எனக்கு இந்த ஆண்களை நினைச்சால் பாவமா இருக்கும்.
தன் பொண்டாட்டிக்கு செய்யணும், அம்மா, அக்கா, தங்கைகளுக்கு
செய்யணும். ஆனா அவங்களுக்கு யாரு செய்வாங்க?
கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே இது என மனசுல
ஆழமா பதிஞ்சதால கல்யாணத்திற்கு அப்புறம் அயித்தானுக்கு
நான் எப்போதும் கொடுக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டேன்.
(அன்பாகட்டும், பரிசாகட்டும் நம்மளோட கை கொஞ்சம்
மேலே அதாவது அதிகமா கொடுக்கணும் இது தான்
பாலிசி :)இதுல செம போட்டி நடக்கும். )
அவரது பிறந்தநாள், எங்கள் திருமண நாள்,
காதலர்தினம்(கல்யாணத்துக்கப்புறம் காதலிச்சுக்கறோம் :)) )
எல்லாவற்றிற்கும் சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பேன்.
அவருக்குத் தெரியாமல் போய் வாங்குவது பிடிக்கும்.
சென்ற வருடம் இந்த நேரம் காதலர் தின பரிசாக கோட் பின்
வாங்குவதற்கு கொழும்பு வெள்ளவத்தை ஹமீதியாஸில்
நின்று கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது.
டீ ஷர்ட், கோட் பின், டை, அவர் எடுத்திருக்காவிடில்
ட்ரெஸ் என பரிசளிப்பேன். விசிட்டிங்கார்ட் ஹோல்டர்,
என பெரிய லிஸ்டே இருக்கு ஆண்களுக்கு பரிசளிக்க.
பேப்பரை மிச்சப் படுத்த இமெயிலில் இலவசமாக
வாழ்த்தனுப்பிவிடுவேன். தலையணைக்கடியில்,
கட்டிலுக்கடியில் பரிசை மறைத்துவைத்து
சரியாக 12 மணிக்கு எழுப்பி முதல் வாழ்த்தை
சொல்லி பரிசு கொடுப்பேன். ஒவ்வொரு முறையும்
இது என் வாடிக்கை.
சென்ற செப்டம்பர் 22 அவரது பிறந்த நாள்.
P.M.S பிரச்சனையில் உடல்நிலை சரியில்லாமல்
இருக்க என்னால் தனியாக கடைக்குச் சென்று
பரிசு பொருள் வாங்க முடியாமல் போனது
வருத்தமாக இருந்தது. அன்றுக்குள் எப்படியும்
அவருக்கு பரிசளித்துவிடவேண்டுமென நினைத்துக்
கொண்டிருக்கையில் என் டீ டீவியில் கேட்ஜட் குரு
நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது!
அயித்தானிடம் இருந்தது செகண்ட் ஹேண்ட்
மொபைல்தான். 500 அல்லது 1000 ரூபாய்க்குள்
என்றால் அவரிடம் சொல்லாமல் பரிசளிக்கலாம்.
மொபைல் பட்ஜட் கொஞ்சம் பெரிசாச்சே!
சாயந்திரம் பிள்ளைகள் கேக் வாங்கி ரெடியாக
வைத்திருந்தார்கள். கட் செய்ததும்
"WORLDS BEST DAD" (அயித்தானின் புகைப்படமும்
டைலில் பொறித்தது) பரிசளித்தார்கள்.
ஸ்கந்தகிரி கோவிலுக்குச் சென்ற பிறகு
ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லவிருந்தார்.
கோவில் முடிந்ததும்,” ஹோட்டலுக்கு போவதற்கு
முன்னாடி ஒரு கடைக்கு போகணும்,” என்றேன்.
“எதுக்கு! மணிஆச்சு, பிள்ளைகள் 9.30க்காவது
படுத்தால்தான் நாளை பள்ளி செல்ல முடியும்”
என்றார். ”லேட்டாகாதுப்பா! சீக்கிரம் முடிஞ்சிடும்”
என்றேன். சரி என்றதும் மொபைல் ஷாப் வாசலில்
நிறுத்தச் சொன்னேன்.
”உங்கள் மொபைலைக் கொடுத்துவிட்டு
புது மொபைல் வாங்கிக் கொள்ளுங்கள்,”
என்றேன். மொபைல் எல்லாம் வேண்டாம்.
என்றார். நானும் விடுவதாயில்லை. :)
கடைசியில் பழைய மொபைலைக் கொடுத்துவிட்டு
மேற்கொண்டு பணம் போட்டு இந்த மொபைலை
வாங்கிக்கொண்டார். இது தான் என் பரிசு என்றேன்.
“தேங்க்ஸ்டா!”என்றார். அந்த சந்தோஷம் அப்பப்பா!
சொல்லில் அடங்காது.
சில பெண்கள் தனக்கு கணவன் பரிசளிக்காவிட்டால்
கோபப்படுவார்கள். அவர்கள் கணவருக்கு பரிசேதும்
கொடுத்திருக்கிறார்களா? என்று கேட்டால் “அவர்
தான் கொடுக்கணும்! என்பார்கள். நான் வேலைக்கு
போய் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் மிச்சம் பிடித்து
வாங்கி கொடுப்பேன். IT IS VERY DIFFICULT TO BE
IN GIVING END ONLY அதனால் சில
சமயத்திலாவது அவர்களை RECEIVING ENDல் வைத்தால்
சந்தோஷப் படுவார்கள்.
ரங்கமணிகள் வாங்கிக்கொடுத்தால் தங்கமணிகளுக்கு
சந்தோஷம். அது போன்றதொரு சந்தோஷம் ரங்கமணிகளுக்கும்
கிடைப்பது நியாயம் தானே! பாவங்க அவங்க!
வேலை, டென்ஷன் என்று ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
இதெல்லாம் ஒரு பூஸ்டராக இருக்கும். அன்பு செய்தல்
தவறில்லையே!
தன் நண்பர்களுக்கு, உறவினர்களிடம் எல்லாம்
பெருமையாக சொல்வார், ”இது என் வைஃப்
வாங்கிக் கொடுத்ததுப்பா” என்று. சென்ற
வாரம் வந்திருந்த தம்பியிடம்,”உங்கக்கா
வாங்கிக் கொடுத்ததுப்பா! நல்லா இருக்கா?”
என முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும்
பொங்கக் மொபைலைக் காட்டினார்.
அவரின் இந்த சந்தோஷத்தை பார்க்கும்போது
கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சும்மாவா சொன்னார்கள். கொடுப்பதுவும்
சுகம் என்று. அதை அனுபவத்தால்தான்
புரியும்!!!!!
இதோ இந்த வருட காதலர் தினத்திற்கும்
பரிசு ரெடி. :))))
29 comments:
//
கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே இது என மனசுல
ஆழமா பதிஞ்சதால கல்யாணத்திற்கு அப்புறம் அயித்தானுக்கு
நான் எப்போதும் கொடுக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டேன்.
///
உங்களுக்கு கோவிலே கட்டலாம்
உங்க கணவர் கொடுத்து வைத்தவர்
எல்ல பெண்களும் இப்படியிரூந்துவிட்டால் பிரச்சனை இல்லை
உங்களுக்கு கோவிலே கட்டலாம்//
அதான் அயித்தான் இதயத்துல சிம்மாசனம் போட்டு உக்காந்தாச்சே. இதைவிடவா பெரிய கோவில்..
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி
எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை... கல்யாணம் ஆனால், நிச்சயம் என் மனைவிக்கு பரிசுகள் வாங்கித் தருவேன்...
உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் சகோதரி.. கொடுத்தாலும் மகிழ்ச்சி வரும் இல்லையா....... நல்லதொரு அனுபவப் பகிர்வு
நல்ல விஷயம்... நன்றி:)
எங்க தங்கமணிக்கு சுட்டி அனுப்பி வாசிக்கச்சொல்கிறேன்!
பி.கு: இந்த் Nokia E71-தான் இப்போது என் கையிலிருக்கிரது:)
கொடுத்தாலும் மகிழ்ச்சி வரும் இல்லையா......//
அப்பொழுது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவேது?
நல்லதொரு அனுபவப் பகிர்வு//
நன்றி ஆதவன்
எங்க தங்கமணிக்கு சுட்டி அனுப்பி வாசிக்கச்சொல்கிறேன்!//
:) நீங்களும் நோக்கியா இ 71 தான் வைத்திருக்கிறீர்களா! அருமையாக இருக்கிறது மொபைல். லைட் வெயிட் மாடல்.
அக்கா உண்மையிலே உங்க அயித்தான் கொடுத்து வைத்தவர்.....
அக்காவோவ்வ்வ்வ்வ்
அருமை.
\\அன்பாகட்டும், பரிசாகட்டும் நம்மளோட கை கொஞ்சம்
மேலே அதாவது அதிகமா கொடுக்கணும் இது தான்
பாலிசி :)இதுல செம போட்டி நடக்கும்.\\
போட்டி போட வேண்டிய விடயம்.
\\டீ ஷர்ட், கோட் பின், டை, அவர் எடுத்திருக்காவிடில்
ட்ரெஸ் என பரிசளிப்பேன். விசிட்டிங்கார்ட் ஹோல்டர்,
என பெரிய லிஸ்டே இருக்கு ஆண்களுக்கு பரிசளிக்க.\\
அட இவ்வளவுக்கீதா
அக்கா உண்மையிலே உங்க அயித்தான் கொடுத்து வைத்தவர்.....//
:)
போட்டி போட வேண்டிய விடயம்.//
ஆமாம் ஜமால். அப்பத்தான் சுவாரஸ்யம் இருக்கும்
\\டீ ஷர்ட், கோட் பின், டை, அவர் எடுத்திருக்காவிடில்
ட்ரெஸ் என பரிசளிப்பேன். விசிட்டிங்கார்ட் ஹோல்டர்,
என பெரிய லிஸ்டே இருக்கு ஆண்களுக்கு பரிசளிக்க.\\
அட இவ்வளவுக்கீதா//
ஹலோ சாம்பிள்தான் கொடுத்தேன்.
நிறைய இருக்கு. பர்ஸ், மொபைல் பவுச், பெல்ட், சாக்ஸ், ஷூ, பட்ஜட்டை பொறுத்து நிறைய ஐடியா இருக்கு.
பரிசு உபயோகமா இருக்கணும். காசு போட்டு வாங்கியது அலமாரிக்குள் தூங்கக்கூடாது.
:)))
\\பரிசு உபயோகமா இருக்கணும். காசு போட்டு வாங்கியது அலமாரிக்குள் தூங்கக்கூடாது.\\
இது பாயிண்ட்.
தங்க-கூடாது-மணி - கவணிக்கனும்
தங்கமணி.
தங்க-கூடாது-மணி - கவணிக்கனும்
தங்கமணி.//
ஆஹா அழகா சொல்லியிருக்கிகளே!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
///
ரங்கமணிகள் வாங்கிக்கொடுத்தால் தங்கமணிகளுக்கு
சந்தோஷம். அது போன்றதொரு சந்தோஷம் ரங்கமணிகளுக்கும்
கிடைப்பது நியாயம் தானே! பாவங்க அவங்க!
வேலை, டென்ஷன் என்று ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
இதெல்லாம் ஒரு பூஸ்டராக இருக்கும்.
////
உங்க காலை தொட்டு வணங்கிக்கிறேன்.
அனைத்து ரங்கமணிகள் சார்பாகவும் மிகுந்த நன்றிகள்.
/
உங்களுக்கு கோவிலே கட்டலாம்
/
ரிப்பீட்டு
மிகப்பிரமாதமான பதிவு.
உங்க காலை தொட்டு வணங்கிக்கிறேன்.//
ஒரே ப்லீங்கஸ் ஆஃப் இந்தியாவா ஆயிடிச்சி.
அனைத்து ரங்கமணிகள் சார்பாகவும் மிகுந்த நன்றிகள்.//
நன்றிக்கு நன்றி
மிகப்பிரமாதமான பதிவு.//
நன்றி சிவா,
கல்யாணமான 2.5 வருடங்களில் மூன்று பிறந்தநாள் பார்த்துவிட்டோம் இருவரும். ரகுவின் பிறந்தநாளுக்கு ஏதாவது பரிசு கொடுக்கும் வழக்கம் எனக்குண்டு. இந்த வருஷம் தான் ரகு ipod வாங்கிக்கொடுத்தார் என் பிறந்தநாளுக்கு. நீங்கள் சொல்வது மிகச் சரி சிஸ்டர். நல்ல பதிவு:)
/புதுகைத் தென்றல் said...
உங்களுக்கு கோவிலே கட்டலாம்//
அதான் அயித்தான் இதயத்துல சிம்மாசனம் போட்டு உக்காந்தாச்சே. இதைவிடவா பெரிய கோவில்//
அட்றா சக்க அட்றா சக்க
ரகுவின் பிறந்தநாளுக்கு ஏதாவது பரிசு கொடுக்கும் வழக்கம் எனக்குண்டு. //
ஆஹா, நீங்களுமா? சந்தோஷமா இருக்கு. இந்தப் பழக்கத்தை விடாதீங்க. (14வருஷமா தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கு என்னோட பழக்கம் :)) )
. நீங்கள் சொல்வது மிகச் சரி சிஸ்டர். நல்ல பதிவு//
தாங்க்ஸ்,தாங்க்ஸ்
அட்றா சக்க அட்றா சக்க//
என்ன கார்க்கி?
நாக்கமுக்க பாட்டை இன்னும் விடலியா?
:)
உங்களை மாதிரியே நானா....அல்லது என்னை மாதிரியே நீங்களா????எதுவாயிருந்தால் என்ன ....சந்தோஷமாயிருக்கிறது..
திரும்பிப் பார்க்கும் போது....
அன்புடன் அருணா
உங்களை மாதிரியே நானா....அல்லது என்னை மாதிரியே நீங்களா????எதுவாயிருந்தால் என்ன ....சந்தோஷமாயிருக்கிறது..//
ஹை, எனக்கும் சந்தோஷமா இருக்குங்க அருணா.
நானும் பொண்ணுதாங்க உங்க மகளிர் அணியில என்னையும் சேர்த்துக்கோங்க
http://mahawebsite.blogspot.com/
உங்க மகளிர் அணியில என்னையும் சேர்த்துக்கோங்க//
ஹலோ அந்த அணியில் நானும் இதுவரை இல்லை. (என்னியையும் யாரும் சேத்துக்கலை)
Post a Comment