Tuesday, January 06, 2009

உள்நாட்டில் ஒரு வெளிநாடு!!!!

"அடுத்து எங்கம்மா போகப்போறோம்" அப்படின்னு
ஆவலோட பசங்க கேட்டாங்க.

சஸ்பென்ஸுன்னு நான் சொல்லிக்கிட்டே
இருக்கும்போது அந்த இடம் வந்தது!!



"இது திபெத்தியன் கோவில் இருக்கற இடம்,
Zangdogpalri of Namdroling Monastery,", கோல்டன்
டெம்பிள்னு சொல்வாங்கன்னு" அயித்தான் சொல்ல
"இந்தக் கோவில்ல என்ன சாமி இருக்கும்னு?"
கேட்டான் ஆஷிஷ்.




"புத்தர்னு" சொன்னதற்குத்தான் இருவரும்
"அவரா! பாத்து ரொம்ப நாளாச்சே!" என்று துள்ளிக்
குதித்தனர். கொழும்புவில் இருந்த பொழுது
கங்கார்மய்யா கோவில் அடிக்கடி செல்வதுண்டு.




உள்ளே நுழைந்ததும் பிள்ளைகளுக்கு பயங்கர ஷாக்!!!
முகம் முழுவதும் மலர்ச்சியுடன் சிலைக்கு அருகே
போய் நின்று கொன்றனர்.

புத்த பிக்குகளுக்கு பயிற்சியும் கல்வியும் அங்கே
அளிக்கப்படுகிறது. அந்த இடமே ஒரு மினி திபெத்
போல இருந்தது. இந்தியாவில் இருக்கிறோம்
எனும் நினைப்பு அந்த ஏரியாவை விட்டு வெளியே
வந்த பிறகுதான் வந்தது.



பக்கத்திலேயே புத்த விஹார(சிலை/கோவில்) இருந்தது.
அங்கும் சென்றோம். மனதிற்கு மிக அமைதியாக இருந்தது.
இந்தக் கோவிலை தரிசிப்பதால் ஒருவரின் நம்பிக்கை
அதிகரித்து அன்பும், அனுசரிப்பும் ஏற்படுகிறது என
நம்பப்படுகிறது. நமது அறிவித்திறனும் அதிகமாவதாக
சொல்கிறார்கள். (அங்கே வைத்திருந்த அறிவிப்பு
பலகையில் படித்தேன்)


பிள்ளைகளுக்கும் படித்துச் சொன்னோம்.
அப்போது அம்ருதா அடித்த ஹலைட்டான
கமெண்ட் இது.( கிசுகிசுக்கும் குரலில் நடந்த
உரையாடல் இது)" கங்கார்மய்யா கோவிலில்
எவ்வளவு அமைதியாக இருக்கும். இந்தக்
கோவிலில் ஏன் அம்மா இவ்வளவு
சத்தம் போடுகிறார்கள்?
என்ன பதில் சொல்ல முடியும் நான்!!! :((

எந்த மதக்கோவிலாக இருந்தால் என்ன?
கோவிலுனுள் அமைதி காக்க வேண்டும்
எனும் சாதாரண அடிப்படை விஷயம் கூடத்
தெரியாமல் கோவிலைப் பார்க்க வந்தவர்கள்
அதை ஒரு பிக்னிக்ஸ்பாட் மாதிரி ஆக்கி
சல சலவென பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இவ்வளவு பெரிய ஹால் கொடுத்திருக்காங்கள்ல!
கல்யாண மண்டபம் மாதிரி ஹாயா உக்காந்து
பேசறாங்க!" என்று ஆஷிஷ் வருத்தப்பட்டான்.

கோவிலி அமர்ந்திருக்கோம் என்று கூட
இல்லாமல் கால் நீட்டி, முழங்கால் நீட்டி
என ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்ததைப் பார்க்க
நிஜமாக கோபம் வந்தது.

"அவங்க பேசினா பேசட்டும்! நாம்
ப்ரார்த்தனை செய்வோம்" என்றான் மகன்.

"எப்படி செய்வது?" என்று மகள் கேட்க,
"கங்கார்மய்யாவில் மெடிடேஷன் செய்வோமே!
அதை இங்கே செய்யலாமா? என்றதும்
இருவரும் கீழே அமர்ந்தனர். நானும்
அயித்தானும் கூட அமர்ந்து கண்மூடி
தியானித்தோம்.

"உலகமெங்கும் அமைதியைத் தா" என்று ப்ரார்த்தித்தேன்.

அந்த 5 நிமிட தியானம் மனதை அமைதிப்படுத்தியது
தியானமு முடித்து கண் திறந்து பார்க்க எதிரில்
இருந்த புத்தர் சிலையின் முகத்தில் புன்னகை
அதிகமானது போல் ஒரு ஃபீலீங்க்.

இந்தக் கோவிலை தரிசித்ததன் பலன் எங்களுக்கு
முழுமையாக கிடைத்தது போலிருந்தது.

"மாங்ஸ் போட்டிருக்கற ட்ரெஸ் தான் வேறயா
இருக்கே தவிர ஃப்ளைட் பிடிக்காம ஸ்ரீலங்கா
போயிட்டு வந்தாமாதிரி இருக்கு" என்றார்கள்
பிள்ளைகள்.

அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டோம்.


சனி,ஞாயிரு மட்டும் தான்க்கா இந்த
சான்ஸ் கிடைக்கும். மிஸ் செஞ்சிடாதீங்கன்னு!
ஜீவ்ஸ் படிச்சு படிச்சு சொல்லியிருந்தாரு.

அதனால வண்டியை நேரா விட்டது
மைசூர் பேலஸுக்கு!!

ஜொலிக்குதே! ஜொலி! ஜொலிக்குதேன்னு
அரண்மனை மொத்தமும் மின் விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டு தக தகன்னு மின்னிக்கிட்டிருந்துச்சு.



பார்க்கிங் இல்லன்னு ஒரு போலீஸ்காரர் சொல்ல
கொஞ்சம் முன்னாடி போனா பார்க்கிங் இருந்துச்சு.
இறங்கி உள்ளே போய் லைட்டிங்ஸை மட்டும்
பாத்து, போட்டோ எடுத்தோம்.

அரண்மனை உள்ளே நாளைக்குப் போய்
பார்க்கலாம்னு அயித்தான் சொன்னாரு.
மத்தியானமே சாப்பிடவில்லை (ராப்டிங்
முடிச்சிடு வர்றதுக்குள்ள சாப்பாடு தீர்ந்து
போய் பேல் பூரி 2 ப்ளேட் தான் கிடைச்சது!)

பசி, பயணத்தால் களைப்பு இரண்டும் சேர
ஹோட்டலில் செக்கினாகி நல்லக் குளியல்
போட்டு பிசி பேளா பாத், பகளா பாத்
சாப்பிட்டு விட்டு தூங்கப்போனோம்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு
போனா அங்கே 4 கொடுமை ஜி்ங்கு ஜிங்குன்னு
ஆடிக்கிட்டு எதிர்ல வந்துச்சுன்னு சொல்வாங்க!
அது மாதிரி ஆகிப்போச்சு!

நாங்க இருந்தது முதல் தளம். இரண்டாவது
தளம் மொத்தமும் ஒரு பள்ளிக்காக புக்
செய்திருந்தாங்க. கரீக்டா எங்களுக்கு மேலே
இருந்த ரூம்ல டட் டப்னு சத்தம்.

போனைப்போட்டு ஹோட்டல் மேனேஜரைப்
பாக்கச்சொல்லியும் சத்தம் ஓயலை!
பசங்க தூங்கிட்டாங்க! அயித்தான் நேரே
போயி மேனேஜர் கிட்ட பேசி ரெண்டு பேரும்
போயி அந்த ரூம்ல பாத்தா ஆணும் பெண்ணுமா
25 பேரு சேர்ந்து அந்த ரூம்ல டான்ஸாம்!

அவங்க பிரின்ஸிபல், டீச்சர்ஸ் எல்லோரையும்
கூப்பிட்டு ஹோட்டல்காரங்க காட்டி
"வெளியே தள்ளிடுவோம்னு" மிரட்ட
மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அந்த பசங்களுக்கு
பரேட் நடத்தினாங்க!

அதுக்கப்புறம் தூங்கப்போனோம்.
அடுத்த நாள் மைசூர் ட்ரிப்.
அந்தப் பதிவு நாளைக்கு.....

21 comments:

TamilBloggersUnit said...

welcomes you!!!

Iyappan Krishnan said...

/எந்த மதக்கோவிலாக இருந்தால் என்ன?
கோவிலுனுள் அமைதி காக்க வேண்டும்
எனும் சாதாரண அடிப்படை விஷயம் கூடத்
தெரியாமல் கோவிலைப் பார்க்க வந்தவர்கள்
அதை ஒரு பிக்னிக்ஸ்பாட் மாதிரி ஆக்கி
சல சலவென பேசிக்கொண்டிருந்தார்கள்.//



I differ -IMO- when you say temple, temple is a "Samudhaya koodam ". not only for worship, it is for everything else aswel.

If you need silence, make sure that is a "meditation" center

**

//
சனி,ஞாயிரு மட்டும் தான்க்கா இந்த
சான்ஸ் கிடைக்கும். மிஸ் செஞ்சிடாதீங்கன்னு!
ஜீவ்ஸ் படிச்சு படிச்சு சொல்லியிருந்தாரு.//

Only sunday. :)


//அவங்க பிரின்ஸிபல், டீச்சர்ஸ் எல்லோரையும்
கூப்பிட்டு ஹோட்டல்காரங்க காட்டி
"வெளியே தள்ளிடுவோம்னு" மிரட்ட
மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அந்த பசங்களுக்கு
பரேட் நடத்தினாங்க!///



pch. paavam pasanga.

ஆயில்யன் said...

சில டென்ஷன் நிகழ்வுகளும் பல ரிலாக்ஸ் நிகழ்வுகளையும் தந்திருக்கு போல இந்த டூர் :)

ஆனாலும் இந்த கோவில் போய் குந்திக்கினு பிக்னிக் ஸ்பாட்டு ஆக்கி அதகளம் பண்றது தப்புதான்!

பொது இடம்ன்னு வர்றப்ப பொது மக்களுக்கு அதிகம் தொந்தரவு குடுக்காத வகையில நம்மளோட நடவடிக்கைகள் இருக்கணும் !

நிஜமா நல்லவன் said...

/
I differ -IMO- when you say temple, temple is a "Samudhaya koodam ". not only for worship, it is for everything else aswel.

If you need silence, make sure that is a "meditation" center/

reppeettu.....:)

pudugaithendral said...

everything else aswel.//

கோவிலுக்குள் உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம் என்று நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கவில்லை ஜீவ்ஸ்.

மெடிட்டேஷன் சென்டரில் பரிசுத்தமான அமைதி இருக்கத் தேவையில்லை. நாம் ஆள்நிலை தியானத்திற்குச் செல்லும்பொழுது அருகே இடியே விழுந்தாலும் தெரியாது.

கோவிலுக்கு செல்வது கண்ணார இறைவனைக்கண்டு, மனதார பேசி மகிழ். அங்கே அமைதிக்காத்தல் அவசியம்.

நம் தாய்த்திரு்நாட்டைத் தவிர வேறு எங்கேயும் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கோவில்களில் நான் பார்த்தவரை பார்த்ததில்லை.

pudugaithendral said...

Temple is the aboard of divine shrine and it is a place of worship only.

pudugaithendral said...

Only sunday. :)//

வார இறுதின்னு சொன்னப்ல இருந்துச்சு ஜீவ்ஸ்

நிஜமா நல்லவன் said...

/சனி,ஞாயிரு மட்டும் தான்க்கா இந்த
சான்ஸ் கிடைக்கும். மிஸ் செஞ்சிடாதீங்கன்னு!
ஜீவ்ஸ் படிச்சு படிச்சு சொல்லியிருந்தாரு./


ஜீவ்ஸ் கிட்ட நிறைய புஸ்தகம் இருக்குமே.....எந்த புஸ்தகத்திலிருந்து படிச்சு படிச்சு சொன்னார்????

pudugaithendral said...

pch. paavam pasanga.//

டான்ஸ் ஆடணும்னா டிஸ்கோத்தே போகணும். ஹோட்டல் ரூமில் டான்ச் ஆடினா பரேட் நடத்தாம உக்கார வெச்சு ஆரத்தியா எடுப்பாங்க!

:))))))))))

pudugaithendral said...

ஆனாலும் இந்த கோவில் போய் குந்திக்கினு பிக்னிக் ஸ்பாட்டு ஆக்கி அதகளம் பண்றது தப்புதான்!

பொது இடம்ன்னு வர்றப்ப பொது மக்களுக்கு அதிகம் தொந்தரவு குடுக்காத வகையில நம்மளோட நடவடிக்கைகள் இருக்கணும் !//

சேம் ப்ளட்டா சொல்லியிருக்கீங்க ஆயில்யன்.

நிஜமா நல்லவன் said...

/கோவிலைப் பார்க்க வந்தவர்கள்
அதை ஒரு பிக்னிக்ஸ்பாட் மாதிரி ஆக்கி
சல சலவென பேசிக்கொண்டிருந்தார்கள்./

பிக்னிக் ஸ்பாட்ல கோவில் இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க.....விடுங்க பேசிட்டு போகட்டும்.....:)

pudugaithendral said...

ரிப்பீட்டு போட்டதற்கும் ஸ்மைலிக்கு அப்புறமாவும் ரெண்டு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி நிஜமா நல்லவன்.

உங்க ரிப்பீட்டிர்கு பதில் ஜீவ்ஸின் பின்னூட்டத்திர்கு சொல்லியிருப்பதுதான்

நிஜமா நல்லவன் said...

/கோவிலி அமர்ந்திருக்கோம் என்று கூட
இல்லாமல் கால் நீட்டி, முழங்கால் நீட்டி
என ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்ததைப் பார்க்க
நிஜமாக கோபம் வந்தது./


நீங்க எங்க போனாலும் உங்க கோபம் உங்களுக்கு முன்னாடி அங்க போய்டுது....ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல....:))

pudugaithendral said...

பிக்னிக் ஸ்பாட்ல கோவில் இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க...//

பிக்னிக் ஸ்பாட்டில் ஒன்றும் கோவில் இல்லை. மக்களின் மனதில் இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கிறது.

இதற்குமேல் நான் ஏதும் சொல்ல விருப்பபடவில்லை.

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

பிக்னிக் ஸ்பாட்ல கோவில் இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க...//

பிக்னிக் ஸ்பாட்டில் ஒன்றும் கோவில் இல்லை. மக்களின் மனதில் இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கிறது.

இதற்குமேல் நான் ஏதும் சொல்ல விருப்பபடவில்லை./

:)

pudugaithendral said...

நீங்க எங்க போனாலும் உங்க கோபம் உங்களுக்கு முன்னாடி அங்க போய்டுது...//

என்னியப் பத்தி கரெக்டா தப்பா புரிஞ்சி வெச்சிருக்கறதுக்கு நன்றி நிஜமா நல்லவன்.

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல....:))//

நானும் இதுக்கு ரிப்பீட்டிக்கறேன். (அதாவது உங்களுக்கு பதில் சொல்லுறதுக்கு இப்போ மனசில்லை)

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

நீங்க எங்க போனாலும் உங்க கோபம் உங்களுக்கு முன்னாடி அங்க போய்டுது...//

என்னியப் பத்தி கரெக்டா தப்பா புரிஞ்சி வெச்சிருக்கறதுக்கு நன்றி நிஜமா நல்லவன்.

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல....:))//

நானும் இதுக்கு ரிப்பீட்டிக்கறேன். (அதாவது உங்களுக்கு பதில் சொல்லுறதுக்கு இப்போ மனசில்லை)/

ரொம்ப சீரியஸா இருக்கீங்க போல....நான் அப்பீட்டு.....:(

pudugaithendral said...

ரொம்ப சீரியஸா இருக்கீங்க போல..//

இல்லையே. ஆரோக்கியமா இருக்கேன். வாக்குவாதம் செய்யும் மனநிலை இல்லை.

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது படம் காட்டுகின்ற அரங்கம் நாங்கள் சென்றிருந்த போது மூடியிருந்ததால், அந்த சிலைகளை ஜன்னல் வழியாக மட்டுமே காண முடிந்தது. மெயின் ஹாலில் மெய் மறந்து நின்றிருந்தோம் பல நிமிட நேரம். அங்கு எடுத்த படங்கள் பலவற்றை ஏற்கனவே என் ஃபோட்டோ பதிவுகளில் வலையேற்றியுள்ளேன்.

புதுகை.அப்துல்லா said...

//நமது அறிவித்திறனும் அதிகமாவதாக
சொல்கிறார்கள். //

அக்கா இதுக்கு மேல உங்களுக்கு அறிவு அதிகமாச்சுன்னா எங்களுக்கு ஒன்னும் இல்லை...அயித்தனுக்குதான் டேஞ்சர்
:))))

pudugaithendral said...

இதுக்கு மேல உங்களுக்கு அறிவு அதிகமாச்சுன்னா //

ஆஹா தம்பி ஆப்பு வைக்கறதுல இது புது டெக்னிக்கா இருக்கே!