Tuesday, January 13, 2009

டயடுன்னா இன்னா?

என்ன டயடுல இருக்கீங்களா? அப்படின்னு குறைவா
சாப்பிடறவங்களைப்பார்த்து பலர் எகத்தாளமா
கேப்பாங்க.
இப்படி அவங்க கேக்கறதை கேட்டா எனக்குச் சிரிப்பா
வரும். :) டயடுன்னா இன்னான்னு தெரியாமா
டயட்டான்னு? கேட்டா என்ன அர்த்தம்??

(குடும்பம் ஒரு கதம்பம் விசு மாதிரி
குழப்பறேன்னு சொல்றீங்களா?)


நாம் உண்ணும் உணவிற்கு பெயர் டயட்.
இன்னும் சொல்லப்போனால் சரிவிகித
உணவு.

உணவு பழக்கத்திற்கு பெயர் டயடரி ஹேபிட்ஸ்.

இது நம் கலாசாரத்தாலும், நம் உணவு முறையாலும்
ஏற்படும் பழக்கம்.

நமது உணவுப் பழகக்த்தை ஒரு தாளில்
குறித்துக்கொண்டு அதை கீழே இருக்கும்
பிரமிட்டோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டால்
நம் உணவுப் பழக்கம் சரியானதா? என்பதை
அறிந்துக் கொள்ளலாம்.





நம் உணவு பழக்கத்தில் இருக்கும் சில தவறான
பழக்கங்கள்.

அரிசி, கோதுமை போன்றவைகளை கார்ப்போஹைரேட்
சத்து என்போம். அதை அதிகமாக எடுத்துக்கொண்டால்
உடலில் கொழுப்பாக தங்கி விடக் கூடும்.

அரிசி( அரிசியால் செய்யப்பட்ட உணவுகள்)
கோதுமை (கோதுமையால் செய்யப்பட்ட
உணவு்வகைகள்)அளவைக் கு்றைத்து,
அதிகம் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள
வேண்டும். பருப்பு, தானிய வகைகள்
இருக்க வேண்டும்.

பலருக்கும் சோறு சாப்பிடாவிட்டால் சாப்பிட்ட
மாதிரியே இருக்காது. ருசியால் அதிக அளவில்
சோறு சாப்பிட்டு விடுவோம். ஆனால்
அதற்குத் தகுந்த உடல் உழைப்பு இல்லாததால்
உடல் பருமன் ஏற்படுகிறது. மருந்தாகும்
உணவு பதிவில் நண்பர் ஒருவர்
சொல்லியிருந்தது போல் சோற்றின்
அளவைப் படிப்படியாக குறைத்து
வந்தாலே வித்தியாசம் தெரியும்.

அதிகமாக காபி/டீ குடிப்பதாலும்
உடல் பருமன் ஏற்படும். (சர்க்கரை)

சிலருக்கு ரவா உப்புமாவுடன் சர்க்கரை
மிக மிக பிடித்த காம்பினேஷன்.

வெள்ளைச் சர்க்கரை நம் உடல் பருமனை
கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரஜினி சொன்னது போல் வெள்ளை பண்டங்கள்
சிலவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள
வேண்டும். (அரிசி, சர்க்கரை,மைதா,
உப்பு, வெண்ணெய், நெய்...)

தயிர், மோர் உடலுக்கு மிகவ்ம் நல்லது.

இப்படி முறையான உணவு பழக்கம்
ஏற்படுத்திக் கொள்வது தான்
டயட் கண்ட்ரோல்.(நாம்
என்ன சாப்பிடுகிறோ? அது நம்
உடலுக்கு நல்லதா? என அறிந்து
நல்லதை மட்டுமே உண்பது)

டயட் கண்ட்ரோல்+ முறையான
உடற்பயிற்சி= ஆரோக்கியமான வாழ்க்கை.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி
சாப்பிடுவது என்பவர்களுக்கு.
வாரத்தில் 5 நாள் முறையான
உணவுப்பழக்கத்தில் உணவு
எடுத்துக்கொண்டு ஒரு நாள்
நம் மனதும், வாயும் விரும்பும்
உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் விரதம். அது எதுக்கு?
அடுத்த பதிவில் சொல்லட்டுமா????

20 comments:

நட்புடன் ஜமால் said...

டயட்டா

நான் டயர்டுன்னா என்னான்னு படிச்சிட்டேன் ...

நட்புடன் ஜமால் said...

\\(குடும்பம் ஒரு கதம்பம் விசு மாதிரி
குழப்பறேன்னு சொல்றீங்களா?) \\


இது தெளிவா புரியுது ...

நட்புடன் ஜமால் said...

\\சரிவிகித உணவு.\\

பலர் விளங்காத சரியான செய்தி ...

நட்புடன் ஜமால் said...

\\அரிசி, கோதுமை போன்றவைகளை கார்ப்போஹைரேட்
சத்து என்போம். அதை அதிகமாக எடுத்துக்கொண்டால்
உடலில் கொழுப்பாக தங்கி விடக் கூடும்.\\

கோதுமையுமா ...

நட்புடன் ஜமால் said...

\\ஒரு நாள் விரதம். அது எதுக்கு?
அடுத்த பதிவில் சொல்லட்டுமா????\\

இங்கையும் ‘தொடரும்’ ஆஆஆ

pudugaithendral said...

வாங்க ஜமால்.

அரிசியை குறைவாகவோ அல்லது
தவிர்த்தோ சாப்பிடுபவர்கள் கூட நான்
சப்பாத்திதான் சாப்பிடுவேன் என்பார்கள்.

அது கூட 10 -12 சாப்பிட்டா அம்புட்டுதான்.

2 சப்பாத்திதான் லிமிட்
:))))))

pudugaithendral said...

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

ஆற்றில் மட்டுமல்ல வயிற்றுலும் அளந்துதான் போட வேண்டும்.

இது நான் தெரிந்துகொண்ட செய்தி.

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

ஆற்றில் மட்டுமல்ல வயிற்றுலும் அளந்துதான் போட வேண்டும்.

இது நான் தெரிந்துகொண்ட செய்தி./


ரிப்பீட்டேய்...!

ராமலக்ஷ்மி said...

//ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.

ஆற்றில் மட்டுமல்ல வயிற்றுலும் அளந்துதான் போட வேண்டும்.

இது நான் தெரிந்துகொண்ட செய்தி.//

சரியாகச் சொன்னீர்கள்.

அளந்து போட்டு
அதுவும்
ஆராய்ந்து போட்டு
ஆராக்கியத்துடன்
வாழ்வோம் வளமுடன்;
வாழ்வீர் வாழ்வாங்கு!
-என எல்லோரையும் வாழ்த்தி உங்கள் வலைப்பூவில் போட்டுட்டேன் பின்னூட்டத்தில் ‘சதம்’:))!

pudugaithendral said...

இங்கையும் ‘தொடரும்’ ஆஆஆ//

:))))))))))))))

pudugaithendral said...

வருகைக்கும் ரிப்பீட்டிற்கும் நன்றி நிஜமா நல்லவன்.

pudugaithendral said...

உங்கள் வலைப்பூவில் போட்டுட்டேன் பின்னூட்டத்தில் ‘சதம்’:))!//

பாராட்டுக்களுடன் மனமார்ந்த நன்றிகள் ராமலக்‌ஷ்மி.

Poornima Saravana kumar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
டயட்டா

நான் டயர்டுன்னா என்னான்னு படிச்சிட்டேன்
//

ம்ம் படிப்பிங்க படிப்பிங்க..

Poornima Saravana kumar said...

டயட் பற்றிய பதிவு அருமை..

Thamira said...

எனக்கு ரொம்ப தேவையான பதிவுன்னு நெனைக்குறேன்.

pudugaithendral said...

வாழ்த்திற்கு நன்றி பூர்ணிமா,

உங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி திமிழ்மிளிர்

pudugaithendral said...

பலருக்கும் உபயோகமா இருக்கும்னு நினைச்சுதான் எழுதினேன் தாமிரா.