Wednesday, December 17, 2008

முன்னுதாரணமாக ஒரு தோழி!

என்னுடைய இந்தத் தோழியை உங்களுக்கு அறிமுகப்
படுத்தவேயில்லையே!

இலங்கையில் இருந்த பொழுது எனக்கு அறிமுகமானத்
தோழி இவர்.

துரு துருவென ஏதோ ஒன்று செய்து கொண்டே இருப்பார்!
தன்னை பிசியாக வைத்துக்கொள்வதிலாகட்டும்,
தான் சேர்ந்த துறையில் தன்னை அப்டேட் செய்துகொள்வதிலாகட்டும்
அவரைப் பார்த்து நான் வியந்து கொண்டிருப்பேன்.

ஆள் பாதி ஆடை பாதி என்பது சரிதான். இவர்
சுடிதார் உடுத்தினாலும் சரி, புடவைக் கட்டினாலும்
சரி அதில் ஒரு கண்ணியம் தெரியும்.


சைக்காலஜி கோர்ஸ் செய்து கவுன்சிலிங் செய்து
கொண்டிருந்தார். ஒரு கல்லூரியில் சைக்காலஜி
விரிவுரையாளராகவும் வேலைபார்த்து வந்தார்.

பர்சனாலிட்டி டிவலப்மெண்ட் கோர்சிற்கு
தானே புத்தகம் ஒன்றை( பல புத்தகங்களீன்
ரெஃபரன்ஸுடன்) தயாரித்தார். அதை அச்சுக்
கோக்கும் வேலை என்னுடையதாக இருந்தது.

அப்போது அவரிடம் கற்றது என் மகனுக்கு
உபயோகமாக இருந்தது. எனக்குள்ளும்
நிறைய மாற்றம். ஒரு பிரச்சனையை
எவ்வாறு அணுக வேண்டுமென, கற்றுக்கொண்டேன்.

Anger Management, Time management,
Personality Management, general stress,
Problems in Married life இவைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்.
தற்போது அங்கே இருக்கும் ஒரு மருத்துவமனையில்
கவுனிசிலிங் தருகிறாராம்!

கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் போதே
எனக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றார்!!
ஆச்சரியமாக பார்த்தேன்! ஆனால் அவருக்கு உறவினர்கள்
யாரும் தமிழ் நாட்டில் இல்லை. என் அப்பாவீட்டு
முகவரி கொடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வேலை பார்க்கும் என் தோழி மூலம் ஏற்பாடு செய்து,
அஞ்சல் வழியில் மேல் படிப்பு படித்து சென்ற வருடம்
முடித்து விட்டார்.

தினமும் வாக்கிங்,ப்ர்ட்ஜ் விளையாடுவது,
பூஜை, நண்பிகளுடன் அளவளாவுதல்,
வியாழக்கிழமைகளில் சாயிபாபா கோவில் போதல், நல்ல
திரைப்படமா உடனே பார்த்துவிடுதல் என
பிசி பிசி தோழி!!!

சரி என் தோழியின் வயது எத்தனை தெரியுமா?
53 வயது. ஆம் அவரின் பெரிய மகனுக்கு
திருமணமாகி அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.
சென்ற வருடம் மகளுக்கு திருமணமாகி விட்டது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு படிப்பது கஷ்டமா என்று
கேட்கிறீர்களா? குழந்தைகள் சின்னதாக இருந்த பொழுது
சென்னையில் கார்மெண்ட் பிசினஸ் நடத்தி உலகம்
முழுது சுற்றிக்கொண்டிருந்தவர்.

50 வயதிலும் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு,
ஃபிட்டாகவும் வைத்துக்கொள்கிறார். (தைராய்டு,
சுகர், அல்சர் என உடல் கோளாறும் இருக்கிறது)

இந்த வயதில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சியும்
பெற்றார். வள்ளிக்கு இந்த வயதில் படிப்புத் தேவையா?
என்று ஏளனம் பேசிய அவரது தோழிகள் இப்போது
வாய்பிளந்து பார்க்கிறார்கள்.

நானும் ஆண்ட்டியைப் போல எப்போதும்
ஏதாவது கற்றுக்கொண்டு, சுறு சுறுப்புடன்
இருக்க வேண்டுமென்றே நினைப்பேன்.


(என்னைப் போல ஒவ்வொருவரின் பிறந்த நாள்,
திருமண நாளை ஞாபகம் வைத்து வாழ்த்துவார்.

எங்கள் வள்ளி ஆண்ட்டி இன்று போல், என்றும் வாழ
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

22 comments:

அதிரை ஜமால் said...

வந்தேன்

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்ட்டா???

அதிரை ஜமால் said...

\\பர்சனாலிட்டி டிவலப்மெண்ட் கோர்சிற்கு
தானே புத்தகம் ஒன்றை( பல புத்தகங்களீன்
ரெஃபரன்ஸுடன்) தயாரித்தார். அதை அச்சுக்
கோக்கும் வேலை என்னுடையதாக இருந்தது\\

நல்ல விஷயம் தான்

புதுகை.அப்துல்லா said...

:)

புதுகை.அப்துல்லா said...

அதிரை ஜமால் said...
வந்தேன்

//

அதான் வந்துட்டீல்ல....அப்புறம் என்ன வந்தேன்???

:))

புதுகை.அப்துல்லா said...

அதிரை ஜமால் said...

நல்ல விஷயம் தான்
//

ஒவ்வொருத்தர் அவங்க பிரண்ஸ்க்கு எப்படியெல்லாம் ஹெல்ப் பண்றாங்க....கத்துக்கடா மாப்ள :)

அதிரை ஜமால் said...

\\Anger Management, Time management,
Personality Management, general stress,
Problems in Married life இவைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்.\\

சிறுது சிறுதாக பதிவிட்டு சொல்லி தாருங்களேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

போட்டோ நல்லா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

யூ த செகண்ட் அப்துல்லா,

இப்பல்லாம் என் பிளாக்கில் மீ த பர்சுடு ஜமால்தான்.

புதுகைத் தென்றல் said...

அப்துல்லா, ஜமால்,

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

சிறுது சிறுதாக பதிவிட்டு சொல்லி தாருங்களேன்//

செய்யலாம். நல்ல ஐடியாதான். அடுத்த வருடம் ஆரம்பிக்கறேன்.

புதுகை.அப்துல்லா said...

புதுகைத் தென்றல் said...
யூ த செகண்ட் அப்துல்லா,

இப்பல்லாம் என் பிளாக்கில் மீ த பர்சுடு ஜமால்தான்.

//

அவன் வந்தாலும் நான் வந்த மாதிரிதான் அக்கா :)

அதிரை ஜமால் said...

\\Blogger புதுகை.அப்துல்லா said...

:)\\

மாப்ள எங்க கீற

அதிரை ஜமால் said...

\\Blogger புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

போட்டோ நல்லா இருக்கு.\\

ஹி ஹி ஹி நன்றி

போட்டாவா -

போட்டல இருக்கரவனான்னு - டேய் அப்துல்லா நீ கேப்படா

அதிரை ஜமால் said...

\\Blogger புதுகைத் தென்றல் said...

யூ த செகண்ட் அப்துல்லா,

இப்பல்லாம் என் பிளாக்கில் மீ த பர்சுடு ஜமால்தான்.\\

ஆமா ஆமா

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துகிறோம் நாங்க்ளும்..வாழ்க வளமுடன்.. :)

அமுதா said...

நல்ல முன்னுதாரணம். வள்ளி ஆண்ட்டிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

அதிரை ஜமால் said...
\\Blogger புதுகை.அப்துல்லா said...

:)\\

மாப்ள எங்க கீற
//

சென்னைலதான்...இன்னும் அபுதாபி வரும் வெள்ளி எத்திகாட் ஏர்லைன்ஸ்ல

புதுகைத் தென்றல் said...

vaanga muthuletchumi,

varugaiku mikka nandripa.

புதுகைத் தென்றல் said...

nandri amudha.

ராமலக்ஷ்மி said...

வள்ளி ஆன்ட்டி வாழ்க!

தன் தோழியிடம் கற்றதை மற்றவரும்
பெற்று பயனடைய பதிவிட்ட தென்றலும் வாழ்க!

SK said...

எல்லா பாடத்துக்காக காத்து இருக்கிறோம் :-)