Tuesday, February 03, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி

”ஏட்டுச் சுரைககாய் கறிக்கு உதவாது” இது நம்
முன்னோர்களின் வாக்கு. சத்தியாமான் உண்மை இது.

வெறும் படிப்பறிவு மட்டும் அறிவாகிவிடாது.
அதை செய்ல்படுத்தும் முறையும் அத்துடன்
பட்டறிவும் சேர்ந்தால்தான் முழுமையான அறிவுத்திறன்.




மாண்டிசோரி கல்வியில் எண்ணும் எழுத்தும் மட்டும்
கற்றால் போதும் என்ற நிலை இல்லை. அன்றாட
வாழ்க்கைக்கு தேவையான செய்ல்களிலும் பிள்ளைகள்
கற்று அதில் தேர்ச்சி பெறுவதைத்தான் முழுமையான
கல்வி என்கிறோம்.

வளர்ந்த பலர் தான் படுத்த படுக்கையை மடிக்க
மாட்டார்கள், சாப்பிடத்தட்டை கழுவ மாட்டார்கள்,
வீடு பெறுக்குதல் மகா குற்றம், தன் சட்டையின்
பொத்தான் போனால் கூட சம்சாரத்தைத்தான்
அழைப்பார்கள். இந்த நிலைக்கு காரணம்
அவர்கள் சிறிய வயதில் முறையான பயிற்சி
பெறாததுதான். அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.

அந்த நிலை வருங்கால சந்ததியினருக்கு
வரக்கூடாது. அனைவருக்கும் மாண்டிசோரி
கல்வி சாத்தியமில்லை. அதனால் உங்கள்
வீட்டுப் பிள்ளைகளுக்கு உதவும் வகையில்
exercises of Practical Life
தொடர் பதிவுகளாக வரவிருக்கின்றது.

(பேரண்ட்ஸ் கிளப்பிலும் இந்தப் பதிவு
ஒரே நேரத்தில் வரவிருக்கிறது)


/>

என் குழந்தை பெரியவனாகிவிட்டான்/ள் அதனால்
இப்போது என்ன செய்ய? என்று நினைக்காதீர்கள்.
கற்றுக்கொள்ள வயது ஒரு தடை அல்ல.
பிள்ளைகளுக்கு படிப்போடு சின்னச் சின்ன
வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்குதல் நல்லது
என உளவியலார்கள் கூறுகிறார்கள்.

வாழ்க்கைக்கு உதவும் கல்வி தொடர்
அமர்க்களமாக ஆரம்ப மாகிறது.

exercises of Practical Life பற்றி மாண்டிசோரி
அம்மையார் தனது புத்தகத்தில் கூறியிருக்கும்
வார்த்தைகள் இவை:

"No one can be free if he is not independent...."

The indirect aims of the Practical Life exercises is to meet the child's needs, to encourage and facilitate development, and to facilitate the child's adaptation to the world.

" If teaching is to be effective with young children, it must assist them to advance on the way to independence. It must initiate them into those kinds of activities, which they can perform themselves. We must help them to learn how to walk without assistance, to run, to go up and down the stairs, to pick up fallen objects, to dress and undress, to wash themselves, to express their needs, and to attempt to satisfy their desires through their own efforts. All this is part of an education for independence. "....(The Discovery of the Child, MM, pg. 56~57)

Exercises for practical life are simple Montessori activities which adults perform daily in order to maintain control of the environment in which they live and work. The child is influenced by the adult's daily routine and activities. By imitating the activities, it is the child's way of adapting to the world around him and constructing reality.

27 comments:

நட்புடன் ஜமால் said...

\\"வாழ்க்கைக்கு உதவும் கல்வி"\\

உண்மையே

வாழ்க்கைக்கு உதவ வேண்டும் கல்வி என்றால்

நட்புடன் ஜமால் said...

வெறும் படிப்பறிவு மட்டும் அறிவாகிவிடாது.
அதை செய்ல்படுத்தும் முறையும் அத்துடன்
பட்டறிவும் சேர்ந்தால்தான் முழுமையான அறிவுத்திறன்.\\

அக்கா சரியானதை சொன்னீர்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கைக்கு தேவையான செய்ல்களிலும் பிள்ளைகள்
கற்று அதில் தேர்ச்சி பெறுவதைத்தான் முழுமையான
கல்வி என்கிறோம்.\\

நம்ம ஊரில அதிகமாக இது இல்லை.


குழந்தைகளை புத்தக மூட்டை சுமக்க மட்டுமே வைக்கின்றனர்.

நட்புடன் ஜமால் said...

\\வளர்ந்த பலர் தான் படுத்த படுக்கையை மடிக்க
மாட்டார்கள், சாப்பிடத்தட்டை கழுவ மாட்டார்கள்,
வீடு பெறுக்குதல் மகா குற்றம், தன் சட்டையின்
பொத்தான் போனால் கூட சம்சாரத்தைத்தான்
அழைப்பார்கள். இந்த நிலைக்கு காரணம்
அவர்கள் சிறிய வயதில் முறையான பயிற்சி
பெறாததுதான். அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.\\

இது இன்னும் ஆழமா சிந்திக்க படவேண்டிய ஒன்று.

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்ட்டு????

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா...அக்கா பாடம் நடத்த கிளம்பிட்டீங்களா???

கற்றுக் குடுத்தலில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் உங்க குடும்பத்துக்கு இருக்கு. நீங்க சும்மா வீட்ல இருப்போம்னு நினைச்சாலும் உங்க பிளட்டு விட மாட்டேங்குது பார்த்தீங்களா???

:)))

எம்.எம்.அப்துல்லா said...

வீதியில் நம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு வரிசையாக ஒருவர்பின் ஒருவராக பள்ளிக்குச் செல்வோமே!!! அந்த மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா அக்கா?? (இல்ல...வயசாயிட்டா மறதி வரும்னு சொன்னாங்க..அதான் கேட்டேன்)

:))))))

pudugaithendral said...

வாழ்க்கைக்கு உதவ வேண்டும் கல்வி என்றால்//

மெத்த படிச்சிருந்தாலும் தன் வேலையை தானே செஞ்சுக்கத் தெரியாட்டி என்ன புண்ணியம்??

அன்றாட வாழ்க்கைக்கு உதவும் கல்வி என் அர்த்தம்.

pudugaithendral said...

நம்ம ஊரில அதிகமாக இது இல்லை.


குழந்தைகளை புத்தக மூட்டை சுமக்க மட்டுமே வைக்கின்றனர்.//

வருத்தம் தரக்கூடிய உண்மை நிலை. அதனால் தான் இந்த வலைப்பூக்களை படிப்பவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு போதிய பயிற்சி தரத்தான் இந்தத் தொடர்.

pudugaithendral said...

நீங்க சும்மா வீட்ல இருப்போம்னு நினைச்சாலும் உங்க பிளட்டு விட மாட்டேங்குது பார்த்தீங்களா???//

அட கத்துக்கொடுக்க கிளம்பலை அப்துல்லா, நான் கத்துகிட்டதை மத்தவங்களுக்கும் சொல்லத் தான் இந்தத் தொடர்.

அப்புறம் இப்பல்லாம் என் ப்ளாக்கில் மீ த பர்ஸ்டு ஒன்லி ஜமால்னு ஆகிப்போச்சு. :)

pudugaithendral said...

(இல்ல...வயசாயிட்டா மறதி வரும்னு சொன்னாங்க..அதான் கேட்டேன்)//

அக்காவுக்கு வயசாயிடுச்சுன்னா, தம்பிகளுக்கும் வயசு ஆகிகிட்டுத்தான் இருக்குது தம்பியோவ்.

:))))))))

எம்.எம்.அப்துல்லா said...

//அக்காவுக்கு வயசாயிடுச்சுன்னா, தம்பிகளுக்கும் வயசு ஆகிகிட்டுத்தான் இருக்குது தம்பியோவ்.
//

அவ்vவ்vவ்vவ்v

அமுதா said...

/அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.

நூறு சதவீதம் உண்மை. நல்ல தொடர். தொடருங்கள்.

pudugaithendral said...

அவ்vவ்vவ்vவ்v//

:)))))))))))))))))

pudugaithendral said...

தொடருங்கள்.//

காலை, மதியம், இரவுன்னு ஒரு நாளைக்கு 3 பதிவா போட்டுத்தாக்கலாம்னு இருக்கேன் அமுதா.

butterfly Surya said...

கல்வி உதவும்.ஆனால் விலை மிகவும் அதிகமாக இருக்கே...

சரி.. போட்டுதாங்குங்க....

Vidhya Chandrasekaran said...

ஆஹா விரைவில் எதிர்பார்க்கிறேன்

Poornima Saravana kumar said...

/அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.
/

வழிமொழிகிறேன்

pudugaithendral said...

வாங்க வண்ணத்துப்பூச்சி

போட்டுடுவோம்.

pudugaithendral said...

உங்களை அதிகம் எதிர்பார்க்க வைக்காமல் அடுத்த பதிவு இதோ வந்துவிடும் வித்யா

pudugaithendral said...

மிக்கநன்றி பூர்ணிமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரசண்ட் மேம்... :)

மங்களூர் சிவா said...

/
வளர்ந்த பலர் தான் படுத்த படுக்கையை மடிக்க
மாட்டார்கள், சாப்பிடத்தட்டை கழுவ மாட்டார்கள்,
வீடு பெறுக்குதல் மகா குற்றம், தன் சட்டையின்
பொத்தான் போனால் கூட சம்சாரத்தைத்தான்
அழைப்பார்கள்
/
அதுதானே தமிழ் கலாச்சாரம் அதை கட்டி காப்பாற்ற வேண்டாமா????

மங்களூர் சிவா said...

//
இந்த நிலைக்கு காரணம்
அவர்கள் சிறிய வயதில் முறையான பயிற்சி
பெறாததுதான். அது அவர்களின் குற்றமல்ல,
கற்றுக்கொடுக்காத பெற்றோரின் குற்றம்.
//

கல்யாணத்துக்கு முன்னால் வரைக்கும் எல்லா வேலையும் செய்துகொண்டிருந்தவர்கள் கல்யாணத்துக்கு அப்புறம் செய்யலைனா அது யார் குற்றம்????

மங்களூர் சிவா said...

மேலே இருக்குற இரண்டு கமெண்டும் கற்பனையே!

சிவா விடுடா ஜூட்டு..........

pudugaithendral said...

அதுதானே தமிழ் கலாச்சாரம் அதை கட்டி காப்பாற்ற வேண்டாமா????//

:))))))

pudugaithendral said...

கல்யாணத்துக்கு முன்னால் வரைக்கும் எல்லா வேலையும் செய்துகொண்டிருந்தவர்கள் கல்யாணத்துக்கு அப்புறம் செய்யலைனா அது யார் குற்றம்????//

சும்மா உக்காந்து சாப்பிடறதால கொலஸ்ட்ரால் ஜாஸ்தி ஆகிருக்கும் சிவா. கண்டிப்பா கொலஸ்ட்ராலோட குத்தம் தான்.