அதென்னவோ பல வீடுகளில் நிலமை இதுதான்.
அந்த வீட்டு தங்கமணி இப்படித்தான் பாடுவாங்க.
“அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டால்
அடுக்களையில் இருந்தாலும்
ஓடி நாந்தான் வந்து பார்ப்பேன்”
ஓ புரிஞ்சிடுச்சா! கரெக்ட்
நாம் பார்க்கப்போகும் பாடம் ANSWERING THE CALL.
அழைப்புக்கு பதில் சொல்லுதல்.
(முக்கியமான விஷயம். இந்த பாடத்தை
எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்.)
வா கண்ணா நாம் இப்ப ஒரு விளையாட்டு
விளையாடலாம்னு சொல்லி ஆரம்பிங்க.
தேவையான பொருட்கள்:
மணி.
கதவுக்கு பின்னால் நாம் நின்று கொள்ள வேண்டும்.
குழந்தையிடம் மணியைக்கொடுத்து அடிக்கச் சொல்லவும்.
மணியோசை கேட்டதும் மெல்லக் கதவைத் திறந்து
இன்முகத்தோடு,”யாரு வந்திருக்காங்க?” என் கேட்க
வேண்டும்.
இப்பொழுது பிள்ளை கதவுக்கு பின்னால் மணி்
நம் கையில்.
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இருந்தால்
அவர்களையும் சேர்த்துக்கொண்டு விளையாடலாம்.
கதவை தாளிடக்கூடாது என்று சொல்ல மறக்காதீர்கள்!
சரி இந்த அழைப்புக்கு பதில் சொல்லுதலால் என்ன
பயன்??
1. குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகமாகிறது.
கேட்கும் தன்மையை இங்கே உபயோகப் படுத்துகிறோம்.
2. விருந்தோம்பலை, விருந்தினரை வரவேற்றலை
சிறு வயதிலேயே விதைத்துவிடுகிறோம்.
3. கதவைத் திறக்க கைகளை உபயோகிப்பதால்
கைகளை உபயோகிக்கும் திறனை அதிகமாக்குகிறது.
4. கதவுக்கு பின்னே இருந்து வருதல் போன்ற
செய்கைகளால் சின்னச் சின்ன உடற்பயிற்சிக்ள்
செய்யப்படுகிறது.
5.கை கால்களின் உந்து சக்தி (MOTOR ACTIVITY)
அதிகமாகிறது
இப்படி பழகிய பிள்ளை அழைப்பு மணி
அடித்தால் அடுத்தவர் வந்து கதவு
திறக்கட்டும் என்று காத்திராமல்
இன்முகத்தோடு கதவைத் திறந்து
பாராட்டைப் பெறும்.
44 comments:
அருமையான முயற்சிக்கா ...
\\முக்கியமான விஷயம். இந்த பாடத்தை
எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்\\
இது எல்லாவிடத்திலையும் கைகொடுக்கும்.
\\இப்படி பழகிய பிள்ளை அழைப்பு மணி
அடித்தால் அடுத்தவர் வந்து கதவு
திறக்கட்டும் என்று காத்திராமல்
இன்முகத்தோடு கதவைத் திறந்து
பாராட்டைப் பெறும்.\\
சுப்பர்க்கா ...
நன்றி ஜமால்,
//எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்\\
இது எல்லாவிடத்திலையும் கைகொடுக்கும்.//
கண்டிப்பாய்.
மிக அருமையான, உபயோகமுள்ள ஒரு விஷயம். இன்றைய பெற்றோர்கள் கவனிக்கவேன்டியதும் கூட. எளிமையான முறையில் குழந்தைகளுக்கு ஒரு மிகச்சிறந்த பயிற்சி.
நன்றாக சொன்னாய் ஜமால்.
சிறிய நிகழ்வுகள் மூலம் பெரிய கருத்துகளை விதைக்க முடியும்.. அருமை...தொடருங்கள்...
//முக்கியமான விஷயம். இந்த பாடத்தை
எல்லாம் பிள்ளைகளிடம் விளையாட்டா
கொண்டு போகணும்.)
ஆமோதிக்கிறேன். நல்ல துவக்கம்.
ஆரம்பமே அசத்தல்.
போட்டுதாங்குக்க...
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சைய்யது.
சிறிய நிகழ்வுகள் மூலம் பெரிய கருத்துகளை விதைக்க முடியும்..//
அழகாச் சொல்லியிருக்கீங்க நன்றி
தமிழ்தினா
நல்ல துவக்கம்.//
நன்றி அமுதா
ஆரம்பமே அசத்தல்.//
நன்றிங்க வண்னத்துப்பூச்சியாரே.
நீங்க எங்கயோ போய்ட்டிங்க....
அக்கா எப்படி இருக்கிறாய்?
அம்மாவை பற்றி எதோ எழுதி இருக்கிறேன் என்று கூறினாய் அல்லவா எந்த postill ?
அருமையா சொல்லியிருக்கீங்க!. சூப்பர்.
//
அதென்னவோ பல வீடுகளில் நிலமை இதுதான்.
அந்த வீட்டு தங்கமணி இப்படித்தான் பாடுவாங்க.
“அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டால்
அடுக்களையில் இருந்தாலும்
ஓடி நாந்தான் வந்து பார்ப்பேன்”
//
ஆரம்பமே அட்டகாசமா இருக்கே
இருங்க மீதியும் படிச்சுட்டு வாரேன்!!!
//
கதவுக்கு பின்னால் நாம் நின்று கொள்ள வேண்டும்.
குழந்தையிடம் மணியைக்கொடுத்து அடிக்கச் சொல்லவும்.
மணியோசை கேட்டதும் மெல்லக் கதவைத் திறந்து
இன்முகத்தோடு,”யாரு வந்திருக்காங்க?” என் கேட்க
வேண்டும்.//
சூப்பர் ஒ சூப்பர் குழந்தையும் சூப்பர் !!
//
1. குழந்தைக்கு கேட்கும் திறன் அதிகமாகிறது. கேட்கும் தன்மையை இங்கே உபயோகப் படுத்துகிறோம்.
//
நல்லா இருக்குங்க இன்னும் என்னா
இந்த ஐடியாவை எல்லாரும்
கடைபிடிச்சா நல்லா இருக்குமே !!!
//
விருந்தோம்பலை, விருந்தினரை வரவேற்றலை சிறு வயதிலேயே விதைத்துவிடுகிறோம்.
//
இது வாழ்நாள் முழுவதும்
நல்லா பெயர் எடுக்க உதவும்
நல்ல தகவல்
//
3. கதவைத் திறக்க கைகளை உபயோகிப்பதால்
கைகளை உபயோகிக்கும் திறனை அதிகமாக்குகிறது.
//
சரியாக சொன்னீங்க நச்சுன்னு இருக்கு.
//
கதவுக்கு பின்னே இருந்து வருதல் போன்ற செய்கைகளால் சின்னச் சின்ன உடற்பயிற்சிக்ள் செய்யப்படுகிறது.
//
இந்த ஒரு சின்ன செயலில்
இவ்வளவு அறிவு பூர்வமான
கருத்து இருக்குதுன்னு எனக்கு
இது வரை தெரியாது !!
//
கை கால்களின் உந்து சக்தி (MOTOR ACTIVITY) அதிகமாகிறது
//
இது ரொம்ப சூப்பர் அக்கா
நான் அப்படி உங்களை கூப்பிடலாமா ?
//
இப்படி பழகிய பிள்ளை அழைப்பு மணி அடித்தால் அடுத்தவர் வந்து கதவு
திறக்கட்டும் என்று காத்திராமல்
இன்முகத்தோடு கதவைத் திறந்து
பாராட்டைப் பெறும்.
//
ரொம்ப அருமையான கருத்துங்க
இதை எல்லாரும் குழந்தைகளுக்கு
போதிச்சாங்கன்னா குழந்தைகள்
அருமையான பிள்ளைங்களா
வளர வழி வகுக்கும்!!
ரொம்ப நல்ல கருத்தா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் அக்கா !!!
இனி அடிக்கடி வருவேன்
சந்திப்போம் கொஞ்சம் சிந்திப்போம்!!!
நீங்க எங்கயோ போய்ட்டிங்க....//
வாங்க விக்கி,
அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி ஆகாமல் இருந்தால் சரிதான்.
அக்கா எப்படி இருக்கிறாய்?//
சூப்பரா இருக்கேன்.
//அம்மாவை பற்றி எதோ எழுதி இருக்கிறேன் என்று கூறினாய் அல்லவா எந்த postill ?//
தேடித்தான் பாக்கணும்.
இந்த ஒரு சின்ன செயலில்
இவ்வளவு அறிவு பூர்வமான
கருத்து இருக்குதுன்னு எனக்கு
இது வரை தெரியாது !!//
வாங்க வலைச்சர ஆசிரியரே!
மாண்டிசோரி கல்வி ஐம்புலன்களையும் உபயோகித்து கற்க்கும் முறைதான்.
இது ரொம்ப சூப்பர் அக்கா
நான் அப்படி உங்களை கூப்பிடலாமா ?//
நான் தான் உங்களை விட வயதில் மூத்தவள் என்றாள் தாராளமா கூப்பிடுங்க. :))
ரொம்ப அருமையான கருத்துங்க
இதை எல்லாரும் குழந்தைகளுக்கு
போதிச்சாங்கன்னா குழந்தைகள்
அருமையான பிள்ளைங்களா
வளர வழி வகுக்கும்!!//
அதுதான் என் விருப்பமும். சின்ன பிள்ளைக்கு என்னத் தெரியும்னு கற்றுக்கொள்ளக்கூடிய வயதில் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கிவிடுகிறார்கள். 5 வளையாதது 50 ஆனாலும் வளையாமலே போய்விடுகிறது.
இனி அடிக்கடி வருவேன்
சந்திப்போம் கொஞ்சம் சிந்திப்போம்!!!//
அடிக்கடி வாங்க. சந்தோஷம்
அருமையான ஆரம்பம்.
படமும் சூப்பர்.
அருமையான பதிவு...
புதுசா இருக்கு..
அழைத்து வந்தமைக்கு நன்றி ஜமால்...
இன்றைய இளம் தாய்மாருக்கு அருமையான தகவல்.
தொடருங்கள்.
ஜமால் நன்றி.சுகம்தானே!
நல்ல சிந்தனை
:-)
//மணியோசை கேட்டதும் மெல்லக் கதவைத் திறந்து
இன்முகத்தோடு,”யாரு வந்திருக்காங்க?” என் கேட்க
வேண்டும்.//
நல்ல விஷயம்தான். ஆனால் காலம் கெட்டுபோயுள்ளது. உடனே கதவைத் திறப்பது ரொம்ப ஆபத்து. என் பிள்ளைகளுக்கு நான் சொல்வது, முதலில் ஜன்னலைத் திறந்து யாரென்று கேட்டுவிட்டு, ஒரு நிமிஷம் இருங்க மாமா (அல்லது மாமி) இதோ அம்மாவைக் கூப்பிடுறேன் என்று சொன்ன பிறகு, உடனே என்னிடம் வந்து சொல்லுங்கள் என்பேன். அடிக்கடி வந்துபோய் பழக்கப்பட்டவர்களாகவோ, சொந்தங்களாகவோ இருந்தால் மட்டும் கதவைத் திறந்து, உட்கார சொல்லிவிட்டு என்னை வந்து அழைப்பார்கள். இல்லாவிட்டால் நாம் கதவைப் பூட்டி வைப்பதும் திறந்தே போடுவதும் ஒன்றுதான் சகோதரிகளே!முன் எச்சரிக்கைக்காக இந்த தகவல் :)
அருமையான அனைவருக்கும் பயன் தரக் கூடிய பதிவு...
//விருந்தோம்பலை, விருந்தினரை வரவேற்றலை
சிறு வயதிலேயே விதைத்துவிடுகிறோம்.
//
இது முற்றிலும் உண்மை...
அருமையான பதிவு...
புதுசா இருக்கு..
நன்றை செய்யது
இன்றைய இளம் தாய்மாருக்கு அருமையான தகவல்.
தொடருங்கள்.//
மாண்டிசோரி கல்வியில் இவைகள் பள்ளியில் சொல்லித் தரப்படும். அந்த கொடுப்பினை அனைவருக்கும் கிடைக்காது என்பதால் தான் இந்தத் தொடர்.
வருகைக்கு மிக்க் நன்றி ஹேமா.
நல்ல சிந்தனை//
நன்றி டொன்லி
சகோதரிகளே!முன் எச்சரிக்கைக்காக இந்த தகவல் //
ம்ம் நீங்க சொல்வதும் நியாயம் தான். இதெல்லாமும் சொல்லிக் கொடுக்கணும்னு பல பேருக்குத் தெரியாது.
அருமையான அனைவருக்கும் பயன் தரக் கூடிய பதிவு...//
மன்மார்ந்த நன்றிகள்
அருமையான பதிவுங்க..
பதிவு நன்று!
Post a Comment