)
அதற்கப்புறம் சாந்தி தியேட்டரில் எந்தப் படம்
வருதோ அதுவும் சூப்பரான படமாக இருக்கும்.
எஸ்.வி.எஸ் தியேட்டர் படங்களும் ஓகே.
(சாந்தி தியேட்டரும், S.V.S உம் ஒரே உரிமையாளரது
தான் என்பதால் இரண்டு தியேட்டரிலும் ஒரே படம்
ஓடும்)அதற்கப்புறம் ஆர்.கே.பியில்தான் நல்ல
படம் ஓடுகிறது என்று சொன்னார்கள்.
இந்தத் தியேட்டரை வைத்து பார்ப்பதை விட
அம்மா படங்களைத் தெரிவு செய்வது அழகு.
படத்தின் பெயரைச் சொன்னாலும் அம்மா
"யாரு நடிச்சிருக்காங்க? டிரைக்டர் யாரு?
இசையாரு? எல்லாம் பாத்துகிட்டு வா"
என்பார் அம்மா. இந்தக் காம்பினேஷன்
நன்றாக இருந்து,
படத்தின் பெயரை வைத்து தான்
வேலைப் பார்க்கும் இடத்தில்
மற்றவர்களின் கருத்தைக் கேட்டு
பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்
என்றால் மட்டுமே அம்மா
அப்பாவிடம் பேசுவதாகச் சொல்வார்.
அப்பா அவ்வளவு சீக்கிரம் வரம்
தர மாட்டார். சில சம்யங்களில்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி
வரம் கொடுக்க மாட்டார், அல்லது
பூசாரிக்கு மனம் இருந்தாலும் சாமி
வரம் கொடுக்க மாட்டார். இவர்கள்
பேசி முடிப்பதற்குள் அந்த சினிமா
தியேட்டரை விட்டே போயிருக்கும்.:((
நல்ல சினிமாவாக இருந்தால் பார்க்க வை
சாமி! என்று ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்
நானும் தம்பியும்!
அம்மாவிடமிருந்து கற்றதனால்தான்
கொஞ்சம் பெரிதான பிறகு நல்ல படமாக
இருந்தாலும் எனக்குப் பிடித்தால் மட்டும்தான்
போவது என்று முடிவு செய்தேன்.
அம்மாவும் தம்பியும் மட்டுமோ, அல்லது
அப்பா,அம்மா, தம்பி மூவருமோ சினிமாவுக்குச்
சென்றால் எனக்கு டிக்கெட்டிற்கான பண்த்தை
கொடுத்துவிடவேண்டும். நான் வீட்டிலேயே
இருந்துக்கொள்வேன். பாட்டி துணைக்கு
இருப்பார்கள்.
சரவணா தியேட்டரில் சினிமாவி்ற்கு
போகிறார்கள் என்றால் மட்டும் உடன் செல்வேன்,
ஆனால் தியேட்டருக்கு போகாமல் பின்னாலிருக்கும்
அம்மம்மாவீட்டிற்கு போய் விடுவேன். படம்
முடிந்தோ அல்லது அடுத்த நாளோ வீட்டிற்கு
வருவேன்.(இப்போது அந்தத் தியேட்டரும் இல்லை,
அம்மம்மாவும் மும்பையில் இருக்கிறார்கள்)
வெளியே போவதாகச் சொல்லி பிள்ளைகளைச்
சஸ்பென்ஸாகத் திரைப்படத்திற்கு அழைத்துச்
செல்வது எனக்கும் அயித்தானுக்கும் பிடித்த ஒன்று.
போகும் இடம் வரும் வரை சினிமாவா? பார்க்கா?
என்று பிள்ளைகள் சின்ன டென்ஷனுடன் வருவார்கள்.
தியேட்டரில் நிறுத்தியவுடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும்
படத்தைப் பார்த்து சந்தோஷமடைவார்கள். :))
தா ரா ரம் பம்,தாரே ஜமீன் பர், தாஸ்விதானியா ஆகிய
படங்கள் பார்த்து விட்டு பி்ள்ளைகள்,
"எப்படி அம்மா செலக்ட் செய்யறீங்க!
சூப்பரா இருக்கு! சொல்லி கழுத்தை கட்டிக்கொண்டு
முத்தமிடுவார்கள்," தேங்கஸ்ப்பா!" என்று
அப்பாவுக்கும் முத்த மழைதான்.
அம்மா அன்று கற்றுத் தந்த வழியில்தான்
நான் இன்றும் பார்க்க வேண்டிய படங்களைத்
தெரிவு செய்கிறேன்.
ஊருக்குப் போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு
நானும் நன்றி சொல்ல வேண்டும்.
6 comments:
வேண்டாம் என்று சொன்னாலும்
சொல்லனும்னு தோன்றியது ...
நல்லாயிருக்கு
உங்க துவக்கம்
\\அம்மா அன்று கற்றுத் தந்த வழியில்தான்
நான் இன்றும் பார்க்க வேண்டிய படங்களைத்
தெரிவு செய்கிறேன்.
ஊருக்குப் போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு
நானும் நன்றி சொல்ல வேண்டும்.\\
நல்ல விஷயம்
நல்ல தாய்.
நல்லாயிருக்கு
உங்க துவக்கம்//
மிக்க நன்றிங்க.
நல்ல விஷயம்
நல்ல தாய்.//
ஆமாங்க.
நல்ல சினிமாவுக்கான அளவுகோள் ஏதும் இருக்கா?
நல்ல விசயம் அவர்களை தேர்ந்து எடுத்து சினிமாவுக்கு அழைத்து செல்வது. முடிந்த வரை நல்ல விசயங்களை மட்டுமே இளைய தலைமுறையிடம் பதிய செய்வோம்.
நல்ல விசயம் அவர்களை தேர்ந்து எடுத்து சினிமாவுக்கு அழைத்து செல்வது. முடிந்த வரை நல்ல விசயங்களை மட்டுமே இளைய தலைமுறையிடம் பதிய செய்வோம்.//
true
Post a Comment