பாலமலர், அம்புலிமாமாவில் ஆரம்பித்த
புத்தக பைத்தியம்.. இப்பொழுது பல நாள், மாத
வார இதழ்கள் படிக்கிறேன்.
போதாக்குறைக்கு நியூட்ரிஷியன் எனது
டயட் சார்ட்டில் தினமும் புத்தகம் படிக்க
வேண்டும் என எழுதி வேறுகொடுத்திருக்கிறார். :)))
சென்ற வருடம் இலங்கையை விட்டு வந்த
பொழுது எனது தோழி புத்தகம் பரிசளித்திருந்தார்.
கப்பலில் வந்த சாமன்களில் சில அதிகம்
உபயோகப்படுத்தாத பெட்டியில் இருந்துவிட
இந்த புத்தகமும் அதில் இருந்துவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நற்சிந்தனை
தரும் பக்கங்கள்.
JANUARY 12
ONE DAY, my father posted a poem by Rabindranath Tagore
on the door of our fridge. It read simple, "spring has passed, summer has gone
and winter is here. And the song that i meant to sing remains unsung.
I have spent my days stringing and unstringing my instrument".
These words were about a man whose heart was filled with
regret over a life half-lived. The time to start bulding your
legacy is today, not ten years from today when "have more time".
Reflect on what it is you want to create in your life and,
more importantly, what gift you wish to leave the world when
you are no longer here. Greatness comes from beginning
something that does not end with you.
சென்ற மாதம் வேறு வீடு மாற்றிய பொழுது
இந்தப் புத்தகம் கிடைத்தது. இதோ
இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்
THE MONK WHO SOLD HIS FERRARI எழுதிய ROBIN SHARMA
அவர்களின் DAILY INSPIRATION.
அருமையான செய்தி.
ரபீந்தரநாத் தாகூர் அவர்களின் பாடலின் ஒரு பகுதியை
கருத்தாக எடுத்துக்கொண்டு நமக்கு நல்லதொரு
செய்தியை தந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு தேதிக்கும்
ஒரு செய்தி இருக்கிறது. 365 பக்கங்கள் இருக்கின்றன
படிக்க. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிப்பதை விட
ஒரு நாளுக்கு ஒரு பக்கமாக படித்து பயன் பெற
முடிவெடுத்துள்ளேன்.
WOMENS ERA போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
வாங்குவதே இல்லை.
எதேச்சையாக இந்த புத்தகத்தை கடையில்
பார்த்து வாங்கினேன்.
ம்ம் இண்ட்ரஸ்டிங்...
GOOD HOUSEKEEPING இந்தியா பதிப்பு
அருமையாக இருக்கிறது.
பிள்ளை வளர்ப்பு, உடல் ஆரோக்கியம்,
மருத்துவம் என எல்லா பகுதிகளையும்
உள்ளடக்கி இருக்கிறது.
மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த மாத இதழ் தாமதமாகக் கிடைத்திருக்கிறது.
காதலர் தினம் ஷ்பெஷலாம் பார்க்க வேண்டும்
நான் போய் படிக்கிறேன்.
20 comments:
இரத்தின பாலா தான் எனக்கு பிடிக்கும்
நானும் படிச்சிருக்கேன்.
கோகுலம் மிக அருமையா இருக்கும்.
கோகுலம் ஆங்கிலம் படிப்பதற்காகவே படிப்பதுண்டு
\\நான் போய் படிக்கிறேன்.\\
படிங்க
உடனே வந்து இங்க பதிவிட கூடாது
:)
அக்கா உங்க கீழ 3 ஆம் வீதியில் இருந்து பாப்பா மஞ்சரின்னு ஒரு புத்தகம் வெளிவந்ததே...ஞாபகம் இருக்கா????
//கோகுலம் ஆங்கிலம் படிப்பதற்காகவே படிப்பதுண்டு
//
அதுக்கு எல்.கே.ஜி ல படிக்கனும்???
:)
ரத்னபாலாவும் ...கோகுலமும் கண்ல பட்டதே...நானும் படிச்சிருக்கேன் .பூந்தளிரை ஏன் விட்டீங்க?
நான் கூட கடந்த 4 மாதங்களாக good house keeping வாங்கிக்கொண்டிருக்கிறேன். ரொம்பவே நல்லாருக்கு:)
படிங்க
உடனே வந்து இங்க பதிவிட கூடாது
:)//
இல்ல் போட மாட்டேன்.
:))))))))))
பாப்பா மஞ்சரின்னு ஒரு புத்தகம் வெளிவந்ததே...ஞாபகம் இருக்கா????//
இல்லை அப்துல்லா.
பூந்தளிரை ஏன் விட்டீங்க?//
ஆஹா இந்தப் பதிவால அப்போ நமக்கு எம்புட்டு குழ்ந்தைகள் இதழ்கள் இருந்துச்சுன்னு கொசுவத்தி சுத்தும் போல இருக்கே.
நான் கூட கடந்த 4 மாதங்களாக good house keeping வாங்கிக்கொண்டிருக்கிறேன். ரொம்பவே நல்லாருக்கு:)//
நீங்களுமா சந்தோஷம்.
// நட்புடன் ஜமால் said...
\\நான் போய் படிக்கிறேன்.\\
படிங்க
உடனே வந்து இங்க பதிவிட கூடாது
:)
//
:)))))
எனது தமிழை வளர்த்து விட்டதில் அம்புலிமாமா,பால மித்ரா, ரத்னபாலா, கோகுலம், இந்திரஜால காமிக்ஸ ஆகியவற்றிற்கும் பங்குண்டு:)! கல்கி குடும்பத்திலிருந்து முதன் முதல் வந்த ‘கோகுலம்’ இதழை என் தந்தை தர, படித்து மகிழ்ந்த நாளுக்கு இட்டுச் சென்று விட்டது உங்கள் பதிவு.
படிப்பது என்பது ஒரு தனி சுகம்தான்..
பூந்தளிரை
இந்திரஜால காமிக்ஸ
ஆஹா மிகவும் இரசித்தவைகளில் இவைகளும் உண்டு
இதை ஞாபகமூட்டியவர்களுக்கு நன்றி.
சுப்பாண்டியை மறக்க முடியுமா? பூந்தளிர்தானே அது!
வாங்க பூர்ணிமா.
வருகைக்கு மிக்க நன்றி
ஆஹா,
கொசுவத்தி சுத்துதா?
படிப்பது என்பது ஒரு தனி சுகம்தான்..//
ஆமாம் பாசமலர்,
நம் மனதில் பட்டதை எழுதுகிறோம் என்பதை விட நிறைய படிக்கக் கிடைக்கிறது என்பதாலேயே இந்த வலையுலகம் என்னை அதிகம் கவர்ந்திருக்கிறது
Post a Comment