Tuesday, January 13, 2009

பிறந்த நாளுக்கு வீட்டில் இல்லாமல் ......

எனது திருமணத்திற்கு முன்பு வரை அப்பாவின்
பிறந்த நாளின் போது அவர் எங்களுடன் இருந்ததே இல்லை!!

”கொஞ்சம் முன்னாடியே அங்கே போனால் என்ன?”
என்றால் கோபப்படுவார்.

அப்பாவின் பிறந்த நாளுக்கு அது செய்யணும்?
இது செய்யணும்னு நாங்க நினைச்சாலும்
விட மாட்டார். வீட்டில் இருந்தால் தானே
பிரச்சனை என்று கிளம்பிப் போய்விடுவார்.

பிறந்தநாளுக்கு புத்தாடை உடுத்த மாட்டார். 2 வயதில்
தகப்பனை இழந்து இளமையில் வறுமையை அனுபவித்தவன்!
இப்பொழுதென்ன புத்தாடை என்பார். (தீபாவளிக்கும்
இதே நிலைதான். சாவகாசமாக எழுந்து குளிப்பார்.
ஒரு நாள் கூட கங்காஸ்னானம் கிடையாது.
புத்தாடை கிடையாது அப்பாவிற்கு!!! )

அப்படி எங்கேதான் செல்வார்?

அப்பா போகும் இடத்தில் கூட ஒரு பிறந்த நாள்
கொண்டாட்டம் இருக்கும்! லட்சக் கணக்கான
பேர்கள் கூடி இருப்பார்கள் அங்கே!!!!

ஜனவரி 14 அப்பாவின் பிறந்த நாள்!
அன்றுதான் ஐயப்பனுக்கும் பிறந்த நாள்.
ஐயப்பனுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாட
சபரி மலைக்குச் சென்று விடுவார் அப்பா.

அப்பாவிற்கு மிகவும் பி்டித்த பாடல்
1975 ஆம் ஆண்டு வெளிவந்த
சுவாமி ஐயப்பன் படப் பாடல்.
தமிழில் டீ.எம்.எஸ் அவர்களின்
குரலில் சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்”

தமிழில் கிடைக்காததல் மலையாளத்தில்
அந்தப் பாடல்.அச்சாணி படத்தில் ஜானகி அம்மா பாடிய
“மாதா உன் கோவிலில் மணி தீபம்
ஏற்றினேன்” பாடலை “சாஸ்தா உன் கோவிலில்
நெய் தீபம் ஏற்றினேன்” என்று அப்பா பாடுவார்.
மிக பிடிக்கும்.

அப்பா- என் உலகத்தின் முதல் ஆண்மகன்.
என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தவர்.
பொத்தி பொத்தி பெண்னை வளர்ககாமல்
கடைக்கு போவது, வங்கி விவகாரம்
என பலதும் பழக்கினார்.

நானும் ஒரு எம்டன் மகள்!!
அதைப்பத்தி படிக்க இங்கே: :)


ஜனவரி 1 அப்பா, அம்மாவுடன் இருந்தோம்.
கோவிலுக்குச் சென்று வரும் வழியில்
சீடி கடைக்குச் சென்று வேண்டிய சீடிகளை
வாங்கும் பொழுது அந்த சீடிக்கள் கண்ணில்
பட்டது. வாங்கிக் கொண்டு வந்து வண்டியில்
அமர்ந்திருந்த அப்பாவிடம் கொடுத்தேன்.

“ஹை! தேங்க்யூ! தேங்க்யூ!!” என்று
குழந்தையாக குதூகலித்தார். அது
அப்பா மிகவும் விரும்பும் “தில்லானா
மோகனாம்பாள், மணல்கயிறு, கல்யாணப்
பரிசு” பட சீடிகள்.

நான் வாங்கிக் கொடுத்த புடவையை
அம்மா புத்தண்டன்றே கட்டிக்கொள்ள,

அப்பா,” இந்த டீஷர்டை பர்த்டேக்கு
போட்டுக் கொள்கிறேன்ம்மா. அதுக்குள்ள
பேண்டும் தெச்சிக்கரேன்” என்றதும்
சந்தோஷமாக இருந்தது.
(கடந்த 3 வருடங்களாக நானும் தம்பியும்
அதிகம் வற்புறுத்துவதால் புத்தாடை
அணிகிறார் அப்பா)

அப்பாவுக்கும், ஐயப்பனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

13 comments:

ராமலக்ஷ்மி said...

அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஐயப்பனுக்கும் வாழ்த்துக்கள்!

எனது அடுத்த கமெண்டுக்கு நீங்கள் ட்ரீட் தரணும். ஏன்னு யோசியுங்க. [என்ன கொடுக்கலாம்னும் யோசிங்க:)!]

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

\\2 வயதில்
தகப்பனை இழந்து இளமையில் வறுமையை அனுபவித்தவன்!\\

கொடிது கொடிது வருமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வருமை
அதனினும் கொடிது முதுமையில் செல்வம்.

நட்புடன் ஜமால் said...

\\அப்பா- என் உலகத்தின் முதல் ஆண்மகன்.\\

அருமையான ஆண் மகன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

உங்களுக்காக நானொரு பரிசு கொண்டு வந்திருந்தேன்.

உங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம் தான்.

ட்ரீட் கொடுக்க நான் ரெடி.

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஜமால்,

அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.

அமுதா said...

அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

ஒவ்வொரு பெண்ணிற்கும் தகப்பன் தான் ரோல் மாடல் ஜமால். தன் கணவன் அப்பா போல் இருக்க வேண்டும் என்றே நினைப்பாள்.

(அப்பா போல் அயித்தானும் டூர் போவராக அமைந்து விட்டார். :))) )

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுகிறேன் அமுதா.

நன்றி

நிஜமா நல்லவன் said...

அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

நாளைக்கு உங்களுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லிடனும்...:)

புதுகைத் தென்றல் said...

நாளைக்கு உங்களுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லிடனும்...:)//

ஆஹா போட்டியில் நீங்களுமா??

சரி.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் அப்பாவிற்கும் சேர்த்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து.

புதுகைத் தென்றல் said...

நன்றி டாக்டர். முருகானந்தம்.