நம் வீட்டில் தோட்டம் போட செடியை கொண்டு
வருகிறோம். அந்தச் செடியை முறையாக பராமரித்தால்
தான் அழகாக தளைத்து வளரும். இல்லையேல்
வாடி, வதங்கிப் போய்விடும்.
செடி சிறிதாக வளர்ந்த பொழுது இருந்த
மண்ணோடு மேலும் புது மண் சேர்த்தல் அவசியம்.
புதுமண்ணில் வளர முடியாமல் போய்விடும்.
ஒரு செடிக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்பொழுது, 22/25 வருடங்கள்
தான் வளர்ந்த வீட்டை விட்டு வரும் பெண்ணின்
நிலை? அப்பா, அம்மா பாசத்தோடு, அம்மம்மாவின்
செல்ல பேத்தி், மகளாக வளர்த்த மாமா,
பாசமிகு அத்தை இந்த உறவுகளை நான் பிரிந்து
வாழவேண்டியதுதான் வாழ்க்கை.
(திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு
கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்)
”கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்”
என்பார்களே! அப்படித்தான் இருந்தது.
புது இடம், தூரத்துச் சொந்தம் தான் என்றாலும்
அதிகம் பழகி பார்த்தே இராத குடும்பம்.
உடல்நிலை சரியில்லாத மாமியார்.
அயித்தானின் அண்ணன் குடும்பத்தினர்
அப்பொழுது சென்னையில் இருந்தார்கள்.
திருமணம் முடிந்து நாங்கள் முதலில்
சென்றது அவர்கள் வீட்டிற்குத்தான்.
பயந்து பயந்து இருந்த என்னிடம் வந்தார்
அயித்தானின் அண்ணன்.”அம்மா!
இது உன் வீடென நினைத்துக்கொள்.
நாங்களும் உன் உறவுதான்.” என்ற
அந்த வார்த்தை தந்த ஊக்கத்தை
வார்த்தையால் சொல்லிவிட முடியாது.
சொன்னது போல் மட்டுமில்லாமல்
இன்றளவும் “அம்மா” என்றழைப்பதைத்
தவிர என்னைஎதுவும் சொல்லியது கிடையாது.
ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது
அடிக்கடி போனில் பேசுவார் மாமா.
(நான் அப்படித்தான் அயித்தானின்
அண்ணனை அழைப்பேன். பிறந்த 11ஆம்
நாள் முதல் தன் தம்பியை மகன் போல்
வளர்த்தவர். இருவருக்கு 25 வருட வயது
வித்தியாசம். அண்ணன் என்றால் அவர்
தந்தைக்கு சமமானவர் தானே!!)
”குழந்தை 3 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்”
அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழ்ந்தையாக
இருக்கும். நிறைய பாலக்கீரை சாப்பிடு!!”
இப்படி பல அறிவுரைகள் சொன்னார்.
(பேறுகாலத்திற்கு அம்மாவீட்டிற்குச்
செல்லும் வரை தனியாகத்தான் இருந்தேன்.)
ஆஷிஷ் 3.25 எடையுடன் பிறந்த பொழ்து
”நான் சொன்னதை கேட்டதற்குச் சந்தோஷமம்மா!!”
என மகிழ்ந்தார்.
தம்பிமேல் இருக்கும் அதே பாசம் என்மீது
வைத்து கவனித்துக்கொள்ளவேண்டும் என
நினைத்த அந்த பெரிய மனது மாமாவுக்கு இருந்தது.
அப்பா அலுவலகத்தில் பிசியாக இருப்பதால்
அம்மாதானே எல்லாம் செய்கிறார். அம்மாவை
மதித்து அம்மா சொல்வதைக் கேள்! இது
என் குழந்தைகளுக்கு மாமா அடிக்கடி
சொல்லும் வார்த்தைகள். மருமகளை
வேற்றுக்கிரக வாசி போல் நினைத்து
குழந்தைகளை தாயுடன் ஒட்டாமல்
செய்யும் பெரிய்வர்களைப் பார்த்திருந்த
எனக்கு இது ஆச்சரியமான விடயம்!!
ஆஷிஷும் அவனது பெரியப்பாவும் சந்தித்துக்கொள்ளும்
காட்சி திரைப்படக்காட்சி போலிருக்கும். :)))))))))))
“பெத்தா!” என்று இவன் இரு கைகளையும்
நீட்டிக்கொண்டு ஓட, அவரோ”கண்ணா!”என
அழைத்தப்படி கையில் சாக்லேட்டுடன் வந்து
இருவரும் கட்டிக்கொள்வார்கள். :)
(அம்ருதா பெரியம்மா செல்லம்)
எனக்குள் எப்போது ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்.
திருமணமான புதிதில் ஹைதையில் இருந்தோம் சரி.
சென்னைக்கு மாற்றலாகிப்போன பிறகும் தனிக்குடித்தனம்
தான்? இது ஏன்? எனக்குப் புரியாமலேயே இருந்தது.
இலங்கைக்கு மாற்றலாகி கிளம்புவதற்கு முன்
மாமா, நான், குழந்தைகள் மட்டும் மெரினா
பீச் சென்றிருந்தோம்.(அயித்தான் அப்போ
இலங்கையில் இருந்தார்) பிள்ளைகளுடன்
அளவளாவிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக
இருக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தவர்,
“அம்மா, ஏன் உங்களைத்தனிக்குடித்தனம்
வைத்தேன் என்று தெரியுமா?” என்றார்.
”தெரியவில்லை” என்றேன்.
”நானும் தம்பியும் சேர்ந்து இருக்கலாம்
தவறில்லை. சேர்ந்து இருக்கும்பொழ்து
குடும்பத்தலைவனாக நானே எல்லாவற்றையும்
கவனித்து உங்களை நன்றாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், நான் அப்படிச் செய்திருந்தால் நீங்கள்
வாழ்க்கையை கற்பது எப்போது? வருவாய்க்குள்
செலவு, சேமிப்பு, குடும்பப் பொறுப்பு போன்றவைகளை
கற்காமல் போயிருப்பீர்கள்!” என்ன ஒரு நற்சிந்தனை!
“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்” என் யோசித்து அதை செயற்படுத்தி
எங்களை நல்வழிகாட்டி அழைத்துச் சென்ற
இவர் வயதால் மட்டுமல்ல குணத்தாலும்
பெரியவர் தான்.
இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது... என சென்ற
பதிவில் நான் சொல்லியிருந்தேன். இப்படி பட்ட
உறவு எனக்குக் கிடைக்கச் செய்த ஆண்டவனுக்கு
நன்றி.
**************************************
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன். அதாவது நல்லவர்களாக
நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.
என் பார்வை, கண்ணோட்டம் கற்றுத் தந்தது
இதைத்தான். அடுத்த பதிவு இந்தத் தொடரின்
கடைசி பதிவு.
இதில் யாரெல்லாம் இருக்காங்க?
வெயிட் அண்ட் சீ :)))
32 comments:
மனம் நிறைந்து அதில் நெகிழ்ந்து.. மனம் திறந்து பாராட்டி எழுதி வரும் இந்த தொடர் பதிவில் இதுவும் அருமை.
முடிவுப் பதிவுக்கும் வெயிட்டிங்!
//“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்” //
அற்புதமான வரிகள்.... நல்ல அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள்.
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.
////
என்ன? சில ஆண்கள்தான் நல்லவர்களா??? அக்கா பல ஆண்கள் நல்லவர்கள்.ஆண்களில் சிலர் கெட்டவர்கள். பெண்களூம் அப்படித்தான்.
:)
//எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள்//
இதுதானே வேணான்கிறது
நல்லவர் கேட்டவர் என்பது அவரவர் குணத்தை பொருத்தது,இதில் ஆண் என்ன பெண் என்ன?
/*நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.என் பார்வை, கண்ணோட்டம் கற்றுத் தந்தது இதைத்தான். */
உண்மை. மிக நல்ல தொடர் பதிவு. பாராட்டுக்கள்
மிக அருமையான தொடர் பதிவு. உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்.
லேட் அட்டண்டன்ஸ் ...
\\திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு
கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்\\
அழாட்டி தான் ஆச்சர்யம்.
\\அண்ணன் என்றால் அவர்
தந்தைக்கு சமமானவர் தானே\\
சரியே
அக்கா என்பவர் தாய் போல
\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன்\\
சில தானா :((((
\\. அதாவது நல்லவர்களாக
நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.\\
மிக மிக மிக ..........
சரிங்கங்கோ ...
\\“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்”\\
சிறந்த மாமா தங்களவரின் அண்ணன்.
\\Blogger வித்யா said...
மிக அருமையான தொடர் பதிவு. உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்.\\
ஆமாம் ஆமாம்.
வாங்க ராமலக்ஷ்மி,
வெயிட்டிங்கா? போட்டுடுவோம்.
மிக்க நன்றி அத்திரி
பல ஆண்கள் நல்லவர்கள்.ஆண்களில் சிலர் கெட்டவர்கள். பெண்களூம் அப்படித்தான்.
:))))))))))
இதுதானே வேணான்கிறது//
இன்னா வேணாம்க்றது?
நல்லவர் கேட்டவர் என்பது அவரவர் குணத்தை பொருத்தது,இதில் ஆண் என்ன பெண் என்ன?//
அவரவர் குணத்தைப் பொருத்ததுதான் என்றாலும் ஆண்மகன் புகழப்படும் அளவுக்கு நடந்து கொள்வது மிக அரிது.
பாராட்டிற்கு நன்றி அமுதா.
உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்.//
இதெல்லாம் போய் ஏம்மா வெளியில சொல்லிகிட்டு. என் மகளாக இருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ அதைச் செய்தேன் என்பதுதான் மாமாவின் பதிலாக இருக்கும்.
லேட் அட்டண்டன்ஸ் ...//
ஆச்சரியமா இருக்கே ஜமால்.
அழாட்டி தான் ஆச்சர்யம்.//
மும்பையில் மட்டும்தான் அழுகை. திருமணம் முடிந்து அயித்தானுடன் கிளம்புகையில் நோ கண்ணீர். (அழுதுகிட்டு எதுக்கு வாழ்க்கையை துவங்கனும். பொண்ணா பிறந்த பொழுதே நாம வேற வீட்டுக்கு போக வேண்டிய ஆளுன்னு முடிவாயிடிச்சில்ல.)
அக்கா என்பவர் தாய் போல//
சத்தியமான உண்மை. அதனால் தான் அயித்தானின் அக்காவையும் மறக்காமல் இருக்கிறோம்.
சிறந்த மாமா தங்களவரின் அண்ணன்.//
ஆண்டவன் அருள்.
முடிவுப் பதிவுக்கும் வெயிட்டிங்!
நல்லதொரு பதிவு.
நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், என் பெரிய தம்பி, சென்னையில் இருக்கிறார், என் சிறிய தம்பி எங்கள் பெற்றோருடன் இருக்க்கிறார். எனக்கும் என் சிறிய தம்பியை தனிக்குடித்தனம் அனுப்ப , அந்த அனுபவங்கள் கற்று கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஆசை தான். ஆனால் அப்படி செய்தால் என் பெற்றோர் தனியாக இருக்க நேரிடுமே என்ற அச்சத்தில் நான் அது பற்றி பேசுவதே இல்லை. எனக்கு என் தவறு புரிகிறது ஆனாலும் பெற்றோர் பாசம் என்னை தடுக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்?
ரொம்ப நாளா வராததுக்குச் சேத்து வச்சு இன்னிக்கு நிறைய பதிவுகள் படிச்சேன்...தொடர்கள் ஒரு டைரிக்குறிப்பு போல நல்லா அமைஞ்சிருக்கு...நல்ல அனுபவப் பதிவுகள்..சம்பந்தப்பட்டவர்கள் படிக்கும்போது மகிழ்ந்து போவார்கள்..
\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன்\\
///
சில பலவா இருந்தா நல்லா இருக்கும்..
அழகாக இருந்தது..
வாழ்த்துக்கள்.!
மிக இனிமையான பதிவு.
different,
வாங்க உங்க கருத்தும் ஞாயம் தான். இந்த மாதிரி நிலை பல வீடுகளில் இருப்பதால்தான் கூட்டுக்குடும்பமாக இருந்தும் சிலர் அண்ணன் தம்பிகளுக்குள் பேச்சுவார்த்தையே இல்லாமல் ஆகிவிடுகிறது.
எனக்கு மாமனார் கிடையாது. மாமியார் மட்டும் தான்(உடல் நிலை சரியில்லாதவர். இப்போது இல்லை) அதனால் இங்கே 6 மாதம் அங்கே 6 மாதம் என இருப்பார்.
தொடர்கள் ஒரு டைரிக்குறிப்பு போல நல்லா அமைஞ்சிருக்கு...நல்ல அனுபவப் பதிவுகள்..சம்பந்தப்பட்டவர்கள் படிக்கும்போது மகிழ்ந்து போவார்கள்..//
பதிவு படிச்சீங்க சரி. சீக்கிரம் பதிவு போடுங்க. உங்க கவிதைகளுக்கு நாங்க வெயிட்டிங்.
சில பலவா இருந்தா நல்லா இருக்கும்..//
எனக்கும் அந்த ஆசை இருக்கு. ஆனா நிலமை அப்படி இல்லையே. உண்மை வேறாகத்தான் இருக்கிறது தேவா.
அழகாக இருந்தது..
வாழ்த்துக்கள்.!//
நன்றி ராம்.
மிக இனிமையான பதிவு.//
வாங்கத் தம்பி வாங்க. தங்க்ஸ் சொளக்கியமா?
Post a Comment