பள்ளிகளில் சுற்றுலான்னு கூட்டிகிட்டு போவாங்க.
வேகாத வெயிலில் வாடி வதங்கி போவோம்.
"கோபு பாபுன்னு" சின்ன பசங்க சினிமா,
புதுகை அருங்காட்சி நிலையம் இப்படி போவோம்.
வரிசைல போங்க!
ரெண்டுரெண்டு பேரா போங்கடி!!
ரோடுல போறதை என்னவோ திருவிழா
பாக்கற மாதிரி வீட்டுல இருக்கறவங்க
வந்து பாப்பாங்க. கொடுமையா இருக்கும்.
ராணி ஸ்கூல்ல எங்கையோ கூட்டிகிட்டு
போறாங்கன்னு கமெண்ட் வேற கிடைக்கும்.
அம்மா பள்ளிகூடத்தில் சித்தன்னவாசல், திருமயம்
கோட்டைன்னு போவாங்க. நானும் அம்மாகூட
தொத்திக்குவேன். :) பஸ் ஏற்பாடு செஞ்சு
போவாங்க. நான் படிக்கும் பள்ளி சுற்றுலா
போனா சாதரணமாத்தான் இருக்கும். அம்மாகூட
போனா டீச்சர் பொண்ணு( அம்மா அங்க கிளார்க்
ஆனா ஆரம்பத்துல அரிச்சுவடி டீச்சர்) சும்மா
மருவாதையா நடத்துவாங்க. அதுக்காகவும்
அம்மா கூட போவலாமேன்னு இருக்கும். :)
இன்பச் சுற்றுலாவ? கல்விச் சுற்றுலாவானு குழப்பமே
இருக்கும். அந்த இடத்திற்கு போவதால் அந்த
இடத்தை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான்
அழைத்துச் செல்வாங்க.
ஆசிரியர் பயிற்சி 6 மாசம் முடிச்சதும் என்னை
கே ஜி 2 வுக்கு கிளாஸ் டீச்சரா போட்டுட்டாங்க.
(நம்ம டீச்சிங் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சர்டிபிகேட்
வேற. சும்மா ”காந்தானி சோர்” மாதிரி
”காந்தானி டீச்சர்ஸ்” ஆச்சே. குடும்பமே
வாத்தியார் குடும்பம்னு சொன்னேங்க) :))
வருடத்திற்கு இரண்டு முறை பிள்ளைகளைச்
சுற்றுலா அழைத்துச் செல்லணும். இதுக்கு
முன்னாடி எங்க போனாங்கன்னு கேட்டேன்.
பார்க், பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
(அங்கே மேக்கிங் பிட்ஸா எப்படின்னு
செஞ்சுகாட்டுவாங்க) இப்படி சொன்னாங்க.
சரின்னு பார்க் போகலாம்னு யோசிச்சேன்.
வெயில் நேரம். போய் கஷ்டப் படணுமா?
பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
எல்லாம் வளமையா கூட்டிகிட்டுப் போறாங்க.
அதைவிட இன்னொரு ஷாக்கிங் விசயம்.
என் கேஜி 2 கிளாஸுக்கு 2 செக்ஷன்.
ஒவ்வொரு செக்ஷனுக்கும் கிளாஸ் டீச்சர்,
அசிஸ்டெண்ட் டீச்சர்னு ரெண்டு டீச்சர்.
ஆக மொத்தம் 4 டீச்சரும் போவோம் என்பதால்
ஆயாம்மாவை கூட அனுப்ப மாட்டாங்களாம்.
இது கேள்வி பட்டதும் ஆஹா நாம பிள்ளைகளைக்
கூட்டிகிட்டு போனா ஆயா வேலையும் சேத்துல்ல
செய்யணும்!! என்ன கொடுமைன்னு நினைச்சேன்.
(மேலை நாடுகளில் மாண்டிசோரி டீச்சர்/ப்ளே
ஸ்கூல் டீச்சர் எல்லாம் சொல்ல மாட்டாங்க.
நாநி(NANNY). நம்ம ஊருல தான் டீச்சர்னு
மதிப்பு மருவாதில்லாம்.
பேசிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. இந்த
மேட்டரை கேட்டதும்,” வூட்டுல என் புள்ளைங்க
தானே தன் வேலையை செஞ்சுக்குவாங்க. இவுங்களுக்கு
நான் செய்யணுமான்னு!” ஒரே யோசனை.
என் அசிஸ்டெண்ட் டீச்ச்ரும் நானும் ஒண்னத்தான்
மாண்டிசோரி கோர்ஸ் செஞ்சோம்.” ஏதாவது
செய்பா! இதெல்லாம் நம்மளால ஆவாது”
அப்படின்னு சொல்லவும்.
எனக்கு ஒரு ஐடியா தோணிச்சு. நான் போய்
ஹெ எச் எம்மை பாத்து எனக்கு 2 நாள்
டைம் கொடுங்க. நான் ஒரு ஏற்பாடு செய்யறேன்.
அவங்க ஓகேன்னு சொன்னா? சரி இல்லாட்டி
பார்க் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிட்டேன்.
நான் கூட்டிகிட்டு போறேன்னு சொன்ன இடத்தைச்
சொன்னதும் ஒரே ஆச்சரியம் ஹெ எச் எம்முக்கு இது முடியுமா?
செஞ்சா நல்லா இருக்கும்னு?
சரி, ஆனா கேஜி 2 ரெண்டுசெக்ஷனும்
ஒரே இடத்துக்குத்தான் ஒரே நாளில் செல்லணும்”
அப்படின்னு சொல்லிட்டாங்க.
எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?
(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!)
47 comments:
நல்லாயிருக்கு. இதென்ன சஸ்பென்ஸ்... அடுத்த போஸ்ட் எப்போ..?
// எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?
(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!) //
இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தியா உங்களுக்கு தெரியல...
யோசிக்கிரது எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கிறவனை, நீங்க எங்க போனீங்க அப்படின்னு யோசிக்க சொன்னா என்ன செய்யறது?
அவ்...அவ்...அவ்....
me the 1 st
தெரியலைங்க ...ஏன்னா நான் உங்களை விட பெரிய சோம்பேறி .
so ஆன்சரையும் நீங்களே சொல்லிடுங்க.அப்படி எங்க தான் கூட்டிட்டுப் போனீங்க ?
அடுத்த போஸ்ட் நாளைக்கு
நீங்க எங்க போனீங்க அப்படின்னு யோசிக்க சொன்னா என்ன செய்யறது?//
ஆஹா
இராகவன் சுற்றுலா பயணம்னா எங்க கூட்டிகிட்டு போவாங்கன்னு ஒரு லிஸ்ட் இருக்கும்ல. அதை யோசிச்சா விடை தெரியும். (நான் சென்ற இடம் அதுல இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் :)) )
யோசிக்கிரது எப்படின்னு யோசிச்சிட்டு இருக்கிறவனை, //
ரெம்ப கஷ்டம் தான்.
ஏன்னா நான் உங்களை விட பெரிய சோம்பேறி .//
ஆஹா நமக்கு செட்டெல்லாம் கிடைக்குது. ராகவன் பின்னூட்டத்துக்கு க்ளூ கொடுத்திருக்கேன். நாளை வரை நேரம் இருக்கு. யோசிங்க. இல்லாட்டி நாளை பதிவுல தெரிஞ்சிக்கலாம்.
//வரிசைல போங்க!
ரெண்டுரெண்டு பேரா போங்கடி!!//
அதுவும் கைய பிடிச்சிகிட்டு போகச் சொல்வாங்க..அது பக்கத்துக்கு தெருக்கு போனாலும்
சரி..
நான் சாப்பிட போன நேரம் எல்லோரும் வந்துட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும்
\\பிட்சா ஹட், மெக் டோனால்ட்ஸ்
எல்லாம் வளமையா கூட்டிகிட்டுப் போறாங்க.\\
அட ...!
//எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?
(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!)//
உங்க இஸ்கூல்ல் மாடிக்கு புள்ளிங்கள இட்னு போயி "அதோ பாரு ஆலமரத்துல ஒரு காக்கா" நு
காட்டிவீங்களா...???
தியேட்டரா டீச்சர்
சினிமாவுக்கு...?
எங்களப் பாத்தா பாவமா தெரியல டீச்சர்?
அதுவும் கைய பிடிச்சிகிட்டு போகச் சொல்வாங்க..அது பக்கத்துக்கு தெருக்கு போனாலும்
சரி..//
ஆமா செய்யது,
இதெல்லாம் டார்ச்சர்ஸ் ஆஃப் ஸ்கூல்
நான் சாப்பிட போன நேரம் எல்லோரும் வந்துட்டீங்க
இருக்கட்டும் இருக்கட்டும்//
:)))
உங்க இஸ்கூல்ல் மாடிக்கு புள்ளிங்கள இட்னு போயி "அதோ பாரு ஆலமரத்துல ஒரு காக்கா" நு
காட்டிவீங்களா...???//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் கூட்டிகிட்டு போறேன்னு சொன்ன இடத்தைச்
சொன்னதும் ஒரே ஆச்சரியம் ஹெ எச் எம்முக்கு- இந்த வரிகளை படிக்கலையா செய்யது
தியேட்டரா டீச்சர்//
இல்லையே ஜமால்
சினிமாவுக்கு...?//
உங்களுக்கு காமெடி ஜாஸ்தி தேனியார்.
அஞ்சலிக்கு அப்புறம் (கிட்டத்தட்ட 18 வருஷம்) புள்ளைங்களுக்கு ஏதும் சினிமா வந்திருக்குதா என்ன?
நான் டீச்சரா இருந்தது இலங்கையில்.
எங்களப் பாத்தா பாவமா தெரியல டீச்சர்?//
நோ நோ டீச்சர் தான் கேள்விக் கேக்கணும், டீச்சரைப் பாத்து கேள்வி கேட்கப்படாது.
ம்ம்ம்...அவுங்க வுட்டுக்கு...!!??
இல்லைன்னா கோவில்..
அய்யோ அக்கா மண்டை காயுது நீங்களே சொல்லிடுங்க ;)
நீங்க சோம்பேறியா ..ஏன் பொய்யெல்லாம் சொல்றீங்க..:)
அய்யோ அக்கா மண்டை காயுது நீங்களே சொல்லிடுங்க ;)//
நாளைக்கு சொல்றேன்.
பதிவை படிக்கவே சோம்பேறித்தனமா இருக்கு....என்ன பதிவு இது
ஹை..மாடரேஷன் இல்லை...
அட மாடரேஷன் இருக்கா?
நீங்க சோம்பேறியா ..ஏன் பொய்யெல்லாம் சொல்றீங்க..:)//
பொய்யெல்லாம் சொல்லலீங்க.
நான் கொஞ்சம் சோம்பேறி அதனால் தான் பசங்களுக்கு ஷூ போட மாட்டேன், தட்டு, தண்ணி அவங்க தான் வைக்கணும், தன் புக்ச் அவங்கதான் அடுக்கணும், தன் அலமாரி அவங்க தான் சுத்தம் செய்யணும். இப்படி நிறைய.
காக்கா, குருவி எல்லாம் காட்டி, ஓடி ஓடி சாபபடு ஊட்டினதில்லை.
ஒரு இடத்தில உக்காந்தா சாப்பாடு.
இப்ப சொல்லுங்க நான் சோம்பேறி தானே.
பதிவை படிக்கவே சோம்பேறித்தனமா இருக்கு....என்ன பதிவு இது//
தங்கஸ் வந்திட்டாங்கல்ல, வேலைகள் குறைஞ்சிடுச்சு அதனால் பதிவு படிக்ககூட சோம்பேறித்தனமா தான் இருக்கும்.
:))))
/நான் கொஞ்சம் சோம்பேறி /
கொஞ்சம் சோம்பேறி ஆனா நிறைய சுறுசுறுப்பு...இதானே சொல்ல வர்றீங்க...:)
ஆஹா...ஆரமிச்சுருச்சுடா டீச்சர் அக்கா அது வேலைய...
:))))
//பேசிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி.//
கொஞ்சமா????
கொஞ்சம் சோம்பேறி ஆனா நிறைய சுறுசுறுப்பு...இதானே சொல்ல வர்றீங்க...:)//
அப்பப்ப சோம்பேறி
:))
ஆஹா...ஆரமிச்சுருச்சுடா டீச்சர் அக்கா அது வேலைய...//
:))))))))))))))
கொஞ்சமா????//
யெஸ்ஸு, கொஞ்சமா சோம்பேறி
:))
யோசிக்க சோம்பேறித்தனமா இருக்கு ஸோ எஸ்க்கேப்பு
யோசிக்க சோம்பேறித்தனமா இருக்கு //
அக்காவுக்கு ஏத்த சரியான தம்பின்னா அது நீங்கதான் சிவா.
:)))
/*எங்க கூட்டிகிட்டு போக ப்ளான் செஞ்சிருந்தேன்?*/
எனக்கும் யோசிக்க சோம்பேறித்தனமா இருக்கு. உங்க பதிவைப் பார்த்தே தெரிஞ்சுக்கறேன்... :-))
எங்க ஸ்கூலில் சோம்பேறி டீச்சர்கள் சொல்லும் ஆலோசனையைச் சொல்லவா? சினிமா தியேட்டர்!!!! உங்க யோசனைக்கு மேச் ஆகுதான்னு பாருங்க...
அன்புடன் அருணா
உங்க பதிவைப் பார்த்தே தெரிஞ்சுக்கறேன்...
:-)))))))))))))))
வாங்க அருணா,
பிரின்சியையே சஸ்பென்ஸுல வெச்சதுல சந்தோஷமா இருக்கு.
உங்க யூகம் தப்பு.
வாங்க அருணா,
பிரின்சியையே சஸ்பென்ஸுல வெச்சதுல சந்தோஷமா இருக்கு.
உங்க யூகம் தப்பு.
எப்ப டெம்ப்ளேட் மாத்தினீங்க.. வேறெங்கியோ வந்திட்டேனோன்னு கொழம்பி முதல்ல குளோஸ் பண்ணிட்டேன். அழகு.. சீக்கிரம் தலைப்பு போன்ற பிற ஒழுங்கு வேலைகளை கவனிங்க..
அய்யய்யோ, அதுக்குள்ள இன்னொண்ணு மாறிடுச்சு.. ஓகோ.. ரிப்பேர் பாத்துக்கொண்டிருக்கீங்களா?
ஓகோ.. ரிப்பேர் பாத்துக்கொண்டிருக்கீங்களா?//
ஆமாம் தாமிரா. அந்த வேலைதான் நடக்குது
//(நான் சோம்பேறின்னு சொன்னதையும் மனசுல
வெச்சுகிட்டு யோசிங்க!) //
ஹிஹி. நான் அதை விட சோம்பேறி. யோசிக்க மாட்டேன். நேரா இப்போ உங்க அடுத்த பாகத்தைப் படிக்கப் போகிறேன்:)!
டெம்ப்ளேடும் மாற்றங்களும் நல்லாயிருக்கு.
டெம்ப்ளேடும் மாற்றங்களும் நல்லாயிருக்கு.//
மாற்றங்கள் வாழ்வில் அவசியமாச்சே.
மிக்க நன்றி.
உற்சாக ஊர்வலம் ..அருமை..!
nandri rajarajeshwari
Post a Comment