Wednesday, February 04, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி - 2

என் அம்மம்மா அடிக்கடி சொல்லும் விஷயம்
குப்பையை பொறுக்கினாலும் தி பெஸ்ட்
குப்பை பொறுக்கி நான்தான் என நினைத்து
வேலை செய்தால் சுத்தமாக செய்வாய் என்பார்.

குப்பை பொறுக்குவது என்றால் என் நினைவுக்கு
உடன் வருவது முனிசிபாலிட்டி குப்பை பொறுக்குபவர்தான்.

அம்மா சில சமயங்களில் காய்கறி வெட்டிய
குப்பைகளைத் தம்பியை(அப்ப ரொம்ப குட்டிப் பையன்)
எடுத்து குப்பைத் தொட்டியில் போடச்சொல்வார்.
முறத்தை போய் எடுத்து வர சோம்பி தன்
கையிலேயே கொண்டு போய் போடுவான்.

நாங்கள் வந்து பார்க்கும் பொழுது சில
குப்பை அங்கேயே இருக்கும்! :)
அம்மா உடன்,” உனக்கு முனிசிபாலிட்டியில்
குப்பை பொறுக்கற வேலைக்கு சேரணுமா!”
என்பார். கோபப்பட்ட தம்பிக்கு ஒரு நாள்
குப்பை அள்பவர் எப்படி அரைகுறையாக
வேலை செய்கிறார் என்பதைக் காட்ட
அன்று முதல் சுத்தமாக செய்வான்.


குப்பை பொறுக்கும் தன் வேலையைக் கூட
சுத்தமாக செய்யாதது அவரின் தவறு
மட்டுமல்ல அந்த வேலையை முறையாகச்
செய்ய பழக்கப் படாததால் தான் இந்தப்
பிரச்சினை. நம்ம பிள்ளைகளுக்கு நல்ல
பயிற்சி கொடுத்தால் நம் வீட்டைச் சுத்தமாக
வைத்திருப்பார்கள்.

அது எப்படின்னு பாப்போம்.



இந்த மாதிரி சின்ன சைஸ் டஸ்ட் பான் ஒண்ணு
பசங்களுக்காக வாங்கிக் கொடுத்திடுங்க. அதை வெச்சு
குப்பைகளை எடுத்து குப்பைத்தொட்டியில் போடச்
சொல்லி பழக்கினால் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக
வீதியில் கூட குப்பை போடாத சிறந்த குடிமகனாக
பிள்ளை வளரும்.


இந்த நர்சரி ரைம் நல்லா இருக்கும். அதைப் பாடிகிட்டே
குப்பையை எடுத்து போடச் சொல்லுங்க. பாடிகிட்டே
அழகா செய்வாங்க.



என் தோழி தன் பிள்ளைகளுடன் என்னைப்பார்க்க வந்திருந்த
பொழுது அவள் மகன் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கவரைப் போட சுத்தி
குப்பைத் தொட்டி ஏதும் இல்லாததால் அம்மாவிடம்
அந்தக் கவரை கொடுத்து, ”வீட்டுக்கு போனதும் குப்பையில்
போடுறேன் அம்மா!” என்ற பொழுது ஆச்சரியமாக
பார்த்தேன். (இது நடந்து 10 வருடங்கள் ஆகிறது)
இன்றும் என் பிள்ளைகள் வீதியில் குப்பை போடாமல்
கவனமாக இருக்கிறேன்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

சுத்தம் சோறு போடும்
சொல்லி வளர்க்கணும்
ரொம்பச் சரி.

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

உங்க கருத்தோடு இதையும் சேத்துக்கணும்

சுத்தம் சோறு போடும்னு சொல்வது மாத்திரமல்ல சுத்தமா இருக்கப் பழக்கணும்.

ராமலக்ஷ்மி said...

//சுத்தமா இருக்கப் பழக்கணும்.//

ரொம்ப ரொம்பச் சரி.

butterfly Surya said...

Xlent. Keep going..

Nice

நாகை சிவா said...

நல்ல விசயம் :)

இது போன்ற தனிமனித ஒழுக்கங்கள் ரொம்பவே முக்கியம்.

pudugaithendral said...

ரொம்ப ரொம்பச் சரி./

:))))

pudugaithendral said...

Xlent. Keep going..

Nice//

Thanks a lot

pudugaithendral said...

இது போன்ற தனிமனித ஒழுக்கங்கள் ரொம்பவே முக்கியம்.//

ஆமாங்க நாகை சிவா,
வருகைக்கு மிக்க நன்றி.

நிஜமா நல்லவன் said...

/ராமலக்ஷ்மி said...

சுத்தம் சோறு போடும்
சொல்லி வளர்க்கணும்
ரொம்பச் சரி./

ரிப்பீட்டு..!

நட்புடன் ஜமால் said...

குழந்தைகள் முன் நாம் சரியான படி நடந்துகொண்டால் ...

குழந்தைகளின் முதல் பல்கலைகழகம் நாம் தானே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் பையனும் அப்படித்தான் சாக்லேட் பேப்பரை கொண்டுவந்து என் பாக்கெட்டிலோ இல்லாட்டி பேக் லயோ போட்டுருவான்.. சில சமயம் அந்த வீட்டு ஆண்ட்டிகிட்டயே கேட்டு உள்ள போய் போடுவான் .. மூடைப் பொறுத்து இது வேறுபடும். :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல சிந்தனை!