பிரபல பெண்கள் இதழில் அடிக்கடி படிக்கும் பகுதி
“என் வாழ்வில் பெண்கள்”. பிரபல மான ஆண்கள்
தங்களின் வாழ்வில் மிகவும் மதிக்கும், நேசிக்கும்
பெண்களைப் பற்றி கூறியிருப்பார்கள்.
பெருமையாக இருக்கும்.
யோசித்து பார்த்தால் பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.
தந்தை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா,
பெரியப்பா என மிகவும் பிடித்த ஆண்கள்
இரு்ப்பார்கள். தாலிக்கொடி தந்த உறவும்,
தொப்புள் கொடி தந்த உறவும் மறக்க முடியாத
உறவுகள்.
ரீஜண்டா என் தங்கை சொன்ன கமெண்ட்
இங்கு பொருந்தும்.
“ஜீன்ஸ் போட்டவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை! சுடிதார் போட்டவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்லை”!! :)))
பெண்கள் மட்டும்தான் நல்லவர்கள்,
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள்னு
சொல்லிட முடியாது. ரோல்மாடலாக,
மிகவும் நேசித்த, ஆண்கள் நம்மைச்சுற்றியும்
உண்டு.
என் உலகில் ஆண்கள், இந்த வரிசையில்
சிலரை அடுத்த பதிவுகளில்
நான் அறிமுகப்படுத்த போகிறேன்.
முதல் அறிமுகமாக என் உலகத்தின்
முதல் ஆண்மகன்.
ஆம் என் அப்பா திரு. ரமணி அவர்கள்.
அப்பா கற்றுத் தந்தவை தான் இன்று என்னை
வழி நடத்திச் செல்கின்றன.
புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியில்
எழுத்தராக தன் வாழ்க்கையை துவங்கி
மேனேஜராக ஓய்வு பெற்றவர்.
கண்டிப்புக்கு பேர் போனவர். ராசி சிம்மமானதால்
இவர் ஒரு நடமாடும் சிம்மம்.
அப்பா பத்திய என் கொசுவத்திக்கு இங்கே.
கண்டிப்புன்னா சும்மா உங்க கண்டிப்பு எங்க
கண்டிப்பு இல்லை.
இந்தப் பதிவு அப்பாவால் நான் கற்றுக்கொண்டதெப்படி?
என்பதை சொல்லும்.
இதுவே 4 பதிவா வந்துச்சுன்னா பாருங்க.
இரண்டு
மூன்று,
நான்கு
ஒவ்வொரு பெண்ணிற்கு தன் தந்தைதான்
ரோல் மாடல். தன் அப்பா போன்ற கணவர்தான்
வேண்டுமென்று கூட நினைப்பார்கள்.
நானும் அப்படித்தான்.(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )
பெண் பிள்ளைகளுக்கே அப்பா மேல்தான்
பாசம் என்பதால் மட்டும் சொல்லவில்லை
அப்பாவின் வளர்ப்பு கற்றுத்தந்தவை ஏராளம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசாங்கத்தால்
பட்ஜட் தாக்கல் செய்யப்படும். அன்று
அப்பா டீவி முன் ஆஜர். நானும் அங்கே
இருக்க வேண்டும்!!!(அப்போது எனக்கு வயது
13 அல்லது 14 இருக்கலாம்) இதெல்லாம் எனக்கெதுக்குப்பா”!!
என்றால், ”இது எதுக்கா? அது சரி!!
நாட்டோட பட்ஜாட்டால நம்ம வாழ்க்கை
பட்ஜட்டுக்கும் எம்புட்டு பாதிப்பு வரும்னு
தெரிஞ்சிக்கலாம். அங்க ரயில்வே பட்ஜட்டில்
டிக்கெட் வெல ஏத்தினாங்கன்னு வைய்யி
நம்மளுக்கு பாதிக்கும்ல???” என் கேட்பார்.
இப்போது நான் வீட்டு பட்ஜட் போடுவதில்
எக்ஸ்பர்டாகி இருக்கிறேன் என்றால் அது
அப்பா அன்று கற்று கொடுத்தால்தானே!
10 வயதாக இருக்கும்பொழுது, தினமும்
காக்க! காக்க! என்று ஏதோ ஸ்லோகம்
தினமும் சொல்கிறாரே ”!என்று அவரை
ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று அப்பாவுக்கு
தெரியாமல் நானே படித்து மனப்பாடம் செய்து
அப்பாவிடம் சொல்லிக்காட்ட சந்தோஷமாகி
கவசத்தின் அருமை பெருமையைச் சொன்னார்.
அப்படியே மனதில் ஏற்று இன்றளவும் கந்தனின்
காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவனுக்கு
வேதனை இல்லை என்பார்கள். மகள் வாழ்வு
வேதனை இல்லாமல் இருக்க அழகாக
(தானே ஒரு உதாரணமாக இருந்து)
பக்தியை போதித்த நல்ல தந்தை
எனக்குக் கிடைத்தது ஆண்டவனருள்.
அப்பாவைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்.
முடிவே இல்லை. சூரியவம்சம் படத்தில்
சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்.
அது சத்தியமான உண்மை.
“அப்பா திட்டுகிறார் என்று மனது
வருத்தப்படாமல் தன் நல்லதிற்குத்தான்
சொல்கிறார்” என்று உணர்ந்தால் பிள்ளைகள்
வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???
(எனி கெஸ்??? :)))) )
36 comments:
அதுக்குல்லாற இன்னொன்னா
எப்படிங்க அது ...
\யோசித்து பார்த்தால் பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.\\
யோசிக்காம பார்த்தாலும் சரியே ...
அதுக்குல்லாற இன்னொன்னா
எப்படிங்க அது ..//
மீ த பர்ஸ்டுன்னு ஒவ்வொரு பதிவிற்கும் நீங்க வருவது எப்படியோ அப்படித்தான் இதுவும்.
:))))))))))
நட்புடன் ஜமால் said...
//யோசிக்காம பார்த்தாலும் சரியே ...//
ஜமால் சொல்வதும் சரியே:)!
நல்ல பதிவு தென்றல். அப்பா பற்றி அறிந்து கொண்டாம். அடுத்து... ஆவலுடன் காத்திருக்கிறோம்.
\\“ஜீன்ஸ் போட்டவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை! சுடிதார் போட்டவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்லை”!! :)))\\
மிக மிக சரியே ...
\\ஒவ்வொரு பெண்ணிற்கு தன் தந்தைதான்
ரோல் மாடல்\\
எங்களுக்கு தாங்கோ ...
\\அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) \\
ஹா ஹா ஹா ...
\\தன் அப்பா போன்ற கணவர்தான்
வேண்டுமென்று கூட நினைப்பார்கள்\\
ஆண்கள் தாய் போல வேண்டும் என நினைப்பது போல ...
\\இப்போது நான் வீட்டு பட்ஜட் போடுவதில்
எக்ஸ்பர்டாகி இருக்கிறேன் என்றால் அது
அப்பா அன்று கற்று கொடுத்தால்தானே!\\
வாழ்த்துக்கள் ...
எங்களுக்கும் சொல்லித்தாருங்களேன் ...
\\அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???
(எனி கெஸ்??? :)))) )\\
இப்படியெல்லாம் சொன்னா
நாங்க ரங்கமணிதான்னு சொல்லுவோம்ன்னு நினைக்கிறீங்களா
\\
மீ த பர்ஸ்டுன்னு ஒவ்வொரு பதிவிற்கும் நீங்க வருவது எப்படியோ அப்படித்தான் இதுவும்.\\
ஹா ஹா ஹா ...
/*பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.தந்தை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா,பெரியப்பா என மிகவும் பிடித்த ஆண்கள் இரு்ப்பார்கள். தாலிக்கொடி தந்த உறவும்,தொப்புள் கொடி தந்த உறவும் மறக்க முடியாத உறவுகள். */
உண்மை ... உண்மை...
//அப்பாவைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்.
முடிவே இல்லை. சூரியவம்சம் படத்தில்
சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்.
அது சத்தியமான உண்மை.
“அப்பா திட்டுகிறார் என்று மனது
வருத்தப்படாமல் தன் நல்லதிற்குத்தான்
சொல்கிறார்” //
இதெல்லாம் வளர்ந்த பிறகே உணர முடியும் !
நல்ல கட்டுரை !
ஆண்கள் தாய் போல வேண்டும் என நினைப்பது போல ...//
ஆமாம் ஜமால்
உண்மை ... உண்மை...//
வருகைக்கும் வழிமொழிதலுக்கும் நன்றி அமுதா.
இதெல்லாம் வளர்ந்த பிறகே உணர முடியும் !..
ஆமாம் கோவி.கண்ணன்,
வளர்ந்த பிறகு என்று சொல்வதை விட தந்தையான பிறகுன்னு சொல்வது சரியா இருக்கும்ல.
(பெண்கள் அம்மாவை உணரும் தருணமும் தான் தாய்மையுற்றிருக்கும்பொழுதுதான். இதுவும் என் அனுபவம்)
எங்களுக்கும் சொல்லித்தாருங்களேன் //
ஆஹா அழகா ஒரு மென்பொருள் அதற்காகத் தயாரித்து தந்த நீங்களே கேக்கறீங்களா?
பதிவு போட்டிருக்கேனே!
ஆவலுடன் காத்திருக்கிறோம்.//
ஆஹா, நாளைக்கு பதிவு வரும் ராமலக்ஷ்மி.
(இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டா திருஷ்டி பட்டுரும் :))))) )
நாங்க ரங்கமணிதான்னு சொல்லுவோம்ன்னு நினைக்கிறீங்களா//
:)))))))))
அப்பாவிற்கு அடுத்து அயித்தானைப் பத்தி பதிவு போடுவேன்னு நீங்க நினைக்கறீங்களா?
அடுத்த பதிவுல யாருன்னு பாருங்க. தெரியும்.
\\(இன்னைக்கே இன்னொரு பதிவு போட்டா திருஷ்டி பட்டுரும் :))))) )\\
ஆமாம் ஆமாம்
நானும் logoff பன்றேன்
அப்புறம் பின்னூட்ட முடியாது ...
நானும் logoff பன்றேன்
அப்புறம் பின்னூட்ட முடியாது ...//
:))))))))
அப்துல்லா உங்க பின்னூட்டத்தை நீக்கிட்டேன். சஸ்பென்ஸை பொசுக்குன்னு போட்டு உடைச்சிட்டீங்களே!!! ஆனாலும் சரியாக கெஸ் செஞ்ச உங்களுக்கு பாராட்டுக்கள்.
:))))))))))
//அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???//
ஹைய்ய்ய்ய்
அயித்தான் தான் :))))
அருமை
அயித்தான் தான்//
:))))
நன்றி திகிழ்மிளிர்.
\\பெண் பிள்ளைகளுக்கே அப்பா மேல்தான்
பாசம்\\
100% உண்மை:)
//அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???//
கல்யாண் அண்ணன்.
///அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???///
unga uncle!
அச்சச்சோ நான் கூட இப்படி ஒண்ணு ஆரம்பிக்கணும்னு இருந்தேன்....
அன்புடன் அருணா
//(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )//
ஹஹாஹாஹஹா...இது டாப்பு...
அன்புடன் அருணா
வாங்க வித்யா வருகைக்கு மிக்க நன்றி.
ஹ ஹ ஹாஹ் நிஜமா நல்லவன்,
அடுத்த பதிவு போட்டாச்சு.
(சஸ்பென்ஸ் தாளாமல் போன் செஞ்சு நீங்க சொன்ன லிஸ்டை இன்னும் ரசிச்சேன்)
:))))
அச்சச்சோ நான் கூட இப்படி ஒண்ணு ஆரம்பிக்கணும்னு இருந்தேன்....//
ஆஹா, அப்ப தொடர் பதிவா கோத்துவிட ஆரம்பிக்கலாமா???
//(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )//
ஹஹாஹாஹஹா...இது டாப்பு...
அன்புடன் அருணா//
:(( :)))
Post a Comment