ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டும் போட்டா
ஜாமல் தம்பி கோச்சுக்குவாரு!! :))) இன்னைய
கணக்குக்கு இரண்டவாதா இந்த பதிவு.
இப்ப இருக்கற விலைவாசி பிரச்சனை,
ரெஷஷ்ன் பிரச்சனையில் எதையும்
வேஸ்டாக்க கூடாது. எம்புட்டு
முடியுமோ அம்புட்டு சிக்கனமா
இருக்கறது நல்லது. என்ன சொல்றீங்க?!!
கொஞ்சமே கொஞ்சமா வெரைட்டி
காய்கறி இருந்துச்சுன்னா போதும் இந்த
ரெசிப்பியை செஞ்சிடலாம்.
பாவ்பாஜி பராத்தாவுக்குத் தேவையான
பொருட்கள்:
பெரிய வெங்காயம் அரிந்தது : 1
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு:1
முட்டை கோஸ் பொடியாக
அரிந்தது - 1/2கப்
குடை மிளகாய்(அவசியம்
சேர்க்கவேண்டும். அப்பொழுதுதான்
பாஜி வாசனை வரும்) விதை நீக்கி
பொடியாக அரிந்தது - `1
இஞ்சி,பூண்டு விழுது 1 ஸ்பூன்,
பாவ் பாஜி மசாலா - 1/2 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கேற்ப
தனியாத்தூள் :1 ஸ்பூன்,
கோதுமை மாவு 2 கப்.
எண்ணெய்/நெய் 4 ஸ்பூன்.
செய்முறை:
மேற்சொன்ன எல்லாவற்றையும் ஒரு
பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். தண்ணீர்
சேர்க்க வேண்டாம். எண்ணெய் சேர்த்து
பிசைந்துகொள்ளவும்.
அந்த மாவில் சப்பாத்தி செய்து
தாவாவை மெல்லிய தணலில்
வைத்து அதில் சப்பாத்தியை போட்டு
இருபுறமும் நெய்/எண்ணெய் விட்டு
நன்கு சிவக்க சுட்டு எடுத்தால்
பாவ் பாஜி சப்பாத்தி ரெடி.
பிள்ளைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம்.
செய்வதும் எளிது. சுவையும் சூப்பர்.
தொட்டுக்கொ்ள்ள தக்காளி சாஸ்.
18 comments:
ஆஹா
நமகேத்த பதிவு தான்.
செய்து தந்தா திங்களாம்
யாரு செய்றது
(பேச்சி-லார் வாழ்க்கையில)
அட ரொம்ப எளிதா இருக்கே
செய்துடுவோம் வார இறுதியில்.
(அப்பதான் பிரச்சனை வந்தாலும் பிரச்சனை ஆகாது)
அக்கா - பாசக்கார தம்பிக்கா போட்ட பதிவு.
நிச்சியம் செய்து தின்னு பார்த்துட வேண்டியது தான்.
நமகேத்த பதிவு தான்.//
:)))))))))
நிச்சியம் செய்து தின்னு பார்த்துட வேண்டியது தான்.//
செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க.
சைட் டிஷ்ஷா வெள்ளரிக்கா தயிர் சலாட் செஞ்சு அதுல கொஞ்சமா சாட் மசாலா தூவிக்கிட்டா அமிர்தமா இருக்கும்.
//நட்புடன் ஜமால் said...
செய்து தந்தா திங்களாம்
யாரு செய்றது
(பேச்சி-லார் வாழ்க்கையில)//
:-)
புதிய சுவைக்கு நன்றி..
பசி நேரத்துல நல்லா பதிவு போடறீங்க போங்க!நான் பொட்டிய கவிழ்க்கிறேன்.
இந்த மாசம் உங்க புதுவீட்டுக்கு நான் வர்றப்ப செஞ்சு குடுத்துடுங்க :)
//(அப்பதான் பிரச்சனை வந்தாலும் பிரச்சனை ஆகாது)
//
நீதான் நல்லா சமைப்பியாமேடா மாப்ள??? தங்கச்சி சொன்னுச்சே :)
வருகைக்கும் ஸ்மைலீக்கும் நன்றி முல்லை.
வருகைக்கும் மிக்க நன்றி வண்ணத்துப்பூச்சியார்.
பசி நேரத்துல நல்லா பதிவு போடறீங்க போங்க!//
:))))
வீட்டுக்கு நான் வர்றப்ப செஞ்சு குடுத்துடுங்க :)//
வாங்க செஞ்சு கொடுத்திடலாம்.
வாவ் ரொம்ப நாளா பரிசோதனை சிங்கம் (ரகுவ எப்படி எலின்னு சொல்றது) புதுசா ஏதாவது வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கு. ட்ரை பண்ணி பார்த்துட்டுவரேன் சிஸ்டர்.
ஆஹா படிக்கும் போதே நாக்கி எச்சி ஊறுதே!!
ஆஹா வித்யா,
உங்க கமெண்டை ரசிச்சேன். திரு.ரகு அவர்களிடமிருந்து கண்டன பின்னூட்டங்கள் எனக்கு வராதுன்னு நம்பறேன்.
ஆஹா படிக்கும் போதே நாக்கி எச்சி ஊறுதே!!//
உடனே செஞ்சு பாத்திடுங்க.
:)))))))))
Post a Comment