Tuesday, December 16, 2008

அண்ணா கதை!

அம்மா! உங்க கிட்ட பேசணும்! அந்த ரூமுக்கு 5 நிமிஷம்
வாங்களேன்!" என்றழைத்தாள் அம்ருதா.
குழப்பத்துடன் போனேன்.
"அண்ணாவுக்கு என்னைக் கண்டா பிடிக்கறதே இல்லை!
என்னை ரொம்ப திட்டறாங்க!
ஹீ ஹேட்ஸ் மீ!!!" என்று கண்களில் நீருடன் சொன்னாள்.

"நான் பேசுகிறேன்! நீ முகத்தைக் கழுவி வா!" என்று
சொல்லிவிட்டு, மகனைத் தனியாக அழைத்து,"என்ன?
கண்ணா! என்ன பிரச்சனை? என்றேன்.

"அம்ருதா! எதற்கெடுத்தாலும் ஆர்குயுமெண்ட் செய்யறாம்மா!"
எனக்கு கோபம் தான் வருது. என்றான் ஆஷிஷ்.

நானும் சமீபகாலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஐயாவிற்கு கோபம் அதிகமாகவே வருகிறது.( டீன் ஏஜிற்குள்
அடி எடுத்து வைக்குமுன் ஏற்படும் மாற்றங்களி்ல்
இதுவும் ஒன்றாச்சே!) குரல் மிகப் பெரிதாக
வரும்பொழுது கண்டித்துக்கொண்டிருந்தேன். இருவரையும்
திட்டி அமைதிப் படுத்தியதும், கொஞ்சம் விலக்கி வைத்ததும்
உண்டு.

சின்னவளும்
அவனுக்கு விடாமால் வாயடிக்கிறாள்.
அவளுக்கும் சொல்லியும் நிலமை இப்படி வந்திருக்கிறது.
இருவரையும் அழைத்தேன்." உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கதை
சொல்லப்போறேன்" என்றேன்.

இருவரும் வந்து என் பக்கத்தில் அமர்ந்தேன்.
ஒரு வீட்டுல ஒரு குட்டிப் பையன் இருந்தான்.
அவனுக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுதுன்னு
ரொம்ப சந்தோஷப் பட்டான்.
எப்பம்மா வரும் பாப்பான்னு? அடிக்கடி அவங்கம்மாவைக்
கேப்பான். "பொங்கலுகப்புறம் பாப்பா வரும்னு"
அவங்கம்மா சொல்ல பொங்கலுக்காக காத்திருக்க
ஆரம்பித்தான் அந்தக் குட்டிப் பையன், என்று
நான் சொல்லி முடிக்குமுன்னரே ஆஷிஷ்
"அது நான் தான்!" என்று சிரித்த முகத்துடன்
சொன்னான்.

"அப்ப எப்பவரும்னு கேட்ட! இப்ப என்னைத்
திட்டுற" என்றாள் மகள். இரு இரு நான்
இன்னும் முடிக்கலை! என்று தொடர்ந்தேன்.
அந்தக் குட்டிப் பையன்
ஆஷிஷ் தான். நீ பிறந்த பிறகு ஹாஸ்பிட்டலில்
என் கூடவே இருந்தான் அண்ணா! நான் இருந்த
ரூம் வாசலில் கூர்கா மாதிரி உட்கார்ந்துக்கொண்டு
அவனுக்குத் தெரியாதவர்கள் யாரும் பாப்பாவைத்
தொட்டு விடாமல் பார்த்துக்கொள்வான்.

தெரியாதவர்கள் தொட்டால்,"என் தங்கச்சி பாப்பாவை
தொடக்கூடாது"என்று சத்தம் போடுவான்.

அம்ருதாவின் முகம் மலரத் துவங்கியது. ஆஷிஷோ
பெருமையான முகத்துடன் அமர்ந்திருந்தான்.

வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு பாப்பாவை விட்டு
எங்கேயும் போக மாட்டான். பக்கத்திலேயே
உட்கார்ந்து ஈரமாக்கிவிட்டால் உடனே
துணியை மாத்தச் சொல்வான். (6 மாதம்
கழித்து அவனே மாத்திவிடுவான்) பால் பாட்டிலை
தான் தான் பிடித்துக்கொள்வான்.

பள்ளியிலிருந்து வந்த உடன் கேட்கும் முதல்
கேள்வி,"பாப்பா என்ன செய்கிறாள்" அண்ணா
இப்போதும் அப்படித்தான் இருக்கிறான்.


"ஹீ ஸ்டில் லவ்ஸ் யூ" அண்ணாவைக்
கேள் என்றேன்.
அவள் கேட்கும்ன்னே," ஆமாம், அம்ருதாவை
பிடிக்காதுன்னு யாராவது சொன்னாங்களா?
ஆர்குயுமண்ட் செய்வதுதான் பிடிக்கலை".
என்றான்.

ஆஷிஷ்! உன்னை முதன் முதலில் தனியாக
ஃப்ளைட்டில் அனுப்பி வைத்தோமே ஞாபகம்
இருக்கிறதா? என்றேன். ம்ம். இருக்கு என்றான்.

அன்றும், நீ திரும்பி வரும் வரையும் உனக்காக
அம்ருதா எவ்வளவு அழுதாள் தெரியுமா?

அம்ருதா அண்ணாவுக்கு என்னென்ன பிடிக்கும்?
என்றேன். அவளும் வரிசையாகச் சொன்னாள்.

ஆஷிஷ், அம்ருதாவுக்குப் பிடித்ததை நீ சொல்?
அண்ணாவும் சொன்னார்.

நீங்க ரெண்டு பேருமே எம்புட்டு பாசம் வெச்சிருக்கீங்க?
அதனாலதான் அவங்களுக்குப் பிடிச்சது என்னன்னு?
தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.


ஓகே அம்ருதா ஒரு டீல். அண்ணாவுக்கு
பிடித்த மாதிரி நீ ஆர்குயூமெண்ட் செய்யாமல்
எதுவானாலும் என்னிடம் வந்துசொல்.

ஆஷிஷ் நீயும் அம்ருதாவிடம் கோபப்படாமல்
மெல்லச் சொல்லிப்பார் கேட்கவில்லை என்றால்
என்னிடம் வந்து சொல், சரியா? என்றேன்.

இருவரும் தலையாட்டினார்கள். இது போதுமா?
என்றேன். அண்ணனைக் கட்டிக்கொண்டு
முத்தம் கொடுத்தாள் அம்ருதா. பதிலுக்கு
அண்ணாவும் முத்தம் கொடுத்தார்.
கோபமான மூடு போகத்தான் இந்த கட்டிக்கொள்ளலல்)


இப்படி பேசிய பிற்கு நிறைய மாற்றங்கள்.
ஒருவரை ஒருவர் வெறுப்பது போல் இருந்த
தருணங்கள் குறைந்தது.

கலந்து விளையாடத் துவங்கினார்கள்.

பிள்ளைகளுக்கு பரிட்சை நடந்துக்கொண்டிருக்கிறது.
நேற்று அம்ருதாவிற்கு மேத்ஸ். ஒழுங்காக செய்வாள்
ஆனாலும் என்னவோ கொஞ்சம் டென்சாகவே இருந்தாள்.

அவளை ரிலாக்ஸாக்க மெடிட்டேஷன் செய்ய வைத்தேன்.
அது முடிந்ததும் கண்ணிலிருந்து கண்ணீர் மழை.
அதைக் கண்டதும் ஆஷிஷ் அம்ருதாவின் அருகில்
அமர்ந்து கண்களைத் துடைத்து விட்டு,"பாப்பா
அழக்கூடாது! உன்னால முடியும். அம்மா சொல்லிக்கொடுத்த
சி.எம் டபிள்யூ சொல்லி செஞ்சா போதும் பாப்பா"! என்று
சொல்ல கடவுளுக்கு நன்றி சொன்னேன் நான்.

************************************
இந்தக் கதை மட்டுமல்ல இப்படி இவர்கள்
இருவரின் கதைகளையும், எத்துனை அன்பாக
இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று சொல்வதனால்
அன்பு எனும் கிணறு அடிக்கடி தூர்வாரப்படுகிறது.
அப்புறமென்ன அன்பெனும் ஊற்று சுரந்துக்கொண்டே
இருக்கும் தானே!

அண்ணாவை அடிக்காதே!

ஒரு கொடியில் இரு மலர்கள்

இந்த இரண்டு பதிவையும் படிங்க.

16 comments:

அதிரை ஜமால் said...

வந்தேன்

அதிரை ஜமால் said...

மிக நெகிழ்வாயிருந்தது.

என் தங்கை மேல் மிகுந்த பாசம் உள்ள அண்ணன்களில் நானும் ஒருவன்.

மோனிபுவன் அம்மா said...

ரொம்ப அழகான பாசமான அண்ணனும், தங்கையும்
இதைப் படித்தவுடன் என் பிள்ளைகள்
ஞாபகம் வந்துவிட்டது.

தமிழ் பிரியன் said...

தென்றலின் வீச்சு மிகவும் இதமாக இருந்ததுக்கா!.. :)

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,
அண்ணன், தங்கை, அக்கா, தம்பி உறவுகளில் பாசத்தை
புரிந்துக்கொள்ளாமலேயே இருந்துவிடுகிறார்கள்.

திருமணமாகிப்போன பின் தான் அந்த
அன்பு உணரப்படுகிறது.

புதுகைத் தென்றல் said...

இதைப் படித்தவுடன் என் பிள்ளைகள்
ஞாபகம் வந்துவிட்டது.//

உங்களின் மனநிலையை உண்ர்ந்தேன்.

வருகைக்கு மிக்க நன்றி தோழி.

புதுகைத் தென்றல் said...

இதமாக இருந்ததுக்கா!.. :)//

வருகைக்கு மிக்க நன்றி தமிழ் ப்ரியன்.

ராமலக்ஷ்மி said...

//அண்ணனைக் கட்டிக்கொண்டு
முத்தம் கொடுத்தாள் அம்ருதா. பதிலுக்கு
அண்ணாவும் முத்தம் கொடுத்தார்.//

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

நாகை சிவா said...

அருமை !

ரசித்தேன் :))

நாகை சிவா said...

அக்கா நம்ம கிட்ட அவ்வளவா வச்சுக்கிட்டது இல்லை. தம்பியும் நானும் கட்டிப் புரண்டு கத்திய தூக்கி எல்லாம் சண்டை போட்டு இருக்கோம்.
இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு. இப்ப எல்லாருமே ஒன்னுக்குள்ள ஒன்னு. ஆனா பாருங்க மூவரும் ஆளுக்கொரு இடத்தில் :(

SK said...

ம்ம்ம் அருமை :-)

வாழ்க்கையில் நிறைய பாடங்கள் கத்துக்கணும் :-)

Itsdifferent said...

Can you please mail me, on what is the meditation that you train your kids on. I have a very similar situation, but with elder kids.
Appreciate your help.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி எஸ்.கே

பாபு said...

குழந்தைகளை மிக அழகாக கையாளுகிறீர்கள்,நல்ல பதிவை அளித்திருக்கிறீர்கள்
நன்றி

புதுகைத் தென்றல் said...

,நல்ல பதிவை அளித்திருக்கிறீர்கள்//


நன்றி :)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஹும்,சின்ன்ப்பிள்ளைகளுக்கு சொல்லலாம்,பெரியவங்களுக்கு?
--
There is a write-up on PUDUKKOTTAI in Nanayam Vikatan issue(31-Dec-2008)