Monday, February 09, 2009

கன்னத்தில் முத்தமிட்டால்..............

ஞாயிறு என்று ஒரு கிழமை இருந்திராவிட்டால்
வாழ்க்கை போரடிக்கும். அயராது உழைப்பவர்களுக்கு
அன்றொருநாள் தானே ஓய்வு. நம் உடம்பிற்கும்
மனதிற்கும் ஓய்வு மிக அவசியம்.

அப்பொழுதுதான் மிகுந்த வேகத்துடனும்,ஈடுபாட்டுடனும்
செயல்பட முடியும். ஒவ்வொர் ஞாயிறும்
ஆசிர்வதிக்கப்பட்டதாக் இருக்க வேண்டும் என
நினைப்பவள் நான்.

சனிக்கிழமை இரவு “நோ சமையல்” எனக்கு
அப்போது மட்டும் தான் சமையலறையிலிருந்து
விடுதலை. :)) இரவு உணவு வெளியே உண்டு
கொண்டிருக்கும் பொழுதே பிள்ளைகள்
“என்ன சினிமா?” என ஆரம்பிப்பார்கள்.
ஹிந்தி, தெலுகு, தமிழ் கலெக்சன் சீடீக்கள்
வீட்டில் இருக்கிறது. அவைகளில் ஏதோ
ஒரு திரைபப்டம் சனிக்கிழமை இரவுகளில்
கட்டாயம் பார்க்கப்படும். தரையில் படுத்து,
உருண்டு பிள்ளைகள் படம் பார்ப்பார்கள்.

12 மணி அல்லது 1 மணிக்கு தூங்கப்போவோம்.
அதனால் ஞாயிற்றுக்கிழமை 8 அல்லது 9 மணிக்கு
தான் எழும்புவோம். எழுவதற்கு முன் நடக்கும்
கூத்துதான் சுவாரசியமே. 7.45 மணி வாக்கில்
எழுந்து மெல்ல எங்கள் அறைக்கதவை திறந்து
வைப்பேன். முதலில் ஆஷிஷ் எழுந்து அம்ருதாவை
எழுப்பி விட்டு வருவான்.

இருவரில் ஓடி வந்துமுதலில் நாநா பக்கதில்
யார் படுக்கிறார்கள்? என்று போட்டி நடக்கும்.
”நாநா வெச்சவெச்சகா உன்னாரு” (வெது வெதுப்பாக
இருக்கிறாராம் அப்பா) என்பான் ஆஷிஷ்.


அவர் மேலே விழுந்து புரண்டு, கட்டிக்கொண்டு
இருக்கும்பொழுது அம்ருதா,” அண்ணா வா!
கன்னத்தில் முத்தமிட்டால் ஸ்டைல்” என்று
குரல் கொடுக்க ஏறி படுப்பார்கள்.
(கன்னத்தில் முத்தமிட்டால் ஸ்டைல் தெரியாதவர்கள்
இந்தப் படத்தைப் பார்க்கலாம்)





”நானும் ,நாநாவும் பர்கர் பன், அண்ணா நீதான்
கட்லட்” என போட்டு நசுக்கி எடுப்பார்கள்!!

சும்மா இருக்க முடியாமல் ஆஷிஷ் அப்பாவிற்கு
கிசுகிசு மூட்ட அவர் இருவருக்கும் கிசு கிசுமுட்ட
என அதகளம் நடக்கும். (நான் ஆனந்தமாக
டிடி சானலில் ஹிந்தி பாடல்கள் பார்த்துக்கொண்டிருப்பேன்.)

”கொஞ்ச நேரம் தூங்க விடுங்கடா” என சும்மாவேனும்
சொல்வார்.”அதெல்லாம் முடியாது! இன்னைக்கு சண்டே”
என்று பதில் அளித்துவிட்டு ஆஷிஷ் இருக்க கட்டிக்கொள்வான்,
அம்ருதா இருவரின் மேலும் ஏறி படுத்துக்கொள்வாள்.


ஆட்டம் போட்டு முடித்துவிட்டு அப்பாவும் மகனும்
காபி போடுவார்கள். அங்கே ஆட்டத்தை முடித்துவிட்டு
அம்ருதா என்னிடம் வந்து கொட்டம் அடித்துக்கொண்டிருப்பாள்.

“இன்னு்மா பல் தேய்க்கலை! ஓடு” என அண்ணன் துரத்த
அடுத்த ஆட்டம் ஆரம்பமாகும்.

21 comments:

நட்புடன் ஜமால் said...

மிகவும் இரசித்த படங்களில் ஒன்று

நட்புடன் ஜமால் said...

நம் உடம்பிற்கும்
மனதிற்கும் ஓய்வு மிக அவசியம்.\\

அவசியம்தான்.

pudugaithendral said...

வாங்க ஜமால்,

வலைச்சரத்திலும் கும்மிகிட்டு இங்கனயும் மீ த பர்ஸ்டா வர்றீங்க.

வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

எனக்கு சனி ஞாயிறு ரெண்டு நாளும் ஒரு வேளை ரெஸ்ட்:) நல்ல பழக்கம்.

அ.மு.செய்யது said...

அழகான பதிவு...

ஆமை வேகத்தில் படித்தாலும், எக்ஸ்பிறஸ் வேகத்தில் படித்தாலும்
இண்ட்ரஸ்டிங்க்...

அ.மு.செய்யது said...

"கன்னத்தில் முத்தமிட்டால்"

மாதம் ஒரு முறையாவது டிவிடியில் பார்த்து விடுவேன்.

pudugaithendral said...

எனக்கு சனி ஞாயிறு ரெண்டு நாளும் ஒரு வேளை ரெஸ்ட்:) நல்ல பழக்கம்.//

ஞாயிறு இந்தக் கூத்தெல்லாம் அடித்து முடிக்க நேரம் ஆகும் என்பதால் ப்ரேக் ஃபாஸ்ட் டீ பிஸ்கட் மட்டும் தான். அதனால் அதையும் ரெஸ்டாக எடுத்துக்கலாம்.

வாரத்தில் 6 நாட்களும் வகைவகையா செஞ்சிடுவதால் சண்டே சிம்பிள் ஃபுட் தான்.

pudugaithendral said...

அழகான பதிவு...//

நன்றி செய்யது.

pudugaithendral said...

"கன்னத்தில் முத்தமிட்டால்"

மாதம் ஒரு முறையாவது டிவிடியில் பார்த்து விடுவேன்.//

நாங்களும் பார்ப்போம். p g martin பக்கத்தில் தான் நம்ம வீடு, இது விஹாரமஹா தேவி பார்க், என பிள்ளைகள் கொசுவத்தி சுத்திக்குவாங்க.

நட்புடன் ஜமால் said...

\\புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

வலைச்சரத்திலும் கும்மிகிட்டு இங்கனயும் மீ த பர்ஸ்டா வர்றீங்க.

வாழ்த்துக்கள்\\

அதெல்லாம் தானா வருது.

வெண்பூ said...

ஆஹா.. படிக்கவே ஆனந்தமா இருக்கு.. கண்ணு படப்போகுது. இன்னிக்கு எல்லாரையும் உக்காரவெச்சு சுத்தி போடுங்க.. :)))

pudugaithendral said...

அதெல்லாம் தானா வருது.//

avvvvvvvvvvvv

pudugaithendral said...

இன்னிக்கு எல்லாரையும் உக்காரவெச்சு சுத்தி போடுங்க.. :)))//

வாங்க வெண்பூ,

செஞ்சிடுவோம்

Iyappan Krishnan said...

Excellent. :) rendu perum pakkaththula illaiyE :D illattaa aalukku oru ich kidachchirukkum ippa :D koodave oru chocolate kooda !!!

pudugaithendral said...

Excellent. :) rendu perum pakkaththula illaiyE :D illattaa aalukku oru ich kidachchirukkum ippa :D koodave oru chocolate kooda !!!//

இதப் படிச்சா போன் போட்டு சாக்லெட் அனுப்ப சொல்லுவாங்க. சாக்கிரதை.

:))

குசும்பன் said...

//எனக்கு
அப்போது மட்டும் தான் சமையலறையிலிருந்து
விடுதலை. :)) //

யக்கோவ் மச்சானுக்கும் அன்றுதானே விடுதலை:)))

குசும்பன் said...

//அப்பாவும் மகனும்
காபி போடுவார்கள்.//

அப்பா கையால் போடப்போகும் காபியின் சுவைக்காக அவர்கள் எழும்பொழுதே மகிழ்ச்சியோடு எழுந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
இந்த ஸ்டைலுக்கு பேரெல்லாம் இருக்கா.. ம்..

pudugaithendral said...

யக்கோவ் மச்சானுக்கும் அன்றுதானே விடுதலை:)))//

அவரோட பர்சும் கொஞ்சம் இளைக்கும். :))

pudugaithendral said...

அப்பா கையால் போடப்போகும் காபியின் சுவைக்காக அவர்கள் எழும்பொழுதே மகிழ்ச்சியோடு எழுந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!:))//

நான் போடாம யாராவது போடறாங்க. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம். நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழை எல்லோருக்கும் பயன்படுவது போல் பசங்களுக்கு சந்தோஷம்னு நீங்க சொல்றீங்க.

:)))))))))))))))))

pudugaithendral said...

இந்த ஸ்டைலுக்கு பேரெல்லாம் இருக்கா.. ம்..//

இந்தப் படம் வந்ததிலேர்ந்து இந்த ஸ்டைல் நடக்குது எங்க வீட்டுல. எங்க பிள்ளைக ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேரு, ஸ்டைல் வெச்சிருப்பாங்க.