தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தாலும்
புரிய மாட்டேங்குதே!
இதுதாங்க இந்த வாரப் பாடத்தின் தலைப்பு.
இந்தக் காட்சியை பாருங்க.
தொங்கிப்போன முகத்துடன் மிஸ்டர்.ரங்கு
வீட்டுக்கு வர்றாரு.
"என்னங்க! ஒரு மாதிரி இருக்கீங்க?”
என்னாச்சு! தலைவலிக்குதா!
“சும்மா ஙொய் ஙொய்ன்னான்னாத!”
(கேக்கறது ஒரு குத்தமாய்யா!!)
தலைவலிக்குதா! அமிர்தாஞ்சன்
தடவட்டுமா? சூடா காபி குடிக்கறீங்களானு
கேட்டேங்க.
” ஒரு ..... வேணாம்.
நானே நொந்து நூலாப் போயிருக்கேன்!”
அறைக்குள் போய் படுத்துவிடுகிறார்
ரங்க்ஸ்.
30 நிமிடம் கழித்து,” ஏய் ரமா!
சூடா ஒரு கப் காபிக் கொடு”
போட்டு கொண்டு வந்த தங்கஸ்
ரங்குவின் முகத்தைப் பாத்து,
“ஏதும் ப்ரச்சனையாங்க!”
“அவன் ஆபிசுல பிடுங்கறான்னா?
நீ வேற ஏன் பிடுங்கற?”
பேசாமல் இருந்த தங்க்ஸைப் பாத்து
புலம்ப ஆரம்பிக்கிறார் ரங்கு,
” எம்புட்டு செஞ்சாலும் திருப்தியே இல்லை
அந்த ஆபிஸருக்கு. என்னிய விட
2 வயசுதான் கூட இருக்கும். அதிகாரியா
உக்காந்திருக்கோம்னு ரொம்ப
திமிரு. எவ்வளவு கஷ்டப்பட்டு
வேலைப் பாத்தாலும் அதுல
குத்தம் மட்டுமே கண்டு பிடிக்கறதே
பொழைப்பு. தப்பித்தவறி
பாராட்டு மட்டும் மனுஷ்ன் கிட்டேயிருந்து
வாங்கவே முடியாது!!!
செஞ்ச வேலைக்கு ஒரு அங்கீகாரம்
இல்லாம வேலைப்பாக்கறது ரொம்ப
கஷ்டம். என்ன கொடுமைடா
இந்த வாழ்க்கைன்னு நான் இருக்கேன்,
நீ வேற என்னாச்சு, ஏதாச்சுன்னு
கேக்கற,” என்று எரிந்து விழுகிறார்.
இதுல எங்கங்க ஹஸ்பண்டாலஜி பாடம்
வந்துச்சுன்னு கேக்குற அப்பாவிகளுக்கு பாடமே
இனிமேதாங்க ஆரம்பம்!!!
பாடத்தோட தலைப்பை மறுபடி ஒருமுறை
ஞாபகப் படுத்திக்கோங்க.
தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தாலும்
புரிய மாட்டேங்குதே!
தான் செய்யுற வேலைக்கு ஒரு பாராட்டு,
அங்கீகாரம் இது இருந்தாத்தான் ஊக்கமா
வேலை செய்யமுடியும் என்பது ரங்கமணிக்கு
தெரிஞ்சிருந்தாலும் வீட்டுல தங்கமணி
செய்யற வேலைக்கு ஒரு நாளாவது
பாராட்டிருப்பாரா?
எம்புட்டு நல்லா போட்டாலும் காபி
நல்லா இல்லை, சட்னி சரியில்லை
சாம்பார் எங்கம்மா செய்யற மாதிரி
இல்லை, எங்கக்கா மாதிரி காரக்குழம்பு
வெக்கமாட்டீங்கற, என் தங்கச்சி
மாதிரி உடுத்த மாட்டேங்கற.. இப்படி எத்தனை டார்ச்சர்
கொடுக்கறாங்க!!!!
இந்த ரங்கமணிகளுக்கு,தங்கமணியும்
தன்னைப் போல ஒரு மனுஷிதான்.
அவங்களுக்கு சின்னதா ஒரு பாராட்டு,
அட்லீஸ்ட் செஞ்சதுல குத்தம் கண்டுபிடிச்சு
சொல்லாம இருந்தாலே நல்லா இருக்கும்னெல்லாம்
தோணவே தோணாதுங்க.
ஆபிசுல நம்மளைப் பாராட்டணும்னு நாம
எதிர் பார்க்கற மாதிரி நம்ம தங்கமணியும்
நம்மகிட்டேயிருந்து பார்ப்பாங்கற நினைப்பெல்லாம்
கிடையவே கிடையாது.
கேட்டா வீட்டுவேலை செய்யறதுல என்ன
பாராட்டு. அவங்க வேலையை அவங்க
செஞ்சாங்க அம்புட்டுதானேன்னு
கேப்பாங்க ரங்கமணிங்க.
ஆனா அவங்கள மட்டும் ஆபிஸுல
பாராட்டனும், பதக்கம் கொடுக்கணும்,
குத்தம் கண்டுபி்டிக்கக்கூடாதுன்னு
நினைப்பாங்க. எந்த ஊரு
நியாயம்னுதான் தெரியலை!!!
நீங்க இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க
தங்கமணிகளே!!!
வீட்டுல தங்கமணிகளுக்கு கொடுக்கற
டார்ச்சருக்குத்தான் ஆபிஸுல
அதிகாரிகள் அவங்களுக்கு டார்ச்சரோ
டார்ச்சர் கொடுக்கறாங்க.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமுங்க,
மனசை தேத்திக்கிட்டு இருங்க.
அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
37 comments:
me the first?
/வீட்டுல தங்கமணிகளுக்கு கொடுக்கற
டார்ச்சருக்குத்தான் ஆபிஸுல
அதிகாரிகள் அவங்களுக்கு டார்ச்சரோ
டார்ச்சர் கொடுக்கறாங்க./
என்ன ஒரு நல்ல எண்ணம் பாருங்க.....:))
/“சும்மா ஙொய் ஙொய்ன்னான்னாத!”
(கேக்கறது ஒரு குத்தமாய்யா!!)/
கேக்குறது குத்தம்னு இப்ப யாரு சொன்னா....கொஞ்சம் மெதுவா கேட்டா என்ன?...வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கேட்டா இப்படித்தான்....:)
/தலைவலிக்குதா! அமிர்தாஞ்சன்
தடவட்டுமா? சூடா காபி குடிக்கறீங்களானு
கேட்டேங்க.
” ஒரு ..... வேணாம்.
நானே நொந்து நூலாப் போயிருக்கேன்!”/
அடப்பாவமே...நொந்து நூலா போன மனுஷனை சூடா காப்பி ஊத்தி வேக வைக்க பார்க்குறாங்களே...என்ன கொடுமை இது????
நீங்க என்னதான் படம் போட்டு விளக்கினாலும் ரங்கமணிகளுக்கு அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடுமா என்ன.
ஆஹா வந்திருச்சி..
ஆமாங்க ஞானோதயம் வந்திருச்சிங்க.
இப்படில்லாம் இருக்கில்ல..
எடுத்துக் காட்டியதுக்கு ரொம்ப டாங்க்ஸ்.
நாந்தான் ஃபர்ஸ்டா?
வாங்க நிஜமா நல்லவன்,
கேக்குறது குத்தம்னு இப்ப யாரு சொன்னா....கொஞ்சம் மெதுவா கேட்டா என்ன?...வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கேட்டா இப்படித்தான்....//
வந்ததும் கேட்டாலும் தப்பு, சரி கொஞ்சம் பொ்றுத்து கேட்டாலும்
“மனுஷனைக் கண்டுக்கறாளா! பாருன்னு” அதுக்கும் திட்டு.
அப்படியும் இப்படியும் பேசறதுதான் ரங்கமணிகளுக்கு பொழப்பா போச்சே!
நொந்து நூலா போன மனுஷனை சூடா காப்பி ஊத்தி வேக வைக்க பார்க்குறாங்களே...என்ன கொடுமை இது????//
காப்பி ஊத்தின்னு பாடத்துல இல்லை நி.நல்லவன். காபி குடிக்கறீங்களான்னுதான் இருக்கு.
நல்லா படிங்க பாடத்தை.
நீங்க என்னதான் படம் போட்டு விளக்கினாலும் ரங்கமணிகளுக்கு அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடுமா என்ன.//
இதுக்கு நான் என் பாணியில பதில் சொன்னா தமிழ்மணம் தாங்காது.
அதுனால நல்லகேள்வி கேட்டதுக்கு உங்களுக்கு பாராட்டை மட்டும் சொல்லிக்கறேன்.
:)))))))))))))
//
Anonymous said...
ஆப்பீஸ்லயாவது செய்யற வேலை சரியில்லைனா மெமோ குடுப்பாங்க தங்கமணி செய்யற நல்லா இல்லாத சமையலுக்கு என்ன செய்யறது!?!?
//
ரிப்ப்பீட்ட்டேய்
/வீட்டுல தங்கமணிகளுக்கு கொடுக்கற
டார்ச்சருக்குத்தான் ஆபிஸுல
அதிகாரிகள் அவங்களுக்கு டார்ச்சரோ
டார்ச்சர் கொடுக்கறாங்க./
வாழ்க வளமுடன்!
//
Anonymous Said...
/
அப்படியும் இப்படியும் பேசறதுதான் ரங்கமணிகளுக்கு பொழப்பா போச்சே!
/
ஒரு ஃப்ளெக்ஸிபிளிடிதான். அப்படி அஜ்ஜஸ் செஞ்சுதானே காலத்தை ஓட்டணும்
//
ரிப்பீட்ட்டேய்
ஆஹா நன்றி இளைய பல்லவன்,
ரங்கமணிகள் கூட்டத்திலும் தவறை புரிந்துகொள்ள ஆளிருக்காங்க.
பாராட்டுக்கள்
//
Anonymous said...
ஆப்பீஸ்லயாவது செய்யற வேலை சரியில்லைனா மெமோ குடுப்பாங்க தங்கமணி செய்யற நல்லா இல்லாத சமையலுக்கு என்ன செய்யறது!?!?
//
இப்படி எந்த ஒரு அனானியும் கமெண்டாத பொழுது அதை போட்டு அதற்கு ரிப்பீட்டு போட்ட சிவாவை என்ன செய்யலாம்?
இல்லாத சமையலுக்கு என்ன செய்யறது!?!?/
நாளை வரும் காத்திருப்போம்.
:))) (நாளைக்குத்தான் செவ்வாய்கிழமை என்பதையும் அன்னைக்கு ஐயாதான் எல்லாவேலையையும் செய்யவேண்டும் என்பதையும் ஆராச்சும் ஞாபகப்படுத்துங்கப்பா)
//
Anonymous said...
ரங்கமணிகள் கூட்டத்திலும் தவறை புரிந்துகொள்ள ஆளிருக்காங்க.//
/கூட்டம் என்று சொன்னதை சங்கம் வன்மையா கண்டிக்கிறது...!/
ரிப்ப்பீட்ட்டேய்..!
/புதுகைத் தென்றல் said...
//
Anonymous said...
ஆப்பீஸ்லயாவது செய்யற வேலை சரியில்லைனா மெமோ குடுப்பாங்க தங்கமணி செய்யற நல்லா இல்லாத சமையலுக்கு என்ன செய்யறது!?!?
//
இப்படி எந்த ஒரு அனானியும் கமெண்டாத பொழுது அதை போட்டு அதற்கு ரிப்பீட்டு போட்ட சிவாவை என்ன செய்யலாம்?/
வாழ்த்தி ஒரு போஸ்ட் போடலாம்...:)
சமையலை விட சிறந்த ஆயுதம் இருக்குதா உலகில்.. செவ்வாய்க்கிழமை தாக்குதலை நடத்தி காட்டீடுவோம்
அனானி ஆப்ஷனே இல்லாத பொழுது
தானே அனானியாகி கமெண்ட் போட்டு அதை ரிப்பீட்டு என்று போட்டுக்கொண்டு தப்பிக்கப்பார்க்கறீங்களே தம்பிகளா?
இதெல்லாம் உங்கள் கைங்கர்யம் என்பது உங்க ரங்கமணி கண்டுபிடிச்சிடாமலேயா போயிடுவாங்க.
//
நிஜமா நல்லவன் said...
//
Anonymous said...
ரங்கமணிகள் கூட்டத்திலும் தவறை புரிந்துகொள்ள ஆளிருக்காங்க.//
/கூட்டம் என்று சொன்னதை சங்கம் வன்மையா கண்டிக்கிறது...!/
ரிப்ப்பீட்ட்டேய்..!
//
இன்னொரு ரிப்ப்பீட்ட்டேய்..!
வாழ்த்தி ஒரு போஸ்ட் போடலாம்...//
அது ரங்கமணிகள் செய்வது. நாங்க வித்தியாசமான ட்ரீட்மெண்ட் வெச்சிருக்கோம்.
:)
சமையலை விட சிறந்த ஆயுதம் இருக்குதா உலகில்.. செவ்வாய்க்கிழமை தாக்குதலை நடத்தி காட்டீடுவோம்//
ஆஹா பாத்துக்கோங்க தங்கமணிகளே!
நாளை நாம் அனைவரும் அணி திரண்டு நம் சகோதரியை பாதுகாக்கவேண்டும்.
/புதுகைத் தென்றல் said...
சமையலை விட சிறந்த ஆயுதம் இருக்குதா உலகில்.. செவ்வாய்க்கிழமை தாக்குதலை நடத்தி காட்டீடுவோம்//
ஆஹா பாத்துக்கோங்க தங்கமணிகளே!
நாளை நாம் அனைவரும் அணி திரண்டு நம் சகோதரியை பாதுகாக்கவேண்டும்./
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற மாதிரி இருக்கே....சும்மா இருந்த எங்க தல சிவாவை இப்படி ஒரு போஸ்ட் போட்டு உசுப்பேத்திவிட்டு அவரு நாளை சமையல் செய்யப்போகிறார் என்றதும் அணிதிரளுவது எந்த விதத்தில் சேர்ப்பது????
/புதுகைத் தென்றல் said...
வாழ்த்தி ஒரு போஸ்ட் போடலாம்...//
அது ரங்கமணிகள் செய்வது. நாங்க வித்தியாசமான ட்ரீட்மெண்ட் வெச்சிருக்கோம்.
:)/
வரன்முறை இல்லாத வன்முறை திட்டமா இருக்குமா????
/
புதுகைத் தென்றல் said...
ஆஹா பாத்துக்கோங்க தங்கமணிகளே!
நாளை நாம் அனைவரும் அணி திரண்டு நம் சகோதரியை பாதுகாக்கவேண்டும்.
//
ஆமா இதுக்கு மட்டும் கூட்டம் கூடிடுங்க வருசம் முழுசும் சோதனைக்கூட எலிக்குட்டியா இருக்கிற எங்களுக்கு யார் இருக்கா!?!?. எங்க போய் அழ!?!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
/ மங்களூர் சிவா said...
/
புதுகைத் தென்றல் said...
ஆஹா பாத்துக்கோங்க தங்கமணிகளே!
நாளை நாம் அனைவரும் அணி திரண்டு நம் சகோதரியை பாதுகாக்கவேண்டும்.
//
ஆமா இதுக்கு மட்டும் கூட்டம் கூடிடுங்க வருசம் முழுசும் சோதனைக்கூட எலிக்குட்டியா இருக்கிற எங்களுக்கு யார் இருக்கா!?!?. எங்க போய் அழ!?!?
அவ்வ்வ்வ்வ்வ்வ்/
கன்னாபின்னான்னு எக்கசக்க ரிப்பீட்டேய்....:)
சமையலை ஆயுதம்ன்னு சொல்லிட்டு அப்பறம் அதை தவிர்த்து அஹிம்சா வாதியாகி இலை தழை சாப்பிடுங்க நண்பர்களே...ஹோட்டலில் உங்களைப்போல சக ரங்கமணிகள் சமைத்துத்தருவதை தினம் சாப்பிட்டு உடம்பைக்கெடுத்துக்காதீங்க..
..சும்மா இருந்த எங்க தல சிவாவை இப்படி ஒரு போஸ்ட் போட்டு உசுப்பேத்திவிட்டு//
நாங்க உசுப்பேத்தலீங்க.
அவரா வாயக்கொடுத்து மாட்டிகிட்டாரு :)
வரன்முறை இல்லாத வன்முறை திட்டமா இருக்குமா????//
வன்முறை ஆசாமிகளுக்கு திட்டமும் வன்முறையாத்தான் இருக்கணும்.
:))))
எங்களுக்கு யார் இருக்கா!?!?. எங்க போய் அழ!?!?//
இப்படி இங்க சொல்லிக்கிட்டாலும் வீட்டுல நீங்க புலியா சீருரது எங்களுக்குத் தெரியும் தம்பி.
:))))))))
சமையலை ஆயுதம்ன்னு சொல்லிட்டு அப்பறம் அதை தவிர்த்து அஹிம்சா வாதியாகி இலை தழை சாப்பிடுங்க நண்பர்களே...ஹோட்டலில் உங்களைப்போல சக ரங்கமணிகள் சமைத்துத்தருவதை தினம் சாப்பிட்டு உடம்பைக்கெடுத்துக்காதீங்க..//
ஆஹா!அருமையாச் சொன்னீங்க.
மனமார்ந்த பாராட்டுக்கள் முத்துலெட்சுமி.
//வீட்டுல தங்கமணிகளுக்கு கொடுக்கற
டார்ச்சருக்குத்தான் ஆபிஸுல
அதிகாரிகள் அவங்களுக்கு டார்ச்சரோ
டார்ச்சர் கொடுக்கறாங்க.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமுங்க,
மனசை தேத்திக்கிட்டு இருங்க.//
அக்கா,
ஆபீஸ்ல வேலை பார்க்குற தங்கமணிகளை ஆட்டத்துல சேர்த்துக்கலையா??????
அவங்களை எல்லாம் அவங்க டேமேஜர் திட்ட மாட்டாரா?????
அது எந்த கணக்குல வரும்????
Kathir.
:) ரொம்ப சரி!
ஆபீஸ்ல வேலை பார்க்குற தங்கமணிகளை ஆட்டத்துல சேர்த்துக்கலையா??????
அவங்களை எல்லாம் அவங்க டேமேஜர் திட்ட மாட்டாரா?????
அது எந்த கணக்குல வரும்????//
நல்ல கேள்வி கதிர்.
ஆபிஸ் கோபம், வேலை எல்லாம் ஆபிஸோட விட்டுட்டு வரணும்னு சட்டம் அவங்களுக்கு மட்டு்ம்தானே போட்டுவெச்சிருக்கு.
இன்னைக்கு ஆபிஸுல டென்ஷன்னு தங்கமணி வந்து வீட்டுல முகத்தை தூக்கி வெச்சுகிட்டோ அல்லது தலைவலிக்குதுன்னோ டேமஜரைத் திட்டிகிட்டு உக்காந்திர முடியுமா??
தங்கமணிகளுக்குகோபம் வந்தா பாத்திரத்தின் மேல்தான் காட்டமுடியும்.
அவங்க டேமேஜர் திட்டாம பொறுப்பா நடந்துக்குவாங்க.
அதனாலதான் நிறைய இடத்துல பெண்கள் தான் வேணும்னு வேலைக்கு எடுத்துக்கறாங்க.
லந்து பண்ணலாம்னு வந்தேன்.
ரொம்ப நியாயமா எழுதி இருக்கீங்க!
கண்டிப்பா பாராட்டணும்ங்க!
அப்பதான் நல்லா திட்டலாம்னு இந்த
விவரமில்லாத ரங்க்ஸ்க்கு தெரியமாட்டேங்குது!
வாங்க சுந்தர்,
சரின்னு சொன்ன இரண்டாவது ரங்கமணி நீங்க.(ரங்கமணிதானே?)
உங்களுக்கும் இளையபல்லவனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
கண்டிப்பா பாராட்டணும்ங்க!
அப்பதான் நல்லா திட்டலாம்னு இந்த
விவரமில்லாத ரங்க்ஸ்க்கு தெரியமாட்டேங்குது!//
அப்படியும் தங்கமணியை திட்டாம விடக்கூடாது. என்ன ஒரு வில்லத்தனம்.
(டிசம்பரில் புதுகை வர்றேன். வந்து பேசிக்கறேன். :)))) )
Post a Comment