பிள்ளைகள் இருவரும் மாமனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு
தான் கிடந்தார்கள். அவனை விட்டு நகரவில்லை.
உண்ணும்போதும் உறங்கும்போது “கார்த்தி மாமாதான்”
இரவு தூங்கும்போது மாமா பக்கத்தில் யார் படுப்பது
என சண்டை போட்டு (நடுவில் படுத்தால் தம்பியை
பிழிந்து விடுவார்கள்) ”இன்றி நீ நாளை நான்” என
உடன் படிக்கைகள் நடந்தன. கடைசி்யில் மாமன்
மேல் தான் இருவரும் உறங்கினார்கள். இதைப்
பார்க்கும் போது எனக்கு ராமு மாமா ஞாபகம் தான்
வந்தது.
ராம் மாமா- இவர் என் அம்மாவின் பெரியம்மா
மகன்(எங்கம்மாவீட்டில் பெரியம்மா மகன்,சின்னம்மா
மகன் என்ற பாகுபாடு இல்லாமல் அம்மாவுடன்
கூடப் பிறந்தவர்கள் 4 மாமாக்கள், 3 சித்திக்கள்
என்றுதான் எங்களுக்குத் தெரியும்)
எனக்கு 4 வயதாக இருக்கும்பொழுது சத்யாமாமா
மும்பை சென்றுவிட்டார். சின்ன மாமாவுக்கும்
எனக்கும் 5 வயது வித்தியாசம் தான். வீட்டில்
பெரிய மாமா பரோடோவில் வேலை பார்க்க
இந்த ராமு மாமாதான் நான் அதிகம் பழகியது.
(திருச்சி பி.எச்.இ.எல்லில் வேலை பார்த்தார்.
இப்போது கட்சில் வேலை)
மாமா புதுகை வருகிறார் என்றால் என்னிடம்
தகவல் சொல்லப்பட மாட்டாது. சொன்னால்
பள்ளிக்கு ”டும்மா”தான். :)))
அம்மம்மாவீட்டிற்குத்தான் வருவார் மாமா.
அவர் எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்
ஓடுவேன். மாமாவைப் பார்த்ததும்
கட்டிக்கொண்டு அவருடன் தான் இருப்பேன்.
மாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டுதான்
தூங்குவேன். மாமானின் மார்பில் படுத்து
தூங்குவது சுகமான சுகம்.
புசு புசுவென்று முடி கொண்ட மார்பில்
பிள்ளையாய் தூங்கியிருக்கிறேன்.
இதில் ரஜினிகாந்த் எங்கே வந்தார்?
அதுவும் சுவாரசியம். மாமா அசப்பில்
ரஜினி மாதிரி இருப்பார். அதனாலேயே
அப்பொழுதெல்லாம் ரஜினி காந்த்
எனக்கும் மிகவும் பிடிக்கும். (அதாவது
ராமு மாமாவை நேரில் பார்க்கும் வரை
ரஜினியை திரையில் பார்க்கலாமே!!)
ரங்கா படத்தில் வரும் இந்தப் பாடல்
மிக மிக பிடிக்கும்.
|
ரஜினியின் முகச்சாயலும் பாலுஜியின் சைஸுமாக்
இருந்தார் மாமா.(பாலுஜி -எஸ்.பீ.பாலு அவர்கள்)
இப்பொழுது மாமா இளைத்துவிட்டார்.( மாமா
இப்பவும் ரஜினிதான் இருவருக்கும் வழுக்கை
விழுந்துவிட்டது :))) )
எஸ்.பீ.பி அவர்களை டீவியில் எங்கு கண்டாலும்
ராமு மாமா ஞாபகம் வந்துவிடும். உடன் மாமாவிடம்
பேசிவிடுவேன். சென்ற ஞாயிற்றுக்கிழமை
பாலு அவர்களின் ப்ரொக்ராம் இசையருவி டீவியில்
வந்தது. பாட்டைக் கேட்க முடியவே இல்லை.
மாமவுக்கு போன் செய்து தம்பி வந்திருந்த
பொழுது பிள்ளைகள் அடித்த லூட்டியைச்
சொன்னேன். “அதாண்டா லைஃப். இதெல்லாம்
இல்லாவிட்டால் வாழ்க்கை போரடிக்கும்.
என் கையை பிடித்துக்கொள்ளாமல்
தூங்க மாட்டாய்.பிள்ளைகளும் அப்படியே
இருக்கிறார்கள்” என்றார் மாமா.
நான் வளர்ந்த பிறகும் மாமாவின் வருகை
அதி முக்கியமாகிவிடும். கையை பிடித்துக்கொண்டிருப்பேன்.
கண்டிப்பாய்
நைட்ஷோ சினிமா போவோம். படத்தைப்
பத்தி கவலை இல்லை. மாமாவுடன்
போனோம் அது முக்கியம்.
(சென்ற ஏப்ரலில் ஒரு விசேடத்தில்
சந்தித்தோம்) ஹாய் கண்ணா! என்று
ஓடி வந்துக் கட்டிக்கொண்டார் மாமா.
தம்பி சொன்ன ஒரு டயலாக்கை நான் மாமாவிடம்
சொன்னேன். மாமாவின் ட்ரேட் மார்க்
சிரிப்போடு (பாலுஜீ சிரித்தது போல் ஸ்டைலாக இருக்கும் அது)
ரசித்தார்.
கிளம்பும்போது பிள்ளைகள் மாமனை விடவில்லை.
”இன்னும் 2 நாள் இருங்க மாமா!” என அன்புத்
தொல்லை. தம்பி அப்பொழுது சொன்னது இதுதான்
“நம் ராமு மாமா அப்பொழுது என்ன கஷ்டப்பட்டிருப்பார்
என்று இப்பொழுது தெரிகிறது அக்கா!” என்றான்.
மாமாக்கள் எப்பொழுதும் ஷ்பெஷல்தான்.
தலைமுறைகள் மாறினாலும் மாறாதாது
மாமன் - மருமகன்/மருமகள் உறவு.
31 comments:
பிரசண்ட்!
/சிங்கையிலிருந்து தம்பி சென்றவாரம் வந்திருந்தான்./
அப்படியா....சரி!
/பிள்ளைகள் இருவரும் மாமனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு
தான் கிடந்தார்கள். அவனை விட்டு நகரவில்லை.
உண்ணும்போதும் உறங்கும்போது “கார்த்தி மாமாதான்”/
பின்னே....இவரு அந்த பக்கம் வந்ததே அதிசயம்....அப்புறம் எப்படி பிள்ளைங்க விடுவாங்க...:)
ஒரு ஸ்மால் டவுட்....கார்த்தி கூட ஆஷிஷ் அன்ட் அம்மு மட்டும் தான் சண்டை போட்டாங்களா.....என்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....
/இதைப்
பார்க்கும் போது எனக்கு ராமு மாமா ஞாபகம் தான்
வந்தது./
ஹை...எங்க மாமா பேரும் ராமு தான்...!
இவரு அந்த பக்கம் வந்ததே அதிசயம்....அப்புறம் எப்படி பிள்ளைங்க விடுவாங்க...//
சரியாச் சொன்னீங்க. நீங்க, ஜீவ்ஸ், சிவா யாரு போனில் பேசினாலும் சரி
பிள்ளைங்க முகத்துல அம்புட்டு சந்தோஷம் வந்திடும்.
என்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....//
:))))))))) வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடக்கலை. நானும் வெயிட்டிகிட்டு இருந்தேன்.
/கிளம்பும்போது பிள்ளைகள் மாமனை விடவில்லை.
”இன்னும் 2 நாள் இருங்க மாமா!” என அன்புத்
தொல்லை./
கூட ரெண்டு இருந்துட்டு போய் இருக்கலாம்....வரட்டும் கேக்கிறேன் அப்படி என்ன அவசரம்னு....:)
/புதுகைத் தென்றல் said...
என்கிட்டே இன்னொருத்தரும் சண்டை போட போறதா சொன்னாங்களே....//
:))))))))) வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடக்கலை. நானும் வெயிட்டிகிட்டு இருந்தேன்./
அடடா...உடன்பிறப்பு இப்படி கவுத்துடுச்சே. இருக்கட்டும்....இருக்கட்டும்...பேசிக்கிறேன்!
மாம்ஸ்... மாம்ஸ் தான்
மாப்ஸ்... மாப்ஸ் தான்
அது ஒரு தனி சுகம். அனுபவித்து கொண்டு இருப்பதால் சொல்கிறேன்
:)))
\\
மாமா புதுகை வருகிறார் என்றால் என்னிடம்
தகவல் சொல்லப்பட மாட்டாது. சொன்னால்
பள்ளிக்கு ”டும்மா”தான்\\
ஹா ஹா
\\அதாண்டா லைஃப். இதெல்லாம்
இல்லாவிட்டால் வாழ்க்கை போரடிக்கும்.
என் கையை பிடித்துக்கொள்ளாமல்
தூங்க மாட்டாய்.பிள்ளைகளும் அப்படியே
இருக்கிறார்கள்\\
அதே அதே
\\மாமாக்கள் எப்பொழுதும் ஷ்பெஷல்தான்.
தலைமுறைகள் மாறினாலும் மாறாதாது
மாமன் - மருமகன்/மருமகள் உறவு.\\
மாமாவிடம் இருக்கு உரிமை ஏனோ சில சமயம் தந்தையிடம் கூட இருப்பதில்லை.
என் மாமா நினைவும் வந்தது..அவரும் ராம் மாமாதான்
என் மாமனின் நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.! இருப்பினும் ரஜினி, எஸ்பிபி காம்பினேஷன் நல்லாத்தான் இருக்குமில்ல.?
பி சீரியஸ் தென்றல், Archive பகுதியை மேலே எளிதான பார்மெட்டில் வையுங்கள். முந்தைய பதிவுகளை படிப்பதற்கு மிகச்சிரமப்பட வேண்டியதிருக்கிறது. (எ.கா : சந்தனமுல்லை, அமித்து அம்மா)
ஓ கார்த்தியோட அக்காவா நீங்க
அன்புடன்
சிங்கை நாதன்
சூப்பர்...
நேர்ல பாத்த மாதி இருக்கு.
இனிமே தான் உங்க பதிவ ஒன்னொன்னா படிக்கனும்.
அடடா...உடன்பிறப்பு இப்படி கவுத்துடுச்சே. இருக்கட்டும்....இருக்கட்டும்...பேசிக்கிறேன்!//
:)))))))))
மாம்ஸ்... மாம்ஸ் தான்
மாப்ஸ்... மாப்ஸ் தான்
அது ஒரு தனி சுகம். //
ஆமாம்.
மாமாக்களிடம் இருக்கும் ஒட்டுதல் ஏனோ அத்தைகளிடம் இருப்பதில்லை.
இதற்கு ””பலக்காரணங்கள்””!!
மாமாவிடம் இருக்கு உரிமை ஏனோ சில சமயம் தந்தையிடம் கூட இருப்பதில்லை.//
ஆமாம் ஜமால்,
மாமாமேல் படுத்துறங்கியது நினைவிருக்கு. அப்பாவிடம் சான்சே இல்லை.
என் மாமா நினைவும் வந்தது..அவரும் ராம் மாமாதான்//
ஆஹா பேருலயும் ஒத்துமையா.
ரஜினி, எஸ்பிபி காம்பினேஷன் நல்லாத்தான் //
ஆமாம் தாமிரா,
என் ராம் மாமா இந்த இருவரின் காம்பினேஷன், சிரிப்பில் பாலு அசப்பில் ரஜினி. அதனால் தான் ரங்கா படத்தின் பாட்டு எனக்கு சோ ஸ்பெஷல்.
பி சீரியஸ் தென்றல், Archive பகுதியை மேலே எளிதான பார்மெட்டில் வையுங்கள்.//
அட நீங்க வேற தாமிரா,
ஆர்ச்சிவ் ஏற்கனவே பிளாக்கில் இருபதாக் காட்டுது. ஆனா வரமாட்டேங்குது. :(((
கார்த்தியோட அக்காவா நீங்க?
ஆமாம் நான் கார்த்தியோட அக்கா. ஆனா இந்தக் கார்த்தி வலையுலகில் எழுதுவதில்லீங்கோ.
நேர்ல பாத்த மாதி இருக்கு.
இனிமே தான் உங்க பதிவ ஒன்னொன்னா படிக்கனும்.//
படிச்சிட்டு சொல்லுங்க தேனியாரே.
/singainathan said...
ஓ கார்த்தியோட அக்காவா நீங்க
அன்புடன்
சிங்கை நாதன்
/
ஓ நீங்க தான் சிங்கை நாதனா?
எனக்கு தாய் மாமாவிடம் அதிக பாசம்ம் இருந்தாலும் நெருக்கம் குறைவு
என் அத்தைமகனுடன் நல்ல பழக்கம்
இந்த கவிதையை பாருங்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_23.html
என் அக்காவின்ன் மகள் பிறந்த நாள் முதல் எங்கள் அருகிலேயே வளர்ந்தவள்
வீட்டில் இருந்தால் என் மடியில்தான் உட்கார்ந்து இருப்பாள்
ச்சாப்பிடுவது தூங்குவது எல்லாம் என்னுடந்தான்
தற்ப்போது நான் சிங்கப்பூரில் உள்ளேன்
வாரம் ஒருமுறை போனில் பேசுவட்தோடுசரி
வாங்க பிரபு,
என் தம்பியும் என்னிடம் இருந்த பொழுது பிள்ளைகள் மிகவும் ஒட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால் தான் அவன் சிங்கை போனதும் ஒரே ஙை ஙை ஆகிவிட்டது. :)
வெப் கேம் வைத்து சாட்டிங், போனில் பேசுதல் என அவனும் எம்புட்டோ செய்து பார்க்கிறான்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்.
பாசக்கார பயலுவதானே இந்த மாமனுங்க.
பாசக்கார பயலுவதானே இந்த மாமனுங்க.//
ஆமாம். மாமனின் பாசத்தில் நனைந்த மருமகப்பிள்ளைகளும் பாசக்கரப்பயலுக்கு சரியான வாரிசாக் வருகிறார்கள்.
:))))
Post a Comment