பாடலைக் கேட்க இங்கே:
வீடியோ இங்கே:
கூவின பூங்குயில் கூவின கோழி
குருவிகள் இயம்பின
இயம்பின சங்கம்.
யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!!
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலைத் தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
காதல் மணம் காண்போம் எண்ணம்
போல் இன்பத்தின் வண்ணங்கள் ஆஆ
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்,
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் இரண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும்
எங்களின் கைகளில்.
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடு.
ஆரிராரோ ஆராரி ராரிரோ
ஆரிராரோ ஆராரி ராரிரோ
*******************************************
கூவின பூங்குயில் கூவின கோழி
குருவிகள் இயம்பின
இயம்பின சங்கம்.
யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!!
இந்தப் பாடல் 12 ஆம் வகுப்பில் மனன பாடமாக
வந்திருந்தது. நாங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள
வதற்காக இந்த வரிகளை தமிழாசிரியை கண்ணகி அவர்கள்
பாட மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது
மொத்தப் பாடலும்.
நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று.
9 comments:
கூவின பூங்குயில் கூக்கூ கூக்கூ
நல்ல பாடல் ...
அருமையான பாடல்.
இப்படியும் பதியலாம், என்று சொல்லி தந்தமைக்கும் நன்றி...
//கூவின பூங்குயில் கூவின கோழி
குருவிகள் இயம்பின
இயம்பின சங்கம்.
யாவரும் அறிவறியார் உமக்கெளியார்.
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயோ!!//
சரியான மனன சக்தி.........
திரும்பவும் +2 எழுதப் போறீங்களா............
வாங்க ஜமால்,
அருமையான பாட்டுல்ல.
எங்க தமிழம்மா மனசுல பதிய வெச்சுடாங்க. நான் அதை இங்க பதிஞ்சேன்.
திரும்பவும் +2 எழுதப் போறீங்களா............//
மறுபடியுமா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நானும் இப்படி நிறைய பாட்டு மனசுல வைச்சுருக்கேன்!
உதா தளபதி “அடி ராக்கம்மா கையை தட்டு”
பட் ஸ்கூல்ல பாடற அளவுக்கு அவ்ளோ தைரியம் கிடையாது !
(ஒரு தடவை பாடுன பாட்டுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ்தான் அதுக்கும் காரணம்! - பாடுன பாட்டு “போடா போடா புண்ணாக்கு - வாத்தியார் செமையா வெளுத்து வாங்கிட்டாரு ! :( அவ்வ்வ்வ் )
//புதுகைத் தென்றல் said...
திரும்பவும் +2 எழுதப் போறீங்களா............//
மறுபடியுமா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்
///
பர்ஸ்டு எழுதுனதே பாஸுக்கு பயங்கர கஷ்டமா இருந்துச்சு இப்ப திரும்பவுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(வேணாம் பாஸ் கண்ணை தொடைச்சுக்கோங்க அவுரு மிரட்டிட்டாரு! உங்கள நீங்க ஒண்ணும் திரும்ப அந்த எக்ஸாமெல்லாம் எழுத வேணாம்!)
பாடுன பாட்டு “போடா போடா புண்ணாக்கு - வாத்தியார் செமையா வெளுத்து வாங்கிட்டாரு ! :( அவ்வ்வ்வ் )//
சேட்டை ஜாச்தி பாஸ் உங்களுக்கு,
இந்த பாட்டை பாடினா வெளுக்காக என்ன செய்வாங்க?
:)))
(வேணாம் பாஸ் கண்ணை தொடைச்சுக்கோங்க அவுரு மிரட்டிட்டாரு! உங்கள நீங்க ஒண்ணும் திரும்ப அந்த எக்ஸாமெல்லாம் எழுத வேணாம்!)//
சரி கண்ணைத் தொடைச்சுக்கிட்டேன்.
:(
Post a Comment