Monday, February 09, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி : 5

6 வருடம் முன்பு அம்ருதாவின் ப்ரீஸ்கூல் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்
வாங்க பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியர்
மிக கணிவாக பேசினார்.
”உங்க பொண்ணு புது இடத்தில நல்லா
செட்டாகிட்டா” இந்தாங்க அவ ரிப்போர்ட்.
இதுல சில இடங்கள் பிளாங்கா இருக்கும்.
அவைகள் அம்ருதா கற்றுக்கொள்ள வேண்டியது.
இந்த பரிமாணம் மெல்ல நிகளும், கவலைப்படாதீர்கள்”
என்றார். ரிப்போர்ட் பார்த்ததில் DRESSING, UNDRESSING
SKILL - NIL என இருந்தது.

அந்த 21/2 வயதில் அது கற்றுக்கொடுக்க வேண்டுமென
தோணவில்லை.( மாண்டிசோரி பயிற்சி அதற்கப்புறம்தான்
செய்தேன்.)சொல்லிக்கொடுத்ததில்
1 மாதத்தில் அம்ருதா தன் உடையை தானே
கழற்ற, போடக் கற்றுக்கொண்டாள்.

பல வீடுகளில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட
வீட்டுப் பெரியவர்கள் தான் உடை போட்டுவிடுவார்கள்.
(சரி சரி, ரங்குவுக்கு சட்டை பொத்தான் போட்டதெல்லாம்
ரொமான்ஸ் கணக்குல போகும். அதெல்லாம் இங்க
சேத்துக்காதீங்க :)) )


இப்படி பிள்ளைகள் அந்தந்த வளர்ச்சிக்கு உரியவைகளைக்
கற்றுக்கொள்ளாமல் போவதை வளர்ச்சி குறைவு என
மாண்டிசோரி கல்வியில் சொல்கிறார்கள்.




தனது சட்டையை கழட்டி தானே போட்டுக்கொள்ள
பழக்க வேண்டும். தனது உடையலங்காரத்தை தானே
செய்துகொள்ள பழக்க வேண்டும்.

“பிள்ளை பெருசானா தானா கத்துக்க போவுது!
அதுக்கெதுக்கு இப்பவே கஷ்டப்படுத்தணும்!!!”

”வீட்டுல சும்மா தான(!!) இருக்கா உங்கம்மா!
குழந்தைக்கு ட்ரெஸ் போட்டுவிட்டா என்னாவாம்”

இப்படி வீட்டுல இருக்கற பெரியவங்க
சொல்வாங்க.





செல்லம் கொடுத்து கெடுக்கன்னே வீட்டுல ஒரு கூட்டம்
இருக்கும். அதையெல்லாம் புறம் தள்ளி குழந்தைக்கு
சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மாண்டிசோரிக் கல்வியில் இந்த சட்டங்களை
வைத்து பிள்ளைகளுக்கு பட்டன் போட,
முடிச்சு போட, பெல்ட் பக்கிள்ஸ் போட
சொல்லிக்கொடுப்போம்





இது சொல்லிக்கொடுத்த பிள்ளைகள் தன்
வேலையை தானே செய்துகொள்ளப் பழக்கப்படுவார்கள்
என்பதோடு கைகளுக்கு வேலை, சிந்தனை சக்தி,
செயல்திறன் ஆகியவைகளும் அதிகமாகும்.

HAND AND EYE CO ORDINATION எனப்படும் கண்கள்
பார்த்து கைகள் செய்வது இந்த பயிற்சியில்
கிடைக்கிறது

11 comments:

நட்புடன் ஜமால் said...

அடடா அடுத்த பாகமா

படிச்சிட்டு வர்றேன்

மங்களூர் சிவா said...

அடடா நாங்க படிக்கிறப்ப இதெல்லாம் இல்லாம போச்சே :((

நட்புடன் ஜமால் said...

\\சரி சரி, ரங்குவுக்கு சட்டை பொத்தான் போட்டதெல்லாம்
ரொமான்ஸ் கணக்குல போகும். அதெல்லாம் இங்க
சேத்துக்காதீங்க \\

ஹா ஹா ஹா

அக்கா அக்கா.

நட்புடன் ஜமால் said...

\\இது சொல்லிக்கொடுத்த பிள்ளைகள் தன்
வேலையை தானே செய்துகொள்ளப் பழக்கப்படுவார்கள்
என்பதோடு கைகளுக்கு வேலை, சிந்தனை சக்தி,
செயல்திறன் ஆகியவைகளும் அதிகமாகும்.

HAND AND EYE CO ORDINATION எனப்படும் கண்கள்
பார்த்து கைகள் செய்வது இந்த பயிற்சியில்
கிடைக்கிறது\\

நல்ல விடயம்

pudugaithendral said...

வாங்க ஜமால், படிச்சிட்டு
பொறுமையா வாங்க.

pudugaithendral said...

அடடா நாங்க படிக்கிறப்ப இதெல்லாம் இல்லாம போச்சே :((//


அப்பயும் இந்தக் கல்வி இருந்திருக்கு. ஆனால் மாண்டிசோரி முறை பெருசா இப்பவும் அறியப்படாதது வருத்தமே.

அத்திரி said...

//அடடா நாங்க படிக்கிறப்ப இதெல்லாம் இல்லாம போச்சே :((//

))))))))))))))))

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி அத்திரி

Thamira said...

பயனுள்ள பதிவு.

சரி சரி, ரங்குவுக்கு சட்டை பொத்தான் போட்டதெல்லாம்
ரொமான்ஸ் கணக்குல போகும். அதெல்லாம் இங்க
சேத்துக்காதீங்க :)) // ரசித்தேன்.!

ரமா ஒருநாள் கூட சட்டை பட்டன் போட்டதா நினைவில்லை.. அவ்வ்வ்வ்..

அன்புடன் அருணா said...

//இந்தாங்க அவ ரிப்போர்ட்.
இதுல சில இடங்கள் பிளாங்கா இருக்கும்.
அவைகள் அம்ருதா கற்றுக்கொள்ள வேண்டியது.
இந்த பரிமாணம் மெல்ல நிகளும், கவலைப்படாதீர்கள்”//

இதுக்குக் கூட வரிந்துகட்டிக் கொண்டு சண்டை போடும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் புதுகை....
அன்புடன் அருணா

pudugaithendral said...

இதுக்குக் கூட வரிந்துகட்டிக் கொண்டு சண்டை போடும் பெற்றோர்கள் இருக்கிறார்கள் புதுகை....


நானும் அனுபவச்சிருக்கேன். பையன் சாப்பிடாலம் இருந்தாக்கூட ஆசிரியைகளைத்தான் குற்றம் சொல்வாங்க. இவங்க தினமும் ஒரே பிஸ்கட், ப்ரெட் அனுப்புறது குத்தமில்லை. :(