மாண்டிசோரி பயிற்சி முடித்து பள்ளியில் ட்ரெயினிங்
எடுத்துக்கொண்டிருந்த நேரம். அந்தப் பள்ளியில்
உணவு இடைவேளையின் போது
ஒரு காட்சி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே
நான் பள்ளி செல்லும் போது அப்பா அடித்த டயலாக்கும்
ஞாபகம் வந்தது :)) )
நான் படித்தது ராணியார் அரசினர் பள்ளியில்.
எங்கள் வகுப்பறையை நாங்களே பெருக்கி
வெளியே வைத்தால் பச்சையம்மா வந்து
குப்பைகளை எடுத்துச் செல்வார்.
எங்கள் குரூப் முறையின் போது சீ்க்கிரமே
பள்ளிக்குச் சென்று பெருக்குவோம்.
“படிக்கப்போறியா! பெருக்கப்போறியான்னே
புரியலை!!” இதுதான் அவரின் டயலாக்.
உணவு இடைவேளையின் பொழுது நான்
கண்ட காட்சி இடைவேளைக்கு 5 நிமிடங்கள்
முன்பாக அந்த வகுப்பில் ஒரு மாணவன் கையில்
துடைப்பம், மற்றொரு மாணவன் கையில்
டஸ்ட் பேன். அவர்கள் தான் சுத்தம் செய்ய
வேண்டும். E.P.L பற்றி படித்திருந்தாலும்
அதை பிள்ளைகளுக்கு பயிற்சியாக தந்ததை
அதைப் பிள்ளைகளும் செய்ததை பார்த்து
ஆச்சரியப்பட்டேன். (நானும் என் வகுப்பு
மாணாக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்)
பெருக்குதல்: SWEEPING
ஒரு பெரிய வட்டம் வரைந்து அதற்குள் குப்பையைச்
சேர்த்து அதைப் பெருக்கி குப்பையை அள்ளி
குப்பைத் தொட்டியில் போட வைப்பதை விட
தான் உணவு உண்ட பின் பிள்ளைகளைப்
பழக்குவது சுலபமாக இருந்தது.
21/2 வயது முதல் இந்தப் பயிற்சியை
கொடுக்கலாம்.
பெருக்கச் செய்வதால் என்னாங்க பலன்??
இரு்க்குங்க. சுற்றுப்புறச்சூழல், சுகாதரம் பற்றிய அறிவு
கிடைக்கிறது.
பெருக்கி, அள்ளி தொட்டியில் போடுதல் போன்ற
செயல்கள் கவனத்தை அதிகமாக்குகிறது.
செயல்திறனை அதிகரிக்கிறது.
உடலுக்கு அசைவு, சின்னச் சின்ன உடற்பயிற்சி
ஏற்படுகிறது.
பெருக்கி, அள்ளி தொட்டியில் போடுதல் போன்ற
செயல்களில் இருக்கும் தொடர்ச்சியை பிள்ளைகள்
புரிந்துகொள்ள முடியும்.
தன் வேலையை தானே செய்து கொள்ளும்
சுயத்தன்மை உண்டாகுகிறது.
கைகள் பிற்காலத்தில் வேலைக்கு பழக்கப்படுகின்றன.
சரி ஒரு சின்ன டெஸ்ட். மாண்டிசோரி
பயிற்சி நம் ஐம்புலன்களையும் வைத்துத் தான்.
பெருக்கும் இந்தப் பயிற்சியில் எந்தெந்த
புலன்கள் வேலை செய்கின்றன? சொல்லுங்க
பார்ப்போம். பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.
நன்றி
15 comments:
நல்ல அறிவுரை. நான் படித்த பாளை புனித இஞ்ஞாசியார் பள்ளியில் அப்போது வகுப்பை நாலு பிரிவுகளாகப் பிரித்திருப்பார்கள். மாதத்தில் ஒவ்வொரு வாரமும் வகுப்பின் சுத்தம் ஒவ்வொரு பிரிவின் பொறுப்பு. க்ரூப் லீடர் மாலையில் பெயர்களுடன் அவரவர் வேலையை கரும்பலகையில் எழுதிச் செல்வது வழக்கம். வகுப்புக்குக் குடிதண்ணீர், கரும்பலகை சுத்தம் செய்து தேதி, பொன்மொழி எழுதுவது உட்பட. இவை மாணாக்கர் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைக் கல்விக்காக என்பது அப்போது புரியவில்லை. பிற்பாடு புரிந்தது.
வந்துட்டேன்.
வாங்க ராமலக்ஷ்மி,
தெரிந்தோ தெரியாமலோ அப்போது படிப்புக்கள் (அரசினர் பள்ளிகளில்)
வாழ்க்கைக்கு உதவும் கல்வியாகத் தான் இருந்தது.
பாடத்துடன் எவ்வளவோ சொல்லிக் கொடுத்தார்கள். தலைக்கு எண்ணைய் வைத்து ஜடை பின்னாவிட்டால் டீச்சர்கள் திட்டும் திட்டு. அப்பப்பா. ஆனால் அதுவும் நம் நல்லதுக்குத்தானே.
ராணிஸ்கூல் பீ டீ டீச்சருக்கு நாங்கள் சரி பயப்படுவோம்.
வந்துட்டேன்.//
வாங்க வாங்க
ஆமாம்பா தென்றல் & ராமலக்ஷ்மி நாங்களும் இப்படி வகுப்பு கூட்டி இருக்கிறோம்.. செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி இருக்கிறோம்.. பள்ளிக்கட்டிடத்துக்கு கல் சுமந்திருக்கிறோம். வெண்டைக்காய் கத்திரிக்காய்களை செடியிலிருந்து பறித்து சேர்த்திருக்கிறோம்..( இவையெல்லாம் பள்ளியில் தான்) அதெல்லாம் வாழ்க்கை கல்விதான்னு இப்பத்தான் தெரியுது..
அதெல்லாம் வாழ்க்கை கல்விதான்னு இப்பத்தான் தெரியுது..//
ம்ம் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கயல்
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
படங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
படங்கள் மிக அருமை. //
thanks
present!
நாங்க ரெண்டு வயதுக்கு முன்னாடியே சொல்லிக் கொடுக்கிறோம். செய்யிறாங்க லவ-குசர்கள்
நல்ல பாடம் !!
நாங்க ரெண்டு வயதுக்கு முன்னாடியே சொல்லிக் கொடுக்கிறோம். செய்யிறாங்க லவ-குசர்கள்//
மனமார்ந்த பாராட்டுக்கள் ஜோதி பாரதி.
present!//
அட்டண்டென்ஸ் போல இங்க வகுப்பு நடக்கலியே தம்பி. சரி வந்தீங்கன்னு மைண்ட்ல வெச்சுக்கறேன்.
நல்ல பாடம் !!//
நன்றி பூர்ணிமா
Post a Comment