திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கியதுமே
பெரிய மாமா கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.
“உனக்கு மாப்பிள்ளை உள்ளூரில்(மும்பை)தான் இருக்கணும்.
மும்பையை விட்டு வெளியே மாப்பிள்ளை பார்த்தால்
நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்,” என்று. (இங்கதான்
எங்கப்பாவுக்கும், மாமாவுக்கு இடையே சண்டை
வந்தது) அம்புட்டு கறாராக இருந்த மாமா
,” ஸ்ரீராம் என்பதால் தான் மும்பைக்கு வெளியே
உன்னை அனுப்ப சம்மதிக்கிறேன்”, என்று சொன்னதிலிருந்து
தெரிந்தது அயித்தான் மேல் அனைவருக்கும் இருக்கும்
அபிப்ராயம். நல்ல மனிதர். அயித்தானைப் பத்திதான்
எல்லா இடத்திலும் சொல்லிகிட்டே இருக்கேனே!!
மூத்தமகனாக நினைக்கும் தம்பி கார்த்தி,
இளைய மகன் ஆஷிஷ் இவர்களைத் தவிர
உங்கள் அனைவருக்கும் தெரிந்த கல்யாண் அண்ணா,
அனில் அண்ணா எல்லோரும் என் உலகில் இருக்காங்க.
இவர்கள் மட்டுமே இருந்த என் உலகில் இப்போ
ஏகப்பட்டவங்க சேர்ந்துட்டாங்க.
பிளாக்கர்களிடம் ஜாக்கிரதையா இருங்க!!ன்னு
என்னை பலர் எச்சரிச்சாங்க. ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் எனக்கு இங்கும்
நல்ல நட்பு, உறவு கிடைத்திருக்கிறது. இதில்
யாரைச் சொல்ல? யாரை விட?(யாரும் கோச்சுக்க
கூடாது)
மங்களூர் சிவா தம்பியில் ஆரம்பித்த உறவு
இன்றைக்கு பலரும் என் உலகில் நட்பாக
உறவாக மலர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி
போன் செய்து பேசும் அன்புத்தம்பிகளும் உண்டு,
ஆன்லைனில்
பார்க்கும்பொழுதெல்லாம்”ஹாய் அக்கா!”
என்றோ, எப்படி இருக்கீங்க? சாப்பிட்டாச்சா?
என மறக்காமல் கேட்கும் அன்பு நெஞ்சங்களும்
உண்டு. உணவு வேளையில் தட்டில் சாப்பாட்டை
வைத்துக்கொண்டு இந்த உறவுகளோடு, நட்புகளோடு
அளவளாவிக்கொண்டுதான் தினமும் சாப்பிடுகிறேன்.!
முன்பெல்லாம் பதிவு போட்டுவிட்டு, படித்துவிட்டு
கமெண்டிவிட்டு போய்விடுவேன். இப்பொழுதெல்லாம்
பதிவு போடும் நேரத்தை விட சாட்டிங் நேரம்
அதிகமாகிவிட்டது!! :)))
என் உலகில் இருக்கும் இந்த ஆண்கள் எனக்கு
ஒவ்வொரு வகையில் உதாரணமாக, கற்றுக்கொடுத்து
உதவியாய் இருந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து
வியந்திருக்கிறேன். என் உலகில் இருக்கும் அனைத்து
ஆண்களுக்கும் என் மனமார்ந்த பிரார்த்த்னைகளும்,
வாழ்த்துக்களும்.
******************************************
இத்துடன் இந்தத் தொடர் முடிகிறது.
ரொம்பநாளைக்குமுன்னாடியே போட்டிருக்க
வேண்டிய பதிவு. வீடு தேடினது, மாத்தினதுன்னு
நடுவில் தவிர்க்க முடியாமல் வந்த வேலைகளால்
தள்ளிப்போய் இன்றுதான் போடமுடிந்தது.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
26 comments:
மீண்டும் தொடரும்
இதோ படிச்சிட்டு ...
\\அனில் அண்ணா \\
எங்க அனில் அக்காதான் தெரியும் எனக்கு.
\\பிளாக்கர்களிடம் ஜாக்கிரதையா இருங்க\\
இது உண்மைதான்.
(உங்களுக்கு அப்படி ஏதும் நேரதது சந்தோஷமே)
\\யாரைச் சொல்ல? யாரை விட?(யாரும் கோச்சுக்க
கூடாது) \\
அட என்னக்கா நீங்க.
(சொல்லாட்டியும் நாங்க இருக்கோம்ன்னு தெரியும்)
வாங்க ஜமால்,
அந்த மாதிரி ஆளுங்களும் இருக்காங்க. ஆண்டவன் இதுவரை நல்ல உள்ளங்களோடு மட்டுமே பரிச்சயம்கொடுத்திருக்கிறான்.
சொல்லாட்டியும் நாங்க இருக்கோம்ன்னு தெரியும்)//
:)))))))))))))))))
//பிளாக்கர்களிடம் ஜாக்கிரதையா இருங்க!!ன்னு
என்னை பலர் எச்சரிச்சாங்க. ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் எனக்கு இங்கும்
நல்ல நட்பு, உறவு கிடைத்திருக்கிறது.//
நாம எப்படி பழகுறோமோ அப்படியே மற்றவர்களும் நம்மிடம் பழகுவார்கள் அப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு நல்ல உறவுகள் அமைந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை!
என்னது திடீர்னு முற்றும் போட்டுட்டீங்க, வித்தியாசமான தொடரா இருந்துச்சு.
அற்புதமான தொடர்.
வாழ்த்துக்கள் தென்றல்!
நாம எப்படி பழகுறோமோ அப்படியே மற்றவர்களும் நம்மிடம் பழகுவார்கள் //
சத்தியமான வார்த்தை குசும்பன்.
கருத்திற்கு மிக்க நன்றி.
என்னது திடீர்னு முற்றும் போட்டுட்டீங்க, //
அம்புட்டுதான். அதான் முற்றும் போட்டேன் பிரபா.
வித்தியாசமான தொடரா இருந்துச்சு.//
மிக்க நன்றி
வருகைக்கும் வாழ்த்திற்கும் மன்மார்ந்த நன்றிகள் ராமலக்ஷ்மி.
பிரசண்ட் போட்டுக்கிறேன்...:)
/இத்துடன் இந்தத் தொடர் முடிகிறது./
என்னது தொடரா?
என்ன தொடர்?
எப்ப ஆரம்பிச்சீங்க
என்ன தொடர்?
எப்ப ஆரம்பிச்சீங்க?
அது சரி. தங்க்ஸ் சிங்கை வந்துட்டாங்க சரி அதுக்காக இப்படியா?
/யாரைச் சொல்ல? யாரை விட?(யாரும் கோச்சுக்க
கூடாது) /
இப்படி எல்லாம் சொன்னதுக்கு தான் கோவம்...:)
/ புதுகைத் தென்றல் said...
என்ன தொடர்?
எப்ப ஆரம்பிச்சீங்க?
அது சரி. தங்க்ஸ் சிங்கை வந்துட்டாங்க சரி அதுக்காக இப்படியா?/
உங்களுக்கென்ன ஈஸியா சொல்லிட்டீங்க.....இங்க உயிரை கைல பிடிச்சிட்டு டைப் பண்ண முடியாம தத்தளிசிட்டு இருக்கிற என்னோட நிலைமை உங்களுக்கு எங்க புரிய போகுது..:(
நாம எப்படி பழகுறோமோ அப்படியே மற்றவர்களும் நம்மிடம் பழகுவார்கள்
சத்தியமான வார்த்தைகள்...
//
குசும்பன் said...
//பிளாக்கர்களிடம் ஜாக்கிரதையா இருங்க!!ன்னு
என்னை பலர் எச்சரிச்சாங்க. ஆண்டவனால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் எனக்கு இங்கும்
நல்ல நட்பு, உறவு கிடைத்திருக்கிறது.//
நாம எப்படி பழகுறோமோ அப்படியே மற்றவர்களும் நம்மிடம் பழகுவார்கள் அப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு நல்ல உறவுகள் அமைந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை!
//
கண்டிப்பாக!
நாம எப்படி பழகுறோமோ அப்படியே மற்றவர்களும் நம்மிடம் பழகுவார்கள்
சத்தியமான வார்த்தைகள்...//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூர்ணிமா
வாங்க சிவா ரொம்ப நாளா
ஆளைக்காணோமேன்ன் பார்த்தேன்.
nice
நல்ல பதிவு...வாழ்த்துகள்
nandri geetha
Post a Comment