நாம் பள்ளிகளில் படிக்கும் பொழுது வகுப்பிலிருந்து
வெளியில் எங்கு சென்றாலும் கிளாஸ் லீடரோ,
டீச்சரோ கொடுக்கும் குரல்,”எல்லாம் லைனா
போங்க!!” என்பது தான்.
நம் வகுப்பிலிருந்து P.T பாட்டுகிளாஸிற்கு
என எங்கு சென்றாலும் வரிசையாக சென்று
வரிசையாக வரவேண்டும். உயரத்தை
வைத்து யார் முதலில் நிற்க வேண்டும் என
சொல்லிக்கொடுப்பார் P.Tடீச்சர்.
P.T வகுப்புக்களின் போது ஒரு மாணாக்கனுக்கும்
இன்னொரு மாணாக்கனுக்கு இடையே ஆன
தூரத்தை கைகளால் அளந்து நிற்க வேண்டும்.
தினமும் அசெம்பிளிக்கு செல்லும் பொழுது
வரிசை தவறினாலோ, சரியாக நிற்கா
விட்டாலோ அவ்வளவுதான். முழங்கால்
போட்டு பனிஷ்மெண்ட் கொடுத்துவிடுவார்கள்.
சரி ”இந்த வரிசையில் தான் செல்லவேண்டும்!”
என்ற கொள்கை பள்ளிகளில் ஏன் கட்டாயமாக்க
வைத்தார்கள்?
வளர்ந்த பிறகு வங்கி, ரயில்நிலையம் என
பொதுமக்கள் கூடும் இடங்களில் நாம்
வரிசையாக செல்லப் பழக வேண்டும்
என்பதற்காகத்தான்.
ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி.!! அதுவும் வங்கிகளில்
பணம் போட ,எடுக்க என டென்ஷன்
இருந்தாலும் அடுத்தவரைப் பற்றி
கவலைப்படாமல் மேலே விழுவார்கள்.
விமான நிலையங்களில்
பாஸ்போர்ட்டில் குடியேற்றம் முத்திரை அடிக்க
நிற்கும் வரிசையில், கடவுச்சீட்டு கொடுத்திருக்கும்
நபருக்கு அவருக்கு பின்னால் நிற்கும் நபருக்கும்
இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
என்பதால்,”ஒருவர் மட்டும்!” என எழுதியிருப்பார்கள்.
ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)
வாஷிங்கடனில் திருமணம் நாவலில்
திரு. சாவி அவர்கள், அம்மாஞ்சி தக்களி
நூற்றதை மக்கள்.”வாராவதி மேல்
வாராவதியாக கவிழ்ந்து நின்று பார்த்ததாக
எழுதியிருப்பார்.”
எதுவாக இருந்தாலும் நம் மக்கள்
ஒருவர் மேல் ஒருவர் கவிழ்ந்து நின்றுதான்
பார்ப்பார்கள். சாலையில் ஏற்படும்
விபத்துக்களில் இவர்கள் கூட்டம் கூடி
பார்க்கும் பொழுது போதிய காற்று இல்லாத
காரணத்தால் விபத்துக்குள்ளானவர்
மயக்கமுறும் நிலமையும் ஏற்படு்ம்.
மாண்டிசோரி கல்வியில் இந்த
வரிசையில் செல்லும் பழக்கத்தை
போதிப்பது கட்டாயப் பாடம்.
வட்டமாகவோ, சதுரமாகவோ
சாக்பீஸால் வரைந்து மாணவர்களை
நிற்க வைத்து நடந்து வரப் பழக்குவோம்.
இதனால் பிள்ளைக்கு வரிசையில் செல்ல
பழக்கமாகிறது. கோட்டிற்கு மேல் நடக்க
வேண்டும் என்று பயிற்சி கொடுப்பதால்
கண்கள் பார்க்க கால்கள் அந்த தடம்
பிரழாமல் நடக்க பயிற்சி கிடைக்கிறது.
பிள்ளை தனது முறை வரும் வரை
பொறுமையாக காத்திருக்க பழகுகிறது.
ரயிலின் பெட்டிகள் வரிசையாக செல்லாமல்
தடம்புரண்டால் அது விபத்து. நாம் வரிசையில்
நிற்க வேண்டிய இடத்தில் வரிசையில் நில்லாமல்
போனாலும் பிரச்சனையே!
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?
அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.
பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.
வளரும் குழந்தை சுற்றுப்புரத்திலிருந்தும்
கற்றுக்கொள்கிறது.
நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!
20 comments:
வா
ழ்
த்
து
க
ள்
வரிசை என்பது மிக முக்கியம்
நன்றி வண்ணத்துபூச்சியாரே!
:))
வரிசை என்பது மிக முக்கியம்//
ஆனா மிக மிக மிக மிக முக்கியம்னு சொல்ற அளவுலதான் இருக்கு நம்ம மக்களின் மன நிலை.
:)
\\ஆனா மிக மிக மிக மிக முக்கியம்னு சொல்ற அளவுலதான் இருக்கு நம்ம மக்களின் மன நிலை.\\
இதுவும் சரிதான்.
//நம் வகுப்பிலிருந்து பீடிக்கு, பாட்டுகிளாஸிற்கு
//
எங்க ஸ்கூல்லயெல்லாம் பீடி குடிக்க கத்துக்குடுக்க லைன்ல கூட்டிட்டு போகவோ,சொல்லிக் குடுக்கவோ இல்லை. நானாதான் பீடி அப்புறம் சிகிரெட்டால் குடுக்க கத்துக்கிட்டேன்.
:)
அக்கா நான் கமெண்ட் போட்டுட்டு உங்க பதிவு பக்கம் மீண்டும் போனா பீடி என்பதை p.t ன்னு மாத்திட்டீங்க. எங்கக்கா என்னா ஸ்பீடு!என்னா ஸ்பீடு!
நல்ல பதிவு!
//ஆனால் நிஜம் எப்படி இருக்கும் என்பது
பயணித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
(குறிப்பாக நம் நாட்டில்)//
நீங்க சொல்வது சரி தான் ஆனால் குறிப்பாக நம் நாட்டை கூறி இருப்பது தான் சற்றே இடிக்கிறது. தள்ளி நிக்க சொல்லாதீங்க. ;)
ஆப்பிரிக்க , அரபு நாடுகளில் நிலைமை நம்மை விட மோசம். (நான் பார்த்த வரையில்)
அதிலும் பாருங்க நம் மக்களால் பேருந்து, ரயிலில் வரிசையாக ஏற முடியாது, ஆனால் அமெரிக்க விசா வாங்க, சிவாஜி பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க முடியும். அதான் கொடுமை
//நம்மைப் பார்த்து குழந்தை கெடாமல்
இருக்க நாமும் பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!
//
இங்கே இருக்கும் சில நம்ம ஊர் ஆட்கள் சாலையின் அடுத்த பக்கம் போக சிக்னலில் ரெட் விழுந்து இருந்தாலும் தட தட என்று குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு
ஓடுவார்கள் சின்ன வயதில் இருந்தே சிகப்பு விழுந்து இருந்தால் சாலையை கடக்க கூடாது என்று சொல்லி தராவிட்டாலும் அட்லீஸ் நின்று போனால் சில வருடங்களில் குழந்தையும் நின்று பொருமையாக வரும்.
இப்படி எல்லாம் தப்பர்த்தம் எடுத்துப்பீங்கன்னு தெரிஞ்சுதான் மாத்தினேன்.
வருகைக்கு நன்றி அப்துல்லா.
நம் நாட்டை கூறி இருப்பது தான் சற்றே இடிக்கிறது. தள்ளி நிக்க சொல்லாதீங்க.
:)))))
ஆப்பிரிக்க , அரபு நாடுகளில் நிலைமை நம்மை விட மோசம். (நான் பார்த்த வரையில்)//
ஓஓ
அதிலும் பாருங்க நம் மக்களால் பேருந்து, ரயிலில் வரிசையாக ஏற முடியாது, ஆனால் அமெரிக்க விசா வாங்க, சிவாஜி பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க முடியும். அதான் கொடுமை//
சத்தியமான உண்மை.
நல்ல பதிவு!!
கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
//எல்லாம் லைனா
போங்க//
கண்டினியூ பண்ணுங்க டீச்சர்
//அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது//
ok டீச்சர்
வாங்க புதுகைச் சாரல்,
நலமா?
வருகைக்கு மிக்க நன்றி
//பொது இடங்களில்
வரிசையில் தான் செல்ல வேண்டுமென
உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாமே!//
இது ரொம்ப அவசியம்.
//பெற்றோர் தான் குழந்தைக்கு ஒரு உதாரணம்.//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
//
எறும்புக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் வரிசையில்
செல்ல வேண்டுமென?
அந்த சிற்றறிவுக்கு இருக்கும் ஞானம் கூட
நமக்கு இல்லாமல் போகக் கூடாது.//
அட ஆமாங்க, இதையேதான் ”சரியான வாத்துக்கள்” என நான் எடுத்த படத்தைக் காட்டி
இங்கே சொல்லியிருக்கிறேன் பாருங்கள்!
இங்கே இருக்கும் சில நம்ம ஊர் ஆட்கள் சாலையின் அடுத்த பக்கம் போக சிக்னலில் ரெட் விழுந்து இருந்தாலும் தட தட என்று குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு
ஓடுவார்கள் சின்ன வயதில் இருந்தே சிகப்பு விழுந்து இருந்தால் சாலையை கடக்க கூடாது என்று சொல்லி தராவிட்டாலும் அட்லீஸ் நின்று போனால் சில வருடங்களில் குழந்தையும் நின்று பொருமையாக வரும்.//
நல்ல கருத்துக்கு நன்றி குசும்பன்
வரிசை ரொம்ப முக்கியம்.வெளிநாடுகளில் மாண்வர்கள் ஒழுங்காகப்போகிறார்கள்.ஏன்?அவர்கள் சிறுவர்கள்.களிமண் மாதிரி.ஆசிரியர் சொல்வதை செய்கிறார்கள்.தப்பு ஆசிரியர்கள் மேல் உள்ளது.எனக்கு கெமிஸ்ட்ரி வாத்தியார் +2வில் பாடம் நடத்தவேயில்லை.வரிசையாக மாண்வர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் படிக்கவேண்டும்.அவ்வளவுதான்.அவர் மாதம் 4கிளாஸ் வந்து இப்படி செய்து விட்டுப் போய்விடுவார்.நம் நாட்டில் ஒழுங்கீனம் எல்லாத்துறையிலும் உள்ளது.இன்னொரு பெண் ஆசிரியர் என்ன என்ன விடுப்பு உண்டோ அனைத்தும் எடுப்பார்.காலாண்டு,அரையாண்டு,பரிட்சை லீவு தவிர.இப்படி ஆசிரியர்களின் ஒழுங்கீனமே இதற்கெல்லாம் காரணம்.!!ஆசிரியர்கள் திருந்தவேண்டும்.உங்கள் பதிவு நல்ல பதிவு.
வரிசையில் செல்வது நல்ல பழக்கம்.
/*ஆனால் நம் மக்களுக்கு வரிசையில்
செல்வதெல்லாம் பிடிக்காது. கயிறு
கட்டியிருந்தாலும் தள்ளிக்கொண்டு,
முண்டியடித்து போனால் தான்
திருப்தி*/
இங்கிருக்கும் மக்கள் தொகையும் அவசரமும் தான் காரணம். வெளிநாட்ல பேருந்துல வரிசைல நின்னாலும் இடம் கிடைக்கும். நம் ஊரில் அப்படி இல்லையே!!
என்றாலும், வரிசையில் செல்வதுதான் நல்ல பழக்கம், சில விஷயங்கள் கிடைக்காவிட்டாலும் என்ற பக்குவம் தேவை தான்.
Post a Comment